Category Archives: Uncategorized

How to be an ‘ordinary, decent’ Muslim

இன்றைய கார்டியனில் மேற்கத்திய நாடுகளில் முஸ்லீமாக வாழ்வதற்கு பத்து கட்டளைகள் கொடுக்கிறார்கள்.

  1. குளிரின் ஜன்னி கண்டாலும், பெரிய மேலங்கிகளை அணியாதே.
  2. பெற்றோர் பாகிஸ்தானில் மண்டையைப் போட்டாலும், சொந்த ஊர் பக்கம் எட்டிப் பார்க்காதே.
  3. பஞ்சதந்திரம் படம் பார்த்தோ, பாஸ்கெட்பால் பந்து போடுபவனை பின்பற்றியோ, தாடி வளர்க்காதே.
  4. மின்னஞ்சல் குழுவோ, கோவில் நிர்வாக அமைப்போ, குமுகாயம், கழகம் பக்கம் தலை நீட்டாதே.
  5. பத்தாயிரம் கொடுத்த சல்வார் கமீஸோ, வேலைப்பாடுடன் கூடிய சூரிதாரோ அணியாதே. பர்தா போடாதே.
  6. வாடைகை கம்மியாக இருக்கிறது; தோழன் கூப்பிடு தூரத்தில் இருக்கிறான் என்பதற்காக High Wycombe/ Luton/Beeston/Walthamstow பகுதிகளில் வசிக்காதே.
  7. சக இனத்தவனுக்கு இரக்கப்படாதே.
  8. மக்களுக்கு வழிகாட்டியாக, பிரச்சினைகளை வெளிச்சம் போட்டு குரல் கொடுப்பவனாக, தலைவராக தேர்ந்தெடுக்கப்படாதே.
  9. விளையாட்டில் வெற்றி பெற்று விடாதே.
  10. மற்றவர் கேலி செய்து கார்ட்டூன் வரைந்தாலும், நீ கேலிச் சித்திரம் வரையாதே.

நன்றி: Guardian Unlimited | Special reports | How to be an ‘ordinary, decent’ muslim:


| |

Kallipaalayam Aadi Dravida Status Update – MK Stalin

Dinamani.com – Chennai Page

குண்டடம் அருகே தலித் மக்கள் கிராமத்தை காலி செய்தது ஏன்?: ஸ்டாலின் விளக்கம்

சென்னை, ஆக. 31: தாராபுரம் தொகுதி குண்டடம் ஊராட்சி ஒன்றியம் கள்ளிப்பாளையத்தில் ஆதிதிராவிடர் காலனியில் மக்கள் வெளியேறியதற்கு, அடிப்படை வசதிகள் இல்லாதது காரணமல்ல என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுகுறித்து உறுப்பினர்கள் டி. யசோதா, விடியல் சேகர் ஆகியோர் சட்டப் பேரவையில் புதன்கிழமை கவனஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

ஆதிதிராவிடர் காலனியில் இருந்த குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைக்காக திருப்பூர் சென்றுவிட்ட நிலையில், மற்றவர்கள் வேறு ஊர்களில் உறவினர் வீடுகளுக்குச் சென்று தங்கியிருப்பதாக அமைச்சர் பதில் அளித்தார்.

அந்தக் காலனியில் குடிநீர் வசதி, சாலை வசதி ஆகியவை போதிய அளவுக்குச் செய்திருப்பதாக அவர் விளக்கினார்.

முந்தைய பதிவு: தமிழகத் தேர்தல் 2006: Frustrated Kallipaalayam Dalits Vacate their Native Village

Oh.. Jeez

மன்னிக்க வேண்டுகிறேன். ஆர்வக் கோளாறில் புதிய பதிவில் (E-Tamil Archives) பழைய விஷயங்களை சேர்க்கலாம் என்று நினைத்து செயல்பட்டதில் பத்தி பிரித்தல்களையும் வரிகளுக்கு நடுவே விழுந்த இடைவெளிகளும் காணாமல் போயிருக்கிறது.

கற்றது: ப்ளாகர் இடுகைகளை வோர்ட்பிரெஸுக்கு எளிதாக ஏற்றுமதி செய்யமுடியும். ஆனால், முழுக்க செய்து முடிப்பதற்கு முன் அரை வேக்காடாக அவசரப்பட்டால், சொதப்பலாக முடியும். பொறுத்தார் ப்ளாக் படிப்பார்.

ஏதாவது மாற்று வழிமுறையில் நிவர்த்தி இருந்தால் மின் மடலோ, மறுமொழியோ தரவும். நன்றி!


| |

Tamil Cinema Dialogue Lollu

வெட்டிப்பயல் – லொல்லு படித்தவுடன் எனக்கும் கை பரபரக்க, சிலவற்றை என்னால் முடிந்த அளவு நக்கல் விட்டுள்ளேன். பொறுத்தருள்க…

உதவிய & தொடர்பான பதிவுகள்: டயலாக் டென் | அந்நியலோகம்: டாப் 10 பிரபல ஒற்றைவரி வசனங்கள் | ஒரு குட்டி பூர்ஷ்வாவின் கல(க்)கமும், எண்ணங்களும் சில நல்லிணக்க முயற்சிகளும்…: தத்துவம்

  1. முத்து

    ரஜினி: நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது!

    தயாரிப்பாளர் புஷ்பா கந்தசாமி: அச்சச்சோ… ஹீரோவாச்சே! கால்ஷீட் கொடுத்திருக்கீங்க… அப்படி சொல்லாதீங்க.

    தமிழன்: உங்களுக்கு மட்டுமாவது தெரிஞ்சு வச்சிருக்கீங்களா சார்?

  2. பாபா

    ரஜினி: கதம்… கதம்… முடிஞ்சது முடிஞ்சு போச்சு

    இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா: ஆமா…

  3. பாரத விலாஸ்மகள் மதம் மாறி காதலிப்பதால் கோபப்படுகிறார் சிவாஜி.

    கே ஆர் விஜயா (திரைப்படத்தில் சொன்னது): ‘நீங்க எதற்கு எடுத்தாலும் அதிகமா உணர்ச்சிவசப்படறீங்க!’

    சிவாஜி கணேசன் (திரைப்படத்தில் சொல்லாமல் விட்டது): ‘பின்ன… சும்மாவா நடிகர் திலகம் என்று பட்டம் கொடுத்திருக்கிறார்கள்?!’

  4. பராசக்தி

    சிவாஜி கணேசன்: ஓடினாள்.. ஓடினாள்.. வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்..

    வழக்கறிஞர்: ஓரம் மட்டும் ஓடினால், வாழ்க்கையில் தடுக்கித்தான் விழுவாள்.

  5. வீரபாண்டிய கட்டபொம்மன்

    சிவாஜி: .’என் குலப் பெண்களுக்கு மஞ்சளரைத்துக் கொடுத்தாயா?’

    ஆஷ் துரை: ‘யூ மேன்… மெஷின் கொடுக்கறேன் சொன்னேன்… காசு கொடுத்தியா… அதில் மஞ்சள் என்ன… உன் மூளைக்கு மசாலா அரைக்கலாம் மான்’

  6. வள்ளி

    ரஜினி: நீ யாரை காதலிக்கறியோ, அவனைக் கட்டிக்கறதை விட, உன்னை யாரு காதலிக்கிறாங்களோ அவங்களைக் காதலி.

    ப்ரியா ராமன்: அதுக்காக உன்ன மாதிரி கோ ஆப்டெக்ஸ் போர்வை என்னை காதலிச்சா, அதையெல்லாம் கட்டிக்க முடியாது.

  7. மன்னன்

    ரஜினி: ஒண்ணு பெருசா? ரெண்டு பெருசா? ஒரு சாக்லேட்டு வேணுமா? இரண்டு சாக்லேட்டு வேணுமா?

    மாமனார் விசு: நல்ல வேளை மாப்பிள்ளை. ஒரு கூட்டணிக்கு ஆதரவு வேணுமா? ரெண்டு கூட்டணிக்கு ஆதரவா பேசணுமா என்று கேட்காம இருக்கீங்களே.

  8. திருவிளையாடல்

    நக்கீரன்: குறையற்ற பாடலைக் கேட்டால் எம்மை விட மகிழ்ச்சி அடைபவர் எவரும் இங்கு இருக்க மாட்டார்கள். சங்கம் வளர்த்த அரசர், தரமற்ற பாடலுக்கு பரிசு கொடுக்கிறார் என்பதே என் கோபம்.

    இறையனார்: சங்ககாலத்திலேயே விமர்சகர்கள் லொள்ளு தாங்க முடியலியேடா சாமீ

  9. தம்பி

    பூஜா: நான் சூடா எதுவும் சாப்பிட மாட்டேன். because என் நெஞ்சுல இருக்கற அவருக்கு சுட்டுடும்

    பொருத்தமான பதில்கள் வரவேற்கபடுகின்றன:

  10. வேட்டையாடு விளையாடு

    கமல்: யூனிஃபார்ம் போட்ட திமுருன்னு சொன்னியாமே? இப்போ நான் யூனிஃபார்ம்ல வரலை. ஆடகளோட வரலை. ஒரு டிசிபி-யா வரலை. தனி ஆளா ஆம்பளையா வந்திருக்கேன். நீ எப்படி? தம்பி கேட்ட சாத்துப்பா.

    வில்லன்: தம்பி… அப்படியே அந்த சாமானை எடுத்து வச்சுக்கப்பா


| |

Who is the #1 CM in India? – India Today Survey

Dinamani.com – Headlines Page

இந்தியாவில் சிறந்த முதல்வர் ராஜசேகரரெட்டி: ஆய்வில் தகவல்

ஹைதராபாத், ஆக. 28: இந்தியாவில் சிறந்த முதல்வராக ராஜசேகர ரெட்டி அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இண்டியா டுடே இதழ் தேசிய அளவில் நடத்திய வாக்கெடுப்பில் ராஜசேகர ரெட்டி 79 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் விவசாயிகளுடன் நட்பு முறையில் திறம்பட ஆட்சி நடத்தி வருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிப்படையான நிர்வாகம் நடத்தி வருவதாகவும் அவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கருத்து கூறிய ராஜசேகர ரெட்டி, ஆந்திர மாநிலத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக மாற்றுவதே தனது குறிக்கோள் என்றார்.

இவரையடுத்து மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோர் 78 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளனர்.

Vettaiyaadu Vilaiyaadu – Movie Review

சுஜாதாவின் முதல் நாவல் நைலான் கயிறு. குமுதம் இதழில் 1968இல் வெளிவந்த அதே நெடியுடன் இன்னொரு படம் துவங்குகிறது.

கொலை செய்தவன் வாடகை வண்டியை அமர்த்திக் கொண்டிருப்பான். அவன் ஏறிக் கொண்ட இடத்தில் இருந்து ஐந்து நிமிடம் நடந்து சென்று அதிமுக்கிய தடத்தைக் கண்டுபிடிப்பார்.

அவருக்கு முன் அமெரிக்க போலீஸுக்கு இணையாக சித்தரிக்கப்படும் மாதவன் பல விஷயங்களில் சறுக்கியிருப்பார்.

நைலான் கயிற்றில் விமானப் பட்டியலை சரி பார்த்து குற்றவாளியை அடையாளம் காண முயலுவார்கள். இது போல் பல இடங்களில் ‘அட… சுஜாதா!?’ சொல்ல வைக்கிறார் இயக்குநர் கௌதம்.

நைலான் கயிற்றில் இராமநாதன் சீட்டு மாளிகை கட்டுவது போல் தடயங்களையும் லாஜிக்கையும் இணைப்பதாக சொல்வார். முழுக்க முழுக்கக் கற்பித்துக் கொண்ட முடிவுகளையே ஆதரித்துக் கட்டியது என்றாலும் சுவாரசியமான வசன நடையும் கட்டுக்கோப்பான புத்திசாலித்தனத்தையும் கொண்டது.

ரஜினிக்கு ஒரு சந்திரமுகி தேவைப்பட்டது போல் மும்பை எக்ஸ்பிரஸ் சறுக்கலுக்குப் பிறகு கமலுக்கு ‘வேட்டையாடு விளையாடு‘ வேண்டியிருக்கிறது. நிச்சயம் வெற்றிப் படமாக அமையும்.

அதற்கு சில காரணங்கள்:

  • ‘நான் ஆம்பிளைடா’ என்று அமர்க்களமாக அறிமுகக் காட்சியில் முழங்குகிறார். (கொசுறாக அதே ராகவன் குணசித்திரம் ‘நீ என்ன ஹோமோவா?’ என்று மனம்பிழற்ந்தவனை உச்சகட்டத்தில் எகத்தாளமாக வினவுகிறது.)
  • காக்கி சட்டை‘ நினைப்பில் ஒற்றைக் கையில் push-up எடுக்க முயல்கிறார். (முடியவில்லை)
  • ‘ராகவன் instinct’ என்று விளக்க முடியாதவற்றுக்கு கேள்விகள் கேட்டால், பதில் பகர முடியாமல் தமிழ் சினிமா கோட்பாடுகளின் படி நடக்கிறார்.

    இலக்கியப் பிரியர்களுக்கும் இந்தப் படம் தீனி போடும். என் சிந்தையைக் கவர்ந்த சில:

  • சல்மாவின் ‘ஒரு மாலையும் இன்னொரு மாலையும்’ கவிதைப் புத்தகம் ஜோதிகாவின் மேஜையை அலங்கரிக்கிறது.
  • ம்துமிதாவின் சுபாஷிதம் அட்டைப்படம் போன்ற ஓவியத்துடன் கூடிய இன்னொரு (கவிதை?/ஆத்மாநாம்??) புத்தகம், கமல் & ஜோதிகாவிடையே காதல் சின்னமாக வலு சேர்க்கிறது.
  • Morgue என்பது பிணவரை என்று மொழிபெயர்த்து துணையெழுத்துக்கள் மூலம் தமிழ் பிணவறைக்குள் போனாலும், ப்ரூக்ளின் மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் தமிழில் அளவளாவுவது மகிழ்ச்சி கொடுக்கிறது.

    ரொம்ப ஆராயாமல், மேலோட்டமாக, சன் தொலைக்காட்சி கேட்கும் வாயில் கணிப்பு நடத்தினால்…

  • முப்பது வயது – திருமணமானவர்: படம் அருமை. ரொம்ப ஜாலியா, கொஞ்சம் பயமா, தேவைக்கும் அதிகமான புணர்ச்சிகளுடன் இருக்கிறது. ‘விக்ரம்’ படத்தில் கலக்கல் ‘வனிதாவனி… வனமோகினி’ முடிந்தவுடன் அம்பிகா காலியாவாங்களே… அந்த மாதிரியே இங்கேயும் வைத்திருக்கிறார். ஆனால், பாட்டுதான் மனதில் நிற்கவில்லை.
  • நாற்பது வயது – அமெரிக்க பச்சை அட்டை: இங்கே ‘சீரியல் கில்லர்’ நிறைய பேர் செய்தியில் வந்துகொண்டேயிருப்பார்கள். அவர்களைக் குறித்து அவ்வப்போது திரைப்படங்களும் நிறைய எடுக்கிறார்கள். ஆரம்பத்தில் ஒரு கொலையை சாஷ்டாங்கமாகக் காட்டி, சாவதானமாகக் கொண்டு சென்றாலும், ஒன்றரை மணி நேரத்தில் படத்தை விறுவிறுப்பாக முடித்துவிடுவார்கள். போகப் போக, ‘தொடர் கொலைக்கான காரணம் என்ன?’ என்று லாஜிக்கும், கஷ்டப்பட்டு புத்தியைத் தீட்டி போலீஸ் வலைக்குள் வீழ்த்துவதையும் முடிச்சிட்டு காண்பிப்பார்கள். இங்கே அந்த மாதிரி இல்லாமல், ‘ஏன்/எதற்கு’ என்பதை ஏப்பமிட்டு விட்டு, முடிவிலும் சோப்ளாங்கியாய் ஏனோதானோ என்று எண்பதுகளின் ‘சகல கலா வல்லவன்‘களை விட சப்பையான க்ளைமாக்ஸ் வைத்திருக்கிறார்கள்.
  • அவருடைய மனைவி: ‘சிகப்பு ரோஜாக்கள்‘ கூட சங்கிலிக் கொலைகள்தானே… அங்கு கூட லாஜிக் & முடிவில் அயர்ச்சி ஏற்படாத த்ரில் இருக்கும். ‘கலைஞன்’ படத்தில் சஸ்பென்ஸ் கிடைக்கும். இன்றைய தொழில்நுட்ப முன்னேற்றங்களினால், காமிராவை 360 டிகிரி சுற்றி வளைத்து, ஜீப்களை பறக்கவிட்டு, தமிழகக் காவல்துறை ட்ரேட்மார்க் தொந்தியுடன் இருபது வயது காளையை ஓடிப்பிடிக்கவைத்தாலும், கொட்டாவி வரவைக்கிறார்.
  • இருபத்தைந்து வயது – எச்1பி: எப்பொழுதாவது எட்டிப் பார்த்தாலும், கதையோடு ஒட்டிய இயல்பான நகைச்சுவை. ‘கொஞ்சம் சிரிச்சா குறைஞ்சா போயிடுவீங்க’ என்று எண்ண வைக்கும் அளவு அமைதியான கதாபாத்திரத்துக்கு, தேவையான குழப்பத்துடன் ஜோதிகா. தமிழில் கையாளப்படாத சங்கிலிக் கொலைவாணர்களின் செய்கை. நான் பார்த்து தேய்த்த நியு யார்க்கை ‘வாவ்!’ போட வைக்கும் ஒளிப்பதிவு. கமலாலினி ரொமான்ஸ். என்சாய் செய்தேன்.

    ‘வாயை மெல்லுவதற்கு அவல் ஏதாவது கிடைக்குமா’ என்று காத்திருக்கும் அரசியல்வாதிகளுக்காக

  • வில்லன் உருத்திராட்சக் கொட்டை அணிந்திருப்பதாக காட்டுவது எங்கள் மத அம்பிக்கைகளை புண்படுத்துகிறது. இதுவே ஒரு ____கவோ, ____கவோ வைத்திருக்காததன் பின்னணி என்ன?
  • கிராமப்புறங்களில் இருந்து மருத்துவம் படித்து வெளிநாடு செல்பவர்களை, இந்தப் படம் தாழ்மையுணர்ச்சி உடையவர்களாகவும் தற்பால் விரும்பிகளாகவும் ஜோடிப்பது நகரத்தில் வளர்ந்த படைப்பாளியின் ஆழ்மன வெளிப்பாடு.
  • அமெரிக்க காவல்துறை surveillance camera நிறுவாமலும், சமயயோசிதமாக செயல்படாமலும், மோப்ப நாய்களுக்கு கமல் போன்ற சக்தி இல்லாததும் அந்த நாட்டின் காவல்துறை லட்சணத்தை சரியாக சித்தரிக்கவில்லை.
  • தேடுவதற்கு உரிய வாரண்ட் இல்லாமல் அத்துமீறி நுழைவதையும்; போதிய முன்ஜாக்கிரதை நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை ஹீரோயிஸமாக பிடிக்க நினைப்பதையும் இந்தப் படம் தூண்டி விடுகிறது.

    | |

  • Katha Vilasam – Ess Ramakrishnan in Vikadan

    கதாவிலாசம் :: எஸ்.ராமகிருஷ்ணன்

    1. திலீப்குமார்
    2. இந்திரா பார்த்தசாரதி
    3. நாஞ்சில் நாடன்
    4. பாவண்ணன்
    5. ச.தமிழ்செல்வன்
    6. மா.அரங்கநாதன்
    7. ஜி.நாகராஜன்
    8. நகுலன்
    9. மௌனி
    10. ஆ.மாதவன்
    11. தி.ஜானகிராமன்
    12. மு.சுயம்புலிங்கம்
    13. ந.முத்துசாமி
    14. அசோகமித்திரன்
    15. கோபி கிருஷ்ணன்
    16. பி.எஸ்.ராமையா
    17. கி.ராஜநாராயணன்
    18. பா.செயப்பிரகாசம்
    19. எம்.வி. வெங்கட்ராம்
    20. வண்ணதாசன்
    21. புதுமைப்பித்தன்
    22. வண்ணநிலவன்
    23. கு.அழகிரிசாமி
    24. கந்தர்வன்
    25. லா.ச.ராமாமிருதம்
    26. கு.ப.ராஜகோபாலன்
    27. சா.கந்தசாமி
    28. கிருஷ்ணன் நம்பி
    29. எஸ்.சம்பத்
    30. கரிச்சான குஞ்சு
    31. கோணங்கி
    32. தமயந்தி

    நன்றி: Tamil Archives


    | |

    Vettaiyadu Vellaiyadu – Boston Shows

    Added later – My take: E – T a m i l : ஈ – தமிழ் :: Vettaiyaadu Vilaiyaadu – Movie Review

    பல்லாண்டு காலம் காத்திருப்புக்கு பின் வெள்ளித்திரைக்கு வருகிறது ‘வேட்டையாடு விளையாடு‘.

    நியு ஜெர்ஸி எடிசன், நியு ஹேவன் & பாஸ்டன் காட்சிகள்:
    வெள்ளி (ஆக. 25) – 9:30 இரவு
    சனி (ஆக. 26) – 2.30; 6.30; 9.30
    ஞாயிறு (ஆக. 27) – 2:30


    | |

    Two Penis Condition – Adults Only Please

    Necessary Surgery? – Offbeat :ஒன்றை வைத்துக் கொண்டே இந்திர லோக அரசன் முதல் கமல்ஹாசன் வரை கலக்கலாக பயன்படுத்தும் இந்தக் காலத்தில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவருக்கு இரண்டு வழங்கியிருக்கிறார் பிரம்மன். கடையில் கொசுறு கேட்பது போல் மகப்பேறு வரிசையில் நிற்கும்போது ‘கொஞ்சம் ஜாஸ்தி போட்டு விடுங்க’ என்று கேட்டிருப்பார். இப்போது மறந்து விட்டார்.

    பதினாறும் பெற்று பெறு வாழ்வு வாழ வைப்பதற்கு ‘நான் ஒருவர்; எனக்கெதற்கு இரண்டு’ என்று தாராள மந்துடன் வந்திருக்கும் இன்னொன்றை அறுவை சிகிச்சை மூலம் அறுத்தெறிய ஏற்பாடுகளை செய்து வருகிறார். ஒன்றை நீக்கும்போது மற்றொன்றும் போச்சுடா நொள்ளைக்கண்ணா என்று இரண்டுமே மரத்துப்போகும் வாய்ப்பு இருப்பதால், மருத்துவர்கள் சர்வ ஜாக்கிறதையாக செய்ய வேண்டிய பணி.

    Diphallus என்று விளிக்கப்படும் நிலையில் ஒருவருக்கு இரண்டு ஆணுறுப்புகள் இருக்கும். ஐந்தரை மில்லியனில் ஒருவருக்கு இந்த நிலை வரலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். 1609 தொட்டு நூறு பேர் மட்டுமே அரிதான இந்த பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

    இன்னும் கொஞ்ச நாளைக்கு ஜே லீனோ, டேவிட் லெட்டர்மேன், ஜான் ஸ்டூவர்ட் ஆகியோர்களுக்கு நகைச்சுவை வழங்க உதவுவார். என்னுடைய பங்குக்கு:

  • ‘நந்தா படக் காட்சியமைப்பில் ‘ஒரு கல்லில் இரண்டு மாங்கா’ என்று வசனம் வைக்கலாம்.
  • பாடலில் வாலி ‘வில்ல’ அர்த்தமும், சுக்ரீவ இரட்டை அர்த்தமும் தொனிக்க எழுத வைப்போருக்கு ‘குஷி’ பிறக்கலாம்.
  • ‘சண்டேன்னா ரெண்டு’ போன்ற விளம்பரங்களில் இவரை பயன்படுத்தாலாம்.
  • ‘ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு உன் மேல் ஆசை உண்டு’, ‘ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு’ போன்ற அனைத்தும் அர்த்தங்கள் மாறலாம்.

    இன்னொருவர் வேதனை
    இவ்ர்களுக்கு வேடிக்கை
    இரக்கமற்ற மனிதருக்கு
    இதுவெல்லாம் வாடிக்கை

    சில சந்தேகங்களும் எழுகிறது:

  • சிறுநீர் கழிக்கும்போது எப்படி சமாளிக்கிறார்?
  • பத்து சிசி வெளிவரும் அந்த நேரம் இரண்டிலும் இருந்து ஐந்து ஐந்தாக வெளிப்படுமா?
  • ஒன்றை ஒன்று இடித்துக் கொண்டு நான் முந்தி நீ முந்தி என்று சண்டை இடுவது, அவரின் இந்த அறுவை சிகிச்சை எண்ணத்திற்கு அடிகோலாக இருந்திருக்குமோ?
  • காதும் காதும் வைத்த மாதிரி ஆபரேஷன் செய்ய சொன்னால், இப்படி பரவலாக செய்தி பரவுவது வருத்தத்தை வரவைக்குமா? அல்லது நேர்மறையாக ஜாலியாக எடுத்துக் கொண்டு விளம்பரப் பிரியர் ஆக்குமா?

    ஆதாரம்: Man With Two Sex Organs & Sanjay never visited doc till 2 months ago


    | |

  • Corporate Anbumani

    CORPORATE:
    அரிஸ்டாடில் அன்று சொன்னது: ‘வியாபாரத்தில் வெற்றி பெற, எவருக்கும் தெரியாத ஏதோ ஒன்றை, நீ அறிந்து வைத்திருக்க வேண்டும்.’

    தற்காலத்திற்கு பொருத்தமாக சொன்னால்: ‘வியாபாரத்தில் வெற்றி பெற, அடுத்தவனுக்கு என்ன தெரியும் என்பதை அறிந்து, அதற்கு மேல் கொஞ்சம் சொந்தமாய் தூவுவது!’

    கார்பரேட்‘ படம் பார்க்க கிடைத்தது. நான் பேச நினைப்பதெல்லாம் நீ எழுத வேண்டும் என்பதாக ஆசாத் (படிக்க: எண்ணம்: கார்ப்பரேட் – திரைப்படம் எனது பார்வையில்) ஏற்கனவே, திரைக்கதை சுருக்கம், ரசித்த பகுதிகளை விலாவாரியாக பதிந்திருக்கிறார்.


    சில நாள்களுக்கு முன் கலை வாழ்க்கையை பிரதிபலிக்கிறதா அல்லது மிகை நாடும் கலையா போன்ற உபரிக் கேள்விகளுடன் (கேட்க: கில்லி – Gilli :: Life Imitates Art – Vasanthi Podcast : Kamla Bhatt) கூடிய வாசந்தியின் சிந்தனை நினைவுக்கு வருகிறது.

    படத்தில் பூச்சிக்கொல்லி கலந்த நீரை மென்பான நிறுவனம் பயன்படுத்துகிறது. போட்டியாளருக்கு விஷயம் தெரியவர, அதை ஆட்சியில் இருப்பவரிடம் சொல்லிவிடுகிறார். கடுமையான தணிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது.

    சண்டை சச்சரவுக்குப் பிறகு, இரு முதலைகளும் (பொருள் விளக்கம்: duopoly: Answers.com) சமாதானம் ஆகிறார்கள். நடுவண் அரசில் மாற்றுக் கட்சி கோலோச்சினாலும், மாநிலத்தில் எதிர்க்கட்சி பதவி வகித்திருந்தாலும், கட்சி பேதம் பாராமல் அரசியல்வாதிகள் கைகோர்க்கிறார்கள். கவனிக்க வேண்டியதை கொடுத்ததுடன், மசாலாப் படம் போல் தவறே செய்யாத அப்பாவியை குற்றவாளி ஆக்காமல் கூட்டுக் களவாணி மட்டும் தனியாக சிக்குகிறார்.

    நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி என்றால் இந்திய அளவில் உடனடியாக நினைவுக்கு வருவது ஹிந்துஸ்தான் லீவர் (HLL) & ப்ராக்டர் & காம்பிள் (P&G). பல்லாண்டுகளாகத் தொடரும் அவர்களின் குழிபறித்தல் கதைகளை ‘கதையல்ல நிஜம்’ என்று நண்பர்கள் விவரிக்க வாய்பிளந்து வலைப்பதிவுலகை மிஞ்சும் அலுவலக அரசியல் மர்மங்களைக் கண்டு வியந்திருக்கிறேன்.

    அந்த சம்பவங்களையும், மூன்றாண்டுக்கு முன் மீண்டும் முதன்முறையாக வெடித்த கோக்-பெப்ஸி நச்சுத்தன்மை விவகாரத்தையும் தன்னுடைய பாணியில் அமர்க்களமாக நம்பகத்தன்மையுடன் கொடுத்திருக்கிறார். படத்திற்கு விளம்பரம் சேர்ப்பது போல் அமைச்சர் அன்புமணியும் சான்றிதழ் (படிக்க: தமிழகத் தேர்தல் 2006: “No pesticides in Coke & Pepsi” – Anbumani) வழங்கி, இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் 180 டிகிரி வளைந்து (படிக்க: தமிழகத் தேர்தல் 2006: Anbumani does a Volte-face on Coke Pesticide Issue) மறுப்பறிக்கை விட்டு, இன்றைய செய்திகளில் என்ன சொல்லி தலைப்புப் பக்கங்களில் இடம்பிடிக்க போகிறார் என்னும் ஆர்வத்தை வளர்த்து வருகிறார்.

    மிகை நாடும் கலை என்பதற்கேற்ப மடிக்கணினியில் இருந்து தொழில் ரகசியங்களைத் திருடுவது அதீத புனைவாக இருப்பதாக பல விமர்சனங்கள் வசை பாடுகிறது. இது காற்றில் காரியங்களைக் கறக்கும் காலம் (படிக்க: While you surf the Web, who’s surfing you? – Technology – International Herald Tribune). பழங்கால உத்தியை பயன்படுத்தி, சூட்சுமத்தைத் தெரிந்து கொள்வதற்கு பதிலாக, கொந்தர்களின் உதவியோடு நவீன நுட்பத்தைக் கொண்டு சந்தைப்படுத்தல் விஷயங்களை அறிவதாக காட்டியிருந்தால் சமூகப் படம் என்பதில் இருந்து விலகி அறிபுனைவாக இருக்கும் அபாயத்தை தவிர்த்திருக்கிறார்.

    படத்தில் அவ்வப்போது பெரிய விஷயங்களை பேசிக்கொள்ளும் கடை நிலை ஊழியர்கள்:

    ‘நமக்கும் கோட் சூட்டு போட்டு இருக்கிறவங்களுக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா? நாம நாலு மணி வரைக்கும் நாயா, பேயா உழைச்சுத் தள்ளுவோம். நம்ம பாஸுங்க நாலு மணிக்கு அப்புறம்தான் வேலையை ஆரம்பிப்பாங்க!’

    நல்ல வேளை ஐஷ்வர்யா நடித்து கெடுக்கவில்லை.

    BBC – Movies – review – Corporate


    | |