Category Archives: Personal

Chennai Cutchery Dev’s Interview

SUNDAY WITH பாபா – 1

பாபா – இந்தப் பட்டம் பிடிச்சிருக்கா?

வெட்டிப்பயலிடம் பேசும்போது கிட்டத்தட்ட இதே கேள்வியை அவரிடம் நண்பர் கேட்டார்.

‘உங்களை வெட்டி என்று கூப்பிடும்போது வருத்தமாக இருக்காதா?’

வெட்டி பதில் சொல்வதற்குள் அவசரக்குடுக்கையாக நான்,
இந்தியர்கள் எப்போதுமே சூப்பர் ஸ்டார், தளபதி, லிட்டில் மாஸ்டர், ரோஜா மாமா என்று அடைமொழி சூட்டி மகிழ்பவர்கள். அதே குணம்தான் பதிவுலகுக்கும் நீண்டிருக்கிறது.

எனக்கு பாபா என்றழைப்பது அரசியல்/சினிமா/கிரிக்கெட்டின் தொடர்ச்சியாக பிடித்திருக்கிறது. அழைப்பவருக்கு அன்னியோன்யத்தைக் கொடுக்கிறது. பாலாஜி அவர்களே என்று நீட்டி முழக்காமல், ‘அடேய் பாபா… இது ஓவர்டா’ என்று ரைமிங்காக நட்பாக ஆக்குகிறது

வெட்டி-பாலாஜி வேறுகோணத்தில் ஆராய்ந்தார். வெட்டி என்பது பிராண்ட் நேம். என்னுடைய எழுத்தின் மதிப்பாகத்தான் இந்த விளிப்பை நான் பார்க்கிறேன். சுஜாதா என்றால் அது அவருடைய கதைகளுக்கு கிடைக்கும் உடனடி ரெகக்னிஷன். அதே மாதிரி வெட்டி என்று அழைத்தால், இந்தப் படைப்புக்கு உரிமையானவர்; பதிவின் மூலமாக என்னை அடையாளம் கண்டு கொள்கிறார்கள்.

இதைப் பட்டம் என்பதை விட எளிமையாக பரிச்சயம் கொள்ள ஒரு புனைப்பெயர்.

அது என்ன E-Tamil, snapjudgement, விளக்கம் சொல்லமுடியுமா?

நான் பதிவு தொடங்கிய காலம் டாட்.காம் அணைய ஆரம்பித்த நேரம். எனினும், எல்லா வார்த்தைக்கும் ஈ(e) அல்லது ஐ (i) முன்னாடிப் போட்டுக் கொள்வது வெப் 1.0-வின் சாமுத்ரிகா லட்சணம். அந்த மாதிரிதான் ஈ-தமிழ்.

தற்போதைய Tamil News-இன் பூர்விகம். தமிழ் இதழ்களில், வலையகங்களில் வருவதில் பிடித்தவற்றை சேமிக்கும் கிடங்கு. எலெக்ட்ரானிக் தமிழாக, பல வலையகங்களில், விதவிதமான எழுத்துருவில் வந்தவற்றை ஒருங்குறியாக்கி, ஒரே இடத்தில் பிட்டு பிட்டாக்கி தொகுக்கும் இடம்.

கொஞ்ச நாள் கழித்து ‘சொந்த சரக்கு கிடையாதா?’, ‘ஏன் நாங்கள் படித்ததையே மீண்டும் மீண்டும் பதிவாக்குகிறீர்கள்?’ போன்ற செல்ல சிணுங்கலினால், நானும் இரண்டு வரி மறுமொழி எழுதி, எழுத்தாளன் ஆகிப் போனேன்.

மறுமொழிகளைத் தொகுத்து தனிப்பதிவாக்குவது இரண்டாண்டுகள் முன்பு ஃபேஷனாக இருந்தது. நொடி நேரத்தில் யோசித்து, பதிவு குறித்த தீர்ப்புகளை சுருக்கமாகத் தருவதால் பின்னூட்டம் என்பது ஸ்னாப் ஜட்ஜ்மெண்ட். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக, பின்னூட்டங்கள் எதுவுமே இல்லாமல், படிக்க வேண்டிய/படித்ததில் பிடித்த பதிவுகளை சேமிக்கும் தளமாக Snap Judgement ஆகிப் போனது.

இப்போ எல்லாம் வெறும் பார்வையாளரா மட்டுமே இருக்குறீங்களே என்னக் காரணம்?

இப்பொழுதும் க்விக்கா யோசி; பக்காவானால் பாசி! என்று நினைப்பதை கிறுக்கிக் கொண்டுதான் இருக்கிறேன். பின்னூட்டங்கள் போடுவது, கில்லியில் இணைப்பது போன்றவையும் தொடர்கிறது.

நீண்ட பதிவுகள் எழுதாமல் இருப்பதற்கு பல காரணங்கள். தெரிந்தவர்/நெருங்கியவர் மறைந்தவுடன் தோன்றும் ‘வாழ்க்கை அநித்தியம்’; வருடந்தோறும் ஒரு சில மணித்துளிகளாவது புதிய நுட்பங்களையும் நிரலிகளையும் கற்றுக் கொள்ளும் சுய நிர்ப்பந்தம்; ஹாய்யாக டிவி, அப்பா தேவைப்படும், அப்பாவின் காலை சுற்றும் குழந்தை; போன்ற generic காரணங்களையும் சொல்லி வைக்கலாம்.

வலைப்பதிவது இன்னும் அலுக்கவில்லை 🙂

நான்கு வருடப் பதிவுலக அனுபவம்.. மாற்றங்கள்ன்னு எதாவது நடந்துருக்கா.. ஏற்றமா? இறக்கமா? தனிப்பட்ட மற்றும் பொதுவானப் பார்வை ரெண்டும் சொல்லுங்க பாலா?

ஆரம்பத்தில் இவ்வளவு பேர் கிடையாது. வாசகர்களும் குறைவு. ஆனால், எல்லாப் பதிவுகளையும் கிட்டத்தட்ட எல்லா சக பதிவர்களும் படிப்பார்கள். குழுமம் மாதிரி இருந்தாலும், குழுவிற்குறிய குணங்கள் இல்லாத தனித்துவத்துடன் இயங்கியது. சொந்தக் கதையை நிறைய பேசினார்கள். தனி நபர் வாழ்வியல் சிக்கல்களை மனமுவந்து பகிர்ந்து வாசகனுக்கு செழுமையூட்டினார்கள்.

இப்பொழுது 2000+ பதிவுகள். நிறைய வாசகர்கள். நன்றாக இருந்தால் மனமுவந்து பாராட்டும், பார்வையிடும், பரிந்துரைக்கும் விரிந்த ஊடகம்.

செய்திகள், இடதுசாரி, முதலாளித்துவம், விளையாட்டு, பொருளாதாரம், அறிவியல் என்று ஓரிருவரை மட்டுமே வலம்வந்து, குண்டுச்சட்டியில் குதிரையோட்டிய தமிழ்ப்பதிவுலகம் பரந்துபட்டு, ‘அவர் இல்லாவிட்டால் இன்னொருவர்’ என்று மாற்று ஊடகமாக மிளிர்கிறது.

உலகத்தின் மூலை முடுக்கில் நிகழ்வதை அறிய சற்றுமுன், பல்சுவை கட்டுரைகளை அறிய பூங்கா, பல்வேறு பதிவர்களின் விருப்பத்தை அறிய மாற்று, பெண்பதிவர்களின் வீச்சை அறிய கூகிள் ரீடர் சக்தி என்று புதிய முயற்சிகள் தொடங்கி வீறுநடை போடுகிறது.

‘நான் மட்டுமே வாசகன்’ என்னும் அளவில் வலைப்பதிவை துவங்கினேன். கஷ்டப்பட்டு ஒவ்வொருத்தராக அழைத்து, நண்பர்களைப் படிக்க வைத்து, சுட்டி கொடுத்து வலைவீசி வாசகரைத் தேடி, கூகிளை நம்பி தேடல் வார்த்தைகளை நிரப்பி, கூட்டம் சேர்க்கும் நிர்ப்பந்தம் இன்று கிடையாது.

கை சொடுக்கில் தமிழ்மணம், தேன்கூடு, கில்லி, மாற்று கிடைக்கிறது. பார்வையாளர் வருகையேட்டு எண்ணிக்கையை மின்னல் வேகத்தில் உச்சாணிக் கொம்பில் ஏற்றும் வாய்ப்பு கிடைப்பது, புதிய பதிவர்களுக்கு pressure ஏற்படுத்தி பரபரப்புக்கும் உள்ளாக வைக்கிறது. இதனால் அடுத்தவரின் அனுபவத்தைப் பகிரும் அன்னியோன்யம் குறைந்து நாட்டு நடப்பை உலகியலாக ஆராயும் போக்கு மட்டுமே பெருகி வருவது இறக்கம்.

பதிவுகளில் கிளாஸ் – மாஸ் இருக்கா? தேவையா?

கிளாசுக்கு இங்கே போகவும்: வரவனையான்
மாஸுக்கு: ஞானபீடம்: வீரன்

கொஞ்சம் சேரியமாய் பார்த்தால், ‘பிதாமகன்’ படத்தில் சிம்ரன் ஆடுவது போல், ரோசாவசந்த் பதிவில் ஆண்குறி மாஸ்.
என்னுடைய பதிவில் எப்போதாவது கிளாஸ். நடிகைக்கு கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் வித்தியாசம் தெரியும். உருப்படியான பதிவரும் அதே மாதிரிதான்.

ஆங்கிலப் பதிவுப் போட்டவங்க இன்னைக்கு இதையே ஒரு முழு நேரத் தொழிலாச் செய்யுமளவுக்கு பதிவுகள் அவனுக்கு வளம் கொடுத்திருக்கு… இங்கே நம்மாலே அதெல்லாம் முடியுமா? உங்க கருத்தைச் சொல்லுங்க? CAN BLOGGING BE A FUTURE CARREER?

ஆங்கிலத்தில் சிறு பத்திரிகைகள் சக்கைபோடு போடுகிறது. எல்லா வெரைட்டி எழுத்தாளர்களையும் கொண்டாடுகிறார்கள். தமிழிலும் இதே நிலை இப்போது(தான்) உருவாகிறது. வலைப்பதிவும் கொஞ்ச நாள் கழித்துதான் வேகம் எடுக்கும்.
எடுத்துக்காட்டாக, சினிமாவைப் பற்றி மட்டும் பதிவு எழுதலாம். அந்தப் பதிவர், ‘சித்திரம் பேசுதடி’ போன்ற அதிகம் புகழ் பெறாத படங்கள் வரும்போது, படத்தை சந்தைப்படுத்த உதவலாம். அவருடைய பதிவில் எக்ஸ்க்ளூசிவ் கொடுக்கலாம். அதன் மூலம் நுழைவுச்சீட்டுகளை ஏலம் விட்டு பணம் சம்பாதிக்கலாம். படம் சம்பந்தப்பட்ட விஷயங்களை வணிகத்தளத்தில் விற்கலாம். இலவசமாகக் கொடுக்க தயாரிப்பாளர்களிடம் நிறைய வஸ்து இருக்கும். அவற்றை போட்டி போட்டுக் கொண்டு வாங்க நுகர்வோர் தயாராக இருப்பார்கள். இருவருக்கும் பாலமாக, பதிவர் அமைவார்.
இவ்வாறே இசை, ஓவியம், புத்தகம், விழியம், நாடகம் போன்ற பிற கலைத் துறைகளிலும் நிறையவே வாய்ப்புகள் இருக்கிறது.
சம்பந்தப்பட்டோரை தொடர்பு கொள்வது, அவர்களிடம் viral marketing, word of mouth, buzz creation என்று சந்திரபாபு நாயுடு ரேஞ்சுக்கு பவர்பாயிண்ட் காட்டினால் மயங்காதோரும் உண்டோ?

ஆங்கிலப் பதிவுகள் புத்தகங்களாக மாறுகிறது. தமிழ்ப் பதிப்புலகம் ‘சொந்தக் கதை’ அல்லது புகழ் பெற்றவர் அல்லாத தனி மனித வரலாற்றை மதிப்பதில்லை. புனைவுக்கு இடமுண்டு; அதுவும் பெயரெடுத்தவராக இருக்க வேண்டும் அல்லது பின் நவீனத்துவம் எழுதுபவராக இருத்தல் வேண்டும் போன்ற நிர்ப்பந்தங்களில் சிக்கியுள்ளது.

ஆங்கிலத்தில் அவ்வாறு இல்லாமல் புற்றுநோயிலிருந்து மீண்டவர், தொலைதூரம் ஓடியவர் வரலாறுகளும் வெளியாகிறது. பெருவாரியாக விற்பனையாகிறது. தமிழ்ப்பதிவர்களில் வெங்கட் போன்ற சிலர்தான் தொடர்ச்சியாக ஒரே துறையில் சுவாரசியமான கட்டுரைகளை அளிக்கிறார்கள். அனேகருக்கு ஒரு நாள் சினிமா, இன்னொரு நாள் விமர்சனம் என்று பல மரம் கண்ட தச்சனாக புகுந்து புறப்படுவதால், புத்தகமாகத் தொகுக்க இயலாத நிலை.

இந்த நிலையும் காலப்போக்கில் மாறும். துறைசார் பதிவுகளின் லாபத்தன்மை கருதியோ, சொந்த விருப்பத்தின் உந்துதலிலோ, குழுப்பதிவுகளும், தொடர்ச்சியும் அமையப்பெறும். இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் இந்தப் போக்குகளை நிறுவனப்படுத்த ஏதாவது கூகிள் போன்ற பிசினஸோ, தன்னார்வ அமைப்போ, விகடன்/குங்குமம் போன்ற வெளியீட்டாளர்களோ முயற்சிகளை எடுத்து, சரியான பாதையை வகுத்து, வலைப்பதிவதை லாபகரமான பொழுதுபோக்காக மாற்றலாம்.

SUNDAY WITH பாபா – 2

பதிவு உலகில் வியாபாரம் சாத்தியமா? துட்டுப் பாக்க வழி இருக்கா?நம்ம பிரிண்ட் மீடியா அளவுக்கு நெட் மீடியா வளர சாத்தியங்கள் இருக்கா?

ஆங்கிலப் பதிவுகளிலேயே இன்னும் காசு பெரிய அளவில் புரள்வதில்லை.
பண்டமாற்று முறையில் சில்லறை விற்பனை; காமம் தொடர்பான வியாபாரம்; தேர்ந்தெடுத்த துறையில் நற்பெயர் ஈட்டி, அந்தப் புகழைக் கொண்டு தொழில் முறைப் பேச்சு/புத்தகம்/குந்துரத்தல் என்று வேறு வழிகளில் சம்பாதிப்பது போன்றவை சாத்தியம்.

ரவியின் Top 10 உலக மொழிகள்-இலிருந்து: “திரைப்படம், இலக்கியம், ஆன்மிகம், சமையல், சோதிடம் அப்படின்னு ஒரு மிகச்சிறிய வட்டத்துக்குள்ள தான் தமிழ் இருக்கு.”

இப்போதைக்கு தமிழ் சஞ்சிகைகள் மேற்சொன்னவற்றுள் ஏதோவொன்றை வைத்து பணம் புரள வைக்கிறது. இணைய சஞ்சிகைகளுக்கும் ஆன்மீகம், ஜோதிடம் போன்றவை நிச்சயம் லாபம் தரும் தொழில். இவற்றில் இலக்கியம் என்பது இணையத்தில் சுஜாதா, கிரேசி மோகன், எஸ்வி சேகர் போன்றவர்களோடு நின்று விடும்.

ஒரு பதிவின் வெற்றிக்குப் பெரிதும் உதவுது கருத்தா? இல்லை நல்ல மார்க்கெட்டிங்க்கா?

மேட்டர் முக்கியமில்லை. மார்க்கெடிங் மட்டுமே போதும். மார்க்கெடிங் என்றால்…
எப்போது எழுதுகிறீர்கள், எவருக்கு சுட்டி கொடுக்கிறீர்கள், உங்களின் பழக்கப்பட்ட நிலையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி அதிர்ச்சி தரும் விகிதத்தில் வழங்குகிறீர்கள் போன்றவை சந்தைக்காக எழுதுவதன் குணாம்சங்கள்.

பதிவின் வெற்றிக்கு நேர்மை முக்கியம். கொண்ட கருத்தில் ஈடுபாடு அவசியம். உணர்ச்சிகரமாகவே எழுதி வருபவர், அவ்வப்போது நடையை வித்தியாசப்படுத்தி நக்கலாக எழுதும் மாறுபாடு என்னும் மார்க்கெடிங்குக்கும் பங்கு உண்டு.
நான் சினிமாப் பைத்தியம். வெகுசன சினிமாப் பைத்தியம்.
‘அன்பே சிவம்’ நல்ல (கருத்துள்ள) படம். போதிய அளவு மார்க்கெடிங்கும் இருந்தது. தேவையான விகிதாசாரத்தில் மாதவன், கிரண், சண்டை எல்லாம் தூவி இருந்தது. இருந்தாலும், ‘போக்கிரி’ பெற்ற வெற்றியை அடைய முடியவில்லை.

கிட்டத்தட்ட அதே மாதிரி தரம், குணம், சுவை உள்ள ஜெகத்தையும் பெயரிலியையும் எடுத்துக் கொள்வோம். இருவருமே பெரிதாக சந்தைப்படுத்தல் எதுவும் செய்வதில்லை. அதே தமிழ்மணம், அதே தேன்கூடு. இருந்தாலும் ஜெகத்தை விட பெயரிலி பதிவுகள் அதிக கவனம் பெறும். பல ஆண்டுகளாக எழுதுவதால் உள்ளர்த்தம் கிடைக்காதா என்று நோண்டும் சுபாவம், தமிழ்மணத்தின் நிர்வாகிகளில் ஒருவர் என்பதால் இருக்கும் விஷய்த்தை விட்டு இல்லாததைத் தேடும் மனோலயம் எல்லாம்தான் பதிவின் வெற்றிக்கு பெரிதும் உதவுவது. இது போன்ற சுவாரசியங்கள் இல்லாவிட்டால், அதே நண்பர் வட்டம், அதே பின்னூட்ட ஃபிகர்கள் என்றென்றும் தொடரும்.

.அலைஞனின் அலைகள்: குவியம்.: இராவணன்வெட்டு பின்னூட்டத்தில் இருந்து: “மொக்கை, மொள்ளை, கொள்ளை, கும்மி பதிவெல்லாம் வருகுது. நாமும் சும்மா பின்னூட்டங்களைக் கணக்குப் பாத்துப் பாத்து, தமிழ்மணம் வலதுமேல்மூலைத்தலைப்பைச் சுத்தி நிக்கிற மாதிரி கொஞ்சம் கொஞ்சமா இழுத்தடிச்சால், கவுண்டு எப்பிடி எகிறிது எண்டு பாக்க விளையாடினதுதான் உந்தப்பின்னூட்டமும் பேனூர்வலமும். சும்மா சொல்லக்கூடாது எகிறெண்ட எகிறு எகிறித்தான் இருக்குது. மினக்கெட்டு மினக்கெட்டு ஆறேழு மணித்தியாலம் இருந்து போட்ட பதிவுகள்கூட இருபது பேரைத் தாண்டாது போயிருக்கேக்க, இப்பிடி உயரத்திலையிருந்து உருட்டிவிட்ட குண்டு போல கையில வந்ததும் வராததுமா அடிச்ச எழுத்துக்கழிசலெல்லாம் நானூறைப் பிடிக்க நிக்கிறத எண்ணிச் சிரிக்கிறதோ அழுகிறதோ? ஷில்பா ஷெட்டி சங்கதிதான் எனக்கும் நடந்திருக்குது. There is nothing called BAD PUBLICITY.”

உங்க கேள்விக்கே வருவோம். பதிவின் வெற்றி என்று எதை நினைக்கிறீர்கள்? சொந்த அனுபவத்தினால் கற்றதும் பெற்றதும் பலரால் படிக்கப் பெறுவதா? பார்க்கப் பெறுவதா? பதியம் போட்டு அசை போடப் பெறுவதா?

பலரால் பார்க்கப் பெற்றால், அவர்களுள் பெரும்பானவர்களால் படிக்கப் பெற்று, அவர்களுள் ஒரு சிலர் மட்டுமாவது பதியம் போட்டு பழுக்கக் காயப்போட்டுக் கொள்வார்கள்.

இலக்கிய ரீதியாப் பதிவுலகம் எதாவது தாக்கம் ஏற்படுத்தியிருக்கா? அதற்கு வாய்ப்புக்கள் இருக்கா? இலக்கியவாதிகள் பதிவுலகம் பக்கம் வராமல் இருப்பதற்கு என்னக் காரணம்? IS IT LACK OF TECHNICAL KNOWLEDGE OR LACK OF RESPECT FOR FELLOW BLOGGERS ABILITIES?

எல்லாமே Logical Fallacy: Loaded Question என்றாலும் இதற்கும் என்னுடைய ரெண்டணாவை வீசிடறேன்.

அ) இலக்கிய ரீதியாகப் பதிவுலகம் எதாவது தாக்கம் ஏற்படுத்தியிருக்கா?

பதிவுலகில் மட்டுமே குப்பை கொட்டிக் கொண்டு, ‘இல்லை’ என்று சொன்னால், நான் செய்வது எல்லாம் குப்பை என்றாகி விடும். அதற்காக பதிலை ‘ஆமாம்’ என்றால், கபடியில் இந்தியா தங்கப் பதக்கம் பெறுவது போல் முதுகில் தட்டிக் கொள்வது எனலாம்.

தாக்கம் என்றால் என்ன? BLANK NOISE PROJECT போன்ற செயல்கள் இலக்கிய ரீதியாக இல்லாமல் செயல்ரீதியாக செய்து காட்டியிருக்கிறது. இலக்கியத்தின் ஆய பயனாக ரசிகரை மகிழ்விப்பது, உற்சாகம் ஊட்டி வாழ்வை மாற்றியமைப்பது எனலாம். பதிவுலகம் அதற்கு மேலும் சிந்தனைகளை வளப்படுத்தி இலக்கியத்தின் பலாபலன்களை நிறைவேற்றுகிறது.

ஆ) இலக்கியவாதிகள் பதிவுலகம் பக்கம் ஏன் வரவில்லை?

மாலன், இரா முருகன் (தினமணிக் கதிர்), சாரு நிவேதிதா (தப்புத் தாளங்கள்), சுஜாதா (க.பெ., ஸ்ரீரங்கத்து எஸ்.ஆர்) போன்றவை பதிவுகள்தான். அவர்களுக்கு தட்டினால் துட்டு. நமக்கு தட்டினால் ஹிட்டு.

இ) ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன் போன்ற இலக்கியவாதிகள் வராமல் இருப்பதற்கு பிற பதிவரின் திறமைகளை மதிக்காதது காரணமா?

நேற்று வரை கர்ம சிரத்தையாய் அனுதினம் கிறுக்கும் வலைப்பதிபவர், நாளை ‘விடைபெறுகிறேன்’ என்று ஓடிப் போகிறார். இந்த மாதிரி பாதியில் கடையை மூடுவதற்கு – சக பதிவர்களின் பின்னூட்ட சிக்கல்; தமிழ்ப்பதிவுகளின் ஜனநாயக அரசியல்; ‘கடைவிரித்தேன், கொள்வாரில்லை’ புலம்பல்; அலுவல் வேலை கெடுபிடி; என்று பல காரணங்கள். They have better things to worry about.

நம்மப் பதிவர்கள் விருப்பப்பட்டு பதிவு படிக்கிறாங்களா வழி இல்லாமப் பதிவு படிக்கிறாங்களா… நீங்க என்னச் சொல்லுறீங்க?

நான் விருப்பப்பட்டுத்தான் பதிவுகளை படிக்கிறேன். என்னுடைய ரசனைக்கு உகந்த, நான் அறிய வேண்டிய விஷயங்களைத் தேடிப் பிடித்து மேய்கிறேன்.

மீண்டும் metaphor-க்கு மன்னிக்கவும். காலை எழுந்ததும் தினசரியை ஏன் புரட்டுகிறேன்?
ராத்திரி ஒன்பது மணிக்கு மேலே ராக்ஸ்பரி (சென்னை தாதாக்கள் போல் பாஸ்டன் வஸ்தாதுகள் உலவும் இடம்) அருகே வீட்டு வாசலில் நின்றவர் கொலை என்பார்கள். ஓ… சரி! அந்தப் பக்கம் வீடு பார்க்காமல், வேறு எங்காவது ஜாகை பார்ப்போம் என்று முடிவெடுப்பேன். சற்றுமுன் அடுத்தவருக்கு நிகழ்வது, எனக்கு நிகழ்ந்து விடக்கூடாது என்னும் தற்காப்பு; பயம்.

கொஞ்ச நாள் போன பிறகு, எல்லா செய்தித் தலைப்புகளையும் மேயப் பொறுமையில்லை. இரவு பத்து மணிக்கு அரை மணி நேர செய்தி வாசிப்பில், எல்லா கொலை, வன்முறைகளையும் படம் பிடித்து ஒளிபரப்புகிறார்கள். பார்க்க ஆரம்பிக்கிறேன். செய்தித்தாள் நிறுத்தி விட்டாயிற்று.
பத்து மணிக்கு வீட்டுக்கு வர முடியாத ராப்பிசாசு வேலை. பக்கத்துவீட்டுக்காரியின் வலைப்பதிவில் செய்திகளைக் கோர்த்துக் கொடுக்கிறாள். என்ன, எங்கே, எப்படி நடந்தது என்பதை சுருக் தைக்கிறாள். விருப்பமான பதிவாக இல்லாவிட்டாலும், வேறு வழி இல்லாமல் படிக்க வேண்டிய தேவையான பதிவாக அமைகிறது.

மக்களுக்கு நேரம் குறைச்சல். அதில் வழி இல்லாமல் படிப்பது என்பதற்கான பேச்சே இல்லை.

பாஸ்டன் பாலா.. எதாவது செய்யணும் என்ற ஆர்வம் உடையவர் ஆனால் எதுவும் செய்யாமல் மெளனமாய் வெறும் வேடிக்கையோடு நிற்பவர்ன்னாச் சொன்னாக் கோபப்படுவீங்களா?

அடுத்த கேள்வியைப் பார்க்கவும்.

நீங்க ஒரு நல்ல விமர்சகர்.. தமிழ்மணம்..அதில் உலாவும் பதிவர்கள்.. தமிழ் மண நிர்வாகம் ஒரு மினி விம்ர்சனம் கொடுங்களேன்?

முந்தின கேள்வியைப் படிக்கவும் என்பதுதான் பதில்.
நிர்வாகத்தில் இல்லாதவர்களால் நிர்வாகிகளின் மண்டையிடி என்ன என்பது தெரியாது. வெளியாள் சுளுவாக விமர்சித்து சென்று விடலாம். தமிழ்மணம் குறித்து போதும் போதுமென்கிற அளவு, ஏற்கனவே அவ்வப்போது எழுதி மாய்ந்தாயிற்று.

தற்போதைய கண்ணீரும் கம்பலையுமான டாபிக் ஆன பூங்கா குறித்து, முன்பு Desipundit plans to close shop என்று தேசிபண்டிட் அலசல் கிட்டத்தட்ட பொருந்தும்.

கடைசியா.. சென்னைக் கச்சேரிக்காக…. ஒரு மெக்ஸிக்கன் ஜோக் ப்ளீஸ்…

ஏற்கனவே சொல்லியாச்சு… ஈ-தமிழ்: கேள்வியும் நானே… பதிலும் நானே!

Thanks Dev!

Boston Bala said…
என் பதிவுகளை எவராவது படிக்கிறார்களா என்னும் சந்தேகம் எனக்குண்டு. ஓரளவு தொடர்ந்து படித்ததனால்தான் இப்படி பொருத்தமான கேள்விகளை கேட்க முடிந்திருக்கிறது. அதற்காக மனமார்ந்த வணக்கங்கள்.

சன் டிவியில் நடிகைகளை சந்திக்கும் போது ‘உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?’, ‘உங்களுடையது காதல் கல்யாணமாக அமையுமா’ என்று வார்ப்புரு கேள்விகளைக் கேட்டு பழக்கப்பட்டவனுக்கு, ‘குடைக்குள் மழை’ பார்த்திபனை ருத்ரன் ஆராயும் அளவிற்கு அளந்தாராய்ந்து, வினாத் தொடுத்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

நட்சத்திர வாரத்தில் தன் பதிவுக்கு மட்டும் தமிழ்மணத்தின் சூரிய ஒளியை எடுத்துக் கொள்ளாமல், எனக்கும் என் எண்ணங்களுக்கும் இடம் கொடுத்ததற்காக ஆச்சரியமான சந்தோஷங்கள் 🙂

3:43 PM, April 01, 2007

Blogger Meets – Chennai & New Jersey

சந்திப்புகள் குறித்து க்வார்ட்டருக்கு (மூன்று மாதங்களுக்கு) ஒன்றாக எழுதுவது வாய்ப்பாடு. (பாஸ்டன் சந்திப்பு – பாபாவின் பார்வையில்)

இந்த முறை சென்னை அடுத்த வாரம் நியு ஜெர்சி.

முதலில் ஜெர்சி சந்திப்பில் பிறரைக் கேட்க விரும்பும் கேள்விகள்:

1. நீங்கள் ஏன் வலையில் பதிகிறீர்கள்? எதற்காக நேரம் செலவழித்து பிறர் பதிவுகளில் பதில் போடுகிறீர்கள்?

2. உங்கள் பதிவினால் என்ன பயன்? யாருக்கு எப்படி உபயோகம் என்று தெரியுமா? எவருக்கும் லாபமில்லை என்னும் டிஸ்க்ளெய்மர் கொடுத்தால், என்றாவது உருப்படியாக்கும் எண்ணம் உண்டா என்று அறிய விருப்பம்?

3. ஒரு பதிவுக்கு எத்தனை நேரம் செலவழித்து இடுகிறீர்கள்? பதிவுகள் எவ்வாறு உருக்கொள்கிறது?

4. திரட்டிகளில் வெளியாகுவதால் பதிவுகளில் மனத்தடை (inhibitions) ஏற்படுகிறதா? எந்த வகை எண்ணங்கள், எழுத்துருவாக்கம் காணமல் இப்படி மறையும் அபாயம் உள்ளது? கொந்தி (mask) அணிவது இதற்கு வெளிப்படையான தளத்தை உருவாக்குமா?

5. நண்பர்கள் மனம் புண்படுமே என்று உங்கள் இடுகைகளை சுயதணிக்கை செய்ததுண்டா?

6. இவருடன் ஒத்துப் போனால் இமேஜ் பரிபாலனம் செய்ய முடியாதே என்று ஈகோவுக்குக் கட்டுப்பட்டு, பதிவுகளின் சுதந்திரம் தடைப்படுகிறதா?

7. பதிவுகளில் கதை/கவிதை மட்டுமே இட்டு வருவது, புகழ்பெற்ற பாடல்களான சங்க இலக்கியம்/குறளுக்கு பொருள் கொடுப்பது போன்றவை தேவையா? ஏன்?

8. குறிப்பெடுத்து, பலரோடு பகிர்வதின் நோக்கமாக எதைச் சொல்வீர்கள்? இத்தனை பேரைக் கொண்டு இயக்கமாக, சமூக சக்தியாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

9. லாஜிக் இல்லாத வாதங்கள்; அரைகுறையாகச் சொல்லும் ஓட்டைத்  தகவல்; ட்விஸ்ட் ஆட்டம் போடும் சரித்திரம்; – கண்டால் பொங்கியெழுந்து கண்டிப்பீர்களா? பின்னூட்டமாகவா, பதிவாகவா?

10. #4-இன் உப-கேள்வி: பதிவைப் பாராட்டும்போது முகமிலியாக ‘நன்றி’ சொல்வது சரியா? விமர்சித்தால் ‘ப்ராண்ட் நேம்’ அவசியமா? கொந்தி கொண்டு மாற்றுக் கருத்தை முன்வைத்தால், உரியவாறு சென்றடைந்து, திரட்டி நிர்வாகிகளின் நற்பெயரையும் அடைய முடியுமா?
அடுத்ததாக சென்னை சந்திப்பு

  • நிறைய பேரை சந்திக்க முடிந்தது. பாலபாரதிக்கு நன்றி எத்தனை முறை சொன்னாலும் தகும்.
  • குறிப்பாக தங்கவேலு, வினையூக்கி, லக்கிலுக், முத்து (தமிழினி), ஜிரா, மோகன்தாஸ், வரவணையான், வீதபீப்பிள், மிதக்கும் வெளி, யோசிப்பவர் என்று எழுத்தில் மட்டும் பார்த்த பலரை நேரிலும் காண மிகச் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தார்.
  • பெண் பதிவராக ஒருவர்தான் வந்திருந்தார்.
  • யாரும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வரவில்லை.
  • மூன்று பேருக்கு மேல் இருந்தாலே உரையாடலாக இல்லாமல், உபன்யாசமாகும் அபாயம் உண்டு. நியூ ஜெர்சியிலும் லெக்சராகலாம்!?
  • சிறில்/தருமி போன்ற தெரிந்த குரல்களை ஒலிக்க விட்டதற்கு பதில், சென்னப்பட்டணம் சாராத பிறரைப் பகிரத் தூண்டியிருக்க வேண்டும். (ஜெர்சியிலும் அதிகம் எழுதாத பதிவாளர்களின் சிந்தனையை கேட்க அவா)
  • அனைவரையும் சிறு சிறு குழுக்களாக சந்தித்து இருந்தால், அவர்களின் எழுத்துக்கள் குறித்த எண்ணங்களையும், கொள்கை மேலான சந்தேகங்களையும் கேட்டுத் தெளிந்திருக்க ஏதுவாகியிருக்கும். (தொடர்ச்சியான இராப்பத்துக்கும் செல்ல இயலாதவாறு அன்றே அமெரிக்கா திரும்பும் சூழல் 😦
  • சந்திப்புக்கு தொலைபேசுவது தவிர்க்கப்பட வேண்டும். ஸ்பீக்கரில் போடாமல், ஒவ்வொருவருடனும் தனித்தனியாகப் பேசுவது, தனிமடலில் உசாவுவது போல் அன்னியமாகப் பட்டது. பதிவுக்கு வராமல், விசாரணை தொனியில் செல்பேசியில் கதைப்பதை, பதிவர் உரையாடலின் பிற்பாடோ முற்பாடோ வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அமெரிக்காவில் ஜனாதிபதிக்குப் போட்டியிடும் அரசியல்வாதிகள் குட காபி-டேபிள் சந்திப்பு என்று நாமகரணமிட்டு, ஆறேழு பேரை மட்டும் வட்டமேஜையிட்டு விவாதித்துக் கொள்வார்கள். அந்த மாதிரி குறு நிகழ்வுகள் திட்டமிடலாம்.
  • தன் எழுத்தைப் போலவே பேச்சிலும் ம. சிவகுமார் ‘எழுதியதை அப்படியே வெளியிட முடியாததால், அடிக்கடி பதிவது இல்லை’ என்று வெளிப்படையாக சொல்லி யோசிக்கவும் விட்டார்.

Innoru Uppu Peratha Documentation

  • The Z and the Y are swapped in this german keyboard
  • The gmail ha determined the location and gives a German interface, while Yahoo defaults to English!

Live from Frankfurt Airport

  • This is school vacation week in US. When you travel with kids you get to know your age.
  • It does not matter whether you blog or have an 80 gig iPod. One cannot hide his experienced looks.
  • IHT is a great newspaper. It should be available for subscription in US. Read three very engaging articles on
    • French primary elections
    • Delhi Traffic woes and the active arrogance of politicians
    • England vs Bangladesh
    • Kurt Vonnegut or some fellow who wrote lot of literary stuff
  • When you get old you are not good with numbers. The previous one has four entries, inspite of me leaving out Chirac´s legacy, McCain´s Campaign strategy.
  • There is a Tamil channel in Lufthansa. I heard a song which transformed old Ilaiyaraja hit Ádiye Manam nillunnaa nikkathadi´. They also played new classics like ´Loosu Penney´
  • Lufthansa forgets AVML vegetarians. Ofcourse feel free to listen to the tamil music. Sevikku unavau illai enil vayitrukku
  • Jaffan converter or some other stuff similar to the recent Hindi plugin for blogger.com should be made available here too. Note to self: write to Matt about this; he will respond 😉
  • The liquid restriction woes, stripping of belt, shoes etc have become normal. When a hassle becomes routine, people are used to ill-treatment.
  • Jeyamohan Kurunovelgal kept me company in the flight. Good for peaceful napping than the aforementioned IHT op-ed pieces.
  • This post took 17 minutes to write and costs me. This concludes the experiment of blogging produces lunatics

Sayonara…

Kids study ‘Health’ in schools

பள்ளியில் ‘ஹெல்த்’ வகுப்பில் கற்றுக் கொடுப்பவை

1. உன் உடலைத் தொட எவருக்கும் அனுமதி கிடையாது. குறிப்பாக நண்பர்கள், உறவினர்கள்.

2. உன்னை முத்தமிட எவருக்கும் பெர்மிசன் நஹி. பெற்றோர் விதிவிலக்கு.

3. ப்ரைவசி என்றால் என்ன?

அமெரிக்காவில் குழந்தைகளுக்கு அம்மா, அப்பா என்ன கற்றுக் கொடுக்க பாக்கி இருக்கு 😉

Mid-week Ramblings

சுதந்திரம் மட்டும் இல்லாமல் சொர்க்கமே இருந்தும் என்ன பயன்?

என்னவெல்லாம் எழுத வேண்டும் என்று todo லிஸ்ட் போட்டு வைக்க ஆசை. எழுதப் போவதில்லை; அச்சம் வேண்டாம். டுடூ பட்டியல் மட்டும்…

1. வாண்டட் தங்கராஜ் – என்ன ஞாபகம் இருக்கும்?

2. தமிழ்.நெட், தமிழ் உலகம், அகத்தியர், ராயர் காபி க்ளப், மரத்தடி, வரிசையில் தமிழ் மணம் – அடுத்த குழுமம்

3. Gangs of Tamil Blog – வலைக்களத்தில் எனது சாட்சியம்

4. நெருங்கிய உறவினருக்கு ப்ரெயின் ட்யூமர் வந்தால் எப்படி இருக்கும்?

5. ஷிவ்ஜி – பிலானி காதலர் பூங்காவும் சரஸ்வதி கோவில் கல்மிஷங்களும்

6. அமெரிக்கத் தேர்தல் நிலமை – ஒபாமா, ஹில்லரி, மெக்கெயின், ஜியூலியானி, எட்வர்ட்ஸ்

7. ஊக்க மருந்து எடுத்துக் கொண்டு ஒலிம்பிக்ஸ் வெல்வதும், காபி உட்கொண்டு வேலையாடுவதும்

8. மணி ரத்னம் – அஞ்சலி, அக்னி நட்சத்திரம், திருடா திருடா, கன்னத்தில் முத்தமிட்டால்

9. சன் டிவி, விகடன், தமிழ்மணம், தி ஹிந்து, திருமலை கோவிந்தா – ஒற்றுமைகளும் ஒரு சில போக்குகளும்

10. உங்க படம் ஷூட் செய்ய என் வீட்டு மொட்டை மாடியா கிடைத்தது? – விக்ரம் கமல் முதல் டிபார்டட் ஜாக் நிக்கல்ஸன் வரை

Google Page rank – Tamil News

அமெரிக்கா வருவதற்கு தயாராகிக் கொண்டிருந்த நேரம். அலுவலில் இருந்து அழைப்பு. அப்பொழுதெல்லாம் வேலைக்கு சேருவதற்கு, நல்ல நிறுவனமாக இருந்தால் கணிப்பொறியாளர்களுக்குப் போதாது. ஹ்யூமன் ரிஸோர்சஸில் க்ளோசப் விளம்பரம் கொடுக்கத் தகுந்த பல்வரிசையுடன், பாரதிராஜா கண்ணில் பட்டால் ‘ர’ வரிசை நாயகியாகும் அபாயம் வாய்ந்த மேலாளர் வாய்க்க வேண்டும்.

அப்படிப்பட்ட நிறுவனத்தில்தான் நானும் இருந்தேன். ‘அமெரிக்கா போகப் போறோம், வெட்டிப்பயல் கதைகளில் வருவது போல் காதல் மலர்ந்திருக்குமோ!?’ என்னும் பயிர்ப்பு கலந்த துள்ளும் மனத்துடன் சென்றேன்.

நேர்காணல் அன்று பளீரிட்ட அதே பற்பசை சிரிப்பு. போகியன்று வீட்டுக்கு வெள்ளையடிப்பதை, நாள்தோறும் ‘வைட்டனர்’ போடுவதை அறியாத வயது. அமெரிக்கா குறித்து துப்புகள் கொடுக்க ஆரம்பித்தாள்.

அவற்றில் இன்றும் கடைபிடிக்க, கால் கட்டைவிரலை கார்பெட்டில் சுழித்து நாணிக் கோணுவது: ‘சுயதம்பட்டம்‘.

தற்பெருமை கூடாது என்று வளர்ந்த அறிவு. இளைய தளபதி வேறு ‘அடங்காம ஆடினே தலை இருக்காது’ என்று மிரட்டி வைத்திருந்தார். கைக்கெட்டும் கனவு (கன்னியா இல்லையா என்றறியேன் பராபரமே) HR ‘கொட்டு முரசே’ என்றது. பஸ்மாசுரனாக மோகினியிடம் அக அழகை முன்வைக்கலாம் என்னும் எண்ண விமானத்தை, சடன் ப்ரேக் இட்டு, அமெரிக்க விமானக்குதிரையை முடுக்கிவிட்டேன்.

ஆட்டோ ரிக்ஷாவில் குறைந்தபட்சமாக இருபது ரூபாய் கேட்பது போல், அமெரிக்காவில் அனைவருமே தங்கள் performance appraisal-களில் 20% லாபத்தைக் கூட்டியதற்கு உதவியதாக உட்டாலக்கடி போடுகிறார்கள். அனைவரின் மதிப்பு கூட்டு சதவிகிதத்தைக் கணக்கிட்டால், கம்பெனிக்கு 200 கோடி% லாபம் அதிகரித்திருக்க வேண்டும்.

வலை வந்தபிறகும் இந்த அன்புத்தொல்லையை சகபதிவர்கள் செவ்வனே நிறைவேற்றினார்கள். ‘நான் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன். சிறிது நேரம் விழித்திருக்கவும்.‘ என்று வருமுன் காப்போன் மின்மடல் வரும். கொஞ்ச நாள் கழித்து ‘நான் பதிவு போட்டு விட்டேன். படிக்கவும்.‘ என்று மாற்று செய்தியோடை அறிவிப்பு வரும். இன்னும் கொஞ்ச மாதம் கழித்து ‘நான் பதிவு எழுதினேனே! படித்து முடித்து ஒழுங்கு மரியாதையாக மறுமொழி போடவும்.‘ என்று செல்லக் கொஞ்சல் வந்து சேரும்.

சுயம் பேசுவதை நிலைநிறுத்த இத்தனை முஸ்தீபு எதற்கு?

சுட்ட செய்திகளைத் தொகுத்து வைக்கும் Tamil News பதிவிற்கு கூகிள் பக்க மதிப்பில் 6/10 கிடைத்திருக்கிறது.

நிலாச்சாரல், திண்ணை, தமிழோவியம் போன்ற ஆதிகால அசல் தாதாக்களும், தேன்கூடு, தமிழ்மணம் போன்ற இக்கால கல்லடி கணை வாங்கும் வலைமாந்தர்களும் கூட 5/10 என்று கூகிளாண்டவரால் அருள்பாலிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில், ஆறு போட்டது பெருமைக்குரியது.

சொர்ணமால்யா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்களைத் தேடித்தான் பலரும் வருகிறார்கள். சாத்தான் கேட்டது போல்

Prashanth – Grahalakshmi : Counseling to avoid Divorce – A quick end to the Cine Star’s marriage life « Tamil News: இவ்வளவு நேரத்தையும் உழைப்பையும் செலுத்தி இந்த வலைப்பதிவை நடத்திவருகிறீர்கள். இந்த மாதிரி முக்கியமான செய்திகளைத் தவிர்த்து அதில் கிடைக்கும் நேரத்தில் இந்த வலைப்பதிவில் கூடுதல் அம்சங்களைச் சேர்க்கலாமே

தோன்றினாலும், நாளொன்றுக்கு நமீதா ரசிகர் மன்றத்தையும் நீலிமா நாயுடுவையும் வைத்துதான் 1,500 வாடிக்கையாளர்கள் கிடைக்கிறது. எத்தனை பேர் ‘படம்’ பார்க்க வருகிறார்கள், எத்தனை பேர் ஞானம் பெற வருகிறார் என்பதெல்லாம் புள்ளிவிவரங்களில் அறியமுடிவதில்லை.

ஏதோ கூடிய சீக்கிரம் சேமநல நிதியை நம்பாத மாதிரி, இணைய வங்கியில் ஓவர்ஃப்லோ ஆகுமாறு, லஷ்மி வந்து சேர்ந்தால் சரி.


உங்களின் பக்க மதிப்பை அறிய இங்கு செல்லவும்: Google Page Rank Checker – FREE PageRank Calculator

கூகிள் வலைமதிப்பு நுட்பம் குறித்து அறிய: PageRank – Wikipedia

உங்களை நீங்களே முன்னிறுத்திக் கொள்வதாக இருந்தால் கீழ்க்கண்டவற்றை கடைபிடிக்கலாம்:

1. உங்களை நீங்களே எள்ளல் செய்து நிதர்சனத்தை ஒப்புக் கொள்ளவும். Shameless self-promotion என்று மறுப்புக் கூற்று இடலாம். தினமணி, மாலைமலர், பிபிசி தளங்களின் முதுகில் சவாரி செய்து திருட்டுத்தனமாக பெற்றது என்று ஒப்புக் கொள்ளவும்.

2. நண்பர்களுக்கு அனுப்பும் மின்னஞ்சலில், ஒவ்வொருவரையும் தனிப்பட விளிக்கவும். பொத்தாம் பொதுவாக கூட்டாஞ்சோறு To: அடித்தால், பயனில்லை.

3. மற்றவர்களைக் கவர, அவர்களின் சுட்டி கொடுத்தாலே போதுமானது. ‘உன்னைப் பற்றி கூட, நடுவில் ரெண்டு வார்த்தை சொல்லியிருக்கேன்‘ என்று சொன்னாலே, பலரும் விழுந்தடித்து வந்து படித்துவிடுவார்கள்.


கடைசியாக Tamil News குறித்த சில புள்ளிவிவரங்கள்:

இதுவரை மொத்த பார்வையாளர்கள்: 122,064

ஒரே நாளில் மிக அதிகமாக வந்தவர்கள்: 1,810

நகலெடுத்து, சுராதாவில் எழுத்துரு மாற்றி பதிந்த செய்திகளின் எண்ணிக்கை: 750

அவற்றின் தொடர்ச்சியாக வந்த மறுமொழிகள் (பெரும்பாலானவை என்னுடையது): 233

இடுகுறிச் சொற்கள் (Tags): 5,316


| |