சுற்றுபுற வீடுகள் – II


Dubukku- The Think Tank: “மாமா மிக கண்டிப்பானவர். அவருக்கு தலை வழுக்கையானாலும் மாதா மாதம் இசக்கியின் ‘சந்திரா சலூனில்’ முடி வெட்டிக் கொள்ள செல்ல வேண்டும். அப்பாவுடன் முடி வெட்டிக்கொள்ள செல்வதென்றால் ஜாலி. கையில் 50 பைசா தருவார். ஆனால் மாமா வீட்டிலே வளர்ந்ததால் அந்த சந்தர்பம் எப்போவாவது தான் கிடைக்கும். மாமா ஸ்கூல் ஹெட்மாஸ்டர். இசக்கியின் மகன்கள் மாமாவின் ஸ்கூலிலே படித்து வந்தார்கள்.அதற்காக மாமா சொல்வதை விட தாராளமாகவே முடி -வெட்டுவார் இசக்கி.

பின் தலையில் நனறாக மெஷின் கட்டிங் செய்து நல்ல புல் தரை போல் இருக்க வேண்டும். முடி வெட்டிக் கொண்டு கண்ணாடியில் பார்தால் எனக்கே அடையாளம் தெரியாது. எனக்கு அப்புறம் மாமாவுக்கு இல்லாத முடியை தேடி தேடி இசக்கி பொறுமையாக வெட்டுவார். முடி வெட்டிக் கொண்டு ஆத்தங்கரைக்கு போகும் வழியில் வெட்கம் பிடுங்கி தின்னும். பெண்கள் எல்லாம் சிரிக்கிறர்களா என்று ஒரு முறை நிமிர்ந்து பார்பேன்.

அன்றைக்கு தெரிந்தவர்கள் எல்லாரும் .”என்ன அறுவடை ஆயாச்சு போல..” என்று பின்ன்ந் தலையில் தடவிப் பார்பார்கள். குறுக வெட்டியிருந்தால் அப்படி செய்யும் போது கையில் கிச்சு கிச்சு மூட்டுவட்து போல இருக்கும். ஸ்கூலில் அன்று முழுவதும் பின்னால் உட்கார்ந்து இருக்கும் பையன் தொல்லை தாங்க முடியாது..தலையை அடிக்கடி தடவிக் கொண்டே இருப்பான். சில வம்பு பிடிதவர்களும் அவ்வப்போது வந்து தடவி வம்பு செய்வார்கள். அப்போதெல்லாம் மனதில் இசக்கியை திட்டுவேன்.

ஸ்டெப் கட்டிங் வெட்டிக் கொண்டு வரும் நண்பர்களை ஆதங்கத்துடன் பார்த்த நாட்கள் அவை. இசக்கியை பொறுத்த வரை ஸ்டெப் கட்டிங்கெல்லாம் காலி பசங்கள் தான் வைத்துக் கொள்வார்கள். ”

இந்தியா பேசும்பொழுது (இன்னும் உண்மை அறியாத பிராமணக் குடும்பத்தின் சம்பாஷணைகளில்) இவை வரலாம் என்று சொல்வது nostalgic ஆக உள்ளது:

“இப்போ அங்க மணி எத்தனை?

ரொம்ப குளிரா அங்கே?

உடம்பப் பாத்துக்கோங்கோ…

குழந்தைக்கு உடம்புக்கு ஒண்ணுமில்லையே?

எப்போ வரேள் ஊருக்கு?

ஆபீஸ் ஒண்ணும் ப்ரச்னை இல்லையே?

மேல ஏதாவது படிக்கிறாயா?

செவன் ஸீஸ் மாத்திரை ஒழுங்காப் போட்டுக்கறியா?

ஓழுங்கா சந்தி பண்ணு. தெனமும் நூத்தியெட்டு காயத்ரி ஜபிக்கிறியோ?”

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.