கமல் – சுருதிஹாசன் புகைப்படம் குறித்த விவாதம் அறியாதவர்கள் முதலில் இதை வாசிக்கவும்:
என் பார்வையில்.. – Johan-Paris: கமல் இதைத் தவிர்த்திருக்கலாம்…
இப்போது அமெரிக்காவில் புகழ் பெற்ற ‘ஹானா மொன்டானா‘ நாயகி மிலி சைரஸின் சமீபத்திய அப்பா-பெண் புகைப்படம்:

அது குறித்த சர்ச்சை: Photo no-no controversy – BostonHerald.com
அதே பத்திரிகையில் வெளியாகிய இன்னொரு கலைப்படம்:

பத்திரிகை பத்தியை வாசிக்க: Miley Knows Best: Entertainment & Culture: vanityfair.com: “Between sold-out concerts, multi-platinum records, and a hit TV series, Hannah Montana star Miley Cyrus has some serious business riding on her 15-year-old shoulders—not to mention paparazzi on her tail and tabloid editors praying for her to pull a Britney.”
சுருக்கமான பின்னணி:
- ‘ஹானா மொன்டானா‘ பார்த்திரா விட்டால், பள்ளியில் புழு போல் பார்க்கப்படுவதாக என்னுடைய எட்டு வயது மகள் பயப்படும் அளவு புகழ்பெற்ற பதின்ம வயதினருக்கான தொடர்.
- வழக்கம் போல் இனக்கவர்ச்சி (டேட்டிங்), பாடல் ரசனை, ஆசிரியர் ரகளை என்று டிஸ்னித்தனமாக இருக்கும். அதாவது, தமிழ் கதாநாயகி பாஷையில் சொன்னால், ‘கவர்ச்சிக்கும் புணர்ச்சிக்கும் இடையே உள்ள லஷ்மண் ரேகா’வைத் தாண்டாமல் தொட்டுச் செல்லும்.
- விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா… நானா‘ போலும் இல்லாமல், சன் தொலைக்காட்சியின் ஜோடிப் பெருத்தம் போலும் இல்லாமல், அதையும் தாண்டி குடும்ப அடிதடிகளை அரங்கேற்றி தற்கொலைகள், மன நல பாதிப்புகள் வரை சம்பந்தப்பட்டவரை இட்டுச் செல்லும் ருசிகரமான நிஜ நாடக நிகழ்ச்சியைத் தொகுத்தளிப்பவர் ‘ஹோவர்ட் ஸ்டெர்ன்‘ (Howard Stern).
- “The picture disturbs me. It looks like his daughter is his girlfriend. He’s trying to be hot” என்று திருபாட்காஸ்ட் மலர்ந்தருளி இருக்கிறார்.
சிந்தனைவயப்படும் நேரம்:
- அப்பாவையும் பொண்ணையும் ஃப்ராய்ட்தனமாக பார்ப்பது உலகளாவியது.
- மகள் நட்சத்திரமாகி விட்டால், ஆதுரமாக புகைப்படம் எடுப்பது உகந்தது அல்ல.
- புகழ் பெற்றவரை shadenfraude-ஆக குரலெழுப்பினால், பதிவிட சங்கதி கிடைக்கும்.












