Category Archives: Uncategorized

சு.ரா.

பதிவுகள் :: நேசகுமார்

வைதேகிக்கு சென்னை பிரமிப்பை ஏற்படுத்தியது. வீட்டில் பதக்கங்களாகவும், சர்ட்டிபிகேட்டுகளாகவும் வாங்கிக் குவித்து தான் மற்றவர்கள் அனைவரிலும் சிறந்த பெண் எனப் பெயரெடுத்தவர். திடீரென்று சென்னைக்கு வந்தது அவரை மிகுந்த குழப்பத்திற்கும் மன சஞ்சலத்திற்கும் உள்ளாக்கியிருக்க வேண்டும். பாலகுமாரனை வீழ்த்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் வைதேகிக்கு. சு.ரா கையில் அகப்பட்டார்.

ஜெயமோகனிடம் எனக்கு அவ்வளவாய்ப் பரிச்சியம் இல்லாவிட்டாலும், மற்றவர்களிடமிருந்து கேட்ட தகவல்களை வைத்து நிறுவனமாய் நிமிர்ந்து நிற்கும் எந்தவொரு கருத்தும், குழுவும் பிறரை விழுங்கியே நிமிர முடிகிறது என்னும் முடிவுக்கு வந்திருந்தேன். அது தமிழிலக்கிய உலகிலும் அசாதாரண இயல்பு நிலையோடு நிலைகொண்டிருப்பதைக் குறித்து அடிக்கடி கவலையும் கொள்வதுண்டு.

அரவிந்தனிடம் நான் கேட்டது வெங்கட் சாமிநாதனின் ரியாக்ஷன் குறித்து. அவர் சலனமேயில்லாமல் இருந்தார் என்றார். வெங்கட் சாமிநாதனின் நேர்மையை பாராட்டத் தோன்றியது. தமக்கு வக்கீல் நோட்டீஸ் கிட்டிய பின்னர் வெங்கட் சாமிநாதனுக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் ஏனோ திரும்பத் திரும்ப நினைவுக்கு வருகின்றது.

அல்பாயுசில் இறந்து போகும் பாக்கியவான்களுக்கு மட்டும் தான் வீழ்ச்சி கிடையாது. அல்லது, ஒவ்வொரு தாழ்வான செயலுக்குப் பின்னாலும் மனித குலத்திற்கான கடவுளின் மகத்தான திட்டம் இருக்கிறது என்று பித்தலாட்டம் செய்யும் மதவாதியாக இருக்க வேண்டும். இந்த இருவகை மனிதர்களுக்குத்தான் சரிவே கிடையாது.

பிராம்மண எழுத்தாளர்கள் குரூரமாக வன்முறையை ரசிப்பது கிடையாது. ஜெயமோகனுக்கும் சுராவுக்குமான மிகப் பெரிய வித்தியாசமாக இதையே நான் காண்கிறேன். பிராம்மணர்கள் வன்முறையை விவரிக்கும் விதம் கூட ஏசி சினிமா ஹாலிலிருந்து ஹாலிவுட் படச் சண்டையை டிடிஎஸ் சவுண்ட் எ·பெக்டில் ரசித்துப் பார்ப்பது போன்றிருப்பதாலேயே, அவர்கள் எழுதுவதை மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெறுகிறது. வன்முறை தமிழ்நாட்டில் விலைபோகாது.

இழவு வீட்டுக்குச் செல்வது ஒரு கடன். சுராவின் மறைவைத் தொடர்ந்து வரும் கட்டுரைகள், அழகிய அட்டைப் படங்கள், விளம்பரங்கள், விற்பனைகள் இதையே இன்று என் நினைவுக்குக் கொண்டுவருகின்றன. நானும் இதற்கு விதிவிலக்கல்ல!


| | | |

ஜூவி

JuniorVikatan.com: வெள்ளச் சேதங்களைப் பார்வையிடச் சென்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு.

விருத்தாசலத்தில் உடைந்துபோன ஆற்றுப் பாலத்தை கடந்த 28-ம் தேதி பார்வையிட்டுவிட்டு, அப்படியே உழவர் சந்தை பக்கமாக நல்லகண்ணுவும் தோழர்களும் போயிருக்கிறார்கள். அப்போது, உழவர் சந்தை வாசலில் சில விவசாயிகள் காய்கறி விற்றுக் கொண்டிருக்க, அங்கு வந்த டி.எஸ்.பி-யான பழனி என்பவர் அவற்றை எல்லாம் உதைத்துத் தள்ளி, அங்கிருந்து விவசாயிகளை விரட்டிக் கொண்டிருந்தாராம். இதைப் பார்த்துப் பதறிப் போன நல்லகண்ணுவும் தோழர்களும் தட்டிக் கேட்ட போது, அவர்களை மரியாதை இல்லாமல் பேசினாராம் டி.எஸ்.பி. இதைக் கண்டித்து கம்யூனிஸ்ட்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். போராட்டத்துக்கு டி.எஸ்.பி. அனுமதி மறுக்க, மாவட்ட எஸ்.பி-யான பன்னீர் செல்வம் தலையிட்டு, அனுமதி கொடுத்து இருக்கிறார். அப்படியும் ஆர்ப்பாட்டத்தின் போதும் தோழர்களை சகட்டுமேனிக்குத் திட்டினாராம்டி.எஸ்.பி. இதுசம்பந்தமாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டு, அது பதிவு செய்யப்படாமலே இருக்கிறது.

வலைமொழி: தெரியாத தேவதையைவிட தெரிஞ்ச பிசாசு எவ்வளவோ மேல்


| | | |

குமுதம்

லேசான மனது வேண்டுமானால் மிஸ்டர் மியாவ் பக்கம் ஒதுங்குவேன். கொஞ்சம் மாறுதலுக்காக, மனது லேசாக குமுதம் பக்கம் சென்றால் நிறையவே சிந்திக்க வைத்துவிட்டார்கள்.

1. வைரமுத்துவுக்கு கமல் போட்டியா?

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் தென்றல் இதழின் டிசம்பர் இதழில் கமல் கவிதை:

‘என் ஜன்னல்வழிப் பார்வை கலிலியோவின் உலகைச் சதுரமாக்கியது.’

பல தளங்களில் விரிவடையும் கவிதை.

  • கலிலியோவின் உலகு என்பதன் மூலம் கடவுளின் உலகு அல்ல என்னும் அக்நாஸ்டிக் வாதம் முன்னிற்கிறது.
  • கன்ஸாஸ் முதல் பென்சிலிவேனியா வரை அமெரிக்காவில் நிகழ்ந்த இறையியலில் மட்டும் போதித்த ‘கடவுளின் குழந்தைகள்’ சித்தாந்தத்தை அறிவியலில் போதிக்க வைக்கும் சர்ச்சையை நினைவிலாழ்த்துகிறது.
  • என் பார்வை, உன் பார்வை, நம் பார்வை, அகலப் பார்வை என்று ஜன்னல்களை வெளிச்சமாக்குகிறது.
  • கலிலீயோவை சாளரம் வழியாகத்தான் பார்க்கிறோம் என்றும் பட்டறிவு வேறு, பகுத்தறிவு வேறு என்று உறுமுகிறது.
  • தான் என்னும் கர்வம் ‘என் ஜன்னல்’ என்னும் பிரயோகத்தில் மிளிர்கிறது.
  • பார்த்திபனின் கிறுக்கல்களுக்கு சரியான போட்டியாக இருப்பதை உணர்த்துகிறது.
  • ஜன்னல் என்னும் வட இந்தியச் சொல் தொடுப்பதன் மூலம் முபை எக்ஸ்பிரஸ் விமர்சகர்களுக்கு ஆஸ்கரடி கொடுக்கிறது.

    குமுதம் :: இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்…..


    வடு மாங்கா ஊறுதுங்கோ; தயிர் சாதம் ரெடி பண்ணுங்கோ

    அன்று அருண் கேட்ட கேள்விக்கு அரசு பதிலளித்திருந்தார். கமல் மாதிரி அனுபவத்துக்கு ஏற்ற அளவுக்கு இந்த வரிகளும் விரிவடைகிறது என்கிறார்.


    வடிகட்டியவைகளுக்கு வாழ்த்துப்பா முன்னுரையுடன் கருத்து கனிமொழிக்கு போற்றித் துதி இயற்றியிருக்கிறார் வாலி.


    | | | | |

  • காப்பி குறள்

    அறத்துப்பால் – வழிபாடு

    1. அகர முதல வலைப் பதிவெல்லாம்
      பத்ரி குறிப்பே குரு.
    2. பதிவினால் ஆய போஸ்டென்கொல் வாலெறிவன்
      நற்பதிவில் மறுமொழியார் எனின்.
    3. சுட்டிமிசை காட்டினான் பின்பற்றி போனார்
      வலைமிசை நீடுசுற்று வார்.
    4. சுட்டுதல் சுட்டாமை இலான் பதிவோருக்கு
      யாண்டும் அனானிமஸ் இல.
    5. ப்ராக்ஸி ஐபி இருவினையும் பாரா முகமூடி
      பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
    6. சினிமா அரசியல் சமயம் கருத்து குத்து
      பதிவார் பார்வைபெறு வார்.
    7. மனத்துவப்பானவர் மாண்பு போற்றும் பதிவரின்
      ப்ராண்டுதலை மாற்றல் அரிது
    8. செய்திவாழி buzz தாள்பதிவார்க் கல்லால்
      பிறவாழி விசிட்டர் அரிது.

    தொடர்புடைய சுட்டி: Prabhu n Ferrari :: Blog kural | :: Thirukural :: DR.KALAIGNAR URAI ::


    | |

    மூவர்

    ஜெயபாஸ்கரன்

    @ LegoLand California‘ஐயா வணக்கம்
    நல்லாயிருக்கீங்களா?’

    ‘ம்’

    ‘வீட்ல எல்லோரும்
    செளக்கியமா இருக்காங்களா?’
    ‘இருக்காங்க!’

    ‘இப்ப வீடு எங்க இருக்கு?’
    ‘திருவான்மியூர்ல!’

    ‘உங்க கவிதையெல்லாம்
    பிரமாதமா இருக்குமே…
    தொகுதியா வந்திருக்கா?’
    ‘இல்ல!’

    ‘உங்க திறமை
    எனக்கு தெரியும்
    நல்லா வருவீங்க!’
    ‘நன்றி’

    ‘அடடா உங்க கூட ஒரு நிமிஷம்
    பேசக் கூட முடியல பஸ் வந்துடுது
    வரட்டுமா?’
    ‘நல்லது!’

    அடுக்கடுக்காக என்னை
    நலம் விசாரித்துவிட்டுப் போகிறான்
    அவன்.

    அன்பான விசாரணைகளை
    இறுகிய முகத்துடன் எதிர்கொள்வதாக
    என்னிடம் வருத்தப்பட்டுக் கொள்கிறான்
    இவன்.

    எப்படிச் சொல்வது இவனுக்கு?

    சொல்லப்பட்டவைகளை விடவும்
    நினைக்கப்பட்டவைகள் தான்
    எனக்கு நன்றாகக் கேட்கும்
    என்பதை.


    | |

    பழமொழி

    கீழே உள்ள சொலவடைகள் என்னவென்று கண்டுபிடிக்க முடியுமா?

    1. மாட்டுக்கு

      பச்சை

    2. உ ழு கி ற தை >
    3. சோறு
      /\ ஆயிரம்
    4. பை
      ப்
      கு

      கோ
      பு

      ம்

    5. கு ம் , குடம்

    தொடர்புள்ள சுட்டி: வார்த்தை விளையாட்டு | வா.வி. – 2 | III


    | |

    காக்டெயில்

    அறிமுகம் : அர்த்தமண்டபக்காரர்

    சமீபத்தில் படித்ததில் காக்டெய்ல் ரொம்ப பிடித்திருந்தது. ஏற்கனவே சந்தோஷ் குரு விரிவாக அலசிவிட்டதாலும், இன்னொரு விதமாக வாசக அனுபவம் எழுத நேரம் பிடிக்கும் என்பதாலும், இந்த சிறு பதிவு (கமா) போஸ்ட்-இட் நினைவுச் சீட்டு.

    சந்தோஷ் குரு: காக்டெயில் – வாசக அனுபவம்

    சுதேச மித்திரன் : சாம்பலின் மறுவருகை

    சிறுகதை : கோபுரம் தாங்கி

    பத்ரி சேஷாத்ரி : சுதேசமித்திரனின் காக்டெய்ல்

    முதல் இதழ் ‘சாம்பல்’ வீட்டில் எங்காவது ஒளிந்திருக்கலாம். கிடைத்தால் புதுச் சாம்பல் கரைவதற்குள் ‘வாசக அறிமுகம்’ தருவேன்.


    | |

    செய்தி

    இரா.முருகன்

    (c) http://www.resource.nsw.gov.au/murfy/murfy.htmநேற்றைய செய்தித்தாள் சொன்னது
    கம்ப்யூட்டர் விலை குறையுமென்று.
    மழையில்லாமல் மின்சார வெட்டென்று.
    மந்திரிசபை விரிவடைந்தது.
    குடும்பக் கட்டுப்பாடு ஊர்வலம் நடந்தது.
    காந்தி சமாதியில் மலர் வளையம் வைத்து
    அமெரிக்க செனட்டர் புறப்பட்டுப் போனார்.
    தேவாரத்தில் தேசிய ஒருமைப்பாடு –
    இல்லந் தோறும் சாண எரிவாயு –
    பிரமுகர்கள் சொற்பொழிந் திருந்தார்கள்.
    ஹாக்கியில் இந்தியா வென்றதற்காக
    ஆசிரியருக்குக் கடிதத்தில்
    ஆராவமுதன் தொப்பியைக் கழற்றினார்.
    அயோத்தியா மண்டப உபன்யாசத்தில் சாயந்திரம்
    தந்தை சொல்காக்க ராமன் காடேகினான்.
    ரேஷனில் இருபது கிலோ அரிசி.
    செல்லுலர் தொலைபேசி வாங்கினால்
    பேஜர் இலவசம்.
    இட்லி சுற்றி எடுத்துப் போகும்போது பார்த்தேன்.
    இயற்கை எய்தியவன் முகம்
    மிளகாய்ப் பொடி கசிந்த எண்ணெய் மினுக்கில்
    என்னைப் போல.

    ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ::

    ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம்’ சென்னை ஸ்நேகா பதிப்பகம் வௌயீடாக வந்தது. நேர்த்தியான அச்சமைப்போடு கூடிய அதன் முகப்போவியத்தைச் சிறந்த நவீன ஓவியர்களில் ஒருவரான ஆதிமூலம் வரைந்திருந்தார். என் நண்பர் எழுத்தாளர் – கவிஞர் – ஓவியர் யூமா வாசுகி புத்தகத்துக்கு உள்ளே தான் இக்கவிதைகளை உள்வாங்கிக் கொண்டதன் அடிப்படையில் அற்புதமான கோட்டோவியங்களை வரைந்தளித்திருந்தார். மார்ச் 2000-ல் சுஜாதா வௌயிட்டது இப்புத்தகம்.

    இரா.முருகன்
    (ஆகஸ்ட் 2003)


    | |

    முக்கியமில்லாத செய்திகள்

    Dinamalar.com: ராஜாஜியின் 127வது பிறந்த நாளை முன்னிட்டு ராஜாஜி நினைவு விருது தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு வழங்கப்படுகிறது.

    ராஜாஜியின் 127வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுத் தொண்டில் தலைசிறந்து விளங்குபவர்களுக்கு முதன் முறையாக ‘ராஜாஜி நினைவு விருது’ ராஜாஜி பவுண்டேஷன் சார்பில் வழங்கப்படவுள்ளது. இதற்கான விழா வரும் 10ம் தேதி கிண்டியில் உள்ள ராஜாஜி நினைவு மண்டபத்தில் நடக்கிறது.

    மத்திய நகர்புற வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி விழாவுக்கு தலைமை தாங்குகிறார். தேசிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், அகில இந்திய காங்., செயலர் ஜெய்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். உயர்நிலைப் பள்ளியில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடி வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அடுத்த இரண்டாண்டு தொடர் கல்விக்கான உதவித் தொகையும் விழாவில் வழங்கப்படுகிறது.

    இத்தகவலை ராஜாஜி பவுண்டேஷன் அறங்காவலரும் ராஜாஜியின் கொள்ளு பேரனுமான சி.ஆர்.கேசவன் தெரிவித்துள்ளார்.

    வலை நிருபர்: ராஜாஜியின் பேரன் சமீபத்தில் அமெரிக்காவில் இருந்து திரும்பி காங்கிரஸில் சேர்ந்தார். வருகின்ற சட்டசபை தேர்தலில் மைலாப்பூரில் நிற்பதற்கு ஆதரவு திரட்டுகிறார்.


    (c) The Creating Passionate Users


    | |

    காலஷேபம்

    நத்தாரிடம் கேட்டால் நடவாதது ஏதுமில்லை என்பது நான்மறை மொழி. என்னுடைய நத்தார் தின விழைவுப் பட்டியல்.

    நன்றி: tamizhbooks.com

    தேரோடும் வீதி – நீல. பத்மநாபன் – 250.00
    புனலும் மணலும் – ஆ. மாதவன் – 90.00
    நினைவுப் பாதை – நகுலன் – 250.00
    கோவேறு கழுதைகள் – இமையம் – 125.00

    தமிழ்நாட்டில் பஞ்சாயத்து அமைப்புகள் – ஆர். ருக்மணி – 25.00
    தமிழ்நாட்டில் புதிய பஞ்சாயத்து அரசாங்கம் – டாக்டர்.க. பழனித்துரை – 20.00
    20ஆம் நூற்றாண்டு ஓவியம் – கொ.றொ. கொண்ஸ் ரன்ரைன் – 50.00
    இசைக்கருவிகள் – பி. தைன்ய தேவா – 37.00

    தமிழில் சிறுபத்திரிகைகள் – வல்லிக்கண்ணன் – 55.00
    மணிக்கொடி காலம் – பி.எஸ். ராமையா – 75.00

    சமூக உளவியல் – அண்ணாமலை பல்கலைக்கழகம் – 45.00
    சமூகவியல் கோட்பாடுகள் – அண்ணாமலை பல்கலைகக்கழகம் – 65.00
    சமூகவியல் பிரச்சினைகள் – அண்ணாமலை பல்கலைக்கழகம் – 55.00
    சமூகவியல் கொள்கைகள் – அண்ணாமலை பல்கலைக்கழகம் – 100.00

    தென்னிந்திய குலங்களும் குடிகளும் (நான்கு பாகங்கள்) – தமிழ்ப் பல்கலைக் கழகம் – 465.00
    சமுதாய இயக்கமா ஆர்.எஸ்.எஸ்? – கலி. பூங்குன்றன் – 30.00
    மாஜினியின் மனிதனின் கடமை – வெ. சாமிநாத சர்மா – 45.00
    பௌத்த தருமம் – ப. ராமஸ்வாமி – 80.00

    இஸ்லாத்தின் பிரச்சினைகள் ஒரு மறுபார்வை – அஸ்கர் அலி எஞ்சினியர் – 80.00
    உறவுகளும் உரிமைகளும் – அப்துல் அஜீஸ் ரஸாதி – 50.00
    ஏழுர்த் திருவிழாக்கள் – முனைவர் ஆ. சண்முகம் – 60.00

    இந்திய அரசியல் சட்டம் ஓர் அறிமுகம் – ச. செந்தில்நாதன் – 18.00
    தலித் விடுதலையும் கிறித்துவமும் – வி.டி.ராஜசேகர் – 15.00
    இந்துமதக் கொடுங்கோன்மையின் வரலாறு – தவத்திரு தர்மதீர்த்த அடிகளார் – 120.00

    சென்னை பெருநகர தொழிற்சங்க வரலாறு – தே. வீரராகவன் – 150.00
    நாஞ்சில் நாட்டு வெள்ளாளர் வரலாறு – நாஞ்சில் நாடன் – 60.00
    ஆரியர் வரலாறு (பாகம் ஒன்று) – சோதிப்பிரகாசம் – 96.00
    ஆரியர் வரலாறு (பாகம் இரண்டு) – சோதிப்பிரகாசம் – 96.00
    திராவிடர் வரலாறு – சோதிப்பிரகாசம் – 80.00

    புதுமைப்பித்தன் – வல்லிக்கண்ணன் – 15.00
    பம்மல் சம்பந்த முதலியார் – ஏ. என். பெருமாள் – 15.00
    வ. ரா. (வ. ராமசாமி) – சு. வேங்கடராமன் – 15.00
    பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை – இராம. சுந்தரம் – 15.00

    கு. பா. ராஜகோபாலன் – இரா. மோகன் – 15.00
    த. நா. குமாரஸ்வாமி – த. கு. அஸ்வின் குமார் – 25.00
    வெ. சாமிநாத சர்மா – பெ. சு. மணி – 25.00
    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – அறந்தை நாராயணன் – 25.00

    வ. சுப. மாணிக்கம் – இரா. மோகன் – 25.00
    அ. மாதவையா – சு. வேங்கடராமன் – 25.00
    ச. து. சு. யோகியார் – எஸ். ஆர். அசோக்குமார் – 25.00
    நாவலர் சோமசுந்தர பாரதியார் – ச. சாம்பசிவனார் – 25.00

    நா. பார்த்தசாரதி – திருப்பூர் கிருஷ்ணன் – 25.00
    ம. பா. பெரியசாமி தூரன் – சிற்பி பாலசுப்பிரமணியம் – 25.00
    அகிலன் – சு. வேங்கடராமன் – 25.00
    வ. வே. சு. ஐயர் – கோ. செல்வம் – 25.00

    மு. வ. (மு. வரதராசனார்) – பொன். சௌரிராஜன் – 25.00
    விந்தன் – மு. பரமசிவன் – 25.00
    நா. வானமாமலை – எஸ். தோத்தாத்ரி – 25.00
    சோமலெ – நிர்மலா மோகன் – 25.00

    உமறுப்புலவர் – சி. நயினார் முகமது – 25.00
    செய்குத் தம்பிப் பாவலர் – மு.பரமசிவம் – 25.00
    வை. மு. கோதை நாயகி அம்மாள் – இரா. மோகன் – 25.00
    தேவநேயப் பாவாணர் – இரா. இளங்குமாரன் – 25.00

    ஜீவானந்தம் – டி. செல்வராஜ் – 80.00
    `எழுத்து’ சி.சு.செல்லப்பா – வல்லிக்கண்ணன் – 60.00
    நாடு போற்றும் நாரண துரைக்கண்ணன் – மு. பரமசிவம் – 20.00
    எழுத்துச் செல்வர் வல்லிக்கண்ணன் – மு. பரமசிவம் – 45.00

    எழுத்தாளர் கு. அழகிரிசாமி – மு. பரமசிவம் – 75.00
    தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் – தா. வே. வீராசாமி – 45.00
    ஒரு கம்யூனிஸ்ட்டின் நினைவுக் குறிப்புகள் – பி. ராமச்சந்திரன் – 60.00
    நான் எவ்வாறு கம்யூனிஸ்ட் ஆனேன்? – இ.எம்.எஸ்.நம்பூதிரிபாத் – 25.00

    குமரி நாட்டுப்புறவியல் – அ. கா. பெருமாள், சண்முகசுந்தரம் – 75.00
    கொங்கு நாட்டுப்பறவியல் – தொகுப்பு : சு. சண்முகசுந்தரம் – 100.00
    சென்னை நாட்டுப்புறவியல் – தொகுப்பு : சு. சண்முகசுந்தரம் – 65.00
    நாட்டார் வழக்காற்றியல் ஆய்வுகள் – தே. லூர்து – 50.00

    தஞ்சை நாட்டுப்புறவியல் – ஆறு. இராமநாதன் – 100.00
    தலித் நாட்டுப்புறப் பாடல்கள் – விழி.ப. இதயவேந்தன் – 60.00
    இராமாயண தோல் பாவைக்கூத்து – அ.கா. பெருமாள் – 90.00
    தேவராட்டம் – ஒ. முத்தையா – 70.00

    சேரிப்புறவியல் – கே.ஏ. குணசேகரன் – 100.00
    கிறித்துவரும் தமிழும் – மயிலை சீனிவேங்கடசாமி – 25.00
    சிலப்பதிகாரத் திறனாய்வு – ம.பொ.சி. – 75.00
    மனக்குகை ஓவியங்கள் – தி.க.சி. – 45.00

    வள்ளலாரும் பாரதியும் – ம.பொ.சி. – 15.00
    தழும்புகள் – அண்ணா – 75.00
    கம்பராமாயண ரஸனை – வ.வே.சு.ஐயர் – 20.00
    புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் எம்.வேதசகாயகுமார் 60.00

    நஞ்சென்றும் அமுதென்றும் ஒன்று – நாஞ்சில்நாடன் – 55.00
    நாவலும் வாசிப்பும் – ஆ. இரா. வேங்கடாசலபதி – 60.00
    கம்பரிடம் யான் கற்ற அரசியல் – ம.பொ.சி. – 36.00
    புரட்சிக்காரன் நடுவே – மாலன் – 10.00

    மௌனியுடன் கொஞ்சதூரம் – திலீப்குமார் – 12.00
    தி. ஜ. ர. வின் எழுத்தும், தேசிய உணர்வும் – விட்டல்ராவ் – 32.00
    கு. ப. ரா. – கரிச்சான் குஞ்சு – 24.00
    ஆர். சண்முக சுந்தரத்தின் கொங்கு மணம் கமழும் நாவல்கள் – டி. சி. ராமசாமி – 22.00

    கலித்தொகை, பரிபாடல் காட்சிகள் – நா. பார்த்தசாரதி – 25.00
    ரசிகமணி டி.கே.சி. கட்டுரைகள் – டி. கே. சி. – 20.00
    இலங்கையின் இனவர்க்க முரண்பாடுகள் – குமாரி ஜெயவர்த்தனா – 28.00
    இலங்கையின் தமிழ்ப் புதினப் பத்திரிகையின் வளர்ச்சி – இ. சிவகுருநாதன் – 30.00

    ஈழத்து இலக்கியத் தடம் கார்த்திகேசு சிவத்தம்பி 75.00
    ஈழத்து வாழ்வும் வளமும் – பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை – 45.00
    வட இலங்கை நாட்டார் அரங்கு – கலாநிதி காரை சுந்தரம்பிள்ளை – 150.00
    தமிழ் இலக்கியத்தில் ஈழத் தமிழறிஞரின் பெரு முயற்சிகள் – பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் – 75.00

    இந்திய ஓவியம் – க. சிவராமமூர்த்தி – 8.00
    ஆப்பிரிக்க சினிமா யமுனா ராஜேந்திரன் 35.00
    பாதல் சர்க்கார் நாடகங்கள் – தமிழில் : கோ. ராஜாராம் – 40.00
    வண்ணதாசன் கடிதங்கள் – வண்ணதாசன் – 75.00


    | |