APJ Abdul Kalam – Why two party system will not work for India? (Op-ed) « Tamil News
இரு கட்சி ஜனநாயகம் இந்தியாவைப் பொருத்தவரை சரிப்படுமா?
இத்தாலி போன்ற நாடுகளில் எக்கச்சக்க கட்சிகள். கனடாவில் கூட மாகாணத்துக்கு ஒரு கட்சியின் கை மேலோங்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
சமீபத்தில் ஃப்ரான்ஸில் தேர்தல் நடந்து முடிந்ததால், அங்கும் பல கட்சிகள் மக்கள் அபிமானத்தைப் பெற்று, சட்டசபையில் வெரைட்டி காண்பிப்பதை பார்க்க முடிந்தது. பிரான்சைப் பொருத்தவரை பல கட்சிகளின் வேட்பாளர்கள் ஜனாதிபதிக்குப் போட்டியிட்டாலும், அவர்களின் தேர்தல் முறை வேறு என்பதால், மிக அதிக வாக்குகள் பெற்ற இருவர் மட்டுமே கடைசியில் போட்டியிடுகிறார்கள்.
சென்ற ராஷ்டிரபதி தேர்தலில் வில்லன் #1 லெ பென் வந்துவிட்டதால், சிராக் மிக எளிதாக வென்றார். அதாவது, உமா பாரதிக்கு எதிராக முக அழகிரி நின்றாலும் ஜெயித்துவிடக் கூடிய நிலைமை.
இந்தத் தேர்தல் பரவாயில்லை. ஆனால், பெண் என்பதால் வாக்களிக்க மறுத்தார்களா என்பது ஆய்வறிஞர்களின் வேலை.
தொடர்பான செய்திக் குறிப்புகள்: France « Tamil News
தினமணி: மேலைநாடுகளைப் பொருத்தவரை, நமது நாட்டில் இருப்பது போல இந்த அளவு சாதி, மத, மொழி, சமுதாய, பொருளாதார ரீதியிலான பிரிவினைகள் கிடையாது
இது தட்டையான வாதம். அமெரிக்காவில் ஸ்பானிஷ், போர்த்துகீசியம், ஆரம்பித்து ஆக்கிரமித்த வியட்நாம் முதல் ஆக்கிரமிக்க நினைக்கும் விரிகுடா நாட்டு மொழிகள் உண்டு. கிறித்துவத்தில் இத்தனை பிரிவுகளா என்பது எங்கள் குக்கிராமத்தில் இருக்கும் பதினேழு விதமான தேவாலயங்களைக் கொண்டு புலப்படலாம்.
‘மெல்டிங் பாட்’ (மனம் ஒரு குரங்கு: கலாசாரங்கள் கலந்துருகும் கலயம்?) என்று ஒற்றைப்படையாக ஜல்லியடிக்கலாம். ஆனால், எக்கச்சக்க பிரிவுகள் என்பதுதான் நிதர்சனம்.
தமிழகத்தில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் கொள்கை, செயல்பாடு, தலைமையில் எவ்வளவு வித்தியாசங்களைக் காண இயலுமோ, அதை விட ஒன்றிரண்டை குடியரசுக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையே கண்டுபிடிக்கலாம்.
நேரம் கிடைக்கும்போது இதே பதிவில் தொடர எண்ணம்…










