நம்ம வலைப்பதிப்பாளர்களுக்காக தமிழோவியம் பதினைந்து சதவிகிதம் தள்ளுபடி கொடுக்கிறது. புத்தகங்களை உடனடியாக வலையிறக்கி வாசிக்கும் சௌகரியம். ஷிப்பிங் அண்ட் ஹாண்ட்லிங், இந்தியா விஜயம், என்றெல்லாம் பிக்கல் பிடுங்கல் கிடையாது என்பதையும், கட்டிலில் தாச்சுண்டு படிக்க முடியாது போன்றவற்றையும் வெங்கட்/பத்ரி என அனைவரும் அலசி விட்டார்கள். இந்தப் புத்தகங்களில் பலவற்றை நான் வாங்கி இருந்தாலும், படித்து முடித்திருப்பது ‘அலகில்லா விளையாட்டு’ மட்டுமே. அதன் விமர்சனத்தை இங்கு படிக்கலாம்.
தமிழோவியம் வெளியிட்ட மின்-புத்தகங்களின் பட்டியல்:
ஆயிரம் வாசல் உலகம் – என். சொக்கன்
வலைத்தமிழ் – ஐகாரஸ் பிரகாஷ்
அலகிலா விளையாட்டு – பா. ராகவன்
அம்பானி – என். சொக்கன்
உள்ளம் உதிர்த்த பூக்கள் – பா.ராகவன்
பேனா மன்னர்கள் – முத்துராமன்
முதல் பொய் – என். சொக்கன்
பிருந்தாவனில் வந்த கடவுள் – நாகூர் ரூமி
விவாஹப் பொருத்தம்: ஒரு விவாதம் – ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்
கூபான் எண்ணை இங்கிருந்து வெட்டி ஒட்டலாம் –> VCT02EB029
இணையத்து ஸ்டைல் டிஸ்க்ளெய்மர்கள்:
1. இந்த புத்தகங்களை நீங்கள் வாங்குவதால் எனக்கு நயா அணா கூலி கிடையாது.
2. இணையத்தில் தவணை அட்டையை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு விடவும்.
3. புத்தகம் படிக்கும்போது உங்கள் மானேஜர் வந்தால் நான் பொறுப்பல்ல.
4. புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை (என் போன்றவர்களுக்காக) வெட்டி வேறெங்கும் நோட்பேடிட முடியாது.
5. இருநூறு பக்கத்தை பிரிண்டருக்கு அனுப்பி அதில் வரும் சத்தத்தில் கூட்டாளிகள் தூக்கம் கலையலாம்.
6. புத்தகத்தை ஊடுருவி கொந்த முடிந்தால் எனக்கும் ஒரு வார்த்தை சொல்லுங்கள்.











Please give me a E-Book