ஹேஷ்ய செய்திகள் – ரஜினி படக்கதை


ஜுனியர் விகடன்.காம்: தனது புதுப்படத்துக்கு ரஜினி தேர்ந்தெடுத்திருக்கும் கதையில் அரசியல் வாடை ஒரு படி தூக்கலாகவே இருப்பது உறுதியாகிவிட்டது. கூடவே, தனது லட்சிய கோஷமான நதி நீர் இணைப்பை நினைவுபடுத்தும் ஒரு முடிச்சையும் இந்தக் கதைக்குள் அவர் நுழைத்திருக்கிறார் என்கிறது விஷயமறிந்த கோடம்பாக்க வட்டாரம்.

‘‘மே நான்காம் தேதி படம் பற்றிய அறிவிப்பு.. அதன்பிறகு, கேரளாவுக்குப் போய் இயற்கை மூலிகை வைத்தியசாலையில் உடம்புக்கு பொலிவும் தெம்பும் கொடுப்பது.. ஜூன் மாதம் பூஜை போட்டு ஷ¨ட்டிங்.. தீபாவளிக்கு ரிலீஸ். இதுதான் ரஜினியின் திட்டம்’’ என்கின்றன கோடம்பாக்கத்துப் பட்சிகள்.

இசைக்கு வித்யாசாகர் அல்லது ஹாரீஸ் ஜெயராஜ்.. கதாநாயகியாக ஜோதிகா மற்றும் த்ரிஷா இருவரிடமும் பேசி வைத்திருக்கிறார்கள்.

சரி என்னதான் கதை?

ரஜினிக்கு இரட்டை வேடம். அப்பா ரஜினி, அந்த ஊரின் உச்சகட்ட மதிப்பைப் பெற்ற மனிதர். அவருக்கு ஒரு பங்காளி! இவர் எதைச் செய்தாலும் அதில் குறை கண்டுபிடித்து கிண்டலடிப்பதே அந்தப் பங்காளியின் வேலை (‘பாபா’ யாரைச் சொல்ல வர்றார்னு புரியுதா?).

மகன் ரஜினி வெளிநாட்டில் படிக்கிறார். அங்கே காதல், மோதல் என்று அவர் ஜாலி பண்ணிக் கொண்டிருக்கும்போது.. இங்கே ஊருக்குள் தண்ணீர் பிரச்னை பெரும் பூதமாக வந்து வாட்டுகிறது. பக்கத்து ஊர் வழியே ஓடுகிற நதியிலிருந்து நீரை கால்வாய் மூலம் இந்த ஊருக்குக் கொண்டு வந்தால்தான் தாகம் தீரும்.. விவசாயம் பிழைக்கும் என்ற நிலை.

முழுக்கதையும் கதைக்க: திசை திருப்பவா.. திணறடிக்கவா? – புதுப்படத்துக்கு ரஜினி தயார்!

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.