புளியமரம்: கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைமையை ஏற்பவர் யார்? – தங்கவேல்
அமெரிக்காவில் கருத்துக்கணிப்புகளை வணிக நிறுவனங்களே பெரும்பாலும் பயன்படுத்துகிறது. கேள்விகளை வடிவமைப்பதில் உதவுவதில் ஆரம்பித்து வாடிக்கையாளர்களின் சிந்தனையை ஊடுருவது வரை marketing research என்று வகைப்படுத்துகிறார்கள்.
காட்டாக மைக்ரோசாஃப்ட் ‘லீனக்ஸ் இன்னும் வர்த்தக நிறுவனங்களின் முக்கியமான நிரலிகளில் செயல்படவில்லை‘ என்று ஒரு கணிப்பும், ரெட் ஹாட் ‘லீனக்ஸ் வட அமெரிக்காவெங்கும் பரவலாக நீக்கமற நிறைந்திருக்கிறது‘ என்று ஒரு கணிப்பும் வெளியிடுவார்கள். சில சமயம், ஒரே நிறுவனமே இரண்டையும் நடத்தியிருக்கும். என்ன கேள்வி கேட்டிருக்கிறார்கள், எவரை வினவியிருக்கிறார்கள் என்பதில் சூட்சுமம் இருக்கும்.
பணிபுரிபவர்களுக்கு இந்தக் கணிப்பு அத்தியாவசியமானது. தங்கள் முடிவுகளை மேலதிகாரிக்குக் கொண்டு செல்லவும், நுட்பங்கள் தோல்வியடையும் சமயத்தில் விசாரிப்பு நடக்கும்போது ‘ஏசி நீல்சன் சொன்னார்கள்!‘ என்று தற்காத்துக் கொள்ளவும் உபயோகமாகும்.
தினகரன் அல்லது தேர்தல் சமய ஆருடங்களை மக்கள் பொழுதுபோக்காகவே எடுத்துக் கொள்கின்றனர்.
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க.விற்கு சிடி.
தமிழகத்தில் சன்/ஜெயா செய்திகள்?
Current Results:










