Category Archives: Nandha

Nandha – Engengo Kaalkal Sellum Paathayil

எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய்..
ஏதேதோ நாளை என்ற ஆசையில் வாழ்கின்றாய்..
உன் சொந்தம் இங்கு யார் யாரோ?
நீ சொல்லிக்கொள்ள யார் யாரோ?
நீ வாழும் வாழ்வில் அர்த்தம் என்ன என்றே நீ சொல்லு?

காதில்லா ஊசியுமே கடைசி வரைக்கும் வராதே..
பட்டினத்தார் சொன்னானே பாட்டு ஒன்றில் அப்போதே..
எதனைக்கொண்டு நாம் வந்தோம்..?
எதனைக் கொண்டு போகின்றோம்..?
ஓடும் பொன்னும் ஒன்றாய் எண்ணும் இதயம் வேண்டுமே..

காற்றுக்கு யார் இங்கே பாட்டுச் சொல்லித் தந்தாரோ?
ஆற்றுக்கு யார் இங்கே பாதை போட்டுத் தந்தாரோ?
வாழ்க்கை எங்கு போய்ச் சேரும்?
காலம் செய்யும் தீர்மானம்…
என்னை உன்னை கேட்டா வாழ்க்கை பயணம் போகுது?