அனைத்திற்கும் தமிழ் வடிவம் தேவையா ? – ஆனந்த் சங்கரன்




நேற்று : தமிழ் – லினக்ஸ்

தற்பொழுது : 7-ஜிப்

தற்பொழுதுள்ள கல்வியில் உலகம் முழுவதும் ஏற்கப்பட்ட ஒரே துறை கணிணி துறை. மற்ற துறைகள் எல்லாம் நாட்டிற்கு நாடு வேறுபடும். ஆனால் தற்பொழுது இந்த புதிய தமிழாக்கத்தால் அதற்கும் வேட்டு போல இருக்கிறது. சும்மா கிடைத்தால் அனைத்தையும் தமிழில் மாற்றிக் கொண்டிருப்பேன் என்று சிலர் ஆரம்பித்துள்ளார்கள். கேட்டால் தமிழை உலகெங்கும் கொண்டு செல்ல எண்ணம் என்று கூறுகிறார்கள்.

இது இப்படியே தொடர்ந்தால் உலகெங்கும் தமிழர்கள் கொடி நாட்டுவது குறைந்து விடும்போல் இருக்கிறது.

தமிழ் எழுத்துருக்கள், தமிழில் வலைப்பக்கங்கள் என்று தமிழை நமது கருத்து பரிமாற்றங்களுக்கு கொண்டு வந்தது நல்ல விஷயம். ஆனால் அதையே மேலும் மேலும் செய்கிறேன் என்று அனைத்தையும் தமிழாக்கம் செய்வது பற்றி உன்னுடைய கருத்து என்ன ??



என்னுடைய நண்பன் அனுப்பின மடலை வைத்து உங்களிடம் அடுத்த கருத்து கணிப்பைக் கேட்கிறேன்.

தமிழா! உலாவியை சிறிது நாள் பயன்படுத்தியவன் என்ற முறையில் இது போன்ற கேள்வி ஒன்று என் மனதிலும் இருக்கிறது. அதன் Menu-வில் வரும் பல சொற்றொடர்கள் புரியாமல், விழி பிதுங்கி, மீண்டும் மொசில்லாவுக்கேத் திரும்பியவன். அதே போல் சுத்த தமிழில் Manual முழுதுவதும் எழுதுவது எனக்கு ஒவ்வாத கொள்கை. சிஃபி வலைமையத்தில் மேயும் ஒருவருக்கு இது போன்ற நிரலிகளின் பயன் என்ன? (கிட்டத்தட்ட இதே கேள்வியை முன்பொருமுறை கேட்டபோது காசியும் வெங்கட்டும் உரிய பதிலை அளித்திருந்தார்கள்). தற்போது உங்கள் எண்ணங்களையும் அறிய ஆவல்.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.