அண்ணா சொன்ன செஞ்சிக் கோட்டை சம்பவம்
தமிழ்நாடு காங்கிரசின் சார்பில் முதலமைச்சராக இருந்தவர், “எங்களை எந்தக் காலத்திலும் பதவியிலிருந்து அசைக்க முடியாது” என்று சட்டமனறத்தில் தெரிவித்தார்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் அண்ணா குறிப்பிட்டார்.
“செஞ்சிக் கோட்டைக்கு மதிப்பு ஒரு காலத்தில் இருந்து வந்தது. அந்த மதிப்புக்குக் காரணம் தேசிங்கு ராஜன். அவன் செஞ்சிக் கோட்டைக்கு அதிபதியாக இருந்தவரைதான் அதெல்லாம். இப்பொழுது அதே செஞ்சிக் கோட்டையில் சில இடையர்கள் ஆடு, மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களால் செஞ்சிக் கோட்டைக்கு மதிப்பு என்று சொல்லிவிட முடியுமா?”
இதற்கு அடுத்த இரண்டாவது பொதுத் தேர்தலில் ஐம்பது பேர் வரை சட்ட மன்றத்தில் திமுக உறுப்பினர்களாக வரமுடிந்தது.
நன்றி: அண்ணாவின் கதை: தினமணி கதிர் வெளியீடு :: நவீனன் (பிப்ரவரி, 1970)










