திரைப்படத்தை நாம் என்றுமே, திரைப்படமாக மட்டும் பார்ப்பதில்லை. எழுதவேண்டிய ஆக்கம் என்றால், மூர்மார்க்கெட்டில் இருந்து கோயம்பேடுக்கு ரோடு போடுவோம். உள்நோக்கம், குறியீடு, படைப்பு அரசியல் என்று விரிய வைக்கலாம்.
அப்படி சமகோட்டுப் பார்வையில் ஜெயமோகன் வசனம் எழுதிய ‘அங்காடி தெரு‘ சினிமாவிற்கான சித்திரம் இது.
உண்மையில் இதைத்தான் சொல்ல வந்தாரோ, இவரைத்தான் குறிப்பிடுகிறாரோ, இந்த சண்டையைத்தான் இவ்வாறு முடிச்சுப் போடுகிறாரோ என்று எண்ண வைக்கும் கதாபாத்திர ஒப்பீட்டு பத்து.
- சேர்மக் கனியாக வரும் அஞ்சலி: ஜெயமோகன்
- (நாயகன்) ஜோதிலிங்கம்: தமிழ் சினிமாவுலகம்
- ஜவுளிக் கடை முதலாளி அண்ணாச்சி: சுந்தர ராமசாமி
- ஊழியர்களின் கண்காணிப்பாளர் – கருங்காலி: ‘காலச்சுவடு’ கண்ணன்
- ஹீரோவின் தோழர் மாரிமுத்து: வசந்தகுமார்
- நகராட்சி கழிவறையை உபயோகித்து சம்பாதிக்கும் வழிப்போகன்: சாரு நிவேதிதா
- பாலியல் தொழிலாளியை மணந்து கொள்ளும் உயரம் குறைவானவர்: சுஜாதா
- பிளாட்பாரத்தில் கைக்குட்டை விற்கும் இசுலாமியப் பெரியவர்: ‘உயிர்மை’ மனுஷ்யபுத்திரன்
- மகளை ஆஸ்பத்திரியில் அம்போவென்று விட்டுச்செல்லும் தந்தை: ஜாலியாக லிங்க் போடும் இடத்தில், சீரியஸாக நிஜ வாழ்க்கைக்கு தொடுப்புக் கொடுக்கலாமா!
- நடிகை சினேகா: வேற யாருங்க… இதில் கூடவா குறி வைக்க முடியும்?
உதவிய பதிவுகள்:










