Category Archives: Uncategorized

Thanga Vettai – American Students are Idiots

ஞாயிறு அன்று ‘செல்வி’யும் ‘லஷ்மி’யும் இல்லாத குறையைப் போக்க ‘ராஜராஜேஸ்வரி’ போன்ற நகைச்சுவை அரங்கேற்றுவது சன் டிவியின் வழக்கம். மேற்கத்திய உலகில் பதின்ம வயதினரிடையே ‘நிஜ நாடகங்கள்’ (ரியாலிடி ஷோ) பிரபலம். ‘இந்தியன் ஐடல்’ புகழ்பெற்று வருவதன் மூலம் ஹிந்தி உலகிலும் ரியாலிடி தொடர் வரவேற்பு அடைந்திருக்கிறது.

சன் டிவியும் இந்த நிஜம் போன்ற சீரியல்களை கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதன் தொடக்கம்தான் ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கும் தங்க வேட்டை. ஞாயிறு இரவுக்கே உரிய அசுவாரசியத்துடன், புதிய வாரத்திற்கு வலைப்பதிய விஷயத்தைத் தேடும்போது கேட்கப் பெற்றேன்.

நிஜ நாடக நிகழ்ச்சியை கேட்டு மகிழ:

Thanga Vettai - American Students are Idiots :: this is an audio post - click to play

பள்ளிக்கூட ஆசிரியர் என்பது அமெரிக்காவில் விவகாரமான தொழில். குழந்தைகளிடம் ‘இடியட்’ என்னும் வார்த்தையை பிரயோகித்தால், சீட்டு கிழியும் என்று உத்திரவாதமாக பணம் கட்டி ஜெயிக்கலாம். ‘I’ word என்று பயபக்தியுடன் ஹாரி பாட்டரின் ‘யூநோஹூ’ மாதிரி சொல்லவே மிரளுவார்கள்.

பள்ளி மாணவர்கள் சொல்லிவிட்டால், பெற்றோரை வேலையில் இருந்து கூப்பிட்டு அனுப்பி கண்டித்து அனுப்புவார்கள். அமெரிக்காவை திட்டுவது வெற்றிகரமான நிகழ்ச்சியின் தேவையாக இருக்கலாம். இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மட்டம் தட்டுவது கீழ்த்தரமான ஜனரஞ்சகத்தை வெளிச்சமிடுகிறது.

கொஞ்சம் பின்தங்கிய சிறார்களை ‘ஸ்பெஷல் கிட்ஸ்’ என்று விளித்து, சிறப்பு கவனமும் அக்கறையும் செலுத்தி, பாடத்தைப் புகட்ட முயற்சிக்கும் ஆசிரியர்களைத் திட்டி அழகு பார்க்கும் சன் டிவிக்கும், பொய்யை நயம்பட நிகழ்ச்சியில் புகுத்தி போலி சித்திரத்தை உருவாக்கும் ராடான் நிறுவனத்திற்கும் (RADAAN MEDIAWORKS (I) LIMITED), திறம்பட படச்சுருளைத் தொகுக்கத் தெரியாத தங்கவேட்டை தயாரிப்பாளர்களுக்கும் வருத்தம் கலந்த கண்டனங்கள்.

நீங்களும் அவர்களிடம் பிழையை சுட்டிக் காட்ட:
info@radaan.tv

தொடர்பான ஆங்கிலக் குமுறல்:
Bala’s Blog » Blog Archive » Thanga Vettai – American Students are Idiots

முன்னாள் பதிவு: வீட்டில் இருந்தால் சன் டிவியில் பார்க்க நினைக்கும் சில நிகழ்ச்சிகள்


| | | |

What are the Top Tamil Blogs

படிக்கவேண்டிய, கவனிக்க வேண்டிய, தவறவிடக் கூடாத, பயனுள்ள, உருப்படியான, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த, வெகுஜன ஊடகங்களுக்கு சரியான மாற்றாக, தொடர்ந்து இற்றைப்படுத்தப்படும், அதிகம் பேர் வருகை தரும், வாழ்க்கையைப் பதியும், மாற்று நீரோட்டங்களில் தெளியும், வித்தியாசமான கண்ணோட்டத்தில் இயங்கும், யதார்த்தமான, முகப்பூச்சுக்கள்ளற்ற வலைக்குறிப்புகள் எது?

மூச்சு வாங்குது…

ஒவ்வொரு அடைமொழிக்கும் ஒரு வலைப்பதிவு தேர்வு செய்யலாம். இருந்தாலும் பொத்தாம்பொதுவாக என்னுடைய எண்ணங்களை முன்வைக்கிறேன். மேலே அலசுவதற்கு முன்னால், டெக்னோரட்டி (படிக்க: Technorati Blog Finder: தமிழ்ப்பதிவுகள்) உதவியுடன் தலை தமிழ்ப்பதிவுகளின் பட்டியல்: (அடைப்புக்குறிக்குள் இருப்பது, அந்தந்த வலைப்பதிவுகளுக்கு சுட்டி தந்தவர்களின் எண்ணிக்கை)

  1. thamizmaNam : தமிழ்மணம் (381)
  2. பத்ரியின் வலைப்பதிவுகள் (72)
  3. Dubukku– The Think Tank (63)
  4. Idly Vadai (58)
  5. துளசிதளம் (44)
  6. Dondus dos and donts (38)
  7. Prakash‘s Chronicle (38)
  8. E – T a m i l : ஈ – தமிழ் (38)
  9. முத்து (தமிழினி) பக்கங்கள் (37)
  10. குழலி பக்கங்கள் (35)
  11. தேசிகன் பக்கம் (35)
  12. மதி கந்தசாமி தமிழ் வலைப்பதிவு (32)
  13. தனித்துவமானவன், உங்களைப் போலவே…! 🙂 (31)
  14. உருப்படாதது (29)
  15. முகமூடி (29)
  16. சசியின் டைரி (28)
  17. என் எண்ணக் கிறுக்கல்கள் – செல்வராஜ் (26)
  18. உலகின் புதிய கடவுள் (26)
  19. பொன்ஸ் பக்கங்கள் (25)
  20. மனம் ஒரு குரங்கு (20)
  21. வஜ்ரா… தமிழ் வலைப் பதிவு (20)
  22. பாலக்கரை பாலனின் பால்ய பார்வை (19)
  23. Rajni Ramki (17)
  24. ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்…! (17)
  25. மகரந்தம் (16)
  26. மாயவரத்தானின் வலைப்பூ….Third Vision (16)
  27. பிச்சைப்பாத்திரம் (15)
  28. விடுபட்டவை (15)
  29. எண்ணம் :: ஆசாத் (15)
  30. உள்ளும் புறமும் (13)
  31. தமிழகத் தேர்தல் 2006 (13)
  32. இணைய குசும்பன் (12)
  33. பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் (11)

குறிப்பு: விடுபட்டவர்களை வேண்டுமென்றே தவறவிடவில்லை. தங்களின் ??‘ blogs link here எண்ணை சொன்னால் மகிழ்வுடன் தெரிந்து கொள்வேன்.

ஆங்கில வலைப்பதிவுகளில் கிருபாவின் மண்டையை உருட்ட, தமிழில் அதே மாதிரி எண்ணிப் பார்க்கலாம் என்று ஆராய்ந்ததன் விளைவு.

தமிழ்மணம் வாசகர் பரிந்துரையை நம்ப இயலாது என்பது போலவே, இந்த டெக்னோரட்டி அளவிடுதலிலும் குறைகள் உண்டு. பிகே சிவகுமார் போன்ற முக்கியமான பதிவுகள் 11 பேரிடம் இருந்து சுட்டி வாங்கி பின் தங்கிய பட்டியலில் இடம் பிடிக்கும். வம்பு தும்புக்கு போகாமல் நாட்டு நடப்பை அலசும் பதிவுகள் முன்னேறிய நிலையில் இருக்கும்.

இருந்தாலும், ஓரளவு வாசகர்களின் மனநிலையை படம் பிடிப்பதாக அமைந்திருக்கிறது. சில காலமாய் எழுதினாலும், என்னுடைய மனங்கவர்ந்த எண்ணங்களை எழுதுகிறேன் போன்ற சுவாரசியமான பகிர்வுகள் இந்த மாதிரி தரப்பட்டியல்களில் மெதுவாகத்தான் முன்னேறுகின்றன. துளசியின் பதிவுகள் #5-இல் இருப்பது – காலப்போக்கில், மா சிவகுமாரும் பரவலான கவனிப்பை அடைவார் என்று எண்ண வைக்கிறது.

ஆனால், பல வருடமாய் எழுதும் நுனிப்புல் இன்னும் இடம்பெறாதது ஆச்சரியம். பலரின் பதிவுகளில் தொடர்ச்சியாக பின்னுட்டங்களும், அனைத்து இணைய தாளிகைகளிலும் தன் எழுத்தை இடம் பிடிக்க செய்தும், டெக்னொரட்டியின் கருணைப் பார்வை கிட்டவில்லை. இதற்கு ஒரே காரணம், தொழில்நுட்பத்தை தெரிந்து வைத்து, டெக்னோராட்டியின் நிரலித் துண்டை தன்னுடைய வார்ப்புருவில் இணைக்காமல் இருப்பதுதான் என்று சொல்ல நினைக்கிறேன்.

அல்லது, இந்த கவனமின்மை டெக்னோரட்டியின் நுட்பக் குறைபாடு.

கடந்த ஆறு மாதங்களில் என்னை அதிகம் ஈர்த்த, நான் தொடர்ச்சியாக படிக்க நினைக்கும் தமிழ்ப் பதிவுகள்:

தொடர்புள்ள சுட்டிகள், ஆங்கில வலைப்பதிவுகள் குறித்த அலசல், கொஞ்சம் சரித்திரப்பாடங்கள்:


| | |

Pazha Nedumaran & Thol Thirumavalavan in World Confederation of Tamil Conference

Dinamani.com – TamilNadu Page

மாநாட்டில் விசில்: பழ.நெடுமாறன் கோபம்

சேலம், ஆக. 14: சேலத்தில் நடந்த உலகத் தமிழர் பேரமைப்பு மாநாட்டில் விசில் அடிக்கப்பட்டதால், பழ.நெடுமாறன் கோபம் அடைந்தார்.

பேரமைப்பு நான்காம் ஆண்டு நிறைவு மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் பங்கேற்க இரவு 8 மணியளவில் விடுதலைச் சிறுத்தைகள் பொதுச்செயலர் தொல்.திருமாவளவன் அரங்குக்கு வந்தார்.

அப்போது சிலர், விசில் அடித்தனர். இதனால் மேடையில் பேசிக் கொண்டிருந்த பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் கோபமடைந்தார். அவர் கூறியது:

விசிலடிப்பவர்கள் வெளியே போங்கள். திரைப்படம் பார்க்கும்போதுதான் விசிலடிப்பார்கள். இங்கு அடிக்கக் கூடாது. மாநாட்டில் எப்படி இருக்க வேண்டுமென கற்றுக் கொள்ளுங்கள் என்றார் நெடுமாறன்.


தொடர்புள்ள பிற செய்திகள்:

1. Puthinam Tamil Daily News Page @ Puthinam.com :: உலகத் தமிழர்கள் ஒன்றுகூடுவதற்கான தடைகள் இனியாவது தமிழ்நாட்டில் மாற வேண்டும்: பழ.நெடுமாறன்

2. World Confederation of Tamils – உலகத் தமிழர் பேரமைப்பு

3. ulaga thamizhar pEramaippu

4. Puratchi | Periyar | Muzhakkam | Tamil | Nedumaran: முனைவர் வ.அய்.சுப்ரமணியத்துக்கு ‘உலகப் பெருந்தமிழர் விருது’ – தமிழர் ஒற்றுமைக்கு குரல் கொடுத்த நாகர்கோயில் மாநாடு

5. Thinnai :: மஞ்சுளா நவநீதன் – உலகத் தமிழர் பேரமைப்பு – ஒற்றுமையா பிரிவினையா ?

6. E – T a m i l : ஈ – தமிழ்: உலகத் தமிழர் பேரமைப்பு

Kaalachuvadu Announcements

காலச்சுவடு புத்தகக் கடை & அற்றைத் திங்கள் அறிவுப்புகள்:

புத்தக விற்பனை மையம் திறப்பு விழா அழைப்பிதழ்
நாள்: ஆகஸ்ட் 18, வெள்ளி
நேரம்: 6:00
இடம்: 332 (பழைய #216) திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை


அற்றைத் திங்கள்
கல்வியாளர் மு அனந்த கிருஷ்ணன்
நாள்: ஆகஸ்ட் 20, ஞாயிறு
நேரம்: 6:30
இடம்: கோவை பாரதீய வித்யா பவன்


| |

Oru Kai Osai – Bhagyaraj

ஒரு கை ஓசை

‘முந்தானை முடிச்சு’க்கு முந்தி வந்த படம் (என்று சின்ன வயது ஞாபகம் சொல்ல வைக்கிறது). பதினெட்டாவது வாரமோ, பத்தொன்பாவது வாரமோ அண்ணா சலை திரையரங்கொன்றில் ரசித்ததை மீண்டும் கே டிவி இட்டது.

‘முந்தானை முடிச்சு’ படத்தில் நாயகனுக்கு மணமுடித்து குழந்தை இருக்கும். அவரின் மீது ஒரு தலைக் காதலாய் ஊர்வசி. நடுவில் முக்கோணம் வராவிட்டாலும் தொட்டுக்கொள்ள தீபா. ‘மௌன கீதங்கள்’ முதற்கொண்டு எல்லா திரைக்கதையிலும் முக்கிய பங்கு வகிக்கும் சின்னஞ்சிறிய குழந்தை இங்கும் பல காட்சிகளில் ஹீரோவாக இருக்கிறது.

நாயகனுக்கு வாய்பேச வராது. மருத்துவக் கல்லூரி காதலில் கைக்குழந்தையுடன் நாயகி. காதலன் இருவுள் வாயில் விபத்தில் இறந்ததாக நினைக்க உச்சகட்டத்தில் வந்து தொலைக்கிறான். முடிவில் சுபம்.

‘கல்லாப்பெட்டி’ சிங்காரம் பெட்டிக்கடை முதலாளியாக நகைச்சுவையிலும் குணச்சித்திரத்திலும் உறுதுணையாக அசத்தியிருக்கிறார். இவருக்கும் கவுண்டமணி வயதுதானே ஆகியிருக்கும்? எங்கே போனீங்க சார்! யதார்த்தமான ‘ஆண்பாவம்’ ஸ்டைல் நக்கல் கட்சி:

‘டேய் இந்த பாட்டிலை தொட்டுடுவியாடா?’
தொடுகிறான்.

‘பயந்துண்டே தொடறான் பாரு… அடேய்… கையில எடுத்துடுவியாடா?’
எடுக்கிறான்.

‘போடா… எடுத்தாப் போதுமா? ஓட முடியுமாடா உன்னால?’
ஓட்டமெடுத்து விடுகிறான்.

‘விடுங்க தம்பீ… மொகத்த நல்லா பாத்து வச்சுகீட்டீங்களா? நாளைக்கு பஞ்சாயத்தில் அடையாளம் காட்டறதுக்கு ஞாபகம் வச்சுக்குங்க!’

‘சங்கிலி’ முருகனுக்கு முதல் படம் (தானே?!). மாடக்குளம் அழகர்சாமி & சிதம்பரநாதன் அமைத்த சிலம்பச் சண்டைக் காட்சிகளில் பிய்த்து உதறியிருக்கிறார். நாயகனுக்கு ஒரு ஃபைட் சீன் கூட கிடையாது. இருந்தாலும் பாக்யராஜ், பாக்யராஜ்தான் என்று சொல்ல வைத்த காலம்.

‘நடந்தப்புறம் வருவது போலீஸ்; தப்பு நடக்கும்போது தட்டிக் கேட்பான் சங்கிலி’ என்றவுடன் சமீபத்திய லண்டன் நிகழ்வில் முன்பே தடுத்தாட்கொண்ட இங்கிலாந்தின் துப்பறியும் நிறுவனம் ஸ்காட்லாண்ட் யார்டும், ஜேம்ஸ் பாண்டின் எம்.ஐ.6-ம் நிழலாடியது.

கவிஞர் முத்துலிங்கத்தின்முத்து தாரகை வானவீதி வர‘ கேட்பதற்கும், ரசிப்பதற்கும் இனிய பாடல். அம்பிகாவுக்கு டூப் போட்ட மாதிரி தோற்றத்துடன் அஸ்வினி. சேலை முந்தானையை இழுத்துப் போர்த்திக் கொண்டு வரும்போதெல்லாம் ‘நண்டு’ நினைவுக்கு வருகிறது.

காக்காய், சம்பளம், தென்னம்புள்ள, வைப்பாட்டி என்று வயது வந்த இரட்டுற மொழிதலுடன் கூடிய சிதம்பரநாதனின் டைட்டில் பாடலில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை தெரிகிறது. எல்.ஆர். ஈஸ்வரிக்கும் வாய்ப்பு உண்டு.

அமிஞ்சியார் மடம், தெற்கே போனால் திங்களூர், வடக்கில் போனால் திருவள்ளூரு; ஆறு, குளம் வேண்டுமென்றால் வெள்ளாங்கோவில் என்கிறார். கோவைக்காரர்கள்தான் கரைபுரண்டோடும் ஆற்றின் பெயரை சொல்லவேண்டும். கிராம வாசனை நிறையவே நெடுக வருகிறது. ‘கீரமுண்ட’ என்று ஆரம்பிக்கும் குடுமிப்பிடி சண்டைகளும் உண்டு. கம்பஞ்சோறும் உண்டு.

தூறல் நின்னு போச்சு‘ கும்பல் அப்படியே இடம்பெயர்ந்திருந்தது. ‘கண்ணத் தொறக்கணும் சாமீ‘ இயக்கிய பழனிச்சாமி, ‘மேரி ப்யாரி தில் கீ ராணி’ பாடிய கோவிந்தராஜ் என்று நண்பர் குழாத்துடன் உலா வருகிறார்கள். ‘காதலா காதலா’வில் கூர்க்கா வேடம் போடும் ‘ரகுத்தாத்தா’ ஹிந்தி பண்டிட், தூய தமிழில் நாய் வளர்க்கிறார்.

‘தேவர் மகன்’ போல் ஆற்றில் விஷம் கலப்பது; ‘மூன்றாம் பிறை’ போல் ‘கலர் மாறிப் போச்சு’ நாய்க்குட்டி; வேறு பல படங்களில் பார்த்த, பிடித்தவர்களின் பெயரை நெஞ்சில் பச்சைகுத்திக் கொள்வது; என்று சட்சட்டென்று அட போட வைத்த புத்திசாலி திரைக்கதை, பாக்யராஜின் ஐ.எஸ்.ஐ. முத்திரை.

முந்தானை முடிச்சில் கல்சோறு நிறைவேற்றுவார் ஊர்வசி. இதில் ஆணிசெருப்பு அணிந்து ஒன்பது சுற்று வலம் வருகிறார் நாயகன். அக்குபஞ்சர் சிகிச்சையை அந்த நாளிலேயே மெய்ஞானத்துடன் கலந்து விஞ்ஞானமாய் கிராமியப் பழக்கவழக்க நோன்புகள் கொண்டு வந்திருப்பதை நையாண்டி கலந்த பக்தியுடன் கொண்டு வந்திருக்கிறார்.

அதேபோல், வெளிச்சத்துக்கு வரவேண்டிய சமூக அவலங்களையும் மசாலாப் படத்தில் அன்றே கொணர்ந்திருக்கிறார். ஊர் காவலாளி வீரன் – ‘சங்கிலி’ முருகன் வெட்டியானாக இருப்பதால் ‘இரட்டை டம்ளர்’ முறைக்கு அடிபணிந்து வாழ்கிறார். க்ளைமாக்சில் வில்லன் கும்பலிடம் அடிவாங்கி மரிக்கும் தருணத்தில் ‘தயவு செய்து திருந்துங்க… ஊருக்குள் எல்லாருக்கும் ஒரே டம்ளர் கொண்டு வாங்க’ என்று வேண்டுகோள் விடுத்து இறக்கிறார்.

ரஜினியின் உற்ற தோழர், ‘வள்ளி’ பட இயக்குநர் நட்ராஜ், மைனராக வில்லத்தனம் செய்கிறார். கீழ்வெண்மணி கூலிப் பிரச்சினை போன்ற சித்தரிப்பு இங்கு இடம் பிடிக்கிறது. உள்ளுர் பிரச்சினைக்கு பக்கத்து ஊரில் இருந்து கூலிக்கு ஆட்களைக் கூட்டி வருவதும், அசலூர் ஆசாமிகளைத் தடுப்பவர்கள் கொலை செய்யப்படுவதும் இறுதியில் மேலோட்டமாக வருகிறது.

அதெல்லாம் இருக்கட்டும். இந்தப் படம் இரா முருகனுக்கு ஏன் ரொம்ப பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? (படிக்க: நான் அறியும் அசோகமித்திரன் (அல்லது அசோகமித்திரனை முன்வைத்துக் கொஞ்சம் நினைவலைகள்))


| |

Agri Krishnamurthy Suspended from Tamilnadu Assembly

Dinamani.com – TamilNadu Page

பெண் எம்எல்ஏக்கள் புகார்: அதிமுக எம்எல்ஏ சஸ்பெண்ட்

சென்னை, ஆக. 13: சட்டப் பேரவையில் பெண் உறுப்பினர்கள் புகார் கூறியதை அடுத்து அதிமுக எம்எல்ஏ அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி, நடப்பு கூட்டத் தொடர் முழுவதற்கும் தாற்காலிக நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் கலசப்பாக்கம் தொகுதி உறுப்பினராக உள்ளார்.

பேரவையில் சனிக்கிழமை அமளி ஏற்பட்டு அதிமுகவினர் வெளியேறிய பிறகு நடந்த விவாதம்:

வை. சிவபுண்ணியம் (இந்திய கம்யூனிஸ்ட்): பேரவைக் கூட்டம் சுமுகமாக நடக்க வேண்டும் என்ற நோக்கில் முதல்வர் கருணாநிதி விடுத்த அழைப்பையும் ஏற்காமல் அதிமுகவினர் வெளியேறியுள்ளனர். முதல்வர் பேசும் போது அதிமுகவினர் கேலி, கிண்டல் செய்ததால் ஆளும் தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, பொன்முடியை பார்த்து ஒருமையில் பேசுகிறார். சகிக்க முடியாத, தரம் தாழ்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இந்நிலை தொடர்ந்தால் பேரவையின் மாண்பு, மரபு குழிதோண்டி புதைக்கப்படும்.

உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினால் அமைச்சர்கள் பதில் சொல்கின்றனர். எதிர்க்கட்சியினர் தங்கள் கருத்துகளைக் கூறுகின்றனர்.

ராணி வெங்கடேசன் (காங்கிரஸ்): ஆரம்ப நாளில் இருந்தே பொன்முடியை ஒருமையில் பேசி வருகிறார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. பெண்கள் காதில் கேட்க முடியாத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். இதுபற்றி காங்கிரஸ் கொறடாவிடமும், பேரவை காங். தலைவரிடமும் கூறினேன். பொறுத்துக் கொள்ளுமாறு கூறினர்.

பேரவைத் தலைவரிடம் சொன்னேன். எழுதித் தருமாறு கூறினார். போனால் போகட்டும் என விட்டுவிட்டேன். இதே நிலை இன்னும் தொடர்கிறது. பெண் உறுப்பினர்கள் பேரவைக்கு வர வேண்டுமா? வேண்டாமா?

பத்மாவதி (இந்திய கம்யூனிஸ்ட்): காதில் வாங்க முடியாத வார்த்தைகளை அக்ரி கிருஷ்ணமூர்த்தி அடிக்கடி பேசுகிறார். அவரிடம் நாங்கள் 2 பெண் எம்எல்ஏக்களும் இப்படிப் பேச வேண்டாம் என அடிக்கடி எச்சரித்துள்ளோம்.

பேரவையில் பெண் உறுப்பினர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று அவர்கள் முன்பு பிரச்சினை எழுப்பினர். பெண்கள் இங்கு உட்காரவே வழி இல்லாத நிலையை அவர்கள் உருவாக்குகின்றனர் என்றார் அவர்.

இந்த 2 பெண் உறுப்பினர்களும் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் இருக்கையின் அதே வரிசையில் இடதுபுறம் அமர்ந்திருப்பவர்கள்.

தொடர்ந்து நன்மாறன் (மார்க்சிஸ்ட்) பேசியது:

அதிமுக உறுப்பினர் சின்னசாமி கூறிய அதே புகார் முந்தைய காலத்தில் எழுப்பப்பட்டபோது, அப்போதைய முதல்வர் என்ன பதில் சொன்னார் என்பதை பாலபாரதி சுட்டிக்காட்டினார்.

ஜி.கே. மணி (பாமக): திட்டமிட்டு கலவரம் செய்ய வேண்டும் என்று அதிமுகவினர் செயல்படுகின்றனர். பொன்முடியை பார்த்து மோசமாகப் பேசினார் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

முன்னாள் அமைச்சர்கள் உள்பட அதிமுகவினர் முன்வரிசை நோக்கி ஓடி வருகின்றனர். பேரவைத் தலைவரைப் பற்றி தரக் குறைவான வார்த்தைகளை உபயோகிக்கின்றனர்.

இதெல்லாம் வேதனையாக இருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

“”பேரவையில் தினமும் ஆளும் கட்சி மற்றும் தோழமைக் கட்சியினர் பற்றி தவறான வார்த்தைகளை அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசி வருவதால், நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் அவரை தாற்காலிக நீக்கம் செய்ய வேண்டும்”

என்ற தீர்மானத்தை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி கொண்டு வந்தார்.

குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேறியது.

இதைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நடப்புக் கூட்டத்தொடரின் எஞ்சிய நாள்களுக்குத் தாற்காலிக நீக்கம் செய்யப்படுவதாக பேரவைத் தலைவர் இரா. ஆவுடையப்பன் அறிவித்தார்.

Al-Queda’s Support for Kashmiri Militants in Pakistan

Dinamani.com – Headlines Page

காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு அல்-காய்தாவுடன் தொடர்பு: பின் லேடன் சிடிக்கள் சிக்கின

ஜம்மு, ஆக. 13: காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு ஒசாமா பின் லேடனின் அல்-காய்தா அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

பூஞ்ச் மாவட்டத்தில் குர்சியா என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை நடந்த மோதலின்போது லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர் அபு கத்தால் கொல்லப்பட்டார். அவர் வைத்திருந்த 10 சிடிக்கள் சிக்கின. அதில் ஒசாமா பின் லேடனின் பிரசாரங்கள் அடங்கிய 2 சிடிக்களும் அடங்கும் என்று ராணுவ அதிகாரிகள் ஜம்முவில் சனிக்கிழமை தெரிவித்தனர்.

இதன் மூலம் காஷ்மீர் மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் செயல்பட்டு வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பாவுக்கும் அல்-காய்தாவுக்கும் இடையிலான தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீரில் அல்-காய்தா பயங்கரவாதிகள் இல்லை. ஆனால், சிடிக்கள் மூலம் பின் லேடனை ஹீரோவாகச் சித்தரித்து, இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு இழுக்கும் நோக்கில் சிடி தயாரிக்கப்பட்டுள்ளது. தற்கொலைப் படைகளுக்குப் பயங்கரவாதிகளைத் தயார் செய்வதற்கு அவர்களை ஊக்குவிக்கும் வகையில் சிடிக்கள் உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

2 சிடிக்கள் தவிர மற்ற 8 சிடிக்களில் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அதன் மறுபெயரில் உருவாகியுள்ள ஜமாத்-உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் அடங்கியுள்ளன.

காஷ்மீரில் 1989 முதல் பயங்கரவாதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், பயங்கரவாதிகளை ஊக்குவிப்பது தொடர்பான சிடிக்கள் கைப்பற்றப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

லாகூர் அருகே முரித்கே என்ற இடத்தில் உள்ள தங்களது தலைமையகத்தில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் இதுபோன்று 100 சிடிக்களைத் தயாரித்து, காஷ்மீருக்கு அனுப்பியுள்ளதும் தெரியவந்துள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சிடிக்கள் தோடா, ரஜெüரி, பூஞ்ச் மற்றும் உதம்பூர் மாவட்டங்களில் உள்ள லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டன என்றும் அதிகாரிகள் கூறினர்.

Rape Allegations on Surjith Singh Barnala’s MLA Son

Dinamani.com – Headlines Page

வேலைக்காரியை கற்பழித்ததாக தமிழக ஆளுநர் பர்னாலாவின் மகன் ககன்ஜித் சிங் கைது

சண்டீகர், ஆக. 13: வீட்டு வேலைக்காரியைக் கற்பழித்ததாக தமிழக ஆளுநர் சுர்ஜீத் சிங் பர்னாலாவின் மகனும் பஞ்சாப் மாநிலம் தூரி சட்டப்பேரவைத் தொகுதி (சிரோன்மணி அகாலி தளம் கட்சி) எம்.எல்.ஏ.வுமான ககன்ஜித் சிங் பர்னாலா கைது செய்யப்பட்டார்.

சனிக்கிழமை முற்பகலில் ககன்ஜித் சிங்குக்கு, 40 வயதாகும் வேலைக்காரப் பெண் மசாஜ் செய்து கொண்டிருந்தார். அப்போது ககன்ஜித் சிங் தம்மைக் கற்பழித்ததாக வேலைக்காரப் பெண் போலீஸில் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து, ககன்ஜித் சிங்கைப் போலீஸôர் கைது செய்துள்ளனர். வேலைக்காரப் பெண்ணுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டுள்ளது. கற்பழிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ககன்ஜித் சிங்கும் மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

Obeisance of Pakistan to Super Powers?

நான் நன்றி சொல்வதால் பாதுகாப்பு அமைச்சகம் முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. காசா… பணமா… மறுமலர்ச்சி நன்றிப் பாடல்

அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பெரிய மனுசங்களுக்கு உதவுகிற மாதிரி, பிரணா முகர்ஜி வேண்டுகோள்களுக்கும் முஷாரஃப் செவி சாய்த்தால் நல்லதா / கெட்டதா என்பதற்கு நம்ம பேரன் வந்தாலும் பதில் தெரியாது.

இன்னும் படம் பார்க்க: Flickr: Photos tagged with pakistan

சமீபத்தில் தடுக்கிய கட்டுரை: The Indian Army has a war-winning doctrine against Pakistan

தொடர்புள்ள பதிவுகள்:
1. பாக்’கிஸ்’தானுக்கு நன்றி

2. காலம்: இஸ்லாம் என்றால் தீவிரவாத மதமா ?

3. உறவுக்குக் கைகொடுப்போம்! – எஸ்கே

4. பாகிஸ்தானுக்கு நன்றி – சிவபாலன்


| |

Pesticide Factory – Coca-Pepsi

கோக-கோலா பானங்களில் நச்சுப்பொருள் வரம்பளவு மீறப்படவில்லை: கோக் தகவல் : ஐரோப்பிய ஒன்றியம் நிர்ணயித்துள்ள தரமுறைகளின்படி பார்த்தால் கோக-கோலா பானங்களில் நச்சுப் பொருள்களின் வரம்பளவு மீறப்படவில்லை என கோக் கூறியுள்ளது.

கோக், பெப்சி உள்ளிட்ட 14 வகையான பானங்களில் நச்சுப்பொருள்களின் அளவு அனுமதிக்கப்பட்டதை விட அதிகமாக உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து ராஜஸ்தான், பஞ்சாப், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் இந்த பானங்களுக்கு தடை விதித்தன. கேரளத்தில் உற்பத்தி, விற்பனை இரண்டுக்குமே தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து கோக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“ஐரோப்பிய ஒன்றிய தரநிர்ணயத்தின் படி, தனியே ஆய்வகங்களில் நடத்திய சோதனைகளில் இந்திய மென் பானங்களில் கண்டறியத்தக்க அளவு நச்சுப் பொருள்கள் இல்லை. பிரிட்டிஷ் அரசின் ஆய்வகமான மத்திய அறிவியல் ஆய்வகத்தில் (சிஎஸ்எல்) மென்பானங்கள் தொடர்ச்சியாகப் பரிசோதிக்கப்பட்டு உறுதிப்படுத்தப் படுகின்றன. உலகம் முழுவதும் பின்பற்றுவதைப் போலவே இந்தியாவிலும் எங்களது பானங்களில் பாதுகாப்பு, தரம் விஷயத்தில் சமரசத்துக்கு இடமில்லாமல் செயல்படுவதாக”

கோக் கூறியுள்ளது.

நன்றி: Dhinamani.com


ராஜஸ்தானில் படித்ததின் சௌகரியம் இந்தியாவில் மீண்டும் கால்வைத்த கோக், சீக்கிரமே குடிக்கக் கிடைத்தது. ஆக்ராவை ‘சோதனை சந்தை’யாக வைத்து கொகோ கோலா வந்தவுடன் பிலானிக்கும் உடனடியாக வந்தது. எட்டோ, பத்தோ கொடுத்து உருப்படாததை குடிப்பதற்கு பதிலாக, இருபத்தி மூன்று சில்லறை செல்வழித்தால் ‘டைரக்டர்ஸ் ஸ்பெசலில்்‘ பாதி கிடைக்குமே என்று கணக்குப் போட்டு குடித்த காலம். கோக் போதை ஏறவே இல்லை.

பெங்களூர் ரெக்ஸ் வாசலில் காத்திருந்தபோதும் நிறையரங்காகி (அந்தக் காலத்தில் பாலுறை தானியங்கிகள் கிடையாது) விட்டிருந்தால், பெட்டிக்கடை வாசலில் மிரிண்டாவை விரும்பாமல், அண்டர்கிரவுண்ட் சென்று பருகுவதையே நண்பர்களும் நாடியதால், இன்றளவில் ஃபாண்டா-விற்காக அசின் விற்கிறாரா, மிரிண்டாவை ட்ரிஷா வளைக்கிறாரா என்றறியாத பியர் மணம் மாறாத பாலகனாகவே வாழ்க்கை தொடருகிறது.

அன்றாட உணவுகளில் பூச்சிக்கொல்லிகளும் இன்னபிற preservatives, artificial colors or flavorings, non-essential additives நிறைந்திருப்பதாக Dr.Weil-இல் ஆரம்பித்து பலரும் எழுதி வருகிறார்கள்.

சுருக்கமாக சொன்னால், முகப்பூச்சு களிம்புகள், குளிர்காலத்தில் தோல் வறட்சியைக் காக்கும் விதவித எண்ணெய் என்று வெளிப்புற பயன்பாடு முதல் ‘Organic’ என்று முத்திரையிடாத எல்லா உட்பொருளும் ஆபத்தானவை.

வீட்டு சாப்பாடு மட்டுமே உட்கொள்ள வேண்டும். பலிகடா ஆவதற்கு முன் ஆடு, மாடு, கோழி சுதந்திரமாக உலாவுதல் வேண்டும். அப்படி அடைக்கப்படாமல் மேய்வதற்கு பரந்த புல்வெளி இருக்க வேண்டும். அந்தப் புல் வளர உரம் இடக் கூடாது. பூச்சிக் கொல்லி போடக் கூடாது. புழுக்களும் இந்த நிலத்தில் தலைக் காட்டாமல் இருக்க வேண்டும்.

வண்ணமில்லா பண்டம் குப்பையிலே என்பது போல் உப்பு சப்பில்லாமல், ஜோதிகாவின் இதயம் எண்ணெய் சேர்க்காமல், அர்ச்சனா ஸ்வீட்ஸ் சாப்பிடாமல் இருந்தாலே ஆரோக்கியமாய் நெடுநாள் வாழலாம். நெய் மணக்க ரவா கேசரி செய்தால் ‘வண்ணம்’ போடாமல் வெள்ளை வெளேரென்று இருக்கும். மோகன்தால், பஜ்ஜி எல்லாம் ரத்தசோகையுடன் தட்டில் வரும்.

(கொசுறு: komo news | Americans: Too Much Salt, Not Enough Understanding: high-salt diets can cause high blood pressure, a risk factor for heart and kidney disease and stroke. “This is the equivalent of a jumbo jet with 400 people on it crashing every day,” says Dr. Stephen Havas, vice president of public health for the American Medical Association. He says if Americans cut their salt use in half, 150,000 lives a year could be saved.)

கோக்/பெப்ஸி எத்தனை பென்சீன் கொண்டிருக்க வேண்டும், எவ்வளவு Yellow No. 5 Lake இருந்தால் 18+ குடிக்க உகந்தவை, brominated vegetable oil எத்தனை வைத்திருந்தால் 21+ மட்டுமே பருக இயலும் என்று சட்டம் இல்லாத நாட்டில் ‘அந்நிய நாட்டு அராஜகம்’ என்று தலைப்பிட்டு புலம்ப வசதியாய் நச்சுப்பொருளைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். கிங்பிஷரை தடை செய்யாத கேரளா கோக்கை தடை செய்கிறது.

சில கேள்விகள்:

  • எஃப்.டி.ஏ. போன்ற இந்திய அமைப்பு, மது கலக்காத மென் பானங்களுக்கான விதிமுறைகளை அறிவித்து இருக்கிறதா?
  • Nutrition information: ஒவ்வொரு உணவிலும் எத்தனை கொழுப்பு, புரதச்சத்து, போன்றவையும் எந்த உட்பொருள் கொண்டிருக்கிறது என்னும் அறிவிப்பும் அச்சிடுவது கட்டாயமாக்கப் படுமா?
  • ஊறுகாய், பால்கோவா போன்ற அதிஆபத்தான உணவுகளுடன் ‘இதை உண்பதால் உங்களுக்கு மாரடைப்போ நிரிழிவு நோயோ இளமையிலேயே தாக்கும்’ என்னும் எச்சரிக்கை இடப்படுமா?
  • சென்னையில் பத்து வயதுப் பையன் கூட சர்வ சாதாரணமாக பீடி வலிப்பதையும் பள்ளி மாணவன் அக்கவுண்ட் வைத்து தம் போடுவதையும் சாத்தியப்படுத்துபவர்களின் கடை சீல் வைக்க பிரயத்தனங்கள் மேற்கொள்வது மாதிரி குறைந்தபட்ச பாவ்லா ஆவது காட்டப்படுமா?
  • இந்தியாவில் இதுவரை கோக்/பெப்ஸி சாப்பிட்டு எத்தனை பேர் மரணமடைந்திருக்கிறார்கள்? யார் யாருக்கு என்ன நோய்கள் ஆட்கொண்டுள்ளன? என்ன உபாதைகள் வந்திருக்கிறது?
  • அமெரிக்காவில் இருந்து இந்தியா செல்லும்போது, குழந்தைகளுக்கு தடூப்பூசி போட்டு அனுப்புவார்கள். அப்பொழுது மருத்துவர்கள் சொல்லும் முக்கிய ஆலோசனை:

    ‘மினரல் வாட்டர் வாங்கினாலும் மூன்று தடவை காய்ச்சி, ஒவ்வொரு காய்ச்சலுக்கும் நடுவில் வடிகட்டி, உங்கள் குழந்தைகளுக்கு குடிக்கத் தரவும். குளிப்பாட்டுவதென்றால் ஒரு முறை வடிகட்டி, காய்ச்சினால் போதுமானது.’

    குழாய் தண்ணீருக்கும் தாஸனி தண்ணிக்கும் கண்ணால் பார்த்தால் ஆறு வித்தியாசம் தெரிந்தாலும், ட்ரீட்மெண்ட் ஒன்றுதானா?


    தொடர்புள்ள சுட்டிகள்:

  • செயற்கை சர்க்கரையை கோக் பயன்படுத்துவதால் வரும் ஆபத்து.
  • கோக்கில் போதைப்பொருள் உண்டா?
  • (Vaccine) தடுப்பூசிகளில் இடம்பெறும் தேவையான நச்சுப்பொருள்
  • CorpWatch : INDIA:Everything Gets Worse With Coca-Cola
  • Pesticide Exposure Damages Nervous System, Brain – Yahoo! News
  • பத்ரியின் வலைப்பதிவுகள் – கோக், பெப்சி – அடுத்து என்ன?
  • YouTube – Aishwarya Rai and Aamir Khan Coca Cola
  • Welcome to Coca-Cola India
  • YouTube – Pepsi India – Elephants are Bad Idea
  • AsiaMedia :: INDIA: Child-labour groups get Pepsi ad banned

    | |