விடைகள் சரி பார்க்க: Foreign Policy: The FP Quiz
உங்க ஸ்கோர் என்ன?
1. ‘அடுத்த வீட்டுக்கு ஆலோசனை திட்டம்‘: தம்பி கொசொவோ சுதந்திரம் அறிவித்ததை, அண்ணன் துருக்கி வரவேற்றிருக்கிறது. சூட்டோடு சூடாக, துருக்கிக்குள் இருந்து விடுதலை கோரும் குர்துக்களை தீர்த்துக் கட்ட, சுதந்திர நாடான இராக்கிற்குள் புகுந்து, தன்னாட்சி உரிமை கொண்ட குர்துக்களை ஓட ஓட அடித்துக் கொல்கிறது.
வாக்களிப்பதற்கு முன் படிக்க வேண்டிய பத்திகள்:
2. ‘பெரியவர்கள் சொற்படி நட‘: இராஜீவ் காந்தியின் சார்க் நாடுகள் கூட்டமைப்பு பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தால், ஈழ விடுதலைக்கு இந்தியா இன்னும் பெரிய அளவில் உதவியிருக்கும். தான் உள்ளிருக்கும் நாட்டை விட, ஐரோப்பிய ஒன்றியத்தை நம்பினால் போதும்; நாடோ-வில் நம்பிக்கை வைத்தோர் தனி நாடாக்கப் படுவார்.
3. ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா‘ – முப்பத்திரண்டு வயதில் ஃபிடல் காஸ்ட்ரோ, க்யூபாவின் பிரதம மந்திரியானார். ஒரு நல்ல அரசாங்கத்தை நிறுவும் வரை தாடியை மழிக்க மாட்டேன் என 1959-இல் சபதம் எடுத்தவர், அதே தாடியை வளர்த்துக் கொண்டிருந்தார். அறுவை சிகிச்சைக்காக தாடியை மாக்-3 அமெரிக்க கத்தி பதம் பார்த்து விட, 76 வயது இளைய தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்கி விட்டார்.
4. ‘வெற்றித்தலைவர் ≡ தலைசிறந்த நடிகர்‘: குருதிப்புனல் திரைப்பட வசனத்தில் வரும் ‘‘தைரியம்னா என்ன தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிப்பது’, எனபதற்கேற்ப நடந்த முதல் நடவடிக்கை.
Posted in Freedom, Global, Independence, Kosovo, Liberalization, News, World
குறிச்சொல்லிடப்பட்டது அமெரிக்கா, அரசியல், அலபாமா, உலகம், ஊடகம், எண்ணங்கள், ஐரோப்பா, கருத்து, குடியரசு, சிந்தனை, சுதந்திரம், சென்சார், செய்திகள், சொசோவோ, ஜனநாயகம், டிவி, தணிக்கை, துருக்கி, தொலைக்காட்சி, படித்தவை, புஷ், விடுதலை