Daily Archives: பிப்ரவரி 24, 2004

ஆண்களை மிரள வைக்கும் கேள்வி!?



Rudy Park by Darrin Bell and Theron Heir

புத்தக வெளியீடுகள் – எழுத்தாளர்கள் சங்கம்

28.02.2004 சனி 6:00 PM

தேவநேயப் பாவாணர் நூலக அரங்கம்

அண்ணா சாலை, சென்னை

வரவேற்புரை: கி.ஆ. சச்சிதானந்தம்

ஒருங்கிணைப்பாளர்: ரவி சுப்ரமணியம்

தலைமை: டாக்டர் சுந்தரமூர்த்தி

புத்தக வெளியீடு: (1)

‘கொங்குதேர் வாழ்க்கை’ (சங்க காலச் செய்யுள் சில உரையுடன்) – எஸ். சிவகுமார்

வெளியிடுபவர்: எஸ். ராமச்சந்திரன்

பெற்றுக் கொள்பவர்: பல்லடம் மாணிக்கம்

புத்தக வெளியீடு: (2)

‘புதுக்கவிதை வரலாறு’ – ராஜமார்த்தாண்டன்

வெளியிடுபவர்: வெங்கட் சாமிநாதன்

பெற்றுக் கொள்பவர்: கா மோகனரங்கன்

நன்றியுரை: ராஜமார்த்தாண்டன்

புத்தக வெளியீடு: (3)

‘தென்குமரியின் கதை’ (கன்யாகுமரி மாவட்டம்: சங்ககாலம் முதல் நிகழ்காலம் வரை) – அ.கா. பெருமாள்

வெளியிட்டு பேசுபவர்: பழ. கருப்பையா

நன்றியுரை: அ.கா. பெருமாள்

புத்தக வெளியீடு: (4)

‘இரவு’ (எலி வெசெல்: சுயசரிதை) – தமிழில்: ரவி இளங்கோவன்

வெளியிட்டு பேசுபவர்: கோபாலகிருஷ்ணன் (‘சூத்ரதாரி’ எழுதியவர்)

பெற்றுக் கொள்பவர்: அ. சாரங்கன் (ஓவியர், கு. அழகிரிசாமியின் மகன்)

புத்தக வெளியீடு: (5)

‘ஏழாம் உலகம்’ (நாவல்) – ஜெயமோகன்

வெளியிடுபவர்: நாஞ்சில் நாடன்

பெற்றுக் கொள்பவர்: ·ப்ரான்சிஸ் கிருபா (கவிஞர்)

நன்றியுரை: ஜெயமோகன்

மேலும் விவரங்களுக்கு: tamilininool@yahoo.co.in/044 28110759

ஒரு காதல் கதை – சாரு நிவேதிதா

முகம் I: “சரி, பேசி விட வேண்டியதுதான்’ எனத் தீர்மானித்தேன். கொஞ்ச நேரம் ஆகட்டும் என்று நினைத்த

படி, வாங்கி வந்த போகர் வைத்தியம் 700 என்ற நுõலைப் புரட்ட ஆரம்பித்தேன். கண்ணில்

தென்பட்ட பக்கம் சுவாரசியமாக இருந்தது. இதோ:

“”உலகத்தில் மக்கள் கழுதையை இழிவாகக் கருதுகிறார்கள். ஆனால், உண்மை அப்படியன்று.

கழுதைப் பிறவி மாண்புடையதாகும். அதற்கு மறுபிறவி இல்லை. கழுதையைக் கொண்டு பற்பல

வித்தைகளை உலகில் செய்து முடிக்க முடியும்.

உதாரணமாக, சுழல் வண்டு, குழியானை, மின்மினிப்பூச்சி, ஈப்பு1⁄4 என்னும் பூச்சி, நாய்ப்பால்,

மருள் ஊமத்தை விதை, ஐவிர1⁄4ச்சாறு, பேய்க்கரும்பின் சாறு, செந்நெல்முளையரிசி, பாதரசம்,

கோரோசனை ஆகியவற்றைச் சம அளவு எடுத்து கல்வத்தில் இட்டு அதோடு கழுதையின் விந்தை

எடுத்துச் சேர்த்து அரைக்க வேண்டும். இதனோடு சல்1⁄4க்கொடியின் வேரையும் அரைத்துச் சேர்த்துக்

குளிகையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். இக்குளிகையோடு பெண்ணை வசியம் செய்ய நினைப்

பவனுடைய கண் பீளை, காதுக்குறும்பி, மூக்குச்சளி, எச்சில், வேர்வை ஆகிய ஐந்து அழுக்குகளை

யும் அவனுடைய விந்தையும் சேர்க்க வேண்டும். இவ்வாறு செய்யப்பட்ட குளிகையைப் பால்,

பழம், காய்கறி, சாப்பாடு, வெற்றிலைப் பாக்கு, பலகாரம் ஆகியவற்றுள் எதனுடனாவது சேர்த்துத்

தனக்கு வேண்டியவளை உட்கொள்ளச் செய்தால் அவள் வசியமாவாள்…”

என்னவென்று சொல்ல முடியாத அதி ஆச்சரிய உணர்வுகளுடன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு

நிமிர்ந்தேன்.



நான் மிக நேர்த்தியாக ஆடை அணிவேன். ஒரு நாள்… தலை குளித்திருந்தேன். தலை பின்ன நேரம் இல்லை.

தலைமுடி விரிந்து கிடந்தது. கருஞ்சிவப்பு நிறப் புடவை. நான் கரும்பலகையில் எழுதிக் கொண்டே

இருந்தேன். பொதுவாக மாணவர்கள் முன்னே புடவைத் தலைப்பை பறக்க விட மாட்டேன். இதிலெ

ல்லாம் நான் மிகவும் கண்டிப்பு. ஆனால், அன்றைக்கு என்று பார்த்து செருகியிருந்த புடவைத்

தலைப்பு அவிழ்ந்து விட்டது. வழுக்கிக் கொண்டு போகும் சேலை அது. அந்த வகுப்பில் குறும்பு

செய்பவர்கள் அதிகம் என்று பேர்.


நன்றி: கோணல் பக்கங்கள்

தமிழோவியம் மின்புத்தகங்கள்



Tamiloviam Ebooks
நம்ம வலைப்பதிப்பாளர்களுக்காக தமிழோவியம் பதினைந்து சதவிகிதம் தள்ளுபடி கொடுக்கிறது. புத்தகங்களை உடனடியாக வலையிறக்கி வாசிக்கும் சௌகரியம். ஷிப்பிங் அண்ட் ஹாண்ட்லிங், இந்தியா விஜயம், என்றெல்லாம் பிக்கல் பிடுங்கல் கிடையாது என்பதையும், கட்டிலில் தாச்சுண்டு படிக்க முடியாது போன்றவற்றையும் வெங்கட்/பத்ரி என அனைவரும் அலசி விட்டார்கள். இந்தப் புத்தகங்களில் பலவற்றை நான் வாங்கி இருந்தாலும், படித்து முடித்திருப்பது ‘அலகில்லா விளையாட்டு’ மட்டுமே. அதன் விமர்சனத்தை இங்கு படிக்கலாம்.

தமிழோவியம் வெளியிட்ட மின்-புத்தகங்களின் பட்டியல்:

ஆயிரம் வாசல் உலகம் – என். சொக்கன்

வலைத்தமிழ் – ஐகாரஸ் பிரகாஷ்

அலகிலா விளையாட்டு – பா. ராகவன்

அம்பானி – என். சொக்கன்

உள்ளம் உதிர்த்த பூக்கள் – பா.ராகவன்

பேனா மன்னர்கள் – முத்துராமன்

முதல் பொய் – என். சொக்கன்

பிருந்தாவனில் வந்த கடவுள் – நாகூர் ரூமி

விவாஹப் பொருத்தம்: ஒரு விவாதம் – ஜோதிடரத்னா S. சந்திரசேகரன்

கூபான் எண்ணை இங்கிருந்து வெட்டி ஒட்டலாம் –> VCT02EB029

இணையத்து ஸ்டைல் டிஸ்க்ளெய்மர்கள்:

1. இந்த புத்தகங்களை நீங்கள் வாங்குவதால் எனக்கு நயா அணா கூலி கிடையாது.

2. இணையத்தில் தவணை அட்டையை சுற்றும் முற்றும் பார்த்து விட்டு விடவும்.

3. புத்தகம் படிக்கும்போது உங்கள் மானேஜர் வந்தால் நான் பொறுப்பல்ல.

4. புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை (என் போன்றவர்களுக்காக) வெட்டி வேறெங்கும் நோட்பேடிட முடியாது.

5. இருநூறு பக்கத்தை பிரிண்டருக்கு அனுப்பி அதில் வரும் சத்தத்தில் கூட்டாளிகள் தூக்கம் கலையலாம்.

6. புத்தகத்தை ஊடுருவி கொந்த முடிந்தால் எனக்கும் ஒரு வார்த்தை சொல்லுங்கள்.