Category Archives: Uncategorized

மேற்கோள்

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – I

சாமிநாதன்: ஹார்ட் கம்பரைவிட்டு வர மாதிரி தெரியலை.

அண்ணாமலை: அவர் மொழிபெயர்ப்பில் போய்விட்டார்.

சு.ரா.: வெளியே விட்டு வரலை என்பதால் மாடர்னிடி தெரியலைன்னு இருக்கா? அவங்களோட டேஸ்ட் அது.

சாமிநாதன்: ஒண்ணு ரெண்டு பேர் இருப்பதால் அவர் அதுலதான் போகஸ் பண்றார். அதனால சொல்றேன். அதை நான் தப்புன்னு சொல்லலே.

சு.ரா.: தப்புன்னு சொல்லலே என்பதைவிட தப்புதான்னு சொல்லணும். ஏன்னா, ஒரு தமிழ் ஸ்காலர் வந்து – அவர் தமிழ் ஸ்காலரா இருந்தார்னா – அவருக்கு எல்லா sides-ம் தெரிஞ்சிருக்கணும். அட்லீஸ்ட் முக்கியமான sides தெரிஞ்சிருக்கணும். எல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க இயலாது. நம்மை மாதிரி மாடர்னிடி தெரியும்னு எதிர்பார்க்க முடியாது. ஆனால் முக்கியமானவை தெரிஞ்சிருக்கணும்.

சு.ரா: சிலப்பதிகாரத்தைப் பார்த்தசாரதின்னு ஒருத்தர் மொழிபெயர்த்திருக்கிறார். ரொம்ப எபர்ட் போட்டுத்தான் செஞ்சிருக்கார். செவன் டூ எய்ட் இயர்ஸ் வொர்க் பண்ணியிருக்கார். ரீச் பண்ணலையே. வேர்ல்ட்ல இருக்கற முக்கியமான எத்தனை ஸ்காலர்ஸ் – இங்லீஸ் ஸ்காலர்ஸ் – அதை ரீட் பண்ணியிருக்காங்க. அது முக்கியமான கொஸ்சன்.

சு.ரா.வுடனான முதல் கலந்துரையாடல் – II

ராஜாராம்: இருமொழி திட்டத்தினாலே என்ன பண்ணாங்கன்னா – they did not know the consequences. மும்மொழி திட்டத்திலே – you can make Tamil compulsory. இருமொழி திட்டத்திலே அதைப் பண்ண முடியாது. ஏன்னா, you can choose only two languages.

சு.ரா.: கேரளாவுலே இது நடக்குமா? கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க. உங்க பக்கத்து மாநிலத்திலே – ஜெயலலிதா மாதிரி ஒரு அம்மா வரமுடியுமா? தூக்கி எறிஞ்சிடுவாங்க. 24 மணி நேரத்திலே தூக்கி எறிஞ்சிடுவாங்க. இந்த ஆட்டங்கள் ஏதாவது அங்க நடக்குமா பாருங்க. நம்ம ஊருக்குப் பக்கத்துல இருக்கற பல இடங்களில் இந்த மாதிரி ஆட்டம் போட முடியாது. அப்படின்னா – இங்க மட்டும் ஆட்டம் போட முடிவதற்கான காரணங்கள் என்ன? அந்த rootsதான் மிக முக்கியமானது. அதை உங்களாலே கண்டுபிடிக்க முடியுமா? அப்போதான் உங்களுக்கு விமோசனம் கிடைக்கும்.

சு.ரா.: இங்க higher level-ல எவ்ளோ வேணும்னா லஞ்சம் இருக்கலாம். ஆனா, lower level-ல கிடையாது. லஞ்சம் இருக்கா இல்லையா என்பதில்லை. ஒரு ஆபிசுக்குள்ளே நுழைஞ்சதுமே, ஒரு மனுஷன் உள்ளே வந்திருக்கான் அப்படீன்ற எண்ணம் இந்த கன்ட்ரிலே இருக்கு. இந்தியாலே கிடையாது. ஸ்டூலை ஒளிச்சி வெச்சுக்கறான் சார். அங்கே உட்காரக் கூடாதுன்னு. முக்கியமான ஆளுங்க வந்தாதான் ஸ்டூலை எடுத்து வருவான்.

முழு கலந்துரையாடல்: 1 & 2பி.கே. சிவகுமார் & திண்ணை


| |

குடியரசு நாயகர்

tamiloviam :: இப்பொழுதுதான் ஜான் கெர்ரி தோற்ற மாதிரி இருக்கிறது. அதற்குள் அடுத்த வேட்பாளரை தயார் செய்வதற்கு அமெரிக்கா முஸ்தீபுகளில் இறங்கிவிட்டது.

ஜனநாயக கட்சிக்கு, செல்ல வேண்டிய பாதையும் கட்சியின் தளத்தகை (strategy) எவ்வாறு அமைய வேண்டும் என்பதிலும் ஏராளமான குழப்பங்கள் நீடிக்கிறது. தற்போதைக்கு ஜான் எட்வர்ட்ஸ் முன்னணியில் இருக்கிறார்.

குடியரசு கட்சியின் பாடுதான் திண்டாட்டமாக இருக்கிறது. வெல்ல முடியாத போர். பிடிக்க முடியாத ஒஸாமா. நிர்கதியான பேரிழப்புகளில் செயல்பாடற்ற அரசாங்கம். பல முனைகளிலும் மாற்றத்தை விரும்பும் மக்களை எதிர்நோக்குகிறது.

கடந்த முறை பில் க்ளிண்டன் தொடர்ச்சியாக எட்டாண்டுகள், இரண்டு தடவை தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவும் வேலை வாய்ப்பு அதிகரித்தல், பணவீக்கம் இல்லாத வளர்ச்சி, பங்குச்சந்தை வளம், வெளிநாடுகளுடன் நட்புறவு என்று சுபிட்சமாக இருந்தது. இருந்தாலும், அவருடைய துணை ஜனாதிபதி ஆல் கோர் தோற்றுப் போனார். கிளிண்டனுடனான உறவை போதுமான அளவு தூரபடுத்திக் காட்டிக் கொண்டும் தோல்வியை தவிர்க்கமுடியவில்லை. வாக்காளர்களுக்கு சீக்கிரமே அலுத்துவிடுகிறது.

தற்போதைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் அப்பாதான், கடைசியாக ஜெயித்த துணை ஜனாதிபதி. ரொனால்ட் ரீகனின் கொள்கைகளை கடைபிடிப்பதாக உறுதி கூறினார். அவரைப் போலவே வருமான வரிகளை குறைக்கும் நிதித் திட்டத்தை முன்வைத்தார். அதே சமயம், தன்னை இன்னும் சூட்சுமமான, செயல்வீரனாக, காட்டிக் கொண்டார். ஈரான் ஊழல் பிரச்சினை போன்றவற்றை தவிர்க்கக் கூடியவராக, அன்றாட வேலைகளில் உள் நுழைந்து அலசி ஆராயக் கூடியவராக நிலை நிறுத்தி வெற்றியும் பெற்றார்.

குடியரசு கட்சிக்கு அடுத்த ‘புஷ்’ தேவை. ஜார்ஜ் ஆலன் மற்றும் புஷ்ஷின் தம்பி ஜெப் புஷ் இருவருமே கிட்டத்தட்ட இன்றைய நாயகன் புஷ் போலவே கொள்கை உடையவர்கள். எதிரி நாடுகளைப் போட்டு தாக்குவதில் ஆகட்டும்; மதத்துடன் பின்னிப் பிணைந்து சமூக அமைப்பை கொண்டு செல்வது ஆகட்டும்; பழைய மொந்தை… பழைய கள்.

கொடிவழி அறங்களை பின்பற்றுவதில் ஜார்ஜ் ஆலன் முன்னணியில் நிற்கிறார். புஷ்ஷைப் போலவே பொலிடிகலி இன்கரெக்டாக பேசுவது, அறிவு ஜீவிகளுக்கு தான் தலைவனல்ல என்று எதிர்பார்ப்பை குறைத்து மதிப்பிட சொல்வது என்று பலவகையிலும் தொடர்ச்சியை விரும்பும் வேட்பாளர்களின் நாயகனாக பார்க்க வைக்கிறார்.

இருந்தாலும் ஜனாதிபதியை விட்டு வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்ள 9 பேர் முயல்கிறார்கள். அவர்கள் குறித்த தகவல்கள்.


| |

The Cauvery river at Erode, Kerala.  

The Cauvery river at Erode, Kerala.
 Posted by Picasa

உச்சநீதிமன்ற நியமன நீதிபதி வாபஸ்

Miers withdraws nomination to Supreme Courtஅமெரிக்க உச்சநீதிமன்றத்திற்கு ஹாரியத் மியர்ஸை (Harriet Miers) நியமனம் செய்திருந்தார் ஜார்ஜ் புஷ். எதிர்க்கட்சியான சுதந்திர கட்சி உறுப்பினர்களிடமிருந்து வழக்கமான எதிர்ப்பு இருந்தது. ஆனால், தன்னுடைய கட்சியான குடியரசு கட்சி செனேட்டர்களிடமிருந்தும், கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது.

  • புஷ்ஷின் ஆதரவாளர் என்பதைத் தவிர வேறு எந்த தகுதியும் இல்லாதவர்.
  • தற்பால் நாட்டமுடையவர்களுக்கு பரிவானவர்.
  • கருக்கலைப்புக்கு எதிரானவர்
  • நீதிபதியாக அனுபவம் இல்லாதவர்

    என்று குழப்பமாக பல பரிமாணங்கள் கொடுத்தார்கள்.

    ஸ்ரீகாந்த் மீனாக்ஷி எழுதியது போல் தன்னுடைய வலது கை கார்ல் ரோவுக்கும் இடது கை டிக் சேனிக்கும், இடது கையின் வலது கை லிப்பிக்கும் தொல்லைகள் பெருகும் இந்த வேளையில், நீதிபதி தேர்விலும் தலைவலியை உண்டாக்க விரும்பாமல் இருந்திருக்கலாம்.

    ஆலன் க்ரீன்ஸ்பானுக்கு மாற்றாக சமீபத்திய நியமனமான பென் பெர்னான்கேவை (Ben Bernanke) இன்னொரு உதாரணமாக காட்டலாம். குடியரசு கட்சி சார்புடையவர்; ஆனால், புஷ்ஷின் ஆதரவாளர் அல்ல; கென்னடி போன்ற எதிர்க்கட்சி தலைவர்களே பாராட்டும் திறமைசாலி.

    எறும்பு ஊற கல்லும் தேயும்.

    அதிகார போதையில் மிதந்தவர்கள் தரையில் இறங்க முயற்சிப்பது மகிழ்ச்சியான விஷயம்!


    | |

  • Miers withdraws nomination to Supreme Court </2005…

    Miers withdraws nomination to Supreme Court
     Posted by Picasa

    1105 அஸினின் வளைவுகள்

    Asinதசாவதார கமலின் நாயகி அஸினுக்கு பிறந்த நாள். வாழ்த்த எனக்கு வயசு போதாது.

    அண்ணன் ரஜினியோடும் மருமகன் தனுஷுடனும் ஜோடி கட்டும் ஷ்ரேயா, மலையாள இறக்குமதிகள் நயன் தாரா, நவ்யா நாயர், கோபிகா, வருங்கால சிம்ரன் நமீதா, அந்தக் கால ஜோதிகா போன்ற எல்லோரையும் முந்த எல்லாம்வல்ல இறைவனிடம் மன்றாடுகிறேன்.


    இந்தப் பதிவின் தலைப்பை தேடுவோருக்காக: asin(x) வளைவுகளும் 1105 ADயும்
    அஸினூவில் (Asinou) பைசாண்டைன் தேவாலயம் இருக்கிறது. யுனெஸ்கோவின் தொன்மையான உலக கலாசார இடமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிகிடாரிக்கு (Nikitari) முன்று மைல் தெற்காக, ட்றுடோஸ் (Troodos) மலைப்பகுதியில் அமைந்திருக்கிறது. அஸினூ என்பது கிரேக்கத்தில் அஸின் (Asine) என்பதின் மரூஉ. கிறித்துவுக்கு முந்தைய பதினொன்றாம் நூற்றாண்டில் அர்கோலிஸ் (Argolis) நகரத்தில் இருந்து குடிபெயர்ந்தவர்களால் அஸின் அமைக்கப்பட்டது.

    Asin Curvesபனிரெண்டாம் நூற்றாண்டில் தேவாலயம் கட்டப்பட்டது. Byzantine mural ஓவியங்களின் காலத்தை 12 முதல் 17ஆம் நூற்றாண்டாக நிர்ணயித்துள்ளார்கள்.

    தென்மேற்கு பகுதியில் காணப்பட்ட குறிப்பில் இருந்து:

    “the church of the holy mother of God was painted through the donation and great desire of Nicephoros Magistros the Strong, when Alexios Comnenos was Emperor in the year 6614, indiction 14”.

    இதன் மூலம் தேவாலயம் கட்டப்பட்ட காலத்தை 1099க்கு பிறகு ஆனால் 1105க்க்ள் இருக்கலாம் என்று கணக்கிட்டிருக்கிறார்கள்.


    | |

    நுட்பச்சிதறல்

    நுட்பமான பதிவு எழுதுவது எப்படி என்று முகமூடியும் என்னைப் போன்றோரும் கோனார் உரைத்திருந்தோம். இந்தப் பதிவு தொழில் நுட்பங்கள் குறித்த சில பகிர்தல்கள் கொண்டது.

    1. செய்தியோடை உகப்பம்

    உங்கள் செய்தியோடையை (RSS) ஒரு சொடுக்கில் ‘என்னுடைய யாஹூ’, ‘ரோஜோ’, ‘ப்ளாக்லைன்ஸ்’ போன்ற பல இடங்களில் சேர்த்து விடும் உகப்பைக் கொடுக்கலாம். வழிமுறைகள் க்ரிஸ் செர்ரியின் வலையகத்தில் கிடைக்கிறது.

    2. தமிழ்ப்பதிவுகளைத் தேடுவதற்கு technorati மற்றும் கூகிள் என்று இரண்டு வழிகள் சொல்கிறார்கள். பலரும் பயன்படுத்துவதற்கு kinjaவும் நேர்த்தியாக இருக்கிறது.

    3. ஆங்கிலப் பதிவுகளை அலசி ஆராய்வதற்கு குறியீடு தவிர ஏற்கனவே எழுதியது போல் பல நுட்பங்கள் புகழ் பெற்றிருக்கிறது.

    எனக்குப் பிடித்த ஒரு சில…

    • டெக்னாலஜி சம்பந்தமான அனைத்து ஓடைகளையும் அலசி ஆராய்ந்து எளிதாக வழங்கும் Memeorandum
    • கிஞ்சாவைப் போலவே சில காலமாக மிகவும் பயன்படும் del.icio.us
    • புத்தகக்குறிகள், வலைப்பதிவுகள், செய்தியோடைகள், வாசகரின் விருப்பங்கள் என்று தொகுத்துப் பார்க்க உதவும் digg
    • வலைப்பயனர்களிடம் கட்டுப்பாட்டை ஒப்படைத்து ஜனநாயக முறையை முன்னிறுத்தும் reddit
    • பங்குச்சந்தையோடு உறவாடுபவர்களுக்கு சி.என்.பி.சி தொலைக்காட்சியின் வண்ணமயமான ஜிகினா பின்னணி செய்திகள் பரிச்சயமாக இருக்கும். அதே போன்று வலைப்பதிவில் அடிபடும் செய்திகளை newsmap காட்டுகிறது.
    • ARS என்று நடிகர் அப்பா வேடங்களிலும், வர்த்தக மனிதராகவும், பணக்காரராகவும் திரைப்படங்களில் நடிப்பார். Article Ranking System என்னும் தரப்படுத்தலைக் கொண்டு Blogniscient செயல்படுகிறது. புதிய, படிக்க வேண்டிய பதிவுகளைத் தெரிந்து கொள்ள உதவும்.

    4. வலை நுட்பங்களைக் கண்டு போரடித்தவர்களுக்காக: தேஸி வீடியோ

    5. வலை நுட்பங்களைக் கண்டு போரடிக்காதவர்களுக்காக: இந்த வார பிசி சஞ்சிகை Clipmarks மற்றும் Jeteye போன்ற இணையக்குறி சேமிப்பு நிரலிகளை அலசுகிறது.


    | |

    பத்து பாட்டு

    Stick it Out

    சமய சந்தர்ப்பம் தெரியாமல் வாய் பாடல் எதையாவது திடீரென்று முணுமுணுக்கும். இன்று பாட நினைப்பவை:

    1. விழியே கதை எழுது – உரிமைக் குரல்

    2. ரங்கோலா – கஜினி

    3. ராஜா என்பார் மந்திரி என்பார் – புவனா ஒரு கேள்விக்குறி

    4. ஐ ஆர் எட்டு – மஜா

    5. அலைகளில் மிதக்குது– அந்த ஒரு நிமிடம்

    6. காட்டுக்குயிலு மனசுக்குள்ள – தளபதி

    7. அபிஷேக நேரத்தில் அம்பாளை தரிசிக்க – அழகே உன்னை ஆராதிக்கிறேன்

    8. காத்திருப்பான் கமலக்கண்ணன் – அம்பிகாபதி

    9. குரங்கில் இருந்து பிறந்தவன் மனிதன் – தூக்கு தூக்கி

    10. கல்யாணம் ஆஹா கல்யாணம் – பெண்


    | |

    சிறந்த அட்டைப்படங்கள்

    நான் அட்டைப்படத்தை பார்த்து புத்தகங்களை வாங்கும் ரகம்.

    எண்பதுகளில் சிகரெட் துணுக்குகளுக்கு நடுவே எலும்புக் கூட்டின் கை தெரியும் விகடன் அட்டைப்படம் இன்றும் பயமுறுத்தும். நடிகைகளைத் தாங்கி வரும் தேவி, ராணி. சினிமா தலைப்புச் செய்திகளையும் பேட்டியையும் முகப்பாக வைத்து வரும் குமுதம். ‘கவர் ஸ்டோரி’யை முன்னிறுத்தும் இந்தியா டுடே.

    கடந்த நாற்பதாண்டுகளில் வெளியான ஆங்கில இதழ்களின் அட்டைப்படங்களில் தலைசிறந்த நாற்பதை magazine.org வரிசைப்படுத்தியுள்ளது.

    தலை பத்தில் இரண்டு இடங்களை ‘நியு யார்க்கர்‘ பிடித்துள்ளது. தலை நாற்பதில் ‘எஸ்க்வெயிர்’, ‘டைம்’, ‘லைஃப்’ ஆகியவை தலா நான்கு முகப்புகளை வைத்துள்ளது.

    வெற்றிபெற்றவையில் 32 புகைப்படங்கள்;
    7 ஓவியங்கள்;
    2 வார்த்தைகள் மட்டுமே கொண்டவை.

    1960களில் வெளிவந்தவையில் 11 முகப்புகள் வென்றிருக்கிறது.
    1970களில் இருந்து 8;
    1980களில் இருந்து 3;
    1990களில் இருந்து 10;
    2000களில் இருந்து 9;

    தொடர்புள்ள பக்கங்கள்: ASME Unveils Top 40 Magazine Covers | தலை 40 முகப்புகள்


    | |

    இரு கவிதைகள்

    எரிந்த ஊர்களின் அழகி – சந்துஷ்

    எரிந்த ஊர்களின் அழகி
    நேற்று இங்கு வந்திருந்தாள்
    எரிந்த ஊர்களைப் பற்றித்
    தனக்கு எதுவுமே தெரியாதென்றாள்

    வியப்புடன் கோணிய
    என் முகத்தில் தொங்கிக் கொண்டு
    நெடுநேரம் சிரித்தாள்

    வழியும் அவள் குழற்கற்றைகளில்
    தொலைந்துபோன தெருக்களை இணைக்கும்
    கிளைப்பாதைகள் நீண்டு விரிகின்றன

    அவள் பேசி நிறுத்தும் இடைவெளிகளில்
    போரின் இரைச்சல் காதைப் பிளக்கிறது

    கத்திக் கத்தி அவள் பேசுகையில்
    எனதூரின் மௌனம் முகத்திலறைகிறது

    நேற்றவள் சிரிக்கையில்
    ஊர் எரிந்த வாசம் வந்தது

    எரிந்த ஊர்களின் மீதமோ நீயென்றேன்
    காதுகள் இருப்பதாக
    அவள் காட்டிக் கொள்ளவில்லை

    அவள் சொன்ன கதைகளில்
    தனித்து ஓயும் பறவையின் ஓசையும்
    மெல்லத் தணியும் ரயிலின் கூவலும்
    நிலவில் நனையும் ஓசை கேட்டது

    இறுகப் பற்றும் அவள் கைகளின் பிணைப்பில்
    ஊரின் வேரொன்று தட்டுப்பட்டது

    எனினும் எரிந்த ஊர்களைப் பற்றி
    தனக்கு எதுவுமே தெரியாதென்றாள்
    எரிந்த ஊர்களின் அழகி


    இளங்கோ கிருஷ்ண்ன்

    எப்போதோ திரும்பிச் சென்றிருக்க வேண்டிய
    குழந்தையது
    தவறான நம்பிக்கையின் வழிகாட்டுதல்
    அதனை நிற்கச் செய்திருக்கிறது.
    நிராதரவும் இரங்கலுமற்ற கடைக்காரனின்
    முகத்தை
    கண்திரள பார்க்கிறது
    தன் கனவு மிட்டாயின் உருவம் ஏக்கமாய்
    இறுக போதாத நாணயம் கொண்ட
    தன்னை நிந்திக்கவும் அறியாத அதன்
    பிரச்சனை
    திரும்பிச் செல்வதல்ல
    வெறுங்கைகளுடன் திரும்பிச் செல்வதே.
    எப்போதோ திரும்பிச் சென்றிருக்க வேண்டிய
    குழந்தையது
    தவறான நம்பிக்கையின் வழிகாட்டுதல்
    அதனை நிற்கச் செய்திருக்கிறது.


    நன்றி: உயிர்மை – செப். 2005