Monthly Archives: திசெம்பர் 2003

Points to ponder against Capital Punishment

* ஆயுள் தண்டனை சட்டம் இருக்கின்ற அமெரிக்க மாகாணங்கள் – 38

* இந்த 38 இடங்களில் உள்ள மாவட்ட தலைமை வழக்கறிஞர்களின் பகிர்வு:
வெள்ளையர் – 98%
ஆப்பிரிக்க அமெரிக்கர் – 1%

* ·பிலடெல்·பியாவில் நடந்த ஒரு ஆய்வின் படி, ஒரே விதமான குற்றங்களைப்
புரிந்தவர்களுள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் 38 விழுக்காடு அதிகமாக மரண
தண்டனை விதிக்கப் பெறுகிறார்கள்.

* இது வட கரோலினா ஆய்வின் முடிவு. வெள்ளையரைக் கொன்றிருந்தால், விஷ
ஊசி பெறுவதற்கான வாய்ப்பு முன்றரை மடங்கு அதிகரிக்கிறது.

* 73 முதல் 93 வரை நூறு பேர் குற்றமற்றவர் என விடுவிக்கப் பட்டுள்ளார்கள்.

* அவர்கள் விடுதலை ஆவதற்கு முன் சிறையில் இருந்த சராசரி ஆண்டுகள்: 9

* மின் அமர்வின் பிடியில் இருந்து கடைசி நிமிடங்களில் நிரபராதி என
நிரூபிக்கப்பட்டவர்கள்:
2001 – 8
2002 – 9
2003 – 10 (இதுவரை)

* கருத்து கணிப்புகெல்லாம் மதிப்பு உண்டா? முன்னாள், இன்னாள் குற்றவியல்
குமுகாயங்களின் தலைவர்களிடையே எடுத்த கருத்தாய்வின்படி: மரண தண்டனை
சட்டம் கொலை செய்பவனை தடுக்கிறது என்பதை நூற்றுக்கு 84 பேர் நம்பவில்லை.

சில பொருளாதார நிஜங்கள்:

* அமெரிக்கர்கள் செலவாளிகள் என்பதை மீண்டும் வட கரோலினா கருத்தய்வு
அறிவுறுத்துகிறது. ஆயுள் தண்டனையை விட தூக்கு கயிறுக்கு 2.16 மில்லியன்
அதிக டாலர் தேவைப்ப்படுகிறது.

ஏன் இவ்வளவு ஜாஸ்தி செலவு: வக்கீலய்யாவுக்குக் கொடுக்கும் ·பீஸ். (இந்த கணக்குப்
போடபட்ட வருடம் பத்தாண்டுகளுக்கு முன்பு; இப்பொழுது இன்னும் அதிகம் இருக்கும்.)

* இந்தியானா ஆராய்ச்சி: இவ்வளவு அதிகம் செலவு செய்து பல சமயங்களில் ஆயுள்
தண்டனையே கிடைப்பதால், 38 சதவிகிதம் மேலதிக பண விரயம்.

* ·ப்ளோரிடா கணக்கு வழக்கு: (1976 முதல்)
நிறைவேற்றபட்ட மரண தண்டனைகள்: 44
ஒவ்வொரு தண்டனைக்கும் ஆன செலவு: $ 24 மில்லியன்

(பரோல் இல்லாத) ஆயுள் தண்டனை வழக்கு போட்டிருந்தால்,
சேமித்திருக்கக் கூடிய பணம்: ஒரு வருடத்திற்கு $51 மில்லியன்

* டெக்சாஸ் பட்ஜெட்:

ஒரு மரண தண்டனை நிறைவேற்ற: $ 2.3 மில்லியன்
நாற்பது வருடம் ஒருவரை தனி செல்லில், ஆயுள் தண்டனையில்
அடைக்க: மேற்கண்ட மில்லியன்களின் மூன்றில் ஒரு பங்கு.

கடைசியாக காவல்துறையிடம் ஒரு கருத்தாய்வு:

துப்பாக்கி கலாசாரம், அதிக காவல் துறை, இரட்டை ஆயுள் தண்டனை,
சட்ட எளிமையாக்கல், பொருளாதார முன்னேற்றம், போதைப் பொருள் நீக்கம்
ஆகியவற்றையே போலீஸ், மரண தண்டனையை விட அதிகம் விரும்புகிறது.

நன்றி: குகிள், http://www.fdp.dk/ , http://www.deathpenaltyinfo.org/

தமிழ்நாட்டில் பிறந்ததுதான் தவறு

சன் தொலைக்காட்சியின் சனி, ஞாயிறு மதியப் படங்கள்

எவ்வளவோ தேவலாம்; இரவுப் படங்களை விட.

சனி – புதிய வானம்; காதலுக்கு மரியாதை

ஞாயிறு – அரிச்சந்திரா; பொட்டு அம்மன்

காதலுக்கு மரியாதையை அமெரிக்காவின் வெள்ளித் திரையில்

தூங்கிக் கொண்டே லயித்தபோது, ‘டேய்… டேய்ய்’ குரல்கள்

எழுப்பின. வழக்கம் போல் ஒரு ஏமாந்த அமெரிக்க மாப்பிள்ளையை

ஷாலினிக்கு வரன் பார்த்திருப்பார்கள். அப்பொழுது எல்லாம்,

அமெரிக்காவில் வேலை என்றால் மதிப்பிருந்தது.

‘புதிய வானத்தில்’ உதவி இயக்குனராக இருந்த ‘செய்யாறு இரவி’,

‘அரிச்சந்திரா’வின் நெறியாளகையைத் தனியாக கலக்கி இருக்கிறார்.

வெற்றிப் படம் கொடுத்த பிறகும் காணவில்லையே. மீண்டும்,

துணை இயக்குநராகி விட்டாரோ. ஆனந்த விகடனில் இவருடைய

பெயரை படித்த ஞாபகம். ‘ஜெமினி’/’ஜே…ஜே’ சரணும் கூட.

‘ஸ்டார் ஷோ’ என்று ஸ்னேஹா பின்னிரவில் திடீர் தரிசனம்

தந்தார். வழக்கமான கேள்விகள்; புளித்துப் போன பதில்கள்.

‘பெப்ஸி’ உமாவின் ‘பிடித்த ஆண் யார்’ என்னும் கேள்விக்கு

பதில் சொல்லவில்லை. ஸ்னேஹாவை விட உமா நிறையப்

பேசினார். சினிமா மக்களை நேர்முகம் காண்பதை ரசிக்கும்படி

செய்து வந்தவர் டிடி மெட்ரோவின் மாலா மணியன். அளவாக

சிரித்து, அறிவோடு கேள்வி கேட்டு, யாரையும் புண்படுத்தாமல்

தொகுத்தவர்.

‘பெப்ஸி’ உமாவுக்கு நிறைய பிஜேபித்தனம் வந்துவிட்டது.

‘மனமத ராசா’ விரும்பி கேட்கும் குழந்தையை கண்டிப்பது,

‘வீட்டை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டவர்கள் மணம்

புண்படும்படி பேசுவது, என ‘பெப்ஸி.. உங்கள் சாய்ஸில்’,

தொலைபேசியிலேயே இலவச அறிவுரைகள் வழங்குகிறார்.

அவர் தொகுக்கும் நிகழ்ச்சி என்ன ‘வணக்கம் தமிழகமா’ அல்லது

‘அரட்டை அரங்கமா’. ‘கல்யாணந்தான் கட்டிகிட்டு ஓடிப்

போலாமா’வும், ‘மே மாசம் 98-இல் மேஜர் ஆனேனே’ போன்ற

பாடலகளை அனைவரின் பேராதரவைப் பெற்ற பாடலாக சொல்லும்

பண்பாடுகளற்ற நிகழ்ச்சிதானே.

தலைப்புக்கு வருவோம். இணையத்தில் ஏற்கனவே படித்த, கமலுக்குக்

கடிவாளம் என்று பேசினார் பாலச்சந்தர். தமிழகத்தில் பிறந்ததனாலேயே

ஆங்கில விருதுகள் தட்டிப் போகிறதாம். பல புதுமுகங்களை பார்ப்பதும்,

முடிந்தவரை சுத்த தமிழிலேயும், ஒரு நல்ல படைப்பு என்ற கர்வமும்,

மதுரையின் கிராமியக் கலைகளை மெட்ராஸ் தமிழனுக்குக் கொடுப்பதும்,

மரண தண்டனையை சிந்திக்க வைப்பதும் என்னை எட்டு டாலர் கொடுக்க

வைக்கும்.

ஆனால், கவிதாலாயவின் ‘திருமலை’ அளவாவது வெற்றிபெற, இவ்வளவு

எதிர்பார்க்கவைத்தல் கூடவே கூடாது. ஆளவந்தானில் தாணுவுக்குப்

பாடம் புகட்டினார். அன்பே சிவத்தில் பட்டுக் கொண்டார். இன்னும்

திருந்தவில்லை.

ஓரினக் கல்யாணங்கள்

Strong Support Is Found for Ban on Gay Marriage: அவர்களின் விருப்பமும் நியாயம்தானே? எங்கள் ஊரில் கொடுத்த சரித்திரப் புகழ்மிக்க தீர்ப்பை குறித்தும், அமெரிக்க ஜனாதிபதியாகத் துடிக்கும் டீனின் கருத்துக்களை விலாவாரியாக பதிக்கவும் விருப்பம். அதுவரை சில சுட்டிகள்.

Gay Marriage (c) NY Times

விளம்பரங்களுக்கு ஒரு சென்சார்

BBC NEWS | UK | Magazine | Adland faces up to self-control: சாப்பிடும்போது விஜய் ஆதிராஜ் ஹார்பிக்குடன் நுழைவார். ஜாலியான ஹோலி பண்டிகை ஆட்டங்களில் ஆடாதவரை பார்த்து நமுட்டாக சிரிப்பார்கள். சிங்கம் போல ஸ்ட்ரெங்த் எனக்கு டூப் விடுவார்கள். பரங்கியருகு சென்சார் தேவை. நமக்கும் ஒருவிதமான கட்டுப்பாட்டு கழகம் வேண்டும்?!


Benetton advert

Controversial ads risk offending, but can grab the headlines

இணையக் குழுக்களில் வாதம் நடத்துவது எப்படி?

The Opinion Exchange – Be Opinionated! – Online Opinion Polls / Opinion Articles: அடிதடி சண்டை பார்த்திருப்பீர்கள்; அரட்டை அரங்கத்தில் பேச விரும்பியிருப்பீர்; இல்லை. பேசுபவரை சென்னையில் தண்ணீருக்காக அலையவிட விரும்பியிருப்போம். இடது சாரி, வலது சாரி அரசியல் முதல் அனைத்து விஷயங்களையும் விவாதிக்க, கருத்து கணிப்பு நடத்த, உலக கருத்துகளைப் பார்க்க, பல வித எண்ணங்களைப் படிக்க ஒரு அரட்டை திண்ணை தளம்.

சுயசரிதை? டைரி குறிப்பு? நாவல்? நினைவலை? எது இலக்கியம்

On Writers and Writing: The Life of the Mind in Close-Up: சுவையான அலசல் ஆரம்பம். “எனக்கு புனைகதைகளுக்கும் நனவோடை நாவல்களுக்குமான இலக்கிய சச்சரவு அலுத்துவிட்டது.”

அன்னை தெரசாக்களுக்கு பதிலாக சமுதாயத் தொழிலாக்கர்கள்

How to Save the World? Treat It Like a Business: ஒழுங்காக படிப்பதில்லையா? +2வில் நல்ல மதிப்பெண்கள் இல்லையா? சோத்துக்கு கஷ்டமா? கவலை வேண்டாம். தமிழ்ப் படங்களின் ஹீரோ – ஹீரோயின் வித்தியாசத்தை (ஏழை – பணக்கார பொருளாதார பாகுபாடுங்க) நீக்க திரு. ஸ்க்ராம் இவர்களை பயன்படுத்துகிறார்.

பட்டம் பெற்று வேலையில் அமர்ந்தவர், முன்னூறாயிரம் டாலர்களை வரியாக அரசுக்கு தன்னுடைய வாழ்நாளில் கிஸ்தி கொடுக்கிறார். பணபுழக்கத்தை அதிகரிக்கிறார். ஒரு பெண்ணை படிக்க வைப்பது குடும்பத்துக்கே விளக்கேற்றுவது போல ஒருவரை கல்லூரிக்கு அனுப்புவதால், அந்தக் குடும்பங்களில் தறுதலைகள் தவிர்க்கப் படுகிறார்கள்.

பங்களாதேஷ் கிராமீன் வங்கியின் புகழ்பெற்ற ‘மைக்ரோ க்ரெடிட்’, அமெரிக்காவின் சிறந்த பல்கலைகளில் இருந்து இளம் பட்டதாரிகளைக் கொண்டு இல்லாதவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பது, உலகளவில் அனைத்து ஏழ்மையானவர்களுக்குமான உடல் நல பாலிசி, பிரேசிலில் வறுமையில் இருக்கும் விவசாயிகளுக்கு சகாய விலையில் மின்சாரம் வழங்கும் செயல் திட்டம் என பல தொண்டு தொழிலதிபர்கள்.

சமுதாயத் தொழிலாக்கர்கள் (entrepreneurs) சேவை மனப்பான்மையோடு பணம் பண்ணும் எண்ணமும் கொண்டவர்கள். நாட்டுக்கும் நாலு காசு வரவிட்டு, தனக்கும் ஒரு காசு பார்த்துக் கொண்டு, அடுத்தவரிடம் கையேந்தாமல், குடிசைகளை முன்னேற்றுகிறார்கள்.

தற்போது மக்களுக்கு சுற்றுப்புற சூழல் மாசுபடுதல், ஏழைகள் இன்னும் நசுக்கப்படுதல், சுகாதார விபத்துகள், மனித உரிமை மீறல், வன்முறை அதிகரிப்பு, கல்வி திட்டங்களின் சீர்கேடு, என்று பரந்த ஞானம் இருக்கிறது. அவற்றை மாற்ற நேரமும், பணமும், உடல்நலமும், வெளி அறிவும், பார்வைகளும், சமூக அமைப்பும், சுதந்திரமும், நம்பிக்கையும் வாய்த்திருக்கிறது.

ஸ்டான்போர்ட், ட்யூக், யேல் என பல நல்ல கல்லூரிகள் புதிய பாடதிட்டமான சமூக தொழிலாக்கத்தை வழங்குகிறார்கள். கொஞ்சம் சரித்திர பிண்ணனி, மில்லியன் என்.ஜி.ஓ. தொண்டு ஆரவலர்கள் நிறைந்த இந்தியா, என விரியும் கட்டுரை, அரசாங்கத்தின் பங்கை சொல்லி முடிக்கிறது.

Urulum Ulagil – ஏற்கப்படாத எழுத்துக்கள்

Urulum Ulagil – ஏற்கப்படாத எழுத்துக்கள்: “வெட்கம், எனது பிள்ளைப்பிராயம், முரட்டுக் காற்று என்ற தலைப்புக்கள் கொண்ட இவரது மூன்று நாவல்களின் விற்பனையை அரசு தடை செய்துள்ளது.”

லோக்வானி – என்.ஆர்.ஐ புத்தகங்கள் புக்கர் பரிசை கடை…

லோக்வானி – என்.ஆர்.ஐ புத்தகங்கள் புக்கர் பரிசை கடைசி ரவுண்டில் தவறவிட்ட மோனிகா அலி, தென்னிந்திய கிறித்துவர்களைப் பேசும் டேவிடின் முப்பதிவுகள், வீட்டில் பார்த்து நிச்சயிக்கப்படும் திருமணங்கள், அமெரிக்காவின் சீனா, லத்தீன வந்தேறிகளுடன் இந்தியர்களை ஒப்புமை படுத்தும் படைப்புகள் என அமெரிக்க இந்தியர்களுக்கு(ம்) சுவாரசியாமான புத்தக பட்டியல்.

சினிமாவில் இது எல்லாம் சகஜமப்பா…(MSNBC – Gaffes:…

சினிமாவில் இது எல்லாம் சகஜமப்பா…(MSNBC – Gaffes: Fellowship of the Nitpickers): வெள்ளித்திரையிலும் விளக்கெண்ணெய் விட்டுக் கொண்டு நக்கீரர் வேலை பார்க்கிறார்கள். ஆஸ்கர் படங்களிலேயே தவறுகள் இருக்கும் போது, ‘ஜே…ஜே…’க்களில் இருப்பதை பெருசு படித்தாதீர்கள்.