Category Archives: Uncategorized

2006

வலைப்பதிவுகளில், தமிழ்ச்சூழலில், வலையகங்களில், 2006-இல் என்ன நடக்கலாம்?

  1. விகடன் கவர்-ஸ்டோரியாக வலைப்பதிவாளர் ஆகலாம். குறைந்தபட்சம், பதிவுகளில் வருபவைகளில் சிலதாவது பத்திரிகை column-ஆக மறுபதிப்பாகலாம்.
  2. பதிவுகளை விட பின்னூட்டங்கள் சுவாரசியமாகும் காலம் இது. மறுமொழிகளை சேகரித்து தருவதற்கென்றே தமிழ்மணம், தேன்கூடு, கூகிள் ரீடர் போல் ஒரு திரட்டி உருவாகலாம்.
  3. கிரிக்கெட்டைத் தொடர்ந்து தமிழ் சினிமா, செய்தி, கிண்டல் போன்றவற்றுக்கு கூட்டு வலைப்பதிவு வரலாம்.
  4. கூகிள் விளம்பரங்களை விட, விற்பனையாளர்களே வலைப்பதிவர்களை நேரடியாக அணுகுவார்கள். விமர்சனங்களும், அறிமுகங்களும் product positioning செய்யப்படும்.
  5. விகடனைப் போல் குமுதமும் சந்தா கட்டி படிக்கும் தளமானாலும், வெற்றிகரமாக வாசகர்களைத் தக்கவைத்து கொள்ளும்.
  6. வலைப்பதிவர்களின் குறிப்புகள் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டு அச்சேறலாம்.
  7. வலைப்பதிவுகளில் ஏற்கனவே எழுதிவிட்டதாகவோ அல்லது திருடி விட்டதாகவோ, ஏதாவதொரு பிரபலமான எழுத்தாளருக்கு தர்ம அடி கொடுக்கப்படும்.
  8. அனுமதியின்றி வலையேற்றியதாகவோ, தரக்குறைவாக எழுதியதாகவோ பதிவர் மீது வழக்குத் தொடரப் படலாம்.
  9. தமிழ்மணம், தேன்கூடு, போன்ற தமிழ் வலைதிரட்டிகளில் இணைத்துக் கொள்ளாமல் தனிபட்ட சுற்றில் வலைப்பதிபவர்கள் அதிகம் ஆவார்கள்.
  10. தேர்தலுக்கு பின் ‘ஏன் ஜெயித்தார்கள்? எப்படி தோற்றார்கள்’ அலசல்களும், ‘சிவாஜி’ வெளிவந்து ஒரு மண்டலம் முடிந்தவுடன் போஸ்ட மார்ட்டங்களும், உலகக் கோப்பை விமர்சனங்களும், அமெரிக்காவிற்கான வசவுகளும் நிறையும்.

உங்கள் ஊகங்களையும் ஹேஷ்யங்களையும் எழுதி வையுங்கள்.


| |

சு.ரா. – சென்னை

நாடக வெளி சார்பாக எழுத்தாளர் சுந்தரராமசாமிக்கு அஞ்சலி
சுந்தர ராமசாமியின் படைப்புகளின் நாடகமாக்கம்

1. சீதை மார்க் சீயக்காய்த்தூள் (சிறுகதை)
நாடகத் தயாரிப்பு: கூத்துப்பட்டறை

2. சவால் (கவிதை)
இயக்கம்: சந்திரா

3. ஜே.ஜே. சில குறிப்புகள் (நாவலின் தேர்ந்தெடுத்த சில பகுதிகளின் நாடக வாசிப்பு)
ஜெயராவ் (தியேட்டர் லேப்)
கவிஞர் தமிழச்சி
ஒருங்கிணைப்பு: வெளி ரங்கராஜன்

4. ஒரு புளிய மரத்தின் கதை நாவலின் திரைப்பட வடிவம் குறித்து: ஓவியர் கிருஷ்ணமூர்த்தி

இடம்: டேக் செண்டர் (சங்கரா ஹால் எதிரே)
36, டிடிகே சாலை ஆழ்வார்பேட்டை
டிசம்பர் 25, 2005
ஞாயிறு மாலை 6:30 மணி

நன்றி: Thinnai & காலச்சுவடு


| |

Indira Parthasarathy from Thinnai 

Indira Parthasarathy from Thinnai Posted by Picasa

Shivaji (Rajini) – The Boss by Sankar & A.R. Rahma…

Shivaji (Rajini) – The Boss by Sankar & A.R. Rahman
 Posted by Picasa

Sundara Ramasamy Writings in Theater by Veli Ranga…

Sundara Ramasamy Writings in Theater by Veli Rangarajan – Kaalachuvadu announcement Posted by Picasa

Sivaaji (Rajni) – The Boss by Shankar & ARRehman 

Sivaaji (Rajni) – The Boss by Shankar & ARRehman Posted by Picasa

பட்டியல்கள் – 2005

  1. Google Zeitgeist: எதைத் தேடினார்கள், எந்த செய்தி அதிகம் பார்க்கப்பட்டது, எந்தப் பொருள் பெரிதும் வாங்க/விரும்பப்பட்டது?
  2. AP: தலை பத்து முக்கியமான செய்திகள்
  3. வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: தலை 25 செய்திகள்
  4. BusinessWeek: சிறந்த புதுமைகள், மின்னும் தொழிலதிபர்கள், விருப்பமான சொல்லாடல்கள்
  5. வால் ஸ்ட்ரீட் ஜர்னல்: விளம்பரங்களுக்கான அலசல் – கவர்ந்தவைகளும், புஸ்வானமானவர்களும்
  6. ஸ்போர்ட்ஸ் இல்லுஸ்ட்ரேடட்: நட்சத்திர விளையாட்டு வீரர்கள் – ரசித்த புகைப்படங்கள்; உதிர்ந்த முத்துக்கள்
  7. என்.டி.டி.வி.: சென்ற வருடத்தின் இந்திய நாயகர் யார்?
  8. டைம்: 2005-இன் முக்கியமான ஹாலிவுட் திரைப்படங்கள் (டைம்.காம்-இல் தலை பத்து இசை, புத்தகம், அமெரிக்க தொலைகாட்சி போன்ற பட்டியல்களும் கிடைக்கிறது)
  9. நியு யார்க் டைம்ஸ்: வலைப்பதிவர்களிடையே அதிகம் பேசப்பட்ட, புழங்கிய புத்தகங்கள் எவை?
  10. டைம்: ஐம்பது முக்கியமான இணையகங்கள்

| | |

திரைப்படங்கள் – 2005

ஹிந்தி பத்து

  • பேஜ் 3
  • பஹேலி
  • ப்ளாக்
  • இக்பால்
  • போஸ் – தி ஃபர்காட்டன் ஹீரோ
  • ஷப்த்
  • ஹனுமான்
  • மை ப்ரதர் நிகில்
  • பரிநீதா
  • நோ எண்ட்ரி
  • சர்கார்


தமிழ் தலை பத்து

  1. பொன்னியின் செல்வன்
  2. அறிந்தும் அறியாமலும்
  3. தவமாய் தவமிருந்து
  4. கஜினி
  5. அன்னியன்
  6. ராம்
  7. கண்ட நாள் முதல்
  8. கனா கண்டேன்
  9. கஸ்தூரி மான்
  10. சிவகாசி


இனி பார்க்க வேண்டிய சில

  1. சண்டக்கோழி
  2. சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி
  3. அது ஒரு கனாக் காலம்

கொடுமை பத்து

  1. அ… ஆ…
  2. மும்பை எக்ஸ்பிரஸ்
  3. மஜா
  4. மாயாவி
  5. மழை
  6. பிரியசகி
  7. ஒரு நாள் ஒரு கனவு
  8. ஒரு கல்லூரியின் கதை
  9. சின்னா
  10. 6’2″


ரெண்டுங்கெட்டான்

  • சந்திரமுகி

    | | |

  • வலைப்பதிவுகள் – 2005

    இட்லி வடையின் சென்ற வருடத்து தேர்வுகளைப் போல இது என்னுடைய 2005-ஆம் ஆண்டிற்கான பரிந்துரை.

    நான் சொன்னவர்களும் மற்றவர்களும், The Indibloggies சென்று, உங்கள் பெயரை பரிந்துரைத்து பரிசைத் தட்டி செல்ல வாழ்த்துக்கள்.



    சிறந்த …. பதிவு

    1. முயற்சி – தேன்கூடு
    2. செய்தி அலசல் – தமிழ் சசி
    3. வெட்டி வேலை – நமக்கு நாமே திட்டம்
    4. புரட்சி – இணைய குசும்பன்
    5. பின்னூட்டங்கள் – குழலி பக்கங்கள்

    6. புதுமுகம் – வண்ணக்குழப்பம்
    7. காணாமல் போக்கிக்கொண்ட – பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
    8. காணாமல் போனவர் – நினைவுகள்
    9. சர்ச்சை – முகமூடி
    10. இசை – Domesticated Onion

    11. சமூகம் – தடாகம்
    12. ஆண் – உருப்படாதது
    13. பெண் – Autograph
    14. Sporadic – ஜேகேவின் சில குறிப்புகள்
    15. பல்சுவை – மனம் ஒரு குரங்கு

    16. வாழ்க்கை – அனுபல்லவி
    17. ஈழம் – என் மனவெளியில்!.
    18. நுட்பம் – எண்ணங்களின் குரல்வடிவம்
    19. நகரம் – நெல்லை மைந்தன்
    20. சுற்றுலா – எழிலுலா

    21. சினிமா – போட்டுத் தாக்கு
    22. புகைப்படம் – குவியம்
    23. முகமூடி – சுட்டதும், சுடாததும்!
    24. இலக்கியம் – பிச்சைப்பாத்திரம்
    25. சேவை – தேன் துளி

    நகைச்சுவை, அறிவியல், விளையாட்டு, புதிர், துணுக்கு, சுட்டி, மொழி, கல்வி, சிறுவர், மருத்துவம், மேலாண்மை, சமயம், சட்டம், பொருளாதாரம், தத்துவம், தொலைக்காட்சி, சூழலியல், வலைப்பதிவு ஆய்வு என்று இன்னும் நிறைய பேருக்கு கொடுக்கலாம்.

    நியு யார்க் நிறுத்தம்

    நியு யார்க்கில் சில காலம் வசித்திருக்கிறேன். பாம்பேவின் ரயில்களே என்னை குழப்பத்தில் ஆழ்த்தும். நியு யார்க்கின் வண்ணமயமான மின்ரதங்கள், சென்னையின் காட்டானை, நியு யார்க்கில் விட்டது போல் கண்ணைக் கட்டும். ஒன்றாம் வாய்ப்பாடு சொல்லிக் கொடுப்பார்கள்; ஏ டு ஜெட் வரும்; நிற்கும்; திறக்கும்; மூடும்; புறப்படும்.

    கூட்டமாக மக்கள் சேர்ந்து வித்தை பார்ப்பார்கள். ரத்த அழுத்தத்தை சோதிப்பார்கள். இசைக்கு குத்தாட்டம் போடுவார்கள். பரபரப்பாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலுடன் நெட்டித் தள்ளி ஓடுவார்கள். ஊன்றுகோலுடன் பராக்கு பார்ப்பர்கள். வேலைக்கு விரையாவிட்டால் மனதுக்குள் மெல்லிய ஈர்ப்பும், ஓரவாயில் மென் நகையும் வழிந்தோடும்.

    பட்டிக்காட்டான் லுக்குடன் இரும்புக் கம்பிகளுக்கு பின்னால் இருந்த இந்தியர் போன்ற தோற்றம் அளித்த தாத்தாவிடம் ‘ம்யூஸியம் ஆஃப் நாச்சுரல் ஹிஸ்டரி‘ செல்வது எப்படி என்று விசாரித்தவுடன், முரட்டுப் பார்வையுடன் ‘தமிழா’ என்று விசாரித்து, அட்சர சுத்தமான இலங்கைத் தமிழில், எப்படி ப்ளாட்ஃபாரத்திற்கு செல்ல வேண்டும், எந்த ட்ரெயினைப் பிடிக்கணும், எங்கு இறங்க வேண்டும், எவ்வாறு நடக்க வேண்டும் என்பது வரைந்து கொடுத்தார்.

    நியுயார்க் டைம்ஸில் திங்கள்தோறும் வெளிவரும் இனிய மெட்ரோபாலிடன் டைரிக்கு பகுதி தவறவிட்ட சம்பவங்களை தவறவிடக் கூடாத வகையில் சொல்லி வருகிறது.

    முதலாளித்துவ நாடுகளில் வசித்ததால் என்பதுதான் காரணமாக இருக்கவேண்டும். வேலை நிறுத்தம் என்றாலே அலர்ஜியாக இருந்தது. அந்த ஒவ்வாமை, மே 2005-இல் பயமாக மாறியது.

    NStar ஸ்ட்ரைக்கின் போது சகாக்கள் எழுப்பிய கோஷங்கள், இந்தியாவில் கேட்டது போன்ற ‘ஜிந்தாபாத்’கள்தான். ஆனால், பார்கிங் செய்வதற்கு அலுவலக வளாகத்துக்குள் கார் நுழைவதற்கு முன், ஒவ்வொரு காரும் காவல்துறையினரால் நிறுத்தப்படும். உங்கள் காரை, ‘கேரோ’ போன்று சுற்றி நின்று குரல் எழுப்புவார்கள். கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்காமல் இருப்பது உசிதம்.

    கார் கண்ணாடி மீது ஓங்கித் தட்டுகிறார்களே, என்று அகஸ்மாத்தாக் கவிழ்ந்த தலை கலவரத்துடன் தூக்கினால், மிக மோசமாக பிறப்பை குறித்துத் திட்டப்படுவீர்கள். ‘உன்னால் என்னை வசை பாடத்தானே முடியும்!‘ என்று அலட்சிய புன்னகை தவழ்ந்த மேலாளர் ஒருவரின் ஹ்யுண்டாய், ‘7-ஜி ரெயின்போ காலனி‘யில் கிழிப்பாரே… அந்த மாதிரி கூரிய கத்தியால் உரசப்பட்டது. யூனியனின் சக்தியை நம்பும் போலிஸ் காரர்களும், உள்ளே இருக்கும் நபரை கிழிக்காதவரை, ‘உனக்கு வேணும்டா‘ என்று பரபிரும்மமாக இருப்பார்.


    கடந்த கால் நூற்றாண்டில் முதல்முறையாக, ஏழு மில்லியன் பயனர்களை தினசரி கரை சேர்க்கும் எம்.டி.ஏ (M.T.A.)-தான் தற்போதைய சூடான வேலை நிறுத்தம். நியு யார்க் நகர ஓட்டுனர்களின் தலையாய கருத்து வேறுபாடுகள்:

    1. புதிய ஊழியர்கள்: இனிமேல் வேலைக்கு சேருபவர்களின் சம்பளம் 4% குறைவாக தொடங்கும்

    2. சம்பள உயர்வு: வருடத்துக்கு 3.5% உயர்த்தினால் போதாது; வருடா வருடம் எட்டு சதவீதம் உயர்த்த வேண்டும்.

    3. ஓய்வு பெற்ற பிறகும் உடல்நல காப்புறுதியை தொடர்ந்து வழங்குதல்

    4. ஓய்வு பெறும் வயதை 55-க்கு பதில் 62-ஆக வைத்துக் கொள்ளுதல்

    5. சேமநல வைப்புத் தொகைக்கான, ஊழியர் பங்களிப்பை இரண்டு சதவிகிதத்தில் இருந்து ஆறு சதவீதமாக உயர்த்துதல்

    கடைசியாக சொன்ன 2-இல் இருந்து 6%-தான் ப்ரேகிங் பாயிண்ட். அதன் மூலம் எம்.டி.ஏ.வினால் அடுத்த மூன்றாண்டுகளில் கிட்டத்தட்ட இருபது மில்லியன் டாலர்கள் சேமிக்கமுடிகிறது.

    எடுத்துக்காட்டாக, ஆண்டுக்கு முப்பதாயிரம் டாலர் சம்பாதிக்கும் ஓட்டுநர், மாதத்துக்கு ஐம்பது ரூபாயை பென்ஷனுக்குக் காணிக்கையாக்கினார். அவரின் மாத சேமிப்பு நூற்றைம்பது ரூபாயாக அதிகரித்திருக்கும். கடைநிலை ஊழியரின் சம்பளத்தில் கிட்டத்தட்ட நூறு ரூபாய் குறைவது பட்ஜெட்டை பெருமளவு இடிக்க வைக்கும்.

    வேலை நிறுத்தத்தை ஆதரிப்பவர்கள் இவ்வாறு வாதிடுகிறார்கள்:

    1. அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒரு நாளைக்கு நானூறு மில்லியனில் இருந்து 660 மில்லியன் டால்ர் வரை இழப்பு ஏற்படுகிறது. (தகவல்: WSJ.com – The Numbers Behind the Transit Strike)

    2. எம்.டி.ஏ. வேலை நிறுத்தத்தால், காவல் துறைக்குக் கொடுக்கும் ஓவர்டைம் பணத்தோடு ஒப்பிட்டால், பென்சன் சுமை ஒன்றுமே இல்லை.

    3. சேமிப்புக் கணக்கில் ஒரு பில்லியனை வைத்திருப்பவர்கள், கொஞ்சம் செல்வழித்தால்தான் குறைந்து போய் விடுவார்களா?

    பென்ஷன் காணிக்கைகளை சீரமைக்காவிட்டால், புஷ் நடத்தும் அரசாங்கம் போல் — ஒரு பில்லியன் டாலர் அதிகம் வைத்திருக்கும் சேமநலநிதி சீர்குலைந்து, திவாலாகும் அபாயம் இருக்கிறது. போக்குவரத்துக் கழக உறுப்பினர்களின் 6% பங்களிப்பில்லாமல், 2009-இல் ஒரு பில்லியன் டாலர்களுக்கு ஓட்டை விழுந்து விடும், என்று கணக்கு சொல்கிறது.

    பேச்சுவார்த்தைகளில் நேரம் செல்விடாமல் அடுத்த குடியரசு நாயகராகும் ஆசையில் அமெரிக்காவெங்கும் உலாப் போகும் நியு யார்க் கவர்னர் ஜார்ஜ் படாகி-யை (George Pataki), யூனியன் தலைவர்களை விடக் கடுமையாக விமர்சிக்கலாம். தொலைநோக்குப் பார்வை இல்லாமல், மக்களுக்கு தொல்லை வரலாம் என்று யோசிக்காமல், நியு யார்க் வாசிகளை ஹட்ஸன் நட்டாற்றில் நீந்த விட்டிருக்கிறார்.

    ஆனால், அபராதத் தொகை எல்லாம் ஊழியர்களை நோக்கியே வீசப்படுகிறது. வேலை நிறுத்தம் செய்யும் நாளொன்றுக்கு மில்லியன் டாலர்கள் அபராதம் கட்டி விடுமாறு யூனியனுக்கு எதிராக தீர்ப்பாகியிருக்கிறது. அதைத் தவிர அமைப்பின் தலைவர்கள் தினமும் ஆயிரம் டாலர் தண்டம் கட்ட வேண்டும்.

    வேலை நிறுத்தம் ஒவ்வொருவரையும் பாதித்திருக்கிறது. பள்ளிக் கூடங்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கின்றது. தட்டித் தடுமாறும் அமெரிக்கப் பொருளாதாரம் எழுந்து நிற்பதே நத்தார் தினத்துக்காக நுகர்வாளர்கள் வாங்கும் பொருட்களில்தான். விற்பனையில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. ‘தூறல் நின்னு போச்சு‘ காலங்களில் ரேஷன் க்யூவில் நின்றது போல் டேக்ஸிக்கும், தொலைதூர ரயில் வண்டிகளுக்குமான காத்திருத்தல் எகிறியிருக்கிறது.

    ஐம்பத்தைந்து வயதிலேயே முழு சேமநலத்துடன் ரிடையராகும் வசதி, பாக்கெட்டில் இருந்து பைசா எடுக்காமல் தொடரும் உடல்நல காப்புறுதி, ஆண்டுதோறும் பணவீக்கத்திற்கேற்ப உயரும் சம்பளம் என்று முதலாளிகள் பல முரண்களில் சரணடைந்தாலும், தொழிலாளிகள் எதையும் விட்டுக் கொடுக்காமல் இருந்தால் பேச்சுவார்த்தைகள் முறியும்.

    மைனஸ் டிகிரி குளிர் கொளுத்தும் வேளைகளில், வேலைக்கு பொதுஜனம் நடராஜா சர்வீஸை கையிலெடுத்து, ஜனநாயகத்தை அனுபவிக்கிறார்.


    | |