Category Archives: Uncategorized

டூட்டா சப்னா ஷாங்காய் கா

நடுத்தர வர்க்கத்துக்கும் சராசரி இந்தியனுக்கும் அயல்நாடென்றால் பரிவான பார்வை உண்டு. எதை எடுத்தாலும்

‘அந்த நாட்டைப் பார்! எப்படி வளர்ந்திருக்கிறது?’
‘பக்கத்து வீட்டுப் புள்ளை எவ்வளவு மார்க் எடுத்திருக்கிறது!’
‘உன்னுடைய கஸின் அமெரிக்கா சென்றுவிட்டானே’

என்று துலாக்கோலை வைத்து ஒப்புமைப்படுத்திப் பார்த்துக் கொண்டே இருப்போம்.

ஹோண்டாவின் போராட்டத்தினால் ஏற்றுமதி குறைந்து விடும் என்று சொல்லும் எகனாமிக் டைம்ஸ் போல் ‘ஸ்டாரு‘ம் சீனாவை முந்துவது நிராசையாகியது என்று ஒளிபரப்பியிருக்கிறார்கள். (நன்றி: திலிப் டிசுஸா)

இன்னும் ‘அந்நியனி’ன் பிரமிப்பில் இருந்தே விடுபடவில்லை. ஐம்பது வருடம் முன்பு வரை ஏம்போக்கியாகவிருந்து தென்கிழக்காசியாவையும் இந்தியாவையும் ஒப்பிடும்போது ஆற்றாமை மட்டுமே மிஞ்சியிருந்தது. அதே பாதிப்பில் எவராவது திரைப்படத்திற்கு நிகரான ஃபிலிம் காட்டும் வித்தையாக சிம்பொனி ஷெனாய் ஒலிக்க குறும்படம் எடுத்திருப்பார்.

திலீப்பின் வலைப்பதிவு முக்கியமானது.

நான் நடுத்தர வர்க்கம். ‘அடுத்தவனைப் பார்’ என்று சொல்லியே வளர்க்கப்பட்டவன். கூட்டு வலைப்பதிவுகள் ஆங்கிலத்தில் மின்னுவதைப் பார்த்து பொறாமைப் படுவதை தவிர்க்க முடியவில்லை. தமிழில் இன்னும் கூட்டு முயற்சிகள் பெரிய அளவில் பற்றிக் கொள்ளவில்லையே என்னும் அன்னிய அங்கலாய்ப்பு தோன்றுகிறது.

சிலரின் பக்கங்கள்: கிருபா ஷங்கர் | Dilip D’Souza

Black Dog 

Black Dog Posted by Picasa

Royal Challenge 

Royal Challenge Posted by Picasa

Old Monk 

Old Monk Posted by Picasa

நம்பிக்கை

எனக்குப் பாட்டெல்லாம் பாடத் தெரியாது…
இருந்தாலும் போட்டியில் கலந்து கொள்ளும் படக்கவிதை:

ஜானி,

இருக்க பயமேன்

உனக்கும் மேலே இயக்கும்
கைவிடாது

மணிக்கு கால் செண்டரோ சப்போர்ட் செண்டரோ

Royal Challenge வரட்டும்

Black Dog குரைக்கட்டும்

Old Monk இருக்கிறான்… மயங்காதே

இசையில் மூழ்கி அமிழ்ந்து விடாதே

இவண்

நம்பிக்கை போட்டி

If only India shares its rivers, Cauvery could al…

If only India shares its rivers, Cauvery could also benefit? Posted by Picasa

Mumbai – Rain Rain Go away 

Mumbai – Rain Rain Go away Posted by Picasa

ஷக்திப்ரபா

மரத்தடி ::

  • “வயது என்னை ஆண்டுக்கொண்டிருந்த காலம் அது. எதிர்காலம் இரு சாத்தியங்களாயிருந்தது அப்போது. ஒன்று நானொரு தேர்ந்த பொறுக்கியாகிவிடலாம். அல்லது கவிஞனாக. கர்த்தருக்கு நன்றி. ‘டெய்ஸி வளர்மதி’ என் பாதையில் காதலியாக எதிர்ப்பட்டதும் நான் கவிஞனாகிப் போனேன்”
  • “சற்றே தாமதித்தேன். அது கவித்துவம் நிரம்பிய அபத்த கணம்”
  • “பதிலற்று இருக்கும் வரையில் தான் கேள்விகளுக்கு உயிர். கேள்விகளை உயிர்ப்புடன் வைத்திருப்பது தான் தத்துவங்களின் சூட்சுமம்”
  • “சட்டைப் பையில் ஒரு அணில் குஞ்சை விட்டுக்கொண்டாற் போல் மனத்தில் ஒரு கனவை உலவ விட்டு வாழ்க்கை நடத்துவது எத்தனை குறுகுறுப்பைத் தருகிறது!”
  • “என் ஞாபக அடுக்குகளில் இருபது வருடத்துக்கான பழைமைச் சுவடுகள் ஏதுமின்றி, இன்று காலை சந்தித்தவர் போல், பார்த்ததுமே அத்தனை நரம்புகளையும் தட்டியெழுப்பிவிட வல்லவராயிருந்தார்.”

    குதிரைகளின் கதை – பா ராகவன்

  • புதன்

    ஹிந்து பிஸினஸ் லைன்: தொழிலாளர் சங்கம் அனுமதிக்காகவா? சம்பள உயர்வுக்கான அடக்குமுறையா? அலைகளாக பிற தொழிற்கூடங்களிலும் போராட்டங்கள் வெடிக்கும் என்று எகானமிக் டைம்ஸ் தொடர்கிறது.

    பாஸ்டன் க்ளோப்: தெற்காசியராக இருந்தால் விமானத்தில் அடங்கிப் பதுமையாக இருக்க வேண்டும் என்பதற்கான இந்த வார சான்று.

    ஆஷ்டென் விருதுகள்: SELCO, Noble Energy Solar Technologies , நிஷாந்த் ஆகிய இந்தியாவின் மாற்று எரி சக்தி நிறுவனங்கள் பரிசுகளைப் பெறுகிறார்கள்.

    நிழல் – ஜூலை 05

    இசை, நடனம், ஓவியம், இலக்கியம் முதலான கலைகள் உயர் கலைகளுக்குரிய பெருமிதத்துடன் போற்றப்பட்ட போதும், இந்தக் கலை வடிவங்கள் அனைத்தையும் தனதாகக் கொண்டு பொங்குகிற கூட்டுக் கலையான திரைப்படம், அந்த் நிலையை எய்தாதிருப்ப்தற்கு நம் அற, ஒழுக்கவியல் சார்ந்த தனிமையைத் திரைப்படம் சீண்டியிருப்பதும் ஒரு காரணம்.

    செழியன் (இந்தியா டுடே)

    நிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழை பிகேயெஸ் குறிப்பெடுத்திருக்கிறார்.

    தமிழகத்தில் Central do Brasil திரைப்பட விழாக்களில் புகுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கிறது. அகாடெமி விருதுகளில் ஆரம்பித்து உலகத்தின் பல திரைவிழாக்களின் பாராட்டைப் பெற்ற படம். இன்னும் பார்க்கவில்லை.

    ரோகாந்த் எழுதிய ‘மணிசித்ரமுகி’ அரை வேக்காடு. அதை விட பல நல்ல பகிடிகளையும் பார்வைகளையும் அலுக்க அலுக்கப் படித்ததாலும் அயர்ச்சி கொடுத்திருக்கலாம்.

    ‘அன்னியன்’ மற்றும் ‘கனா கண்டேன்’ விமர்சனம் எல்லா பாய்ஸ் பசங்களும் வரைவின் மகளிரை வரவழைத்தது போல் அமெரிக்காவின் உப்பு சப்பற்ற இந்திய மசாலா சமையலை நினைவு கூற வைத்தது. விமர்சனம், அபிப்பிராயம், போன்றவை நிழல் போன்ற சஞ்சிகைகளிலாவது திரைப்படத்தின் உள்ளடக்கத்தையும் கதை சார்ந்த ஒன்றாகவுமே எழுதப்படுவது ‘Gimme a break’ (த்ரிஷா சாப்பிடும் ப்ரேக் அல்ல). ‘செவ்வகம்’, படப்பெட்டி போன்ற மாற்று சினிமா சிறு பத்திரிகைகள் கலாபூர்வமாகவும் தொழில் நுட்பத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறதா என்று பார்க்க வேண்டும்.

    எல்லாமே இலக்கணமாக சொல்லும்போது திகைப்பையே உண்டாக்கும். ஆனால், கலைச்செழியன் எளிய மொழியில் ஒளிப்பதிவிற்கு அறிமுகம் கொடுக்கிறார். ‘அன்னியன்’ போன்ற சமகாலப் படங்களை விமர்சிப்பதிலும் இந்த மாதிரி நுட்பங்களை உள்நுழைத்தால் மேலும் பயன்பெறலாம்.

    ‘ஓ’ பக்கங்களில் ஞாநி விமர்சனத்தை முன்வைத்தது போல் குறும்படங்கள் கூறிய பதிவுகள் தெளிவாக பரந்துபட்ட வாசிப்பை வழங்குகிறது.

    கோவை IIFMA இணையத்தில் வெளியிட்டுள்ள ‘திசை’ இறக்கிக் கொண்டு பார்த்து விட்டு வழக்கம் போல் பதிவொன்றைப் போட வேண்டும். ஆவணப் பட இயக்குநர் அருண்மொழியின் படங்களை மையப்படுத்தி 58 நிமிட ஆவணப் படத்தை வெங்கடேஷ் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் அருண்மொழியின் திரைப்படங்கள் பற்றி இயக்குநர் ஹரிஹரன், நாஸர், பிரளயன், பிலிம் நியுஸ் ஆனந்த்ன், சாருஹாஸன் பேட்டி தந்துள்ளனர்.

    மற்றபடி சிவகுமார் எழுதியுள்ள நூர்ஜஹான் (கிட்டத்தட்ட நாலு ஃபாரம் புத்தகம்), சாருலதா, பார்வையின் சாட்சியம், ஜெயகாந்தன், டி. ஆர். ராமச்சந்திரன், கன்னட சினிமா போன்றவை மூச்சு முட்ட முட்ட நிறைவைக் கொடுக்கிறது. இது வரை வந்த சினிமாப் பதிவுகளை ‘நிழல் அடைவு’ என்று கொடுத்திருப்பது, ‘கற்றது கிலோபைட் அளவு; படித்து பயன்படுத்த வேண்டியது பெடாபைட் அளவு’ என்று அங்கலாய்க்க வைக்கும்.