Category Archives: விளம்பரம்

பராக் ஒபாமாவின் புதிய விளம்பரங்கள் – பென்சில்வேனியா பிரச்சாரம்

1. “Opportunity

ஒபாமாவின் தாத்தா, பாட்டி, மற்றும் தனியாக விடப்பட்ட தாய் ஆகிய பின்னணியை விளக்கி, அறிமுகம் செய்கிறது. நடுத்தர வர்க்கத்திற்கான வரிவிலக்கை ஆதரிப்பவர், வேலைவாய்ப்பை பெருக்குபவர் என்று விரிகிறது.

இனம் குறித்த சர்ச்சை மிகுந்திருப்பதால், இந்த விளம்பரத்தில் ஒபாமாவும் அமெரிக்க சிந்தனையை உடையவர், நாட்டுப்பற்று மிக்கவர், சராசரி Caucasian பிரச்சினைகளை உணர்ந்தவர் என்பதை குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஆப்பிரிக்க – அமெரிக்கர்களை மட்டுமல்லாமல், தொழிற்சாலையில் வேலை பார்க்கும் வெள்ளை ஆண்களைக் குறிவைத்து அமைந்திருக்கிறது.

2. “Toughest”

வணிக நோக்கத்திற்கான குழுக்களுக்கு எதிராக செயல்படுகிறார் என்னும் விளம்பரம்:

3. “Carry”

‘பாரம்பரியவாதி, தாராளவாதி வாக்காளர் என்று அமெரிக்காவை பிரிக்காமல், அனைத்து சாராரையும் ஒருங்கிணைப்பவர் – பராக் ஒபாமா’ என்கிறது.

'மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி': ஒபாமா

மக்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெறும் முயற்சியில் ஹிலாரி இறங்கியிருப்பதாக பராக் ஒபாமா குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒபாமாவும், ஹிலாரியும் கடுமையாக மோதிவருகின்றனர். இந்தப் போட்டியில் ஹிலாரியைக் காட்டிலும் சற்று முன்னிலையில் இருக்கிறார் ஒபாமா. வரும் 4-ம் தேதி ஓஹியோ, டெக்ஸாஸ் ஆகிய முக்கிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இந்த இரு மாநிலங்களிலும் ஹிலாரிக்கு தோல்வி ஏற்பட்டால் அதன்பிறகு அவர் போட்டியில் இருப்பதில் அர்த்தமில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஹிலாரி தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில், குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் காட்சி முதலில் காட்டப்படுகிறது. தேசிய பாதுகாப்பு அவசர நிலை தொடர்பான தொலைபேசி அழைப்பு வந்தால் அதற்குப் பதிலளிக்கக்கூடிய தகுதியானவர் யார் என்ற கேள்வியுடன் விளம்பரப்படம் முடிவடைகிறது.

பெண்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் இந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த விளம்பரம்:


அதை கிண்டலடிக்கும் ஒபாமா ஆதரவாளரின் விமர்சனம்:

சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் ஜாக் நிக்கல்ஸன் க்ளின்டனை ஆதரித்தார்; அந்த விளம்பரம்:

டெக்ஸாஸில் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய ஒபாமா, தாம் இது போன்ற விளம்பரங்களை பார்த்திருப்பதாகவும், இது மக்களின் பயமுறுத்தி வாக்குகளைப் பெறும் முயற்சி எனவும் கூறினார்.

இந்தமுறை இதுபோன்ற முயற்சிகள் வெற்றி பெறப்போவதில்லை. யார் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அந்தப் பிரச்னைக்கு எந்தமாதிரியான தீர்வை நீங்கள் தருவீர்கள் என்பதுதான் கேள்வி என்றார் ஒபாமா.

தொடர்ந்து 11 மாநிலங்களில் நடந்த வேட்பாளர் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள ஒபாமா டெக்ஸாஸ் மற்றும் ஓஹியோவில் வெற்றி பெற்றுவிட்டால் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள், டெக்ஸாஸ் மாநிலத்தில் ஒபாமாவுக்கு 48 சதவீத வாக்குகளும், ஹிலாரிக்கு 45 சதவீத வாக்குகளும் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளன.

எனினும் கணக்கீட்டு தவறுகளால் 4 சதவீத வாக்குகள் மாறக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி

ஒபாமா x ஹில்லரி – விளம்பர மோதல்: டிவி

1. விஸ்கான்சினில் ஹில்லரியின் அம்பு. ‘விவாதம் செய்ய அழைத்தால், ஒபாமா ஓடி ஒளிந்து கொள்கிறார்’ என்கிறார். ‘வெறும் வெட்டிப்பேச்சு உதவுமா’ என்று அஸ்திரம் பலமாகிறது:

அதன் தொடர்ச்சி:

2. சென்ற டிவி விளம்பரத்திற்கான பதிலடி. ‘பழைய குருடி; கதவைத் திறடி’ என்பது போல் அதே அரசியல் என்று சாடுகிறார்.

3. ஹில்லாரி க்ளின்டனின் நேர்மறையான விளம்பரம். எந்த விஷயங்களில் ஒபாமாவின் திட்டங்கள் சறுக்குகின்றன என்பதைத் தெளிவாக்குகின்றன:

4. இது சும்மா ஜாலிக்கு… நக்கல் விட்டுக்கறாங்க:

5. இவர்களின் விளம்பரங்களைக் குறித்த நியு யார்க் டைம்ஸின் ஆய்வு (பெரிய செவ்வ்வாய்க்கு முன்பு தொகுக்கப்பட்டது)