Category Archives: USA

USA Primary & Presidential Series – 4: ThinkProgress & Vote-Smart

தேர்தல் குறித்த தகவல்களை, அதிகம் பிரபலமாகக் கூடாத விஷயங்களை அறிய, பின்னணி காய்நகர்த்தல்களை தெரிந்து கொள்ள இரண்டு வலையகங்கள்:

1. Think Progress

சிறு சிறு தகவல். அதன் தொடர்பான விழியம் என்று வல்லுநர்கள் முதல் வாக்காளர் பட்டியலில் இல்லாத என்னைப் போன்றோர் வரை அனுதினமும் பார்வையிடும் தளம்.

அமெரிக்காவில் என்ன பிரச்சினைகள் முக்கியமானவை என்று அறிய நேரிடும்போது இரத்தக்கொதிப்பு அதிகமாகலாம்.

2. Project Vote Smart – American Government, Elections, Candidates and Voting

ஜனாதிபதி தேர்தலுக்கு ஒன்றரை வருடம் இருந்தாலும், பிரச்சாரம் அனல் பறக்கிறது. அன்றைய தேதியில் என்ன சொன்னார்கள், எப்படி எதிர்வினைத்தார்கள், எங்கே நானூறு டாலரில் சிகையலங்காரம் நடந்தது என்பதுதான் தெரிகிறது.

இவர்கள் வேட்பாளர்களின் ஜாதகத்தை கொடுக்கிறார்கள். சட்டசபையில் எப்படி வாக்களித்திருக்கிறார், தற்போதுள்ளதாக பறை சாற்றும் கொள்கைப்பிடிப்புக்காக எந்த அளவு கொடி பிடித்திருக்கிறார், தேர்தல் நிதியை எங்கிருந்து கையேந்துகிறார், யாருக்கு விசுவாசமாக வாலாட்டுவார என்றெல்லாம் அறிய முடியும்.

மாகாணவாரியாக உள்ளூர் பிரச்சினைகளைக் குறித்தும் விரிவான அறிமுகம் கிடைக்கிறது.

USA Primary & Presidential Series – 3: Bloomberg as Independent

அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் குட்டையை குழப்புவதற்கு புதியதாக ப்ளூம்பர்க் குதித்திருக்கிறார். தற்போது நியு யார்க் நகரத் தந்தை (மேயர்) பதவி. நாளைக்கு சுயேச்சை வேட்பாளர்?

இந்த தடவை நியு யார்க் நகரை சேர்ந்தவர்களின் ஆக்கிரமிப்பு பரவலாகக் காணப்படுகிறது. சுதந்திரக் கட்சியின் வேட்பாளர்களில் முன்னணியில் இருப்பவர் ஹில்லரி க்ளின்டன். தற்போது நியுயார்க்கில் இருந்து செனேட்டராக இருக்கிறார்.

எதிர் கட்சியை சேர்ந்த முன்னணி வேட்பாளர் ரூடி ஜியூலியானி முன்னாள் நகரத் தந்தையாக இருந்தவர். அவருக்கு இருக்கும் USP-ஏ 9/11 அன்று மேயராக இருந்ததுதான்.

‘்தன்னாததன்னால் இன்னொருத்தரின் வெற்றி வாய்ப்புக்கு பங்கம் வந்தால் நிச்சயம் போட்டியிட மாட்டேன்’ என்னும் வாக்குறுதியுடன் வாக்காளர்களின் நாடித்துடிப்பை மோப்பம் பிடிக்க ஆரம்பித்துள்ளார் ப்ளூம்பெர்க். ஆல் கோர்-இன் வெற்றி வாய்ப்பை நோகடித்து, ‘எனக்கு ஒரு கண் போனால், சுதந்திரக் கட்சிக்கு ரெண்டு கண் பணால்!’ என்னும் கொள்கையுடன் வாழ்ந்த ரால்ப் நாடருக்கு இந்த மேற்கோள் சமர்ப்பணம் என்பதை குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்.

பத்மா சொன்னது போல் ஆல் கோர் துணை ஜனாதிபதியாக ஒத்துக் கொள்வாரா என்று தெரியவில்லை. ஆனால், நியூஸ்வீக் போன்ற பத்திரிகைகள், ப்ளூம்பர்க் கட்சி சார்பற்றவராக ஆனதற்கு முழு முதல் காரணமே இதற்காகத்தான் என்று மெழுகுவர்த்தி அணைத்து சத்தியம் செய்கிறார்கள்.

1. George F. Will: Bloomberg to the Rescue? – Newsweek George F. Will – MSNBC.com: He is said to represent ‘post-partisanship,’ but if so—if he is not a partisan of any large, controversial causes—why is he needed?

2. Michael Bloomberg’s Knightly Ambitions

3. Alter: The Mayor’s Veep Scenario – Between the Lines: “Alpha males always rule out running for vice president when the subject comes up. But they almost always wind up signing on.”

கடைசியாக தற்போதைய கருத்துக் கணிப்பு நிலவரம்: Poll: June 22, 2007 – Newsweek Politics

கொசுறு: டெமொக்ராட்ஸ் சார்பாக ஹில்லாரி வேட்பாளரானால், ப்ளூம்பர்க் ஒண்டிக் கொண்டு துணை ஜனாதிபதியாக முடியாது. இருவரும் நியு யார்க் மாகாணத்தை சேர்ந்தவர்கள். ஆனால், வேறு எவர் நின்றாலும், (முன்னாள் நகரத் தந்தை ரூடி ஜியுலியானி உட்பட) இவரை சகாவாக சேர்த்துக் கொள்ள முடியும்.

US Elections – Recap (2004 & 2006)

USA Primary & Presidential Series – 2: Criteria and Evaluation

ரீடர்ஸ் டைஜஸ்ட்டில் இருந்து:

  1. BRAINPOWER – Knowledgeable, incisive and adept at problem solving
  2. TEMPERAMENT – Calm and rational in tense situations, showing grace under pressure
  3. COURAGE – Willing to take a stand and accept risks, regardless of political and personal fallout
  4. VISION – Promotes large goals for America and policies to fulfill them
  5. COMMUNICATION – Can articulate and “sell” a vision for the country to everyday people
  6. CHARISMA – Has a dynamism and charm that encourages others to follow
  7. INTEGRITY – Honest and trustworthy, engendering respect even among political foes
  8. EXPERIENCE – Savvy about the workings of government so goals can become accomplishments
  9. JUDGMENT – Has a track record of sound decisions based on facts, not hopes or emotions

Azhagiri = Karl Rove; Attack Paandi = Scooter Libby; Karunanidhi = Dick Cheney

ச:ஸ்கூட்டர் லிபிக்கு சிறை

இந்த மாதிரி ஒரு பம்மாத்து அமெரிக்க அரசியலில் சகஜம்தான் என்றாலும் வருந்த்தந்தரக் கூடியது 😦

லிபிக்கு எதற்காக தன்டனை கொடுத்திருக்கிறார்கள்? பொய் சொன்னதற்காக. கிட்டத்தட்ட மார்த்தா ஸ்டூவர்டுக்கும் இதே போன்ற உப்பு சப்பில்லாத குற்றத்தை நிரூபித்திருந்தார்கள். அங்கே வேறு எதையும் பெயர்க்கமுடியவில்லை. இங்கேத் தோண்டினால், அடித்தளமே ஆட்டம் காணும் அபாயம்.

சி.ஐ.ஏ. உளவாளி வாலரி ப்ளேமை வெளிப்படுத்தியதில் தன்னுடைய பொறுப்பை உண்மையாக முன்வைக்காத குற்றத்திற்காக தன்டனை.

ஒற்றரின் பெயரைப் போட்டுக் கொடுத்தற்காக லிபியின் மேல் குற்றமேதும் சாட்டப்படவில்லை. ப்ளேம்-தான் வேவு பார்ப்பவர் என்று உலகெங்கும் ஓத வைத்த மூன்று வெள்ளை மாளிகைவாசிகள்:

  • முன்னாள் உள்துறை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிட்டாஜ்
  • ஜி.டபிள்யூ.புஷ்ஷின் ஆலோசகர் கார்ல் ரோவ்
  • ஊடகத் தொடர்பாளர் ஆரி ஃப்ளெச்சர்

தெரியக்கூடாத விஷயத்தை, தங்களுடைய சொந்த லாபத்துக்காக, குற்றஞ்சாட்டிய ப்ளேமின் கணவன் வாயை அடைப்பதற்காக, காட்டிக் கொடுத்தவர்கள் எல்லாரும் உல்லாசபுரியில் சுதந்திரப்பறவைகள்.

மூன்றரை வருஷம் துப்பு துலக்கலின் முடிவில் பகடைக் காயாக உருட்டப்பட்டவர் சிறைக்கைதியாகி, நியாயம் கிடைத்த மாதிரி பாவ்லா நாடகத்தின் துருப்புச்சீட்டாகிறார்.

தன்னுடைய வாக்குமூலத்தில் துணை ஜனாதிபதி டிக் செனி-தான் ‘சொல்லச் சொன்னார்’ என்று சத்திய பிரமாணம் செய்தும், சேனி-யை விசாரிக்கக் கூட அழைக்காத நீதி விசாரணை முடிவுறுகிறது.

தலைப்பைக் கொண்டு வரலாம்…

  • மதுரை அரசன் முக அழகிரி ==> கோபம் தலைக்கேறி சூட்சுமமாக சூத்திரதாரியாக செயல்பட்ட கார்ல் ரோவ்
  • அட்டாக் பாண்டி ==> ஸ்கூட்டர் லிபி
  • கலைஞர் கருணாநிதி ==> துணை ஜனாதிபதி

USA Primary & Presidential Series – 1: Why Al Gore will not Run?

புஷ் விட்டுப் போன எச்சங்களை சரி செய்யவே எட்டாண்டுகள் போதாது:

  • உலகெங்கும் படிந்துள்ள அமெரிக்க வெறுப்பு
  • கனடா, ஃப்ரான்ஸ், ஜெர்மனி போன்ற நீண்ட கால சகாக்களே, அமெரிக்காவுடன் பிணக்கு பாராட்டும் காலம்
  • அணு ஆயுத நாடாக ஈரான் மாறும் தருணம்; இரான் மேல் போர் தொடுக்கக்கூடிய நிர்ப்பந்தம்
  • இரான் எவ்வழி… வட கொரியா அவ்வழி செல்லும் அபாயம் (அமெரிக்காவுக்கும் அலாஸ்காவுக்கும்)
  • இராக் உள்நாட்டுக் குழப்பம்
  • ஆஃப்கானிஸ்தானில் தலிபானின் வளரும் செல்வாக்கு + ஆதிக்கம்

க்ளிண்டனுக்குப் பிறகு வர விரும்பினார். தற்போதைய சூழலில்

  • ஹாலிவுட் செல்வாக்கு
  • சுற்றுச்சூழல் தேவதூதன்
  • ‘சுதந்திரக் கட்சி’யின் நட்சத்திர நாயகன்
  • பணந்திரட்டும் கொடைவள்ளல்

என்று நல்ல பெயரை காத்து, ‘முன்னாள் ஜனாதிபதி’ போன்ற கெத்துடன் பட்டும் படாமல் சூப்பர்ஸ்டார் (ரஜினிதான் 😉 வாழ்வே மேல்!

Bill Richardson for President – Videos (Funny)

Ads: Job Interview and Tell Me

2006 Western Ad

Book TV Programs – Al Gore: US Politics

  1. Book Excerpt: The Assault on Reason | TIME
  2. Amazon.com: The Assault on Reason: Books: Al Gore
  3. “The donkey in the room” | Salon News
  4. The Assault on Reason – Al Gore – Book – Review – New York Times
  5. ABC News: Excerpt: ‘Assault on Reason’

On Sunday, May 27 at 12:00 am and at 12:00 pm
The Assault on Reason: How the Politics of Fear, Secrecy, and Blind Faith Subvert Wise Decision Making, Degrade Our Democracy, and Put Our Country and Our World in Peril
Al Gore

Description: From an event at the Wilshire Theater in Beverly Hills, California, former Vice President Al Gore discusses his new book, “The Assault on Reason,” with actor and author Harry Shearer. The book argues in favor of rational public debate, saying the Bush administration is part of a larger trend in which spin prevails over reason. He sites as an example the statistic that at the time the U.S. went to war with Iraq 70% of Americans thought Saddam Hussein was responsible for the September 11 attacks, and between a third and a half of Americans still believe that. Mr. Gore says it is impossible to make informed public policy decisions in a climate that is hostile to reason.

கேக்குத்தான் வெட்டக் கூடாது; துணியைத் தைக்கலாம்

USA Flag

Offending Cake

Be afraid… be very afraid?

Today’s News & Analysis:

  1. LTTE’s Airforce starts Flight Attacks « தரவைப் பகுதியில் விமானத் தாக்குதல்
  2. LTTE air power threat to entire South Asian region « வானில் எழுந்த புதிய கவலை

June 30, 2005 (Tamiloviam)

இந்தியாவும் வான்புலிகளும்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் வளர்த்து விடப்பட்ட இயக்கம் அல்-கெய்தா. அதே போல், இந்தியாவால் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம் எல்.டி.டி.ஈ. உலக வர்த்தக மையத்தை ஒஸாமா பின் லாடன் தாக்கியது போல், மிகப் பெரிய பேரழிவு எதையும் விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு நிகழ்த்தவில்லை.

ஆனால், அவ்வாறான தாக்குதலை செய்யக்கூடிய வாய்ப்புகளை விடுதலலப் புலிகள் மேம்படுத்திக் கொண்டேதான் இருக்கின்றார்கள். விடுதலைப் புலிகள் துவக்கியிருக்கும் விமானப் படை, செப். 11 போன்ற தாக்குதல்களைத் தொடுக்கும் வலிமையை அவர்களுக்குத் தந்துள்ளதாக இந்தியா டுடே (தமிழ்) ஜூன் 8 கட்டுரை விவரிக்கிறது.

தாய்வான் பதினெட்டு பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்கிறது. தாய்வானை நோக்கி சீனா 610 ஏவுகணைகளை குறி வைத்திருப்பதினாலேயே, தாய்வானின் இராணுவ பட்ஜெட் ஏறுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரையும் சிறையில் வைத்து வாட்டும் மியான்மருக்கு இங்கிலாந்து தளவாடங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. இதே போல், விடுதலைப் புலிகளை பலப்படுத்துவதன் மூலம், இலங்கையும் இந்தியாவும், அமெரிக்காவிடமிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் அதிநவீன தற்காப்பு தொழில்நுட்பத்திற்காக செலவிட ஆரம்பிக்கும்.

இலங்கையின் பாதுகாப்புச் செலவீனம் 1990-ஆம் ஆண்டு 550 மில்லியன் இலங்கை ரூபாவாக (ஒரு இந்திய ரூபாய் = 2.3 இலங்கை ரூபாய்) இருந்திருக்கிறது. 1992-ஆம் ஆண்டு 2000 மில்லியனாக உயர்ந்தது என ரோஹான் குணரத்தினாவின் குறிப்பு கூறுவதாக ‘ஈழப் போரட்டத்தில் எனது சாட்சிய’த்தில் சி. புஸ்பராஜா எழுதுகிறார். அவரே தொடர்ந்து, ‘வேறொரு குறிப்பு 1981-ஆம் ஆண்டு 661 மில்லியனாக இருந்த செலவீனம் 1992-ஆம் ஆண்டு 18,058 மில்லியனாக உயர்ந்தது’ எனக் கூறுவதாகவும் சொல்கிறார்.

தரைப்படையும் கப்பல் படையும் ஏற்கனவே கொண்டிருந்த புலிகள், இப்பொழுது விமானப்படையையும் சேர்த்துக் கொண்டதால், முப்படைகளும் கொண்ட ஒரே கெரில்லா அமைப்பாக இருக்கிறார்கள். ஸெக்கில் தயாரான ஸிலின் ஜீ-143 (ZLIN Z 143) விமானங்கள் பல உபயோகங்கள் கொண்டது. விமான ஓட்டுனர் பயிற்சிக்கும் பயன்படும். அதிரடியாக சென்னை வரை பறந்து சென்று, காரியங்களை முடித்துவரவும் உபயோகமாகும். இந்த விமானத்தில் நான்கு பேர் அமர்ந்து பயணம் செய்யலாம். தானியங்கியாக ஆட்டோ-பைலட் முறையில் இயங்கக் கூடியது. 2759 கிலோ மீட்டர் வரை பறக்கலாம். கரடுமுரடான இடங்களிலும் எளிதில் இறக்கமுடியும். பத்து மில்லியன் ரூபாய்க்கு யார் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம்.

இது தவிர ஆயிரம் கி.மீ., 600 கி.மீ., 200 கி.மீ. என்று வெவ்வேறு தூரங்கள் சென்றுவரக்கூடிய விமானங்களையும் சமாதான காலத்தின் போருக்கான ஆயத்தங்களாக செய்கிறார்கள் என்று இலங்கைக்கான இந்திய ஹைகமிஷனர் நிருபமா ராவ் விவரிக்கிறார். இந்த விமான பலத்தின் மூலம் ஒற்று அறிவது, வேவு பார்ப்பது போன்றவை புலிகளுக்கு எளிதாகும். போராளிகளை, இலங்கை, தென்னிந்தியா மற்றும் தென் கிழக்காசியா போன்ற அக்கம்பக்கத்து நாடுகளுக்குக் கொண்டு விடுவது இயலும். போர் காலகட்டங்களில் வெளியிடங்களில் இருந்து அவசர உதவிகள் தருவிக்கவும்; சிகிச்சைகளுக்கு கொண்டு செல்லவும்; புதிய ராணுவ உதிரி பாகங்களை வெகுவிரைவில் கொண்டு வரவும் உதவலாம்.

ராஜீவ் காந்தி கொலையில் தேடப்பட்டு வருபவரும் தென்கிழக்கு ஆசியாவில் வசிப்பவருமான சண்முக குமரன் தர்மலிங்கம் விமான பாகங்களை உதிரியாகக் கொண்டு வந்து விமானம் கட்டமைப்பதில் சம்பந்தப் பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மாதந்தோறும் அயல்நாடுகளில் வசிக்கும் தமிழர்களிடமிருந்து 8.6 கோடி ரூபாய் வருவதாக இந்திய உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. இது விமான எரிபொருள், விமானிப் பயிற்சி போன்றவற்றுக்கும் உபயோகப்படும்.

விடுதலைப்புலிகளாகட்டும் அல் கெய்தாவாகட்டும். அவர்களின் மிகப் பெரிய பயமுறுத்தும் பலம் அவர்களின் தற்கொலைப் படைகள்தான். எல்.டி.டி.ஈ.இன் தற்கொலைப் படையின் பெயர் கரும்புலிகள். தற்கொலைத் தாக்குதல் என்றாலே உலகின் எல்லா நாடுகளும் முப்படைகளும் நடுங்குகிறார்கள்.

விடுதலைப் புலிகளின் திறனையும் நடவடிக்கைகளையும் குறைத்து மதிப்பிட்டு மீண்டும் ஏமாறக் கூடாது என்பதற்கு புஸ்பராஜாவின் கருத்து:

“இந்திய இராணுவம் இன்னோர் நாடான பாகிஸ்தானுடன் மோதிக் கிழக்குப் பாகிஸ்தானாக இருந்த பிரதேசத்தை பங்களாதேஷாக உருவாக்கியபோது, அதாவது 1974-ம் ஆண்டு நடந்த இந்த யுத்தத்தில் இறந்த இந்திய இராணுவத்தின் தொகை 1047-தான். அதாவது ஒரு நாட்டுடன் மோதி இருக்கிறது. இன்னோர் நாட்டை உருவாக்கி இருக்கிறது. ஆனால், இலங்கையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் என்ற இயக்கத்துடன் மோதி இறந்த இந்திய இராணுவத்தின் தொகை 1115”.