Category Archives: Answers

Arasu Bathilgal – Tamil Nadu Politics

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

“காற்று எப்போதும் ஒரே திசையில் வீசாது” என்பதற்கு நல்லதொரு உதாரணம்?

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவானேன், பாவம் அந்தச் சகோதரர்களை விட்டு விடுவோம்.

—————————————————————————–

பி.ராஜாமணி பெரியசாமி, முத்தம்பட்டி.

அடுத்தடுத்து வெற்றி கிட்டாமைக்கு எது காரணமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

யாரைச் சொல்கிறீர்கள்? ஜெயலலிதாவையா?.

Arasu Bathilgal

1. கே.பலராமன், கடலூர்.

கலைஞர் டி.வி. எப்படி இருக்கும்?

‘முரசொலி’ மாதிரி இருக்குமோ?

—————————————————————————

2. துரைராஜ், திருப்பூர்.

அசின், த்ரிஷா, நயன்தாரா, பாவனா என்று வரிசையாகப் பலர் வந்தாலும் சிம்ரன் விட்டுச் சென்ற இடம் காலி யாகவே இருக்கிறதே?

குறிஞ்சி மலர்கள் உடனுக்குடன் பூக்காது.
—————————————————————————
3. சந்திரகுமார், தில்லையாடி.

‘டாக்டர் ராமதாஸ் காந்தியைப் போல் சிந்தனை செய்கிறார்’ என்று கலைஞர் சொல்லியிருக்கிறாரே?

பல நேரங்களில் ஒத்துழையாமை இயக்கம் நடத்துவதால் இருக்கலாம்.