Category Archives: Blogs

மாற்று – ஆலோசனை (aka) விழைப்பட்டியல் (aka) அடுத்த கட்டம்

தமிழில் எழுதும் பதிவுகளில் சுவையானதை மாற்று தவறாமல் சேமித்து வருகிறது. பல விஷயங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை இப்போது பட்டியல் போடும் எண்ணம் இல்லை.

மாற்று அல்லது மாற்று போன்ற புதிய தளங்கள் எதை நிறைவேற்றலாம்?

1. மாற்று! குறித்து, கொள்கைகள் போன்றவை ‘வலைப்பக்கம் காணக்கிடைக்கவில்லை‘ என்று பிழை காட்டுகிறது. வலையகத்திற்கு முதன்முறையாக வருபவர்கள் ‘about us’ படிக்க விரும்புவார்கள்.

2. பங்களிப்பாளர்களின் இடுகைகளைக் குறிப்பிடாமல் தவிர்க்கிறார்கள். ‘பரஸ்பர முதுகு சொறிதலை இந்த கொள்கை தவிர்க்கிறது‘ என்பதற்காக இருக்கலாம். இருந்தாலும், ஏதோ இடறுகிறது. பதிவை எழுதியவரே, சுட்டிக் கிடங்கில் சேர்த்தால் கூட பொருத்தமானதாக இருந்தால்தான் சேர்ப்பார் என்னும் நம்பிக்கை வேண்டும்.

3. சுட்டியின் மேல் எலியைக் கொஞ்ச நேரம் உட்காரவிட்டால், எந்த ‘வகை’யில் சேர்த்திருக்கிறார்கள் (டூல்டிப்ஸ்) என்பதை அறிய முடிகிறது. அதனுடன் பதிவின் முதல் வரிகளையும் கூட சேர்த்து காண்பித்தால், முன்னோட்டமாக இருக்கும். இதன் மேர்சென்று விருப்பங்களைத் தேர்வு செய்து பயனர் கணக்கு (preferences, personalization & customization) கொணரலாம்.

4. ‘சூடான இடுகைகள்‘ போல் எத்தனை பேர் மேற்சென்று க்ளிக் செய்து, படித்தார்கள் என்பதை அறியத் தரலாம். ‘நட்சத்திர தாரகைகள்’ என்பது பகிர்பவரின் விருப்பம் என்றால், மெய்யாலுமே வாசகரின் மவுஸ் எங்கே செல்கிறது என்பதை அறிய முடியும்.

5. புகைப்படங்கள்: பதிவுகளில் வந்த நிழற்படங்களின் சுருக் வடிவத்தைக் கொடுத்து தூண்டில் இட வேண்டும்.

6. கடந்த முறை நான் வந்தபோது கடைசியாக வந்திருந்த பதிவு எது? நினைவில் வைத்திருந்து வேறுபடுத்தி காட்டினால் பயனாக இருக்கும்.

7. திண்ணை, நிலாச்சாரல், தென்றல், ஆறாம்திணை, தமிழோவியம், பதிவுகள், பூங்கா எக்ஸ்க்ளூசிவ்கள், கீற்று, அப்புசாமி ஆகிய இதழ்களையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். (ஏற்கனவே வரலாறு.காம் போன்றவை அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது.)

8. வகைவாரியாக பார்க்க முடிவது போல், தேதிவாரியாக புரட்ட வசதி செய்து தரலாம். அன்றாட வாரத்தின் தாரகைகளுக்கு முகப்பு பக்கத்தில் இடம் கொடுக்கலாம். மாதம்/வாரம்/நாள்வாரியாக #4 கணக்கை காட்டி, வாசகரின் தானியங்கித் தேர்வுகளை காட்டலாம்.

9. தேடலை விரிவாக்குதல்: பதிவர் பெயர் தவிர, தலைப்பு, குறிச்சொற்கள் ஊடாக தேடுவது, உரலைப் பொறுத்து தேடுவது என்று ஆடம்பர (அட்வான்ஸ்ட்) வசதிகள் செய்து தரலாம்.

10. விளம்பரங்கள்: எம்.எஸ்.என். தமிழ், யாஹூ தமிழ், தினமலர் போன்ற தளங்களில் விளம்பரம் தந்து மாற்று.காம் முகவரியை பிரபலப்படுத்தலாம்.

கடைசியாக, கடந்த சந்திப்பில் மாற்று குறித்த விமர்சனமாக நண்பர்கள் சொன்னது:

அதிகம் அறியப்பட்ட, குறிப்பிட்ட சில பதிவர்கள்தான் திரும்பத் திரும்ப தேர்ந்தெடுக்கப்பட்டு பகிரப்படுகிறார்கள். இதுதான் வரும் என்பது போல் கணிக்கமுடிந்ததையே வெளியிடுகிறார்கள்.

இதற்கு பதிலாக இரண்டு வழிகளை சொன்னேன்:

(i) தற்போது உள்ளது போலவே தொடர்வது: ஆனால், தமிழ்மணம்/தேன்கூடு/வோர்ட்பிரெஸ் மூலமாக புதிதாக எழுத ஆரம்பித்த பதிவர்களை இன்னும் நிறைய கோர்க்கலாம்.

(ii) சற்றுமுன்னின் ‘அறிவியல் இன்று’, மா சிவக்குமார், மதி, பத்ரி போன்ற எப்போதும் வருபவர்களை பாப் யூரெல்ஸ்ஸில் வருவது போல (quickies என்னும் தலைப்பில்) இணைப்பது. தவறவிடக்கூடாதவர்களுக்கு இந்த செமி-நிரந்தர இடம். ஓடையைப் பொறுத்து தீர்மானிக்கும்படி செய்யலாம்.் க்வாலிடி குறைந்தால், மற்றவர்கள் போல் ஆக்கிவிடலாம்.

தொடர்புள்ள ஆங்கில வலையகங்கள், திரட்டிகள், சேமிப்புக் கிடங்குகள், பரிந்துரை பக்கங்கள், வலைப்பதிவுக் களங்கள்:

The maturity required for a Third grade student

Paper Towel Child Study Learn kid School Curtis

நன்றி: கர்ட்டிஸ்

Disclaimer: The title does not refer to this blogger or any other Tamil, English, Hindi, Esperanto, blogger.

இது கொலு சீஸன். நாலு வீட்டுக்கு கார் மிதித்தால், சுண்டலும், (கர்னாடக சங்கீத) தாட்டை வரிசையும், ரெட் சாக்ஸ், பாட்ரியாட்ஸ் புராணமும், பெற்றோர் வந்திருக்கும் ஆச்சாரமான ஆத்தில் கன்னித்தன்மை இழக்காத மேரி மாதாவும், சன் டிவி போடாத வீட்டில் Glenlivet-ம் கிடைக்கும்.

ராண்டி மாஸ் எப்படி பந்தை லபக்குகிறான் என்னும் கதாகாலட்சேபத்திற்கு நடுவில் அவரின் மகன் மூன்றாவது கிரேடில் வீட்டுப்பாடம் செய்வதில் கவனம் சிதறியது.

‘Wizard of Oz’ புத்தகத்தைப் படிக்கிறான். மூன்று கேள்விகள் இருந்தன.

முதல் கேள்வி சுலபம்: புத்தகத்தில் படித்த கதையை உன் நடையில் எழுது.

இரண்டாவது கேள்வி ‘சொல்லலாம்’ என்னும் ரகம்: கதையில் எந்தப் பகுதியையாவது மாற்ற முடியும் என்றால், எதை/எப்படி கொண்டு செல்வாய்?

மூன்றாவது கேள்வி திடீரென்று பரவசப்படுத்தும் epiphany தருணம்: உன் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை இந்த நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி, பொருத்தத்தையும் அனுபவத்தையும் விவரி!

நான்காம் ஆண்டு விழா

1. சோடா பாட்டிலை பார்த்தவுடன் எனக்கும் நான்காண்டு முடிந்தது ஞாபகத்துக்கு வந்தது.

2. வேலை தேடும் நல்ல நாளில் செப்டம்பர் 14 ஆங்கிலப் பதிவு தொடங்கப்பட்டது. அதற்கு கொஞ்ச நாள் முன்னாள் தமிழ் டிஸ்கியில் இரண்டு (ஜூலை 22 & 28)ஆரம்பித்து வைத்திருந்தேன்.

3. ஈ-தமிழ், ஸ்னாப் ஜட்ஜ், கில்லி, சற்றுமுன் – வருடத்துக்கு ஒரு விருப்பம்.

4. ராகாகி, மரத்தடியில் கிடைத்த மதிக்கத்தக்க நட்புகள் ஏராளம். பதிவுலகில், விரும்பிப் பாராட்டும் நட்புகளின் சொந்தம் இணையக் குழுக்களோடு ஒப்பிட்டால் செம குறைச்சல்.

இந்த வருடத்துக்கான நமைச்சல்:

மாட்ட வேண்டியவர்கள் எல்லாம் குழாம் காலத்திலேயே அகப்பட்டதாலா அல்லது ஒழுங்காகத் தேடிப் பிடிக்கவில்லையா அல்லது பாதி பரிச்சயம் ஆனவர்களை அம்போவென்று விட்டு, ஆற்றில் ஒரு கால் சேற்றில் திளைத்தல் இன்னொரு கால் என்று ஆனதாலா?

பள்ளிக்கூடம் = பதிவுக்கூடம்

Drabble Comics Blogs School

நன்றி: டிராபிள்

பள்ளிக்கும் பதிவர் களத்திற்கும் சில ஒற்றுமைகள்:

  1. பக்கத்து இருக்கைப் பையன் கிள்ளினால், திரும்ப கொடுக்க முயற்சிப்போம்.
  2. அப்படி பதிலடி தர முடியாவிட்டால், ‘டீச்சர்… கிள்றான்‘னு புகார் கொடுத்து, வகுப்பை விட்டு வெளியேற்ற பிரயத்தனப்படுவோம்.
  3. மிஸ்ஸுக்கு மிஸ்ஸைல் வந்தாலொழிய, கூடத்தை விட்டு வெளியேற்றப்பட மாட்டோம்.
  4. எடுத்துக் கொடுக்க, தோளில் கை போட, கிடைத்ததை பங்கிட நட்பு அமைப்போம்.
  5. அந்தக் காலத்தில‘ என்று பெருசுகள் சொர்க்கபூமியாக பழம்பாட்டை ஆட்டோகிரஃப் பாடுவோம்.
  6. எல்லாரும் ஒரே வண்ணத்தில் பட்டை சீருடை இட்டிருப்போம்.
  7. நாற்பதுக்கு கீழ் எடுத்தால் தனி கவனிப்பு கிடைக்கும்.
  8. நூறு வாங்குபவர்களை பார்த்தால் பொறாமை பீறிடும்.
  9. பள்ளியில் சேர்வதற்கு சிபாரிசோ நுழைவுத்தேர்வோ சான்றிதழ்களோ நன்கொடையோ வேண்டும்.
  10. பல பள்ளிகள் இருந்தாலும், ஒன்றுக்கு மட்டும் அடிதடி நடக்கும்.
  11. கொசுறு: ‘வேதம் புதிது‘ வசனம் ஞாபகமிருக்கா… அது போல் ‘நான் வளர்ந்துட்டேன்; நீங்க வளரவேயில்லையே?’ என்று கேட்கவும் வைக்கவும்.

USA Primary & Presidential Series – 5: Boston Phoenix

1. So you want to be fair and balanced? – News – The Phoenix: அமெரிக்க அரசியல் அறிய புகழ்பெற்ற பதிவுகள் –

2. The long-winded, winding road – News – The Phoenix: “The journey to the White House is paved with potholes”

  • அமெரிக்கா வந்த புதிதில் டிப்போடு சேர்த்து இருபது வெள்ளிக்கு முடிவெட்டிக் கொண்டதற்கு இருபது நாளுக்கு மேல் மூக்கால் அழுததுண்டு. நானூறு டாலருக்கு முடிதிருத்தியது ஊருக்குத் தெரிந்து விட்டதே என்று ஜான் எட்வர்ட்ஸ் வருந்துகிறார்.
  • 1952, 1968 – அமெரிக்க வீரர்கள் மரிக்கும் போர்கள் நடந்ததால், ஆளுங்கட்சி தோற்ற தேர்தல்கள். எனவே, சுதந்திர கட்சிக்கு வாய்ப்பு பிரகாசம்.

3. Size doesn’t matter – News – The Phoenix: மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. குட்டி மாகாணமாக இருந்தாலும், ஹொவர்ட் டீன் மாதிரி உற்சாகக் கத்தல் கூட நரி ஊளையிடலாக சித்தரிக்கப்பட்டு வழுக்கலாம். மங்களகரமான துவக்கம் முக்கியமானது.

  • Iowa – Jan 14
  • Nevada – Jan 19
  • New Hampshire – Jan 22
  • South Carolina – Jan 29
  • Florida – Jan 29 (?)

பராக் ஒபாமா: ஐயோவா, நெவாடாவில் வெல்வது பிரம்மப் பிரயத்தனம். நியு ஹாம்ஷைரிலும் இரண்டாவதாக வருவதற்குத்தான் வாய்ப்புகள் பிரகாசமாய் இருக்கிறது. கறுப்பர்கள் அதிக அளவில் உள்ள தென் கரோலினாவிலும் தோற்றால் அம்பேல்.

ஹில்லரி க்ளின்டன்: முன்னணி வேட்பாளர். சிங்கம் சிங்கிளாக எல்லாவற்றிலும் ஜெயித்தாக வேண்டிய நிர்ப்பந்தம். புருஷனாலேயே நியு ஹாம்ஷைரில் வெல்ல இயலவில்லை. ஆனால், அம்மணியும் கோட்டை விட்டால், பெப்ரவரி ஐந்தாம் தேதி பெரிய ஆப்பாகலாம்.

ஜான் எட்வர்ட்ஸ்: போன தடவை போட்டியிட்டதில் மிச்ச சொச்ச நல்ல பெயரில் காலந்தள்ளுகிறார். மனைவிக்குப் புற்றுநோய், எதார்த்தமான கருத்துக்களை பட்டென்று சொல்லி மக்களின் மனதைக் கொய்யும் மனைவி எல்லாம் இருந்தும் அந்த நானூறு டாலர் சிரைப்பை நினைவூட்டும் முகவெட்டு. தென் கரோலினாவில் பிறந்து, வட கரோலினாவை ஆண்டவர். ஐயவோவில் தோற்றால் சென்ற தடவை மாதிரி துணை ஜனாதிபதியாகும் கனவு கூட தகர்ந்து போகும்.

பில் ரிச்சர்ட்சன்: நெவாடாவில் பிலிம் காட்டினால் தாக்குப் பிடிப்பார். அங்கும் பூரணமாக சுழிக்கப்பட்டால், துணை ஜனாதிபதியாக தூது தொடங்கலாம்.

தற்போதைய நிலைப்படி கருத்துக்கணிப்பு ரேங்க்:

Iowa Nevada New Hampshire South Carolina
Barack Obama 3 2 or 3 2 1
Hillary Clinton 2 1 1 2
John Edwards 1 3 or 2 3 or 4 3
Bill Richardson 2 ??

4. The shape of things to come – News – The Phoenix: “The defining issues of each party’s campaign are being decided now” –

  • சென்ற முறை மாதிரி ஒசாமா வீடியோவில் அருளுரைப்பாரா,
  • வர்ஜினியா கல்லூரியில் சுட்டது போல் ஏதாவது கடைசி நிமிடத்தில் நிகழ்ந்து திசை திருப்புமா,
  • இராக் போர் – தேசப்பற்றா, தேவையில்லாத இழப்புகளா, தீவிரவாத வளர்ப்பா?
  • மைக்கேல் மூரின் சிக்கோ மனதைத் தொடுமா…

5. Across the universe – News – The Phoenix: “The Republicans are telescoping issues voters will likely still care about on Election Day 2008” – நாட்டுப் பாதுகாப்பை முன்னிறுத்தி, அமெரிக்காவை பயமுறுத்தி, எவ்வாறு குடியரசுக் கட்சியின் வேட்பாளர் அடுத்த ஜனாதிபதி ஆகிவிடலாம்?

6. Power brokers – News – The Phoenix: “Al Gore isn’t running (yet); neither is Elizabeth Edwards. But either could be a factor in an Obama win.”

அரசியல் என்பதே எப்பொழுது யாரை எவ்வளவு ஆதரிக்கிறார்கள் என்பதில் முடிந்து விடுகிறது. சாதிக் கூட்டணி என்கிறார்கள்; சீட் ஒப்பந்தம் என்பார்கள்; பண பேரம் என்று கிசுகிசுப்பார்கள்; பரஸ்பர பதவி ஒதுக்கீடு என்று கழுகுவார்கள். தமிழ்ப்பதிவுகளில் கூட முத்து (தமிழினி – ஒரு தமிழனின் பார்வை: இளவஞ்சிக்கு ஆதரவாக) தோள் கொடுப்பது போல், கை காட்டுகிற திசையில் வாக்குகள் செல்லும்.

ஹில்லரி பக்கம் ஆல் கோர் சாய்வதற்கு வாய்ப்பில்லை. எட்வர்ட்சா, ஒபாமாவா என்று சீர்தூக்கினால், முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கரை நியமித்து, சரித்திரம் கண்ட ஹீரோ வரிசையில் சேர கோர் விரும்புவார்.

Tamilveli.com – Some UI Thoughts

தமிழ்வெளி – இன் user interface குறித்து பயனராகத் தோன்றியவை:

1. உரல் (http://www.tamilveli.com/) ரொம்ப எளிதில் தட்டி்சி செல்லும்விதமாக இருக்கிறது. +1

2. எழுத்துக்களுக்கிடையே போதிய இடைவெளி இல்லை. வார்த்தை, வரி, பத்தி என்று எல்லாவற்றுக்கும் இடையே வெள்ளை நிறம் நிறைய வேண்டும். தற்போதைக்கு பார்த்தவுடன் மயக்கமா… கலக்கமா… குழப்பமா! -1

3. ‘அச்சு மாதிரி‘ அமர்க்களம். வேண்டிய பதிவுகளை தேர்ந்தெடுத்து, ஹாயாக பக்கங்களைப் புரட்டலாம். +1

4. சுட்டி செல்லாமல், அங்கேயே காட்டும் தேடல் அருமை +1ஆனால், ‘முன்னோட்டம் மட்டும்‘ அல்லது ‘முழுமையான இடுகை‘ என்று இரண்டு தேர்வுகளை வாசகர்களிடமே விடலாம். மொத்தமாக் காட்டுவதால், தேடல் முடிவுகள் வருவதற்கு தாமதமாகிறது. -1

பழையதிலிருந்து புதிதுக்கு‘ & ‘புதியதிலிருந்து பழையதற்கு‘ மக்கர் செய்வதால் -1.

5. திடீரென்று மாமல்லபுர ஓவியம் எட்டிப் பார்க்கிறது. பல பக்கங்களில் வேறு இலச்சினைகள் வருகிறது. இடைமுகத்தை நிலையாக நிறுத்தலாம். (0)

6. உரல்களை சுட்டினால், தேன்கூடு, தமிழ்மணம் போல் இங்கும் புத்தம்புதிய சாளரங்களை (அல்லது tabs) திறந்து, இடுகையைக் காண்பிக்கிறார்கள். அதே சாளரத்தில் வலைப்பதிவை படிக்கும் வசதி வேண்டும். பயனரே விருப்பப்பட்டால், தனியாக திறந்து கொள்வார் என்று அவரின் இச்சைக்கே விட்டுவிடும் இடைமுகம் வேண்டும். (0)

7. பக்கத்தின் முடிவுக்கு சென்றவுடன் ‘முந்தைய இடுகைகள்‘ என்றோ, ‘பழைய பதிவுகள்‘ என்றோ, ப்ளாக்ஸ்பாட் (அல்லது) வோர்ட்பிரெஸ்.காம் தளத்தில் ‘Older Posts‘ என்று தூண்டில் இழுப்பது போல் போட்டு வைக்கலாம். மீண்டும் மவுசைத் தூக்கிக் கொண்டு, ஹோம் செல்ல நேரிடுவதால் -1

8. ‘இதர வகை பதிவுகள்‘ என்று சோத்தாங்கைப் பக்கம் வருவது எந்த வகை? எப்படி அங்கு இடுகைகள் இடம்பிடிக்கின்றன? (0)

9. ‘பின்னூட்டங்கள்‘ என்னும் பகுதியில் பழைய மறுமொழிகளின் நிலவரங்களை எவ்வாறு பார்ப்பது? பின்னூட்ட எண்ணிக்கைக்கு பக்கத்தில் – 0, 1, 2 என்று எண்கள் வருகிறதே… அது எதைக் குறிக்கிறது?

(எத்தனை பேர் அழுத்தி உள்ளே சென்றார்கள் என்னும் எண்ணிக்கை என்றால், பின்னூட்டங்களில் இந்த எண்ணைத் தவிர்த்து விடலாம். இடுகைகளிலும் இந்த எண் காணப்படுவது, பரபரப்பான பதிவுக்கு செல்ல வழிகாட்டுவது வசதிதான் என்றாலும், மறுமொழிப் பட்டியலில் குழப்பம் கொடுக்கலாம்.)

10. #8, #9 போல் எழும் வழமையாக கேட்கும் கேள்விகளுக்கு FAQ போட்டு, உதவிப் பக்கங்களைப் பார்க்க சொல்லலாம்.

  • தேன்கூடு என்றால் ‘பல மரம் கண்ட தச்சன்‘ போல் அகரமுதலி, சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ற personalization + customization;
  • தமிழ்மணம் என்றால் ‘சூடான இடுகைகள்’, பூங்கா தேர்ந்தெடுப்புகள்;
  • என்பது போல் தற்போதைக்கு தமிழ்வெளிக்கு அடையாளங்கள், USP இல்லாதது மீண்டும் மீண்டும் வரத் தூண்டாமல், எப்பொழுதோ மட்டுமே வரவைக்கிறது.

ஏற்கனவே இருப்பதோடு திருப்திப்பட்டுக் கொள்ளாமல் தமிழ்ப்ளாக்ஸ்.காம் போல் புதியவை வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. மாற்று முயற்சிகளை முன்னெடுத்து செல்லும் தமிழ்வெளிக்கு பாராட்டு கலந்த வாழ்த்துக்கள்.

அப்பிராணி அந்தாதி

தமிழ்மணத்தில் கண்ட சங்கிலிப் பின்னல் தலைப்புகளும் தொடர் அந்தாதிப் பதிவுகளும்…

  1. நீயூஸ் மீடியாக்களை எதால் அடிக்கலாம்? : சிவபாலன்
    அடிச்சுட்டோம் இல்ல செஞ்சுரி! : ambi
  2. மாங்காயோடு மாங்காய்கள் (பெ.போ.க-3) : ஆசிப் மீரான்
    மாம்பழமாம்…..மாம்பழம் எமனாகும் மாம்பழம் : கண்மணி
  3. பில்லைக் கொல்லு : சுதர்சன்.கோபால்
    வவ்வலை விடப்போவதில்லை : madscribbler
  4. யார் அந்த சக்தி : சாம்பார் வடை
    சக்தி டிரான்ஸ்போர்ட் : ILA(a)இளா

Self Introspection & Tamil Blogs

From Dinamani Kathir

அந்த ஹோட்டல் முதலாளி ராபர்ட்டிடம் கேட்டார்: “உன்னால் ஒரு நாளைக்கு எத்தனை தவளைகள் சப்ளை செய்ய முடியும். ஒரு தவளைக்கு 10 ரூபாய் தருகிறேன்.”

“எங்கள் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் குளத்தில் இரவுப் பொழுதில் ஒரே தவளை சத்தம். ஒரு நாளைக்கு ஆயிரம் தவளைகள்கூட சப்ளை செய்ய முடியும்” என்றான்.

மறுநாள் இரண்டே தவளைகளோடு வந்தான் ராபர்ட், “இந்த இரண்டே தவளைதான் அவ்வளவு சத்தத்துக்கும் காரணம்” என்றான் சலித்துக் கொண்டு.

நீதி: வெற்றுக்கூச்சலை வைத்து ஆளைக் கணக்குப் போடாதே!

Tamil Blog 30 – Index (Jun 28)

மார்ச் 29 அன்று பிள்லையார் சுழி போட்டது. கொஞ்சம் மாற்றங்களுடன்…

டௌ ஜோன்ஸ், FTSE மாதிரி தமிழுக்கு ஒரு 30 போட்டால் (எந்த வரிசையும் இல்லை)

க்வாண்டிடி & க்வாலிட்டியை முன்வைத்து இந்த முப்பதைத் க்வார்ட்டருக்கு ஒரு தடவையாவது தொடர்ந்து மாற்றிக் கொண்டிருக்க எண்ணம்.

USA Primary & Presidential Series – 4: ThinkProgress & Vote-Smart

தேர்தல் குறித்த தகவல்களை, அதிகம் பிரபலமாகக் கூடாத விஷயங்களை அறிய, பின்னணி காய்நகர்த்தல்களை தெரிந்து கொள்ள இரண்டு வலையகங்கள்:

1. Think Progress

சிறு சிறு தகவல். அதன் தொடர்பான விழியம் என்று வல்லுநர்கள் முதல் வாக்காளர் பட்டியலில் இல்லாத என்னைப் போன்றோர் வரை அனுதினமும் பார்வையிடும் தளம்.

அமெரிக்காவில் என்ன பிரச்சினைகள் முக்கியமானவை என்று அறிய நேரிடும்போது இரத்தக்கொதிப்பு அதிகமாகலாம்.

2. Project Vote Smart – American Government, Elections, Candidates and Voting

ஜனாதிபதி தேர்தலுக்கு ஒன்றரை வருடம் இருந்தாலும், பிரச்சாரம் அனல் பறக்கிறது. அன்றைய தேதியில் என்ன சொன்னார்கள், எப்படி எதிர்வினைத்தார்கள், எங்கே நானூறு டாலரில் சிகையலங்காரம் நடந்தது என்பதுதான் தெரிகிறது.

இவர்கள் வேட்பாளர்களின் ஜாதகத்தை கொடுக்கிறார்கள். சட்டசபையில் எப்படி வாக்களித்திருக்கிறார், தற்போதுள்ளதாக பறை சாற்றும் கொள்கைப்பிடிப்புக்காக எந்த அளவு கொடி பிடித்திருக்கிறார், தேர்தல் நிதியை எங்கிருந்து கையேந்துகிறார், யாருக்கு விசுவாசமாக வாலாட்டுவார என்றெல்லாம் அறிய முடியும்.

மாகாணவாரியாக உள்ளூர் பிரச்சினைகளைக் குறித்தும் விரிவான அறிமுகம் கிடைக்கிறது.