அ.தி.மு.க-வில் கார்த்திக்..


JuniorVikatan.com: “தேர்தல் சூட்டில் அடுத்து வறுபடத் துவங்கியிருக்கிறார் நடிகர் கார்த்திக். வெளியுலகப் பிரவேசத்தை எப்போதும் விரும்பாத கார்த்திக், கடந்த புதன்கிழமை காலை பதினோரு மணிக்கு அ.தி.மு.க|வின் தலைமைக்கழகம் அமைந்துள்ள ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் ராதாரவியோடு திடீரென பிரசன்னமாகி அரசியல் பரபரப்பில் ஐக்கியமாகியிருக்கிறார்.

அலுவலகத்துக்கு சற்று முன்பாக காரை நிறுத்திவிட்டு ராதாரவியுடன் நடைபோட்டு அந்த அலுவலகத்தில் நுழைந்த கார்த்திக், அங்கிருந்த கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஓ.எஸ்.மணியனிடம் ஒரு கடிதம் அடங்கிய கவரைக் கொடுத்துவிட்டு, கையோடு கொண்டு வந்திருந்த பூச்செண்டையும் கொடுத்தார்!

அப்படியே பக்கத்து அறையையும் எட்டிப்பார்த்த கார்த்திக், அங்கு இருந்த அமைச்சர் வளர்மதி, செங்கோட்டையன், சுலோசனா சம்பத் ஆகியோரைச் சந்தித்து, ÔÔநான் அ.தி.மு.க. அனுதாபிÕÕ என்று சொல்லி திரும்பியிருக்கிறார். ”

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.