சினிமா ஹீரோ பேசுவதற்கான மொழிபெயர்ப்பு:
பேசுவதற்கு முன்… கவனி
எழுதுவதற்கு முன்… யோசி
செலவழிப்பதற்கு முன்… ஈட்டு
விமர்ச்சிப்பதற்கு முன்… பொறு
வேண்டுவதற்கு முன்… விட்டுத்தள்ளு
கைவிடுவதற்கு முன்… முயல்
நன்றி: சும்மா யாஹு குழுமம்
சினிமா ஹீரோ பேசுவதற்கான மொழிபெயர்ப்பு:
பேசுவதற்கு முன்… கவனி
எழுதுவதற்கு முன்… யோசி
செலவழிப்பதற்கு முன்… ஈட்டு
விமர்ச்சிப்பதற்கு முன்… பொறு
வேண்டுவதற்கு முன்… விட்டுத்தள்ளு
கைவிடுவதற்கு முன்… முயல்
நன்றி: சும்மா யாஹு குழுமம்
Posted in Uncategorized
ஆண்டொன்று போனால் வயதொன்று போய் விடுமே; அதற்கு முன்னாலே, வலைப்பதிவு பத்து தொடங்க வேண்டும் என்னும் கொள்கைக்கு பங்கம் விழாமல் இருக்க கில்லி ஆட ஐகாரஸ் பிரகாஷ் கூப்பிட்டவுடன் ஒத்துக் கொண்டு பழக ஆரம்பித்திருக்கிறேன்.
கில்லியின் குறிக்கோள்களாக நான் என்ன புரிந்து வைத்துக் கொண்டிருக்கிறேன்:
1. நூறு நாள் விடுமுறையாக நீங்கள் காஷ்மீர் சென்றாலும் அல்லது ஒரு வாரம் சத்தியமங்கலத்தில் கடத்தப்பட்டாலும் விட்டுப்போன வலைப்பதிவுகள் எல்லாவற்றையும் புரட்டுவது சாத்தியமல்ல. அப்பொழுது கில்லி பயன்படும்.
2. எழுத ஐடியா தோன்றாதபோது, கில்லியைப் புரட்டினால் பாப் கல்ச்சரும் வலை மிக்ஸரும் கிடைக்கும்.
3. பிரகாஷும் கூட இருப்பதால், obvious என்று நான் விட்டு விடுவதும், taboo என்று என்னை விலக்கிக் கொள்ளும் சமாச்சாருடன் இருக்கும்.
4. முடிந்தவரை கருத்து தீர்ப்பளிக்காமல், கைகாட்டியாக அமையும்.
5. பிடித்த, படித்த தமிழ்ப்பதிவுகளை நொடி நீதிபதியாகத் தொகுப்பதைப் போல், தமிங்கிலரின் பதிவுகளை கோர்க்க வேண்டும்.
6. கஷ்டப்பட்டு பத்து பாயிண்ட் வர வேண்டுமே என்றெல்லாம் மினுக்கிடாமல், சட்டு புட்டென்று பிடித்த பதிவுகளைப் பகிர முடியும்.
7. கூடியமட்டும் நேரடி செய்திகளைக் கொடுக்காமல், வலைப்பதிவர்களின் எண்ணங்கள் மூலம் முக்கியத்துவமான நிகழ்வுகளை காட்டலாம்.
8. சுய பிரலாபங்களை விட்டு விட வாய்ப்பு அமைக்கலாம்.
கூடிய சீக்கிரமே தேர்தல் 2006-இல் நிற்க சீட் கேட்க வேண்டும். ஆனால், ஹேஷ்யங்கள் எல்லாம் சுத்த வேஸ்ட் என்று இன்றைய வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் பிளந்து கட்டியிருக்கிறார் ‘எண் ராஜா’.
தமிழ் பதிப்பகங்களில் கிழக்கு மற்றும் உயிர்மை இரண்டும் எப்போதுமே இணையத்துக்கு முக்கியத்துவம் வழங்கி வந்தது. இவர்களுடன் எனி இந்தியன் பதிப்பகம் வலை மூலமாகவே அறிவிப்புகளை சுடச்சுட வெளியிட்டு வந்துள்ளது. இணையத்தின் மூலம் புத்தக வாசிப்பும், பிடிக்கக்கூடிய புத்தகங்களின் அறிமுகமும் எளிதில் கிடைக்கிறது.
சுஜாதாவின் புத்தகங்களுக்கு திரை வரிசை. இலக்கிய புத்தகங்களுக்கு நவீனவாதிகளின் வரிசை.
சுஜாதா இலக்கியவாதியா என்று பிலிம்சேம்பரில் யாரும் வம்பு கிளப்ப மாட்டார்கள். ஜெயமோகன் அரசியல்வாதியா என்று புக் பாயிண்ட்டில் எவரும் அல்வா கிண்டமாட்டார்கள்.
சன் டிவியின் ‘வணக்கம் தமிழகம்‘ போல் இலக்கிய விழாக்களும் பன்முகத்தை இழந்து வருகிறது. வாசகர்களுடன் ‘கேள்வி-பதில்’, மதிப்புரை கொடுப்பவர்களின் உண்மையான விமர்சனம், நண்பர்களுடன் வெளிப்படையாகப் பேசுவதைப் போன்ற பாவத்துடன் பார்வையாளர்களுடன் விவாதம் போன்றவற்றை அமெரிக்க அமர்வுகளில் பார்க்க முடிகிறது.
கெட்ட வார்த்தை போடாதவரை, வாக்குவாதம் முற்றி கொதிப்பு உயராத வரை, விளிம்புக்கு சென்று கேள்வி கேட்டு, பதில்களைக் கோருகிறார்கள். ‘வணக்கம் தமிழக’த்தில் சொற்பொழிவாற்ற விட்டு விட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டு ரமேஷ் பிரபா, கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருப்பது போல் இல்லாமல், சுஜாதா விழாவுக்கு ஜெயமோகனும்; நவீன எழுத்தாளர் சபையில் ‘ஏன் தலையை சுற்றுகிற மாதிரி எழுதினால் இலக்கியம்’ என்று நக்கலுடன் சுஜாதா கேள்விக்கு தெளிவு பிறந்தாலும், சினிமா வாசகர்கள், புத்திலக்கியம் பக்கம் தலையை நீட்டுவார்கள்.
Posted in Uncategorized
Two Functions – Manushya Puthiran – 2006 – 11 Authors – 20 Books by Uyirmai Book Release Thx to Desikann


Posted in Uncategorized
ஜூ.வியில் கழுகார் சொல்வதிலிருந்து சில பத்திகள்:
‘‘தி.மு.க. தலைமைதான் பெரிய நெருக்கடியைச் சந்திக்க வேண்டியிருக்கும் போலிருக்கிறது. புத்தாண்டு தினத்தன்று சென்னையில் பத்திரிகை யாளர்களைச் சந்தித்த வைகோ, ‘இந்த முறை கௌரவமான தொகுதிப் பங்கீட்டை எங்கள் கட்சி கோரும்’ என பொடி வைத்திருக்கிறார். இப்படி திடீரென்று அவர் சொன்னதற்கு பலமான ஒரு பின்னணி இருக்கிறதாம்…’’
‘‘முதலில் அதைச் சொல்லுமய்யா!’’ கழுகாரை உசுப்பேற்றினோம்.
‘‘அரசியல் அரிச்சுவடியைத் தலைகீழ் பாடமாகக் கற்றுத்தேர்ந்த சிலர் வைகோவின் காதில் முன் ஜாக்கிரதை சங்கை ஊதியிருக்கிறார்கள். அந்த ‘சங்கொலி’ கேட்டதும்தான் வைகோவின் போக்கில் மாறுதலாம். அதாவது, ‘தென் தமிழகம் மற்றும் மேற்கு மண்டலத்தில் மொத்தம் 120 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக ம.தி.மு.க. வலுப்பெற்றிருக்கிறது. அப்படி இருக்கும்போது, 15 ஸீட், 20 ஸீட் என்று நீங்கள் பேரத்தில் ஈடுபடுவது கட்சி வளர்ச்சிக்கு உதவாது. இப்போதிருக்கும் நிலையில், ஜெயலலிதாவிடம் நிச்சயம் பேரம் பேசி 40 ஸீட்டு களையாவது வாங்கி விட முடியும். அதில் 30 இடங்களில் வென்றாலே தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸக்கு அடுத்தபடியாக அரசியல் களத்தில் முக்கிய ஸ்தானத்தைக் கைப்பற்ற முடியும். இதை மனதில் வைத்து தி.மு.க. தலைமையிடம் ஸீட்டுகளைக் கேளுங்கள் என்று தூபம் போட்டிருக்கிறார்களாம்.
“கருணாநிதியால் இந்த அளவுக்குக் கருணை காட்ட முடியுமா?”
“நிச்சயமாகக் கருணாநிதி கொடுக்கமாட்டார். கைதான் விரிப்பார். அதனால் அ.தி.மு.க&வுடன் போவதுதான் பெஸ்ட் என்கிற ரீதியில் அந்த அரசியல் ஆலோசகர்கள் வைகோவுக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்களாம். அதன் எதிரொலிதான்… ஸீட் பங்கீடு பற்றி வைகோவை இப்போதே குரல்கொடுக்க வைத்ததாம்!”
“தைலாபுரம் சங்கதி என்னவோ?”
“அங்கு வைத்துப் பத்திரிகையாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ், ‘தி.மு.க. கூட்டணி வெற்றிபெற பா.ம.க. பாடுபடும்’ என கூட்டணி தலைமைக்குத் தேன் தடவிவிட்டு, எங்கள் கட்சிதான் பெரிய கட்சி. எங்கள் ஆதரவில்லாமல் வெற்றியை யாரும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது’ என தன் பேச்சில் வேப்பெண்ணெயையும் தடவியிருக்கிறார். ஆக, கூட்டணி மத்தளத்தில் இரண்டு பக்கமும் இடி இறங்க ஆரம்பித்துவிட்டதால், கருணாநிதி சாதுர் யமாக காய் நகர்த்தினால்தான் விரிசல் இல்லாமல் கூட்டணி பிழைக்கும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.”
————————
இதையும் ‘சந்திப்பின்’ முந்தைய பதிவையும் சேர்த்துப் படிக்கும் போது தோன்றும் எண்ணங்கள்:
1. வைகோவால் அதிமுக கூட்டணிக்குப் போக முடியுமா? இப்படி ஒரு அரசியல் முடிவை மக்கள்
ஏற்றுக் கொளவார்களா? முக்கியமாக, இதைப் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி வைகோ என்ன நினைக்கிறார் என்பதைப் பற்றி கருணாநிதி என்ன நினைக்கிறார்?
2. குஷ்பு விவகாரத்தை ராமதாஸ் அண்ட் கோ கையாண்ட விதம் தொகுதிப் பங்கீடு பேரத்தை பாதிக்கிறதா? ‘நீங்க அந்த நடிகை விஷயத்தில நடந்துகிட்ட விதத்தினால மக்கள் ரொம்ப அதிருப்தி அடைஞ்சிருக்கிக்கிறதா கேள்விப்படறேனே…இவ்வளவு தொகுதில ஜெயிக்க முடியுமா உங்களால?’ 🙂
Posted in Uncategorized
தமிழகத்தில் பார்வார்டு ப்ளாக் என்கிற ஒரு கட்சி இருக்கிறதா இல்லையா என்பதே, “தேவர் ஜெயந்தி” கொண்டாடும்போது தான் தெரியும். முத்துராமலிங்க தேவரினை முன்னிறுத்தி பெரியதாக தமிழக அரசியலில் சாதிக்கவில்லையெனினும், தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலிலும் ஏதேனும் ஒரு திராவிட கட்சியினைப் பிடித்து தொங்கிக் கொண்டு ஒரிரண்டு தொகுதிகளைப் பெற்று கட்சியினை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். சரியாக நினைவிருப்பின், பழ.கருப்பையா கூட ஏதோ ஒருவிதத்தில் பார்வார்டு ப்ளாக்கொடு தொடர்புடையவர் என்று நினைக்கிறேன்.
இப்படியாக ஒரங்கட்டப் பட்டிருந்த கட்சிக்கு இப்போதைய புது வரவு நடிகர் கார்த்திக்.ஏற்கனவே “சரணாலயம்” என்கிற “சமுக அமைப்பினை” வைத்து சமூகப் பணிகள் செய்து வருவதாக சொல்லியிருந்தவர். இவர் போன எல்லா கூட்டங்களும் பெரும் குழப்பத்திலும், நெரிசலிலும் முடிந்தன. இந்நிலையில் பார்வார்டு பளாக்கின் மாநில கட்சிக் கூட்டம் நேற்று மதுரையில் நடந்தது. கார்த்திக்கும் கூட்டத்திற்காக மதுரை சென்றிருந்தாலும், சில காரணங்களினால் கலந்துக் கொள்ளவில்லை. ஆனால் பேட்டியில் மட்டும் தமிழ்நாட்டில் மாநில செயலாளர் பதவி கிடைத்தால் பார்வார்டு பளாக்கில் சேர்ந்து போட்டியிடுவேன் என்றும்,இல்லையெனில் தனிக்கட்சி ஆரம்பிப்பேன் என்றும் சொல்லியிருக்கிறார்.
என்ன அடிப்படை தகுதிகளைக் கொண்டு பொது செயலாளர் பதவி கேட்கிறார் என்பது ஒருபுறமிருக்க, கார்த்திக்கின் ஆதரவாளர்கள் கொஞ்சம் அதிகமாகவே உசுப்பேற்றுகிறார்கள். ஆக, தமிழக அரசியலில் குட்டையை குழப்ப இன்னொரு அரசியல் கட்சி உதயமாகும் சாத்தியங்கள் தெரிகிறது
Posted in Uncategorized
Posted in Uncategorized