Category Archives: Uncategorized

ஜெயமோகன்

Jeyamohanஜெயமோகன் 1962 ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி குமரி மாவட்டம் திருவரம்பு கிராமத்தில் பிறந்தார்.

பெற்றோர்: எஸ். பாகுலேயன் பிள்ளை – பி. விசாலாட்சி அம்மா.

வணிகவியல் இளங்கலை படிப்பில் சேர்ந்த அவர் படிப்பை முடிக்கவில்லை. 1981 டிசம்பரில் வீட்டை விட்டுத் துறவியாகச் சென்று மூன்று வருடங்கள் அலைந்தார். 1984 நவம்பரில் கேரளத்தில் காசர்கோடு நகரில் தொலைபேசித் துறையில் உதவியாளராக தற்காலிக வேலையில் சேர்ந்தார். 1988 நவம்பரில் தமிழ்நாட்டுக்கு மாற்றலாகிவந்து தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் பணியாற்றத் தொடங்கினார்.

மனைவி: அருண்மொழி நங்கை
குழந்தைகள்: அஜிதன், சைதன்யா

1997 முதல் நகர்கோவில் வாசி.

ஜெயமோகனின் முதல் சிறுகதைத் தொகுப்பு

  • ‘திசைகளின் நடுவே’ 1991-இல் வெளிவந்தது.
  • ‘மண்’ (1995),
  • ‘ஆயிரங்கால் மண்டபம்’ (1998),
  • ‘கூந்தல்’ (2003) ஆகிய சிறுகதைத் தொகுதிகளும்
  • ‘விஷ்ணுபுரம்’ (1997),
  • ‘பின்தொடரும் நிழலின் குரல்’ (1999),
  • ‘கன்னியாகுமரி’ (2000),
  • ‘காடு’ (2003),
  • ‘ஏழாம் உல்கம்’ (2004)
  • ‘கொற்றவை’ (2005) ஆகிய நாவல்களும் வெளிவந்துள்ளன.

    Jayamohan Books by Thamizhiniபத்து திறனாய்வு நூல்களையும் ஜெயமோகன் எழுதியிருக்கிறார்.

  • ‘இலக்கிய முன்னோடிகள் வரிசை’யில் ஏழு நூல்கள் 2003இல் வெளிவந்தன.
  • ‘நாவல்’ (1991),
  • ‘நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்’ (1998),
  • ‘நவீனத் தத்துவத்துக்குப்பின் தமிழ்க் கவிதை – தேவதேவனை முன்வைத்து’ (2001),
  • ‘பனிமனிதன்’ (2002),
  • ‘சங்கச் சித்திரங்கள்’ (2003),
  • ‘இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள்’ (2003),
  • ‘வாழ்விலே ஒரு முறை’ (2004),
  • ‘ஜெயமோகன் குறுநாவல்கள்’ (2004),
  • ‘உள்ளுணர்வின் தடத்தில்’ (2004),
  • ‘எதிர்முகம்’ (2004)
  • ‘நினைவின் நதியில்’ (2005) ஆகியவையும் அவரது படைப்புகளில் அடங்கும்.

    மலையாளத்திலும் எழுதிவருகிறார்.

    விருதுகள்

  • ‘ரப்பர்’ நாவலுக்காக ஜெயமோகன் 1989-இல் அகிலன் நினைவுப் பரிசும்
  • ‘ஜகன்மித்யை’ கதைக்காக 1991-இல் ‘கதா’ விருதும் பெற்றார்.
  • 1992-இல் இலக்கியத்துக்கான தேசிய விருதான ‘சன்ஸ்கிருதி சம்மான்’ அவருக்கு வழங்கப்பட்டது.

    தகவல்கள்: ‘ஜெயமோகன் சிறுகதைகள்’ – உயிர்மை


    | |

  • அது ஒரு கனாக் காலம்

    சென்னைப் புத்தக கண்காட்சிக்கு ஸ்ரீனிவாசனும் துளசியும் வருகிறார்கள். பாதப்பதிவு, எவெரி தேஸி, திஸ்கி இனி, கிறுக்கு, உப்புமை என்று பல பதிப்பகங்களில் பாலு மகேந்திராவின் கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு ‘விஜய்’ விக்னேஷ் செல்பேசியில் படம் பிடிக்கிறார். ஒவ்வொரு பதிப்பகத்திலும் என்ன புத்தகங்கள் எழுதப் பணித்தர்கள் என்று அவர்களே சொல்கிறார்கள்:

    பாதப்பதிவு

    ஸ்ரீனிவாசன்: துருப்பிடிக்கும் கடையாணி

    வெறுமனே கவர்ச்சிப் பாடல்களில் தங்களுக்கான இட ஒதுக்கீட்டைக் கேட்டுப் பெறுவதாக இல்லாமல், பெண்களால் சொல்ல முடியாத ஆண்களின் பிரச்சினைகள் உள்ளாகப் ஆண்ணியத்தின் நுட்பமான கூறுகளைப் பதிவு செய்வது ஆண்கவிகள் முன் உள்ள சவாலாகிறது. இதை ஸ்ரீனிவாசன் புரிந்திருக்கிறார். கடக்கும் பெண்ணின் ஆடையை அப்புறப்படுத்தி அதனுடன் உறவு கொள்வது போல, கவனமாகத் தனக்குத்தானே செய்து கொள்ளும் ஓர் ஆணினை இக்கட்டுரைகள் நினைவுபடுத்துகின்றன. பொய்மையோ பாசாங்கோ இல்லாத சொற்களால் நெய்யப்பட்டிருக்கிறது.

    துளசி: ஒரு நாணலின் கதை

    ஒரு பெரிய வீட்டின் ஒரத்தில் நிற்கிறது நாணல். வீட்டுக்கு வெளியில் இருக்கும் அவ்விடம், காலச் சுழற்சியால் எவ்வாறு வளர்ச்சி அடைகின்றது என்பது கதை. இதுவரை நாம் பார்த்த படங்களில் மனிதர்கள் நடிப்பார்கள் என்பதனால் ஒரு நாணலை மையமாக வைத்து எழுதப்பட்ட இந்த திரைக்கதை மிகவும் வித்தியாசப் படுகின்றது.

    நாணலை வெட்டும் முயற்சியிலிருந்து தடுக்க அதை மனிதனாக மாற்றுவது நல்ல திருப்பம். அதேபோல் நாணல் தற்போது இல்லை என்பதனையும் தொடக்கத்திலேயே கூறி அந்த முடிவை நோக்கி கதையை நகர்த்தியிருப்பது புதுமை.


    எவெரி தேஸி

    ஸ்ரீனிவாசன்: ஊட்டிக்கு அப்பால்

    சிறை அனுபவம், கைமைதுத்தனம், விவாதம்,ஃபிகரைப் பாருங்கள், சமூகம், ஊட்டி என்று ஆறு பிரிவுகளில் எழுதிய கட்டுரைகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. புத்தகத்துக்கு பலமுறை திரைப்படங்களுக்காக கம்பியெண்ணிய கமல்ஹாஸன் மதிப்புரை எழுதியிருக்கிறார். “எவெரி தேஸி பதிப்பகத்தின் முதல் வெளியீடாக ஸ்ரீனிவாசனின் கட்டுரைத் தொகுப்பு வெளிவருவது மிகவும் பொருத்தமே. ஸ்ரீனிவாசன் தமிழ்நாட்டு சிறைகளில் நிகழும் குத்துப் போராட்டங்களில் தம்முடைய கைவரிசையை உறுதியாய் முன்வைக்கத் தயங்காதவர். தேஜஸ்ரீயில் அவர் கொண்டுள்ள ஈடுபாடு ப்ரியாமணி மீதான நவீன பார்வைக்கு அடித்தளமாய் இருப்பதால் அவருடைய ரசனை சமநிலை கொண்டு விளங்குகிறது. அவருடைய பார்வைகளும், கோணங்களும் நடிகைகளுக்கு புதிய வெளிச்சத்தைக் கொண்டு வருகின்றன. ஸ்ரீனிவாசனின் உடலை ஆட்டும் அசைவுகள் நிச்சயம் பார்வையாளர்களையும் ஜொள்ள வைக்கும்.”

    துளசி: தாவணிகள், தூண்டுதல்கள், தடைக்கற்கள் ஆகிய காதல் கோட்டைகள் – பாகம் 1 (‘யாத்ரா’வின் மலையாள மொழிபெயர்ப்பு)


    கிறுக்கு

    ஸ்ரீனிவாசன்: சிறைக்குப் போகணுமா?

    அ அரிவாள், ஆ ஆட்டையப் போடு, இ இலை என்று அரிச்சுவடி கற்றுத்தருவது போல, சிவில், கிரிமினல் குற்றங்களில் தொடங்கி, நீதிமன்றத்துக்கு செல்வது, வழக்கறிஞர்களை சமாளிப்பது, சிறையில் வார்டனை அட்ஜஸ்ட் செய்வது, சிகரெட் வாங்குவது, ஹவாலா பணம் அனுப்புவது என்று சிறை வாழ்க்கையின் சகல தேவைகளுக்கும் உற்ற உறுதுணைவனாக இந்தப் புத்தகம் இருக்கிறது.

    சீர்திருத்தப் பள்ளியில் படிப்பு, சிறைவாசியுடன் திருமணம், கடுங்காவலில் கல்லுடைப்பு… அட்லீஸ்ட் லாக்கப்பிலாவது அடைந்து கிடைக்க வேண்டும். ஒன்றும் இல்லாவிட்டால் சிறைக்கு ஒருமுறை புகாராவது கொடுத்துவிடவேண்டும். ஒருவரை விடாது கேட்டுப்பாருங்கள், இதில் ஒன்றாவது அவர்களது கனவில் வந்திருக்கும்.

    சிறைக்குப் போவது எப்படி? யார் வேண்டுமானாலும் போகலாமா? அங்கு உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடன் எப்படிப்ப் பழகுவது? அங்கு என்னென்ன கற்கலாம்? சிறையில் சில வருடங்கள் வசிக்க வேண்டுமானால் என்னென தெரிந்திருக்க வேண்டும்? இப்படிப் பல்வேறு கேள்விகளுக்கும் சுவையான விளக்கங்களைக் கதை சொல்லும் பாணியில் சொல்லித்தருகிறார் ஆசிரியர் சுவடு ஸ்ரீனிவாசன்.

    துளசி: மிஸ் துளசி

    தமிழர்களுக்கு விரசம் இல்லாமல் காமப்பார்வை கொடுப்பது என்பது ஒரு நுண்கலை. தொப்புள் ஆம்லெட்டுகளையும், வன்புணர்வு காட்சிகளையும், இலக்கியவாதிகளின் வரைவின் மகளிர் லாட்ஜ்களையும், சேலை கட்டிய இடங்களிலும் ம.கோ.ரா. ஸ்டைல் கையாளல்களையும் பார்த்து நொந்து போயிருக்கும் ஜனங்களைக் காதலிக்க வைக்க ப்ரியாமணி அரும்பாடு பட்டிருக்கிறார்.


    திஸ்கி இனி

    ஸ்ரீனிவாசன்: வார்டன் சூழ் ஜெயில்
    துளசி: உடன் வரும் லாரியின் குரல்

    உப்புமை

    ஸ்ரீனிவாசன்: என் கக்கூஸில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
    துளசி: காதலுக்காக


    | |

    இன்றைய நாளேடுகளில் இருந்து – 13/01/2006

    சலுகை மழை?இன்று துவங்கும் சட்டசபை கவர்னர் உரையில்…தி.மு.க., கூட்டணி கட்சிகள் மொத்தமாக புறக்கணிப்பு
    சென்னை : தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. இன்று கவர்னர் உரையுடன் துவங்கும் கூட்டத் தொடரில் ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 20ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த அரசின் கடைசி கூட்டத் தொடர் இது என்பதால் சட்டசபையில் புயல்வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    http://dinamalar.com/2006jan13/fpnews1.asp

    அதிமுகவில் பாமக எம்எல்ஏ
    சென்னை:பா.ம.க.வின் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் முருகவேல் ராஜன், தனிக் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்த சில நாள்களிலேயே பாமகவிற்கு அடுத்த இடி இறங்கியுள்ளது.
    http://tamil.sify.com/fullstory.php?id=14119752

    வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம்: ஜெ.வின் அதிரடி தேர்தல் சலுகை!
    சென்னை:அங்கீகாரம் பெறாத வீட்டு மனைகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கான மிகப் பெரிய ‘தேர்தல்’ சலுகையை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
    http://thatstamil.indiainfo.com/news/2006/01/13/jaya.html

    யாருடன் கூட்டணி என்பதை தேர்தல் நேரத்தில் சொல்வோம்: திருமாவளவன் பேட்டி
    புதுச்சேரி, ஜன. 13-விடுதலை சிறுத்தை பொதுச்செயலாளர் திருமாவளவன் புதுவையில் நேற்று நிருபர்களுக்குபேட்டி அளித்தார்.
    http://maalaimalar.com/asp/news/dis_news_article.asp?artid=100080

    புதிய பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே தமிழைப் பயிற்று மொழியாக்க சட்டம் வரும்: ராமதாஸ் நம்பிக்கை
    சென்னை: ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கான நல்ல சூழல் உள்ளது. எனவே புதிய சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே தமிழைப் பயிற்று மொழியாக்குவதற்குச் சட்டம் கொண்டுவரப்படும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
    http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20060112131447&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0

    தவமாய் தவமிருந்து

    சேரன் குறிப்பால் உணர்த்திய கதை

    இராமநாதன்
    என்னோட பெயர் இராமநாதன். என்னுடைய அப்பா முத்தையா சிவகங்கையில் அச்சு பிரெஸ் நடத்த தெரியாம நடத்துகிறார்.

    என்னுடைய தம்பி இராமலிங்கம் மேல்தான் குடும்பத்தில் எல்லோருக்கும் பாசம். அம்மா சாரதா வாயில்லாப் பூச்சி.

    திருமண வயது வந்தபிறகும் எனக்கு கல்யாணம் செய்துவைக்க பெற்றோருக்கு விருப்பமில்லை. என்னுடைய சம்பளத்தில்தான் அவர்கள் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. மணம் முடித்த பிறகு அம்மாவுக்கு என் மேல் possessiveness அதிகரித்து விட்டது. ஷிஃப்ட் முடிந்து வீட்டுக்கு வந்து மனைவி லதாவுடன் இரண்டு நிமிஷம் பேசினால் கூட பொறுக்காது.

    பிள்ளைத்தாச்சியை கடுமையாக வேலை வாங்கவேண்டாம் என்று நான் அவ்வப்போது அம்மாவிடம் பக்குவமாக சொல்லிவந்த போதும், அவர்கள் அதை தலையணை மந்திரம் என திரித்து அண்டைவீட்டாரிடம் பரப்பினர். தலைவர் படம் வந்திருக்கிறதே என்று ‘சந்திரமுகி’க்கு கிளம்பினாலும், வாய்க்கு ருசியாக ஏதாவது வாங்கித் தரலாம் என்றாலும் நடக்கவில்லை.

    மூத்தவர்களே முன்யோசனை இல்லாமல் இருப்பதால் தனிக்குடித்தனம் சென்றேன். என்னுடைய முழு சம்பளப் பணத்தையும் எதிர்பார்ப்பதால், நான் மாதந்தோறும் அனுப்பிய ஆயிரம் ரூபாயை அவர்கள் பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

    என்னுடன் பட்ட முரண்களுக்கு நிவர்த்தியாக, அப்பாவும் அம்மாவும், இராமலிங்கத்திடமும் அவனின் மனைவி வசந்தியுடனும் பக்குவமாக பதவிசாக இருந்தார்கள். வீட்டு வேலை செய்து ஓடாய்த் தேய்ந்த என் தாயார் உடல்நலம் குன்றிப் போய், இறந்து போனார். மனைவி இருந்தபோதே உரிய மரியாதை கிடைக்காத அவர்களின் வீட்டில் வாழப் பிடிக்காத அப்பா, மீண்டும் கிராமத்திற்கே தனிக்காட்டு ராஜாவாகத் திரும்பினார்.

    கிங் லியர் போன்ற அப்பா, வார்த்தையில் தேன் தடவினால் மட்டுமே மகிழ்பவர். பெரியவர்களிடம் அனுகூலமாக, இனிப்பாக மட்டுமே பேச வேண்டும் என்று இராமல், என்னுடைய எண்ணங்களை உரத்த சொன்னதுதான், அப்பாவின் மரணத்துக்கு காரணம் என்று தம்பி இப்போது அப்பாவின் வழி தூற்றுகிறான்.

    சாரதா அம்மா
    என்னால் முடிலை. எவ்வளவு நாள்தான் இந்தக் குடும்பத்துக்கு உழைத்துக் கொண்டேயிருப்பது!

    பொறுப்பற்ற கணவன். ஊர் மேயும் பிள்ளைகள். சீவி சிங்காரித்து காலையில் டாடா காட்டும் மருமகள். டபுள் இன்கம் – நோ கிட் என்று சொல்வார்கள். இவர்கள் டபுள் இன்கம் டபுள் கிட் நோ டிரபிள் என்று மாமனாரிடமும் மாமியாரிடமும் குழந்தைகளைப் பராமரிக்க விட்டுச் செல்லும் நவீன யுகத் தம்பதியர்.

    கல்யாணமானவுடன் புருஷனுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் வேலை செய்தேன். மாமியார் போய் சேர்ந்தபிறகு, சொற்ப வருமானத்தில் ஊதாரியாய் செலவழிக்கும் அவரை சமாளித்துக் கொண்டே, குழந்தைகளுக்கு சேவை.

    என்னுடைய மாமியார் எனக்கு செஞ்சதில் பத்தில் ஒரு பங்கு கூட இருக்காது. சித்த அடுப்பை பார்த்துக் கொள்ளச் சொன்னாலும் மூஞ்சியால் எத்தும் பெரியவன் பொண்டாட்டி லதா. அவள் கற்று கொடுத்த பாடத்தினால், அடுத்தவனின் மனவி வசந்தி சொன்னதையெல்லாம் செய்தேன்.

    குழந்தைகள் எங்கள் பேச்சை நக்கல் செய்வார்கள்; பொறுமையைக் கடைபிடித்தேன். பேத்தி நடையையும் உடையையும் கிண்டல் அடிப்பாள்; ரசிப்பதாக நடித்தோம்.

    எத்தனை நாள்தான் சம்பளமில்லா வேலைக்காரியாக சமைத்தும், ஷு கட்டியும், துணி தோய்த்தும், ஸ்கூல் பேக் தயார் செய்தும் கட்டியம் கட்ட முடியும்.

    வயதான உயிர்தானே… சீக்கிரம் போய் சேர்ந்தது.

    லதா
    என்னோட புருஷன் இராமநாதனுக்கு சூதுவாது தெரியாது. வாங்கும் சம்பளத்தையெல்லாம் குடும்பத்துக்கே கொடுத்துருவார். தம்பி தன்னோட காதலுக்காக ‘ஜோடிப் புறா‘ பரிசு கொடுப்பதற்கு, இவர் எதுக்காக கஷ்டப்பட்டு உழைக்கணும்?

    நாங்களும்தான் எங்களுடைய குழந்தைகளை வச்சுண்டு கஷ்டப்படறோம். எங்க வீட்டில் கொஞ்ச நாள் வந்து இருந்து கொண்டு, அந்தக் குழந்தைகள் கிட்டயும் பாசமழை பொழிஞ்சா அவங்க என்ன கொறஞ்சா போயிடுவாங்க?

    அவங்க வர மாட்டாங்க.

    அவர்களுக்கு பணம் முக்கியம்; மாடி வீடு அதை விட முக்கியம்; வீட்டில் அம்போ என்று தனியாக இருந்தாலும், சொகுசு கார் முக்கியம். நாள் பூரா பேச்சுத் துணைக்கும், மேலுக்கு முடியலைன்னா கூப்பிட குரலுக்கு வீட்டில் ஒருத்தர் இருப்பாங்க என்றாலும், பணம் இருக்கிற இடத்தில்தான் கட்டியம் பண்ணுவாங்க.

    ஓட்டுனர் (டிரைவர்)
    எங்க முதலாளி இராமலிங்கம் குறைந்த காலத்தில் பணக்காரர் ஆனவர்.

    சொல் சாமர்த்தியம் அவர்கிட்டத்தான் கத்துக்கணும். இமேஜை எப்படி பாதுகாப்பது என்று பலமுறை அவரிடமிருந்து உணர்ந்திருக்கிறேன். தந்தைக்கு விசுவாசமானவன்னு ஒரு பிம்பத்தை அலுவலகத்தில் காட்டிக் கொண்டால், மேலதிகாரியிடமும் அப்படித்தானே நடந்து கொள்வார் என்று நினைத்துக் கொள்வார்கள். அவரின் வாழ்க்கையை பார்த்தால் சொல்ல மறந்த கதையெல்லாம் தெரியும்.


    | |

    கே டிவியில் குட்டி ரேவதி


    பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியாக குட்டி ரேவதியின் பேட்டி ஒளிபரப்புகிறார்கள். காதல் படத்தில் நடிப்பதற்காக சந்தியா என்று பெயர் மாற்றம் செய்து கொண்டவர் இவர்.

    ஏற்கனவே ரேவதி என்னும் பெயரில் புகழ் பெற்ற நடிகை/இயக்குநர் இருப்பதாலும், குட்டி பத்மினி, குட்டி ராதிகா போன்ற குட்டி பெயர்களில் விருப்பமில்லாததாலும், சொந்தப் பெயரை விட்டு விட்டதை கே டிவி நிகழ்ச்சியில், குட்டி ரேவதி பெயரும் சண்டக்கோழியும் புகழ் பெற்றிருக்கும் இன்றைய சூழலுக்கு எடுத்து வைப்பாரா என்பதை ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கிறார்கள்.


    இன்றைய நாளேடுகளில் இருந்து – 12/01/2006

    தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வரைவு வாக்காளர் பட்டியல் 23-ந் தேதி வெளியீடு
    சென்னை, -“தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வாக்காளர் வரைவு பட்டியல் வருகிற 23 -ந் தேதி வெளியிடப்படும்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறினார்.
    http://dailythanthi.com/article.asp?NewsID=233227&disdate=1/12/2006&advt=1

    புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு தனி உடன்பாடு… காங்கிரஸ் “பிளான்’
    புதுடில்லி: காங்கிரசுக்கான தொகுதிகளை கேட்டுப் பெற மூத்த தலைவர்கள் இரண்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு கவுரவமான இடங்களைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. http://dinamalar.com/2006jan12/fpnews1.asp

    சட்டசபைக் கூட்டம்: ¬முக்கிய அறிவிப்புகள் வெளியாகும்?
    சென்னை:நடப்பு சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடர் 13ம் தேதியன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடரில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
    http://thatstamil.indiainfo.com/news/2006/01/11/assembly.html

    புதுவை:அதிமுக & புமுகா கூட்டணி
    வருகிற சட்டமன்றத் தேர்தýல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கண்ணனின் புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க உள்ளது.
    http://tamil.sify.com/fullstory.php?id=14118953

    பொதுத் தேர்வுப் பணியைப் புறக்கணிக்க தலைமை ஆசிரியர் கழகம் முடிவு
    மதுரை: பதவி உயர்வு, ஊக்க ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மார்ச் மாதம் தொடங்கவுள்ள பொதுத் தேர்வுப் பணியைப் புறக்கணிக்க தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கழகம் முடிவு செய்துள்ளது.
    http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNT20060111145538&Title=TamilNadu+Page&lTitle=R%AAZLm&Topic=0

    கண்ட நாள் முதல்

    Kanda Naal Muthal - Priya, PC Sreeram, et al Thx: India Glitzகண்ட நாள் முதல் திரைப்படத்தை பார்த்த பிறகு படத்தின் கருவாக கண்ணதாசன் வரிகளை சொல்லலாம்…

    நிலவும் மலரும்: ஏ எம் ராஜா & பி சுசிலா (இசை: ஏ எம் ராஜா)

    சிரித்து சிரித்து உறவு வந்தால்
    நிலைத்து வாழுமா?

    மனம் துடித்து துடித்து சேர்ந்த பின்னே
    தோல்வி காணுமா?

    தன்னைப் பிரித்து பிரித்து வைப்பதினால்
    காதல் மாறுமா?


    Pongal Movies

    பொங்கல் கருத்துக்கணிப்பு

    பொங்கல் திரைப்படங்களில் எது ஹிட் ஆகும்?
    வாக்களிக்க:

    Free Vote Caster from Bravenet.com

    நன்றி: bravenet.com
    | |

    இன்றைய நாளேடுகளில் இருந்து – 11/01/2006

    தேர்தல் அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமைத் தேர்தல் ஆணையர் பேட்டி
    மதுரை, ஜன. 11: தேர்தல் பணியில் ஈடுபடும் தேர்தல் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியிலிருந்தால் அவர்களைப் பணி இடமாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது என, மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி. டாண்டன் தெரிவித்தார்
    http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNH20060110111523&Title=Headlines+Page&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0

    தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயார் ஆகிறது செயற்குழு, பொதுக்குழு 29-ந்தேதி கூடுகிறது ஜெயலலிதா அறிவிப்பு
    சென்னை, ஜன.11-அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இம்மாதம் 29-ந்தேதி சென்னையில் நடைபெறும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
    http://dailythanthi.com/article.asp?NewsID=233009&disdate=1/11/2006&advt=1

    எனது போனை ஒட்டு கேட்கிறது தமிழக அரசு: ராமதாஸ் ‘குண்டு’
    திண்டிவனம்: எனது தொலைபேசியை தமிழக அரசு ஒட்டுக் கேட்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் கூறியுள்ளார்.
    http://thatstamil.indiainfo.com/news/2006/01/10/ramdoss.html

    பிப்ரவரியில் மார்க்சிஸ்ட் கம்யூ. தேர்தல் அறிக்கை
    கோயம்பத்தூர்: பிப்ரவரி மாதம் 18ம் தேதி மதுரையில் நடக்கவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான அக் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று மத்திய குழு உறுப்பினர் என். சங்கரய்யா கூறியுள்ளார்.
    http://thatstamil.indiainfo.com/news/2006/01/10/cpm.html

    பொங்கல் திரைப்படங்கள்

    சன் டிவியின் டிரெய்லர் நேரமான ‘புத்தம் புதுசு‘ பார்த்தால் எல்லாப் படமும் ஒரே மாதிரிதான் பயமுறுத்துகிறது. ‘காதலன்‘ ஸ்டைலில் பறக்கும் கார்கள், கேப்டன் ரேஞ்சுக்கு நெருப்புக்குள் இருந்து வெளிவரும் சட்டை போட்டுக் கொண்டிருக்கும் பொத்தான் போடாத ஹீரோ, நாலைந்து ஹீரோயின்கள், விஷ்ஷ்க் என்று 120 டெசிபலுக்கு எகிறும் தலைப்புகள், அநேக படங்களில் மீண்டும் விவேக்.

    Pongal Tamil Movies Preview:

    1. பரமசிவன்: அஜீத் இளைத்து துரும்பாகியிருக்கிறார். ரஜினியால்தான் ‘சந்திரமுகி‘ ஓடியது என்பதை பி. வாசுவுக்கு உணர்த்தும் அபாயம் இருக்கிறது. அஜீத்துக்கு ‘காட்ஃபாதர்‘ வரும் வரை பொறுமை காக்க வேண்டியதுதான்.

    2. ஆதி: ‘திருமலை‘, ‘சுள்ளான்‘ என்னும் புஸ்வாணங்கள் கொடுத்த ரமணாவின் அடுத்த படம். பிரகாஷ் ராஜ், மணிவண்ணன் என்று விஜய்யின் ஆஸ்தான சகாக்கள். பாடல்கள் எதுவுமே ஜனரஞ்சகமாக இல்லை.

    3. இதயத் திருடன்: நுவ்வொஸ்தநந்தே நெனொதந்ந்தன (‘Nuvvostanante Nenoddantana’)-வின் மொழியாக்கமான ‘சம்திங் சம்திங்‘தான் ஜெயம் ‘ரவி’யின் அடுத்த படம். அப்பாவின் தயாரிப்பு, அண்ணனின் இயக்கம் என்று அந்தப்படம் வரும்வரை ரவியை விட்டு சௌந்த்ர்யா ரஜ்னிகாந்த் கூட தள்ளியே இருப்பதாக கிசுகிசுக்கிறார்கள். சரண் இயக்கம், கவிதாலயா தயாரிப்பு என்பதால் படத்தை எப்படியாவது ஹிட்டாகி விடுவார்கள்.

    4. கலாபக் காதலன்: சொவ்வறை வல்லுநராக ஆர்யா. மனைவியாக ஓவர் ஆக்ட் க்வீன் ரேணுகா மேனன். புதுமுக இயக்குநர் என்பதால் ஃப்ரெஷ்ஷாக இருக்கலாம்.

    5. சரவணா: தெலுங்கு ரீமேக் என்பதாலும் ‘மன்மதன்‘ சிம்பு நாயகன் என்பதாலும் பத்து மேற்பட்ட பெண்கள் நாயகியாக நடிப்பார்கள். படத்தைக் குறித்து சிம்பு

    “மன்மதன், தொட்டி ஜெயா போன்ற காத்திரமான (ஹெவி) குணாபாத்திரங்களுக்குப் பிறகு இந்த மாதிரி ஒரு வெகுஜன (கமர்ஷியல்) படம் செய்வது புத்துணர்ச்சி தருகிறது”

    என்று சொல்லியிருக்கிறார். இந்த மாதிரி டயலாக் படத்தில் பேசினாலே போதும்; கே.எஸ். ரவிக்குமாருக்கு நகைச்சுவை பஞ்சமே ஏற்படாது.

    6. பாசக் கிளிகள்: அமெரிக்காவில் வரி விதிப்பில் இருந்து தப்பிப்பதற்காக நிறுவனங்கள் பல கிளைகளைக் கொண்டு விதவிதமாக நஷ்டத்தில் இயங்கும். கலைஞர் கருணாநிதியின் கைவண்ணத்தில் இந்த வருட ‘கண்ணம்மா‘வாக இராம நாராயணனின் அழுவாச்சி காவியம்.

    7. சுதேசி: விஜய்காந்தின் ‘பேரரசு‘வையே தவறவிட்டு விட்டேன். வித்தியாசமான சிரிப்பம்சங்கள், மாயாவாத எதார்த்தம், பொருந்தாக்காதல் என்று எப்போதும் போல இந்த முறையும் கேப்டன் ஏமாற்ற மாட்டார் என்றே நம்புகிறேன்.

    8. புதுப்பேட்டை: வருதா?

    படங்கள் குறித்த பின்னணித் தகவல்களுக்கு கோலிவுட் டாக்-கும் உதவியது.


    | |