Tag Archives: VP

வலைப்பதிவுகளில் 'அமெரிக்க அதிபர் தேர்தல்'

தமிழ்ப்பதிவுகளில் சமீபத்திய குடியரசு, ஜனநாயக் கட்சி மாநாடுகள்; ஒபாமா, மெகெயின், பைடன், பேலின் குறித்த பார்வைகள்; ஆகியவற்றின் தொகுப்பு. விடுபட்டதை சொல்லவும்.

1. டெமாக்ரடிக் நேஷனல் கண்வென்ஷுன், டென்வர்- ஒரு நேரடி ரிப்போர்ட் :: ராஜா சொக்கலிங்கம்

நான் அறிவாலயம் சென்றிருக்கிறேன். அறிவாலயத்தை சுற்றி என்ன என்ன பார்த்தேனோ அது எல்லாவற்றையும் இங்கும் பார்க்கமுடிந்தது. உதாரணமாக, அறிவாலயத்தில் கலைஞரின் படம், அவர் எழுதிய புத்தகம், அவரை பற்றிய புத்தகம், வாழ்க கோஷங்கள், தி.மு.க கொடி, கட்சி சார்ந்த பொருள்கள் விற்கும் குட்டி குட்டி கடைகள் என நான் அங்கே பார்த்ததை அனைத்தும் இங்கேயும் பார்க்க முடிந்தது. கலைஞருக்கு பதில் இங்கே ஒபாமா அவ்வளவுதான் வித்தியாசம்.

2. ஒபாமா பராக் பராக் :: ‘உள்ளும் புறமும்’ மருதன்

ஜார்ஜ் புஷ்ஷின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். பில் கிளிண்டனின் கொள்கைகள்தான் பராக் ஒபாமாவின் கொள்கைகளும். யார் அதிபர் என்பது அவ்வளவு முக்கியமில்லை. குடியரசுக் கட்சியா அல்லது ஜனநாயகக் கட்சியா என்பதல்ல கேள்வி. வெள்ளையரா கறுப்பரா என்பதல்ல முக்கியம். அமெரிக்காவின் தன்மை மாறாது.

3. மலிந்து வரும் அமெரிக்க அரசியல்: Cheap Political Stunts :: தெக்கிகாட்டான்

சாரா பலீன் இந்தக் காட்சியில் இணையும் வரை நன்றாகவே சென்று கொண்டிருந்த அரசியல் சார் பிரச்சாரங்கள் இன்று வேறு திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்திருக்கிறது… பேசப் படக் கூடிய விசயங்களை ஓரத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, கூட்டத்தினை கைதட்டி “க்கோ ட்டீம் க்கோ” சொல்லி…

4. அமெரிக்க அரசியல் – தெகாவிற்கான பதில்! :: யு.எஸ்.தமிழன்

Unemployment rate had been within the required amount throughout Bush’s regime. ஒரு நாடு சுபிட்சமாக, inflation இல்லாமல் இருக்க 4-6% unemployment rate இருக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள்…highly not recommended to bring the unemployment rate below this levels as it will trigger inflation! http://www.bls.gov/cps/cpsaat1.pdf இதில் கிளிண்டன் காலத்தையும் புஷ்சின் காலகட்டத்தையும் compare செய்து நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

5. பாரக் ஒபாமா: அமெரிக்காவின் மாயாவதி! :: புதிய ஜனநாயகம்

முதலாளித்துவ நாடாளுமன்றத்திற்கு நடத்தப்படும் தேர்தல்கள் மூலம், அடிப்படையான எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது என்பதற்கு பல நாடுகளின் அனுபவங்கள் சான்றாக உள்ளன. அமெரிக்க ஜனநாயகம் பற்றிய வீண்பெருமையில் மூழ்கிக் கிடக்கும் அமெரிக்க மக்களுக்கு இந்த அனுபவங்கள் கண்ணில் படாது, அமெரிக்க மக்கள் பட்டுத்தான் புரிந்து கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டுமானால், பாரக் ஒபாமாவின் தேர்வு பயன்படக்கூடும்.

6. வெள்ளை நிறவெறி கறுப்பு உண்மைகள் : இளநம்பிபுதிய கலாச்சாரம்

கடந்த இருபதாண்டுகளில் அமெரிக்க சமூகத்தின் பல்வேறு துறைகளில் நடந்த நிறவெறிக் கொடுமைகளை இங்கே தொகுத்துத் தருகிறோம், இக்கட்டுரை எழுத உதவிய நூல் ரோலொஜ் பதிப்பகத்தின் ஒயிட்ரேசிசம், ஆசிரியர்கள் ஜோ ஆர்.பேகின், ஷொர்னன் வெரா மற்றும் பினார்பாதர்.

சமகால அமெரிக்காவில் நிறவெறிப் பாகுபாடு எந்த அளவுக்கு வெள்ளையர்களிடம் ஊறியிருக்கிறது என்பதை விரிவான ஆய்வின் மூலம் நிறுவுகிறது இந்நூல். உலக மனித உரிமை பற்றிக் கூப்பாடு போடும் அமெரிக்காவின் உண்மை முகத்தையும் அமெரிக்கா ஜனநாயகத்தின் உண்மை முகத்தையும் இதன் மூலம் புரிந்து கொள்ளமுடியும்.

7. அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா…. :: அவியல் செல்வி

ஒரே வேலைக்கு, பெண்களுக்கும் , ஆண்களுக்கும் சமமான ஊதியம் வழங்குவதையே ஏற்றுக்கொள்ளாத மெக்கெயின், துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுப்பதற்கு முன் ஒரே ஒருமுறை மட்டுமே சந்தித்திருக்கும் பெண்ணை திடீர்னு துணை ஜனாதிபதி பதவிக்கு ஏன் நிறுத்தினார்?

ஒபாமாவை நிர்வாக அனுபவம் பத்தாதுன்னு மூச்சுக்கு மூச்சு திட்டிக்கிட்டே, இரண்டே இரண்டு வருஷங்கள் அலாஸ்கா என்ற பனி பிரதேசத்திற்கு ஆளுநராக இருக்கும், தனக்கு பரிச்சயமில்லாத ஒருவரை ஏன் துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராகினார்

8. சாரா பாலினின் திருமணமாகாத 17 வயது மகள் கர்ப்பம் :: வினாயக்

– அமேரிக்க பள்ளிகளில் வெளிப்படையான பாலியல் கல்வி கூடாது,
– பாலியல் கல்விக்கு அரசுப் பணமேன் ? வரிப் பணமேன் ?
– abstinence – அதாவது மறுத்தலே சிறந்த கருத்தடை
– கருக்கலைப்பு கூடாது
என்றெல்லாம் பழமையான கருத்துக்களை பறை சாற்றிவரும் சாரா பாலினின் வீட்டிலேயே, அவருடைய சொந்தப் பெண்ணே, 17ழே வயதில், அதுவும் திருமணத்துக்கு முன் கருவுற்று இருப்பது எதிர் தரப்பில் பெரும் நகைப்பையும், அமேரிக்க conservative பழமைவாதிகளிடத்து பெரும் திகைப்பையும் உண்டாக்கியுள்ளது

9. அவுட் சோர்சிங்: இந்தியாவைக் கலங்க வைத்துள்ள ஒபாமா!நாடும் நடப்பும்

அவுட்சோர்சிங் செய்யாத அமெரிக்க நிறுவனங்களுக்கு மட்டுமே இனி வரிச்சலுகை அளிக்கப்படும் நிலையை உருவாக்கப் போகிறேன் என்றார் அவர்.

10. ஒபாமா இது நியாயமா! சாய்கணேஷ் (பங்கு சந்தையில் பணம் பண்ணலாம் வாங்க)

இனவெறிக்கு எதிராக போராடியவர் என்றெல்லாம் சொல்லபடும் அவர் பேசியதும் (மண்ணின் மைந்தர்களுக்கே முதலிடம் என்ற வகையில்) இனவெறி தாக்குதலே/தூண்டுதலே.

அமெரிக்காவின் ஒவ்வொரு அசைவும் மற்ற நாடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உலகறிந்த விசயம்…. அப்படி இருக்கையில், அவர் நடை முறைக்கு சாத்தியமா (அமெரிக்க காங்கிரஸின் அங்கிகாரம் / செனட் அங்கிகாரம் கிடைக்குமா) என்பதை யோசிக்காமல் சொல்லிய வார்த்தைகள், ஓட்டு பொறுக்கும் அரசியல் வாதிகளின் பேச்சை போல் தான் இருந்தது

11. இந்தியா – அமெரிக்கா ஒன்றிணைந்து தீவிரவாதத்தை முறியடிக்க வேண்டும் – சுதந்திர தின வாழ்த்து செய்தியில் ஒபாமா :: வியப்பு.கொம் செய்தி

21ஆம் நூற்றாண்டில் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. இதனை இந்தியா அமெரிக்க நாடுகள் இணைந்து முறியடிக்க வேண்டும். இந்திய சுதந்திரத்தில் மகாத்மா காந்தியின் பங்கு மகத்தானது. அவரது நெறிமுறைகளை இக்காலத்து இளைஞர்கள் பின்பற்ற வேண்டும்.

12. வாங்கலையோ ஒபாமா, மெக்கெனின் காண்டம்… !!! :: சேவியர்

ஒபாமா காண்டம் சொல்கிறது : Use With Good Judgment
மெக்கெயின் காண்டம் சொல்கிறது : Old but not expired

13. ஒபாமாவின் நலன் கருதிய உப ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு :: அதிரன் மெட்ரோ நியூஸ் 29.08.08

பயங்கரவாதத்தை பொறுத்தரை ஈராக் முக்கிய இடம் வகிக்கவில்லை. ஒரு போதும் வகிக்கவும் போவதில்லை என்பது ஒபாமாவின் முடிவாக இருந்தாலும் ஈராக்கில் நிலையான இராணுவ தளங்களை ஏற்படுத்துவது தொடர்பான தவறான வழிகாட்டலுக்கு அமெரிக்கப் படையினரையும் வளங்களையும் வீணடிக்கமாட்டார் என்றே தெரிகிறது.

அமெரிக்கத் தேர்தல் 2008 – மாநாடுகள் குறித்த ஒரு ஒப்பீட்டு அலசல் – வாஷிங்டனில் நல்லதம்பி

வாஷிங்டனில் நல்லதம்பியிடமிருந்து வந்த மின்மடலை ஸ்க்ரிப்டில் இங்கே சேமித்திருக்கிறேன்.

வாசிப்பதற்கு முன் எச்சரிக்கை: திராவிட எதிர்க்கருத்துகளைத் தவிர்த்து அமெரிக்க தேர்தல் கூட்டத்தை மட்டும் கருத்தில் கொள்வது நன்மை பயக்கும்.

Ted Rall – US Election Cartoons

நன்றி: Ted Rall — Gocomics.com: Comics, editorial cartoons, email comics, comic strips | Gocomics.com: Comics, editorial cartoons, email comics, comic strips

தமிழ் ஊடகங்களில் குடியரசுக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர்

1.தினத்தந்தி

அமெரிக்க குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக பெண் கவர்னர் தேர்வு
வாஷிங்டன், ஆக.31-
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக ஜான் மெக்கைன் போட்டியிடுகிறார். அவர் தனது கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரா பாலின் என்ற பெண்ணை தேர்வு செய்துள்ளார். 44 வயதான பாலின், அலாஸ்கா மாநில கவர்னர் ஆவார். அவருக்கு 5 பிள்ளைகள் உள்ளனர். அவர் எரிசக்தி விவகாரங்களில் அனுபவம் வாய்ந்தவர்.

எதிர்க்கட்சியில், அதிருப்தியாக உள்ள ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளர்களை கவரும் பொருட்டு, இப்பெண்மணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

2. யாஹூ :: யு.எஸ். : குடியரசுக் கட்சி துணை அதிபராக சாரா பலின் அறிவிப்பு

3. தமிழ் கூடல்

அமெரிக்க துணை ஜனாதிபதி தேர்தலில் பெண் போட்டி
வாஷ’ங்டன், ஆக. 30-

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 4-ந்தேதி நடக்கிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜான்மேக்கேனும், ஜனநாயக கட்சி சார்பில் கறுப்பு இனத்தவரான பராக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.

இருவரும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜோ பிடன் என்பவரை பராக் ஒபாமா அறிவித்து இருக்கிறார். இந்த நிலையில் துணை ஜனாதிபதி பதவிக்கு குடியரசு கட்சி வேட்பாளராக ஒரு பெண்ணை ஜான்மெக்கேன் அறிவித்துள்ளார். அவரது பெயர் சாரா பாலின். 44 வயதே ஆன இவர் அலாஸ்கா மாநில கவர்னர். அலாஸ்கா மாநிலத்தின் குறைந்த வயது கவர்னரும் இவர்தான். கடந்த 2006-ம் ஆண்டுதான் இவர் கவர்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜான் மெக்கேனுடன் சேர்ந்து இவரும் இப்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

4. தட்ஸ்தமிழ் :: குடியரசுக் கட்சி துணை அதிபராக சாரா பலின் அறிவிப்பு

5. மாலை மலர்

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் மாடல் அழகி
வாஷிங்டன், ஆக. 31-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 4-ந்தேதி நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் ஜான்மெக்கேனும் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும் போட்டியிடுகிறார்கள்.

துணை ஜனாதிபதி பதவி வேட்பாளராக ஜோ பிடன் என்பவரை பராக் ஒபாமா அறிவித்துள்ளார். இதே போல் குடியரசு கட்சி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சாரா பாலின் என்ற பெண் வேட்பாளரை ஜான்மெக்கேன் அறிவித்திருக்கிறார்.

சாராபாலின் இப்போது அலாஸ்கா மாகாண கவர் னராக இருக்கிறார். 5 குழந்தைகளின் தாயான இவர் முன்பு இளம் பெண்ணாக இருந்த போது போதை பழக்கத்துக்கு அடிமையானவர்.

அது மட்டுமல்ல மாடல் அழகியாகவும் இருந்தவர். மிஸ் வாலிகா அழகி போட்டி களிலும் கலந்து கொண்டவர். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. போதை பொருள் பயன்படுத்தியதை சாராவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

மேலும்: கூகிள் செய்திகள்

அமெரிக்காவின் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் பதவிக்கான வேட்பாளரின் பெயர் அறிவிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் பதவிக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், தனது கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக பெண்ணொருவரைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

அலாஸ்கா மாகாணத்தின் ஆளுநர்களிலேயே மிகவும் இளையவரான சேரா பேலின் அம்மையாரை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கும் குறைவாகவே ஆளுநராக இருந்துவருபவர் அவர்.

நாற்பத்து நான்கு வயதுடைய பேலின் அம்மையார் ஒரு அரசியல் சீர்திருத்தவாதி. கருக்கலைப்பை கடுமையாக எதிர்த்துவந்தவர் அவர்.

ஜான் மெக்கெய்னின் இந்தத் தேர்வு, மிகவும் தைரியமான ஒன்று என்று கருதப்படுவதாக ஓஹியோ டேடன் நகரில் நடந்துவரும் குடியரசுக் கட்சி மாநாட்டில் உள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

நன்றி: பிபிசி