Category Archives: India

ஏன்?

மகளின் சமீபத்திய கேள்விகள்:

1. இந்திய உணவகத்தில்: ‘ஏன் எப்ப பார்த்தாலும் “என்ன சாப்பிடறீங்க”ன்னு உன்கிட்டத்தான் கேக்கறாங்க? அம்மாவிடம் ஒருவாட்டி கூட கேக்கலியே?’

2. பாஸ்டன் லஷ்மி கோவில் கருட சேவை பிரம்மோற்சவத்தில்: ‘ஏன் ஆம்பளைங்க மட்டும்தான் சாமி தூக்கறாங்க? பெண்கள் பெருமாளத் தூக்கக் கூடாதா?’

3. அதே கோவில். திருக்கல்யாண உத்சவம்: ‘லஷ்மிக்கு ஏன் பட்டர் தாலி கட்டறார்? பெருமாளுக்கு தாலி கிடையாதா?’

Tamil Gossips

இங்கே வந்திருக்க வேண்டியது. இங்கே போட்டு விட்டார்கள்.

1. முதலாம் சரித்திர குறிப்பு: வெற்றி

/* இந்தியாவிற்குள் பிரிவினையை உருவாக்கும் எண்ணம் தமிழீழ மக்களுக்கோ/விடுதலைப்புலிகளுக்கோ இருந்ததா? அல்லது அதற்கான முயற்சிகள் எதுவும் நடந்ததா? */

நான் கேள்விப்பட்ட தகவலொன்றையும் [உறுதிப்படுத்தப்படாத தகவல்] இங்கே
இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இந்திய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடைசெய்த போது, பாகிஸ்தான், மற்றும் சீன உளவுப் படைகள் விடுதலைப் புலிகளைத் தொடர்பு கொண்டு தாம் ஆதரவு த்ருவதாகத் தெரிவித்திருந்தனராம்.

ஆனால் இந்திய நலனுக்கு எதிராக குறிப்பாக எமது உடன்பிறப்புக்களான 60 இலட்சம் தமிழர்களும் அங்கமாக இருக்கும் இந்திய நாட்டின் நலன்களைப் பாதிக்கக் கூடிய உறவோ உதவியோ எமக்குத் தேவையில்லை என அவர்களின் கோரிக்கையை புலிகளின் தலைமைப் பீடம் ஏற்க மறுத்ததாம்.

இந்திய நடுவண் அரசு, ஈழத் தமிழர்களைக் கொல்லுவதற்கு சிங்கள அரசுகளுக்கு தொடர்ந்தும் ஆயுத உதவிகளைச் செய்து வரும் போதும் விடுதலைப் புலிகள் இந்திய நலனுக்கு எதிராகப் பாகிஸ்தானுடனோ அல்லது சீனாவுடனோ தொடர்பு வைப்பதில்லை என்பதில் குறியாக இருக்கிறார்கள் எனத் தெரிகிறது.

ஆனால், புலிகளாலும், ஈழமும் இந்திய நலனுக்கு எதிரானது எனும் மாயையை ஒரு குறிப்பிட்ட சாதியினரும் அவர்களின் ஆதிக்கத்தின் கீழிருந்த தகவற் தொடர்பு சாதனங்களும் பரப்பி வந்தன. வருகின்றன. அரசியலை நன்கு அறிந்தவகளுக்கு இது எப்படிப்பட்ட மாயை என்பது தெளிவாகப் புரியும்.

8/08/2007 09:00:00 PM


2. இரண்டாம் வரலாற்று சாட்சியம்: Anonymous said…வெற்றி,
நீங்கள் குறிப்பிட்டதுபோல நானும் கேள்விப்பட்டேன். அதுமட்டுமல்ல பி.ஜே.பி எதிர்க்கட்சியில் இருந்த போது புலிகளிடம் தம்மை ஒரு இந்துஅமைப்பாகவும் பெளத்தத்துக்கும் அதற்கு ஆதரவுதெரிவிக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான போராட்டமே ஈழப்போரென்றும் பிரகடனப்படுத்தச் சொல்லியும் கேட்டார்கள் என்றும் அறிந்தேன். அதற்கு புலிகளோ தாம் ஒரு மதம் சாராத அமைப்பு என்றும் தம்முடன் ஆரம்ப காலத்திலிருந்தே மிகப்பல கிறிஸ்தவர்கள் இப்ப்போரில் இணந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்கள். அப்போதுகூட போராட்டத்தில் ஆதரவளிக்கும் கிறிஸ்துவர்கள் , முக்கியமாக பாதிரிகள் அவ்வாறே செய்யும்படியூம் தாம் அதைப்பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்து தமக்கு தமிழர் விடுதலை பெறுவதே முக்கியம் எனக்கூறினர் எனவும் அறியக்கூடியதாக இருந்தது. எனினும் புலிகள் எடுத்த முடிவு தூரநோக்குள்ளதே என நினைக்கிறேன்.- 8/08/2007 10:33:00 PM

Links – Asian Studies: Sociology, Literature, Reference, Research

Journals and Presses

Duke University Press Main Page
Duke University Press Journals Page
Johns Hopkins University Press Journals Division
University of Chicago Press Journals Division
University of California Press Journals
Indiana University Press Journals
Inter-Asia Cultural Studies
Critical Asian Studies
Columbia East Asian Review
Harvard Asia Pacific Review
Scholarly Journals Distributed Via the World-Wide Web
Association of American University Presses
Asian Studies Programs

Association for Asian Studies
Critical Asian Studies, Center for the Humanities at UW
UW Asian Languages & Literature Department
UW American Ethnic Studies Department
University of California at Berkeley Ethnic Studies Department
Australia National University-Asian Studies WWW Virtual Library

Other Resources

University of Michigan Asia Library
Chinese-Language-Related Information Page
Society for Cinema Studies

I will get the worshippers; Where are my Angels?

அக்சர்தாம் குறித்து துளசி விரிவாக எழுதிவிட்டார்.

போதாக்குறைக்கு, எத்தனித்தை நியு யார்க் டைம்ஸ் தெளிவாக பிடித்திருக்கிறது:

The Disney Touch at a Hindu Temple – New York Times: “There is no doubt about it — we have taken the concept from Disneyland,” said Jyotindra Dave, the chief public relations officer for the organization that built the temple, which opened in November. “We visited five or six times. As tourists, I mean. And then we went away and worked out how they did everything.”

An indoor boat ride, a large-format movie screen, a musical fountain and a hall of animatronic characters that may well remind us that, really, it’s a small world after all.

The crowds here aren’t pilgrims; they’re day trippers.

The film adaptation of the Bhagwan Swaminarayan’s pilgrimage, with its lovely swooping shots of the Himalayas, is a far less gory take on Mel Gibson’s blockbuster evangelism.

People cut in line and tread on my toes, which strike me as things Bhagwan Swaminarayan would not do. It seems the combined efforts of the Akshardham’s robots, elephants and talking boats in relaying BAPS’s essential message of humble compassion may still not have been enough.

இப்போது என் பங்கு:

இம்ரான் ஹாஷ்மி படத்தில் நாயகி ஆடையணிவது போல் இடுப்பில் துளியூண்டு கச்சை கட்டிப் புறப்படுகிறார் நீலகண்ட். ‘வா வா கண்ணா வா‘ பாடலில் பனியில் பரதநாட்டியம் ஆடிய அமலா பிச்சை வாங்க வேண்டும். கிராபிக்ஸ் துணையுடன் எவரெஸ்ட் உச்சி முதல் அமேசான் காடுகள் தொட்டு சஹாரா பாலைவனம் வரை உலாவுகிறார். இயக்குனர் ஷங்கர் இந்த ஐ-மேக்ஸைப் பார்த்தால் ‘சிவாஜி‘யில் ரஜினியை கலக்க வைத்திருப்பார்.

வீ வாண்ட் ஷிவாஜி-தி பாஸ் இன் 3-டி ஐ-மேக்ஸ்கோப்.

It is a Small World‘ படகுப் பயணம் பருவத்துக்குத் தக்கவாறு டிஸ்னிவோர்ல்டில் மாறும். நத்தார் பொழுதில் பனி புலரும். பூப்புலரும் காலத்தில் உலக மலர்களின் அணிவகுப்பு நடக்கும். இங்கு சுவாமிநாராயண் & கோ.

டிஸ்னியில் விழியமாகப் படம் எடுக்கலாம். இங்கு அரூபசுந்தரன். புகைப்படம் கிடையாது.

162 அங்குலம் உயரத்தில் பிரும்மாண்ட பாலகனாக நீலகண்டனைப் பார்த்தவுடனே தமிழ் அரங்கு வாயிலில் இருக்கும் கட்-அவுட் நினைவுக்கு வருகிறது. பாலபிஷேகம் செய்யலாம்.

ஜெயபிரதாவையும் ஜெயசுதாவையும் மட்டும் திரையில் பார்த்த காலங்களில் தெலுங்கு மட்டுமே சுந்தரிகளைத் தயாரிக்கும் மாநிலம் என்னும் கருத்தாக்கத்துடன் திரிந்தேன். நெடுங்காலம் கொண்டிருந்த கருத்தாக்கம் மவுண்ட் கேரமல் கல்லூரியை பெங்களூரிலும், எல்.எஸ்.ஆரை புது தில்லியிலும் பயணித்தவுடன் பொடியாகி மாறிப்போனது. அக்ஷார்தாம் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பாவையர்கள் கேட் மாஸ் வடிவமைக்கும் ஆடைகளை அணிந்து கேட்-வாக் பழக வேண்டியவர்கள். சிலைகளை மட்டுமல்ல, மட்டுறுத்தர்களையும் பொறுக்கியிருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் சென்று வர 145 ரூபாய்தான். ரொம்பவேக் குறைச்சல். பெருந்திரைப் படங்களுக்கு 450 ரூபாய் (பத்து அமெரிக்க வெள்ளி) கறப்பார்கள். படகு உல்லாசம், யானை சிற்பங்கள், பொம்மலாட்டம் எல்லாம் சேர்க்கும் டிஸ்னியில் குறைந்தது 3,000 ரூபாய் ($ 65+) ஆகும்.

ஒரு காட்சியில் குறைந்தது 500 பேர் அமரலாம். நான் சென்றிருந்த வியாழன் மாலை நிறைந்த அரங்கு. ஒரு நாளைக்கு நான்கு காட்சிகளாவது நிறையும் என்றால் கிட்டத்தட்ட மூன்று லட்சம் வருமானம். மாதத்துக்கு ஒரு கோடி ($ 250,000) கல்லாப்பெட்டி நிறைக்கும். சீரிய வணிகமாகத் தொடங்க முனைவோருக்கு வங்கியில் கடன் கிடைக்குமா என்பது சந்தேகம்.

நடக்க முடியாதவர்களுக்காக சக்கர நாற்காலியை இலவசமாகத் தருவதாக அறிவிப்பு. குறிப்பிட்ட நேரத்துக்குள் திருப்பித் தராவிட்டால், நூறு ரூபாய் குடக்கூலி. உள்ளே சென்று படம் பார்த்து, தங்க விக்ரகத்தை சைட் அடித்து திரும்புவதற்குள் வாடகை வசூல். தொடக்கத்திலேயே ‘வாடகைக்கு’ என்று போட்டால், கஷ்டப்பட்டு நடந்துவிடுவோம் என்னும் மத்யமரை பதமாகக் கறக்கும் லாவகம்.

நாள் முழுக்க செலவழித்த திருப்தியில் என் அம்மாவுக்கு ‘கிருஷ்ணருக்கு இப்படி ஒரு கோவில் எழுப்பலாமே!’ என்னும் எண்ணம் பிறந்தது. 55 நிமிட பாகவதம். கோபியருடன் ஓடப் பயணம், அசுரன்களுடன் பாவைக்கூடம் என்று விவரித்தார். கிழக்குக் கடற்கரை சாலையில் எழுப்பினால் மாயாஜாலுக்கு நல்ல போட்டியாக விளங்கும்.

அதை விட ரஜினிக்கு அருங்காட்சியகம் எழுப்பலாம். முக்கிய மைல்கல்களுக்கு பொம்மலாட்டம். பரிசல் காட்சியில் அபூர்வ ராகங்கள் தொடங்கி சிவாஜி சூப்பர் ஸ்டார் இசை பின்னணி. அம்பிகா போன்ற சந்தை இழந்தவர்களை சந்திக்கும் வாய்ப்பு. இயக்குநர்களின் சொற்பொழிவு. கலைக்கூடம் என்பதால் அரசின் வரிச்சலுகையோடு அமர்க்களப்படுத்தலாம்.

சிவாஜியோ… சுதர்சனரோ…
என்னுடைய முதலீட்டாளர்கள் எங்கே?

கேக்குத்தான் வெட்டக் கூடாது; துணியைத் தைக்கலாம்

USA Flag

Offending Cake

News Stories of Interest

கருத்தைக் கவர்ந்த செய்திகள்:

  1. பதவிக்கு ஏற்ற நடத்தை இல்லை: கலாம் மீது தாக்கரே மீண்டும் தாக்கு

    குடியரசுத் தலைவர் ஆவதற்கு அவருக்கு நாங்களும்தான் வாக்களித்தோம். ஆனால் குடியரசுத் தலைவர் ஆன பிறகு அவரது நடத்தை அந்தப் பதவிக்கு ஏற்றபடி இருக்கிறதா? இல்லை என்பதுதான் பதில்.

  2. புகைப்படத்தில் விஷமம்: சோனியாவுக்கு களங்கம் ஏற்படுத்த அற்பமான சதி?

    சோனியாவின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுத்தார்களே! அந்தப் படத் துணுக்காக இருக்கப் போகிறது?

  3. அன்புமணி-எய்ம்ஸ் மோதல் உச்சகட்டம்: அதிகாரிக்கு அலுவலகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பு

    ‘மிஸ்… என்னை அடிச்சுட்டான் மிஸ்’ என்னும் சச்சரவுகளையே டீச்சர் விலக்கி விட்டுக் கொண்டிருந்தால், எப்பொழுது அனைத்து மக்களுக்கும் உடல்நலன் என்னும் ‘பாடம்’ எல்லாம் கவனிக்க முடியும்?

  4. 6,000 திரைப்படங்களை காணும் வசதியுடன் ஜீ.வி. பிலிம்ஸின் புதிய இணையதளம்

    படத்தைக் காண ஆகும் தொகை ரூ.45.

  5. உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம்: தேர்தல் ஆணையர்

    சோதனை அடிப்படையில் 25 சதவீத இடங்களில் மிண்ணணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

    மற்ற 75 விழுக்காடு இடங்களில் வழமை போல் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார் தலைவர்.

  6. ஆகஸ்டு மாதம் ஜோதிகாவுக்கு குழந்தை பிறக்கும்

    செப்டம்பரில் கல்யாணம் நடந்தது. வேகமான தயாரிப்பு.

  7. பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்

    மாற்றி மாற்றி அறிக்கை, போராட்டம் அரங்கேறுகிறது. சொற் சிலம்பம் முடியும்போது, அணை கட்டி திறப்பு விழாவுக்கு மத்திய பா.ம.க., வைகோவும் உள்ளூர் ஆளுங்கட்சியும் செல்லலாம்.

  8. கேரளாவில் பரபரப்பு: புத்தரைப் போன்ற ஏசு கிறிஸ்து சிலை

    ஜெபக்கூடத்தில் ஏசு தனது 12 சீடர்களுக்கு அளிக்கும் கடைசி விருந்தானது நமது இந்திய கலாசராப்படி நடப்பது போல ஓவியம் வரையப்பட்டுள்ளது. அதில் 12 சீடர்களும் ஏசுவின் முன்பு தரையில் அமர்ந்து வாழை இலையில் சாப்பிடுவது போல வரைந்துள்ளனர்.

    “ஜெகத் ஜோதி மந்திர்” என்று பெயரிடப்பட்டுள்ள அந்த ஜெபக்கூட்டத்தில் “ஆம் ஏசு கிறிஸ்துவே நமஹா” என்று கொட்டை எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. ஏசு சிலை முன்பு 2 பெரிய குத்து விளக்கு வைக்கப்பட்டுள்ளது.

  9. வட இந்தியர்கள் பற்றிய ஹேமமாலினியின் கருத்துக்கு பலத்த கண்டனம்

    “மும்பையில் வட இந்தியர்கள் நடத்தப்படும் விதம், திருப்தியளிக்கும் வகையில் இல்லை என்பது குறித்த உங்கள் கருத்து என்ன” என்று கேள்வி கேட்கப்பட்டது.

    இதற்கு ஹேமமாலினி “அவர்களுக்குப் பிரச்சினை என்றால் தங்களுடைய சொந்த ஊருக்குத் திரும்பிப் போகட்டும்” என பதிலளித்திருந்தார்.

Hinduism Today

கண்ணில் பட்ட இரு செய்திகள்:

1. ஏற்காட்டில் இன்று பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை: வழக்கமாக இக்கிராமத்தில் நிர்வாண பூஜை நடக்குமென பரபரப்பாக தகவல்கள் வெளியாகும். இதற்கு மாறாக இந்த ஆண்டு பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பூஜை என குறிப்பிடப்படுகிறது. மகளிர் போலீசார் மட்டும் அக்கிராமத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

‘கிழக்கே போகும் ரயில்’ ஞாபகம் வந்துச்சே!

2. மதுராவில் அனுமன் கண்ணீர் வடிப்பதாக பரபரப்பு: நேற்று காலை சாமி கும்பிட வந்த பக்தர் ஒருவர் அனுமன் சிலையில் இருந்து கண்ணீர் வடியும் காட்சியை பார்த்தார். உடனேஅவர் ஒடிச் சென்று பூசாரி மற்றும் அர்ச்சகரிடம் கூறினார். அவர்கள் வந்து பார்த்த போது அனுமன் கண்களில் இருந்து முத்து முத்தாக நீர் வடிந்தது.

இந்த தகவல் அருகில் உள்ள கான்பூர் நகருக்கும் பரவி யது. உடனே பக்தர்கள் உள்ளூரில் உள்ள அனுமன் கோவிலுக்கு சென்று பார்த்தனர். அங்குள்ள அனுமன் சிலையில் இருந்தும் கண்ணீர் வடிவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

‘பெரியார்’ திரைப்படத்தின் பாடல் வரிகளை கேட்டு விட்டு கண்ணீர் சொரிவதாக இன்னும் யாரும் அறிக்கை விடவில்லையா?


| | |