Category Archives: பொது

ஹில்லாரிக்கு ஆதரவு பெருகுகிறது

From That’s tamil.com……….

ஹில்லாரிக்கு ஆதரவு பெருகுகிறது
சனிக்கிழமை, மே 3, 2008
இலவச நியூஸ் லெட்டர் பெற RSS

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான வாக்கெடுப்பில் திடீரென ஹில்லாரிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இதனால் ஓபாமா அடுத்தடுத்து தோல்வியை சந்திக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக ஜான் மெக்கெய்ன் தேர்வாகி விட்டார். ஆனால் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் யார் என்பதில்தான் பெரும் இழுபறி நிலவுகிறது.

இக்கட்சியின் சார்பில் களத்தில் நிற்கும் பாரக் ஓபாமாவுக்கும், ஹில்லாரி கிளிண்டனுக்கும் இடையே பெரும் இழுபறி காணப்படுகிறது.

இருவரும் மாறி மாறி வெற்றிகளைத் தட்டிச் சென்று கொண்டிருப்பதால், யார் வேட்பாளராக வருவார் என்பதில் உறுதியான நிலை இல்லை. வாக்குகள் எண்ணிக்கையிலும், வெற்றிகள் எண்ணிக்கையிலும் பாரக் ஓபாமாதான் தற்போதைக்கு முன்னணியில் இருக்கிறார்.

ஆனால் தற்போது ஹில்லாரிக்கு ஆதரவாக அலை வீச ஆரம்பித்துள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனவே மீதம் உள்ள மாகாணங்களில் ஹில்லாரிக்கு கணிசமான வெற்றிகள் கிடைக்கக் கூடும் என்று தெரிகிறது. இது நிச்சயம் ஓபாமாவுக்கு பின்னடைவைக் கொடுக்கும் என்று அமெரிக்க தேர்தல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹில்லாரி தனக்கு சிக்கலைக் கொடுத்த விஷயங்களை அடையாளம் கொண்டு அதை சரி செய்து வருகிறார். தனது தேர்தல் மேனேஜர்களையும் அவர் அதிரடியாக நீக்கி சரியான ஆட்களை அந்த இடத்திற்குக் கொண்டு வந்துள்ளார். எனவே ஹில்லாரிக்கு இப்போது ஆதரவு அலை வீச ஆரம்பித்துள்ளது.

எனவே இனி வரும் மாகாண வாக்கெடுப்பில் ஹில்லாரிக்கும், ஓபாமாவுக்கும் இடையே நிச்சயம் கடும் போட்டி நிலவும். ஹில்லாரிக்கு கணிசமான வெற்றிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னிரவு மூன்று மணி தொலைபேசி: காமிக்ஸ்

முதல் பாகம்
Comic Strip - Hillary Clinton vs Barak Obama

இரண்டாம் பாகம்
Cartoon Strip

மூன்றாம் பாகம்
Choking

நன்றி: CANDORVILLE daily comics by Darrin Bell » Archive » Candorville: 4/30/2008- Choking, part 3 | 5/1/2008- part 4

பென்சில்வேனியா மாநில ப்ரைமரியில் ஹில்லரி வெற்றி ( 8 சதவிகிதம்)

<!– /* Font Definitions */ @font-face {font-family:Latha; panose-1:2 0 4 0 0 0 0 0 0 0; mso-font-charset:1; mso-generic-font-family:auto; mso-font-pitch:variable; mso-font-signature:1048576 0 0 0 0 0;} /* Style Definitions */ p.MsoNormal, li.MsoNormal, div.MsoNormal {mso-style-parent:””; margin:0in; margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:12.0pt; font-family:”Times New Roman”; mso-fareast-font-family:”Times New Roman”; mso-bidi-font-family:”Times New Roman”; mso-bidi-language:AR-SA;} a:link, span.MsoHyperlink {color:black; text-decoration:underline; text-underline:single;} a:visited, span.MsoHyperlinkFollowed {color:red; text-decoration:underline; text-underline:single;} @page Section1 {size:8.5in 11.0in; margin:1.0in 1.25in 1.0in 1.25in; mso-header-margin:.5in; mso-footer-margin:.5in; mso-paper-source:0;} div.Section1 {page:Section1;} –>
/* Style Definitions */
table.MsoNormalTable
{mso-style-name:”Table Normal”;
mso-tstyle-rowband-size:0;
mso-tstyle-colband-size:0;
mso-style-noshow:yes;
mso-style-parent:””;
mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt;
mso-para-margin:0in;
mso-para-margin-bottom:.0001pt;
mso-pagination:widow-orphan;
font-size:10.0pt;
font-family:”Times New Roman”;
mso-ansi-language:#0400;
mso-fareast-language:#0400;
mso-bidi-language:#0400;}

http://www.cnn.com/2008/POLITICS/04/22/pa.primary/index.html

அப்பாடி, ஒரு வழியாக தேர்தல் வந்து முடிந்தது!!

Boy என்றால் பையன்?

உட்கட்சி தேர்தல்களுக்கிடையே ஒரு இடைவெளி வந்திருந்தாலும் அமெரிக்கத் தேர்தல் களத்தில் சூடு தணியவில்லை. இந்த இடைவெளியில் போட்டியாளர்கள் எந்தத் தேர்தல் இலக்குமின்றி பேசிக்கொண்டிருக்க நேர்ந்தது. அவரவரின் சுய ரூபங்கள் கொஞ்சம் வெளியாகிவிட்டிருப்பதும் உண்மை.

ஹில்லரி பொய் சொல்லி மாட்டிக்கொண்டார். ஒரு முறையல்ல இரு முறைகள். (காண்க: பொய் சொல்லக் கூடாது ஹில்லரி). ஜான் மெக்கெய்ன் இராக்கில் அல் கொய்தா, ஷியா, சன்னி, இரான் குறித்த தன் புரிதலற்ற புரிதலை வெளிக்காட்டினார். பராக் ஒபாமாவின் பாஸ்டர் பிரச்சனையை அடுத்து சான் ஃப்ரான்சிஸ்கோ கூட்டமொன்றில் சாதாரண அமெரிக்க குடிமக்கள் குறித்து பேசிய பேச்சொன்றை பிடித்துக் கொண்டு அரசியல் ஆட்டம் தொடர்ந்து நடைபெறுகிறது.

ஹில்லரிக்க்கு அவ்வப்போது வரும் ஒற்றைத் தலைவலியாக கணவர் பில் கிளிண்டன் இருந்து வருகிறார். இந்த வாரம் அம்மணி அவரை அழைத்து ‘வாயை மூடும்’ என்றே சொல்லவேண்டியதாயிற்று. போஸ்னியாவில் துப்பாக்கிச் சண்டைக்கு மத்தியில் ஓடி ஒளிந்து சென்று சேர்ந்ததாக ஹில்லரி சொன்னப் பொய் உண்மைதான் என்று பில் உளறிவிட ஹில்லரி ‘இனிமேல் போஸ்னியா குறித்து எதுவும் பேசாதே’ எனச் சொல்லிவிட்டார்.

ஒபாமா சான் ஃப்ரான்சிஸ்கோ கூட்டத்தில் பேசும்போது சாதாரண அமெரிக்கர்கள் அமெரிக்கப் பொருளாதாரம் குறித்து கசப்படைந்துள்ளதால்(bitter) அதை தவிர்த்து கடவுள் நம்பிக்கை, துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை ஆகிய (முக்கியமில்லாத) பிரச்சனைகளின் அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என ஒரு உண்மையை போட்டுடைத்தார். அரசியல் தெரியாத மனிதர். இது பொதுமக்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றபோதும் ஹில்லரியும் மெக்கெய்னும் இந்தக் ‘கசப்பு’ பேச்சை சர்க்கரை சேர்த்து தங்களுக்கு இனிப்பாக பரிமாறிக்கொண்டிருக்கின்றனர். மெக்கெய்ன் ஒபாமாவின் இந்தப் பேச்சை முன்வைத்து மின்னஞ்சல்வழியே காசு திரட்ட பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

ஆனால் மக்களிடம் ‘கசப்பு’ பேச்சு குறித்த கசப்பு இல்லை என்பதை ஹில்லரி இந்தப் பேச்சை எடுத்ததும் ‘பூ’ என ஊளையிட்டு எதிர்ப்பு தெரிவித்து மக்களே தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒபாமாவின் எதிரணியினரும் சில ஊடகவியலாலர்களும் ஊதிப் பெருக்கிக்கொண்டிருக்கின்றனர்.

இந்த வாரம் அதிர்ச்சியூட்டும் விதமாக அமைந்தது ரிப்பப்ளிக்கன்(குடியரசுக் கட்சி) செனெட்டர் ஜியாஃப் டேவிஸ் ஒபாமாவை ‘boy’ என அழைத்தது. அமெரிக்காவில் முன்பு கறுப்பின அடிமைகளை ‘boy’ என அழைப்பது வழக்கம். வேற்று நிற பெரியவர்களை வெள்ளையர்கள் boy என அழைத்தால் கீழானவன் என அழைப்பதாக அர்த்தம். இதற்காக டேவிஸ் நேரடியாகச் சென்று மன்னிப்பும் கேட்டுள்ளார். எனினும் பொதுவில் இப்படி பேசப்பட்டது அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது.

இந்த வாரம் கவனிக்கத்தக்கதாக அமைந்தது டைம் பத்திரிகையும், MSNBC தொலைக்காட்சியும் ஒபாமாவின் தாய் குறித்து செய்திகளை வெளியிட்டிருந்தது. ஒபாமாவின் ‘வெள்ளை’ பின்னணியை முன்னிறுத்த நடந்த முயற்சியாகவே இதைப் பார்க்கத் தோன்றுகிறது. இது ஒரு பக்கப் பார்வையேயாயினும் நிராகரிக்கப்படவேண்டியதல்ல. டைம் கவர் ஸ்டோரியாக இதை வெளியிட்டிருந்தது கவனிக்கத் தக்கது.

ஏப்ரல் 22 பென்சல்வேனியாவில் உட்கட்சித் தேர்தல். ஹில்லரி ஒபாமாவின் தோளிலிருந்து இறங்குவாரா அல்லது இன்னும் கொஞ்சம் ஆதரவைத் திரட்டிக்கொண்டு ஒபாமாவிற்கு உப-அதிபர் பதவியை வாக்களித்து பகடி செய்வாரா தெரியவில்லை.

McCain Chimes in on Obama’s ‘Bitter’ Comment
GOP Congressman Apologizes for Calling Obama ‘Boy’
Bill Clinton defends Bosnia remarks

ஹில்லரியின் வசந்தம்!

அமெரிக்காவில் வசந்த காலம் வந்து கொண்டிருக்கிறது…

எங்கும், {குறைந்த பட்சம் தெற்க்கே] பழுப்பு நிற புல்லும், இலைகளும் பச்சையாக மாறி விட்டது. முல்லையின் புது மொக்குகள் வந்து விட்டது… எங்கும் வசந்த கால தோற்ற்ங்கள்…

 

ஹில்லரியின் முகாமிலும் எங்கும் மகிழ்ச்சி. ஆம், டெக்ஸாஸின் வெற்றியும், ஓகையோவின் அபாரமான வெற்றியும், ஹில்லரிக்கு புது வாழ்வையும் வசந்ததையும் தந்து இருக்கிறது.. இந்த பெண்மணியை பார்க்கும் பொது மன உறுதி படைத்த மார்கரெட் தாட்செர் ஞாபகம் வருகிறார். ஸ்ப்ரிங்ல் “spring”  போல எழும்பி வந்து விட்டார்!

 

பல மாதங்கள் முன்பு ஜனநாயக கட்சிக்கு யார் வேட்பாளர் என்று கேட்டால் பச்சை குழந்தையும் கிளிண்டன் என்று சொல்லும். குடியரசு கட்சி வேட்பாளர் யார் என்று தெரியாத நிலமை. பின்னர் ஓபாமா தொடர் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே இருக்க ஹில்லரி அணியில் சுனக்கம். ஓபாமா காற்றில் ஹில்லரி இருந்த இடம் தெரியவில்லை. குடியரசு கட்சியில் “மூட்டை” கட்டுவதர்க்கு தயாராக இருந்த மெக்கைன் இப்பொது அதிகார பூர்வமான வேட்பாளர். கிட்டத்தட்ட டெமாக்ரட் அணி ஓபாமாதான் தேர்வு என்று நம்ப அரம்பித்து இருந்தனர். உண்மையில் இந்த சமயத்தில் ஹில்லரி ப்ரைமரி தேர்தலில் இருந்து விலகிக் கொள்வது ஜனநாயக கட்சிக்கு நல்லது  என்ற எண்ணம் பெரும்பாலான மக்களுக்கு உருவாகி இருந்திருந்தது. பெரும்பாலோர் ஒரு வேளை டெக்ஸாஸ், ஓகையோ தேர்தல்களுக்குப் பின் ஜனாதிபதி தேர்தலுக்கு ஹில்லரி முழுக்கு போடுவார் என்று இருக்க, நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் எதும் இல்லை அல்லவா?   நிலமை தலை கீழாய் திடீரென மாறி விட்டது. இந்த பெண்மணியை பார்க்கோம்பொது மன உறுதி படைத்த மார்கரெட் தாட்செர் ஞாபகம் வருகிறார். ஸ்ப்ரிங்ல் “spiring” போல எழும்பி வந்து விட்டார்!

இதைத் தொடர்ந்து பென்சில்வேனியாவிலும் வெற்றி பெறக்கூடும். இதன் மூலம் அனைத்து பெரிய (ஓபாமாவின் சொந்த மாநிலமான இல்லினாய் தவிர) மாநிலஙகளிலும் பெரிய ஆதரவு பெற்றிருக்கிறார். ஓபாமா வென்ற மாநிலங்களில் பெரும்பாலும் குடியரசு கட்சியினரே வெற்றி பெருகின்றனர்.  “Battle Ground States” என்று கருதப்படும் Florida, Ohio, New Mexico, Arkansas எல்லாவற்றிலும் கூட ஹில்லரி வெற்றி. இப்பொது இவரது மதிப்பு கருத்து கணிப்பிலும் உயர்ந்து இருக்கிறது. இது தவிர ஓபாமா எப்படி தன் மீதான தாக்குதல்களை சமாளிப்பார் என்பது குறித்து  ஜனநாயாக கட்சியிலும் கொஞசம் குழப்பம் அதிகமாகி இருக்கிறது.

 

இவர் பினிக்ஸ் பறவையாக வந்ததர்க்கு பல காரணங்களை அலசுகிறார்கள்

 

முதலில் SATURDAY Night Live’ ல் ஜனநாயக கட்சி வாக்கு வாதங்களை கிண்டல் செய்ததை சாமர்த்திய்மாக தன் பக்க ஆதரவாக திருப்பி விட்டார்.

 

[இந்த link’ Youtube‘ இருந்து நீக்கி விட்டார்கள். ஆனல் தன்னை போலவே வேடம் இடும் பெண் ஒருவரோடு SNL இருப்பதை பார்க்கலாம்

 They did a re-enactment of the CNN debate and mocked the media for their ridiculous bias in favor of Obama. One of the questions to “Obama” was “Can we get you anything?” And another: “Are you mad at me?  At one point “Hillary” tried to interrupt and they scolded her and told her she owed everyone  an “Obamapology”. The funniest moment for me though was when the woman playing Campbell Brown had just finished listening to one of Obama’s answers and she looked to be having a very intimate uhhh reaction like a tingle in her leg, some might say]….

 

ஊடகங்கள் பெரும்பாலும் ஓபாமாவை கனிவாய் கவனித்தும் தன்னையே முதலில் குறி வைப்பது குறித்தும், அழுத்தம் திருத்தமாக வாக்களர்கள் மனத்தில் நிறுத்தினார்…..

http://www.bulletpointjournal.com/2008/03/video-of-hillary-clinton-on-saturday.html

 

Hillary Clinton recalls SNL parody: Does Obama want pillow?

 

ஓபாமாவைக் கிண்டல் செய்து பல பேச்சுக்கள்…… (ஏதோ கனவு உலகத்தில் இருக்கிறார்!)

http://www.youtube.com/watch?v=a1ckrEeHDRY

 

NAFTA பற்றிய கேள்விகளுக்கு ஓபாமா சரியான விடை தெரியாமலும், குழப்பியதும் பெரிய சறுககல்களே.  கனடா அரசாங்கத்தில் தந்த மறைமுக உறுதியையும் மறைக்க முயன்றார்.

 

 CTV on Obama, Clinton and NAFTA

 

http://www.youtube.com/watch?v=jAJYMgX4JuU

 

இது தவிர தேசிய பாதுகாப்பு குறித்த  அச்சங்ளையும் வெளியிட்டார்.

 

இந்த ஹில்லரியின் வெற்றி டெமொக்ரட் கட்சியில் புது சிக்கல்களை ஆரம்பித்து இருக்கிறது……… அப்புறம் அது குறித்து அலசுவோம்!

கனவு காணுங்கள் – ஒபாமா

என்ன அப்துல் கலாம் மாதிரி ஒபாமா இறங்கிவிட்டார் என்று நினைக்வேண்டாம். அவர் சொன்னது ஹில்லாரியை நம்மை அல்ல. இவர்களின் சண்டை குழையடியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்தால் அடுத்த கட்ட சண்டைக்கு தயாராகலாம். அடுத்த கட்டத்தில் மெக்கெயினை சந்திக்க வேண்டும் அதில் கட்டாயம் தாவு தீருவது நிச்சயம். அனுபவமிக்க மெக்கெயினை கொஞ்சமாவது ஹில்லாரி சமாளிப்பார்.ஒபாமா தேறமாட்டார். அனுபவமில்லை அனுபவமில்லைன்னே ஒரங்கட்டிவிடுவார் மெக்கெயின். ஹில்லாரி முன்னுக்கு பின் முரணாக பேசிவருகிறார் அவரும் தனியாக நின்றால் உதை வாங்குவது நிச்சயம். இவர்கள் இருவரும் கடைசியில் ஒன்றாக ஜனாதிபதி உப- ஜனாதிபதி என்று (dream ticket) போட்டி போடலாம் என்றும் பேசி வருகிறார்கள். இதற்கு போனவாரம் ஹில்லாரி கொஞ்சம் நூல் விட்டு பார்த்தார். அதாவது ஹில்லாரி தலையாம் ஒபாமா வாலாம் நல்லாயிருக்கும் அப்படின்னு.’நீ கொஞ்சம் அவல் எடுத்துட்டு வா நான் கொஞ்சம் உமி எடுத்துட்டு வரேன் ரெண்டு பேரும் ஊதி ஊதி சாப்பிடலாம்’ அப்படிங்கற மாதிரி இல்லை. உதை வாங்குவது இந்தம்மா ஒபாமா வாலா இருக்கணுமாம். அதுக்கு தான் ஒபாமா இப்படி சொல்லி இருக்கார். யாரு பாத்து என்ன கேள்வி கேட்டே அப்படின்னு வாங்கு வாங்குன்னு வாங்கி இருக்கார். இங்கன போய் படிங்க.

ஓஹையொ நிலவரம்: ஹில்லரி கிளிண்டன் வெற்றி

Clinton Wins Democratic Primary in Ohio, networks say.

குடியரசு கட்சி அதிகாரப்பூர்வமான வேட்பாளர் ஜான் மெக்கைன்

ஜனநாயக கட்சி: 

 

ரோட் ஐலாண்ட் (Rhode Island):
  ஹில்லரி கிளிண்டன் வெற்றி


டெக்ஸாஸ் ப்ரைமரி
/ ஓஹையொ நிலவரம்: ஓபாமா கிளிண்டன்  இழு பறி

ஓஹையொ நிலவரம் ஜான் மெக்கைன் வெற்றி/ஓபாமா – கிளிண்டன் இழு பறி

ஓஹையொ நிலவரம் ஜான் மெக்கைன் வெற்றி (CNN’s Projection)

குடியரசு கட்சி அதிகாரப்பூர்வமான வேட்பாளர்  ஜான் மெக்கைன்??

 

ஓஹையொ நிலவரம்:  ஜான் மெக்கைன் வெற்றி (CNN’s Projection)

ஜனநாயக கட்சி:  ஓபாமா கிளிண்டன்  இழு பறி

டெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு வேளை ஹில்லரி கிளிண்டன் குடியரசு கட்சியினரால் வெற்றி பெறக்கூடும்?

டெக்ஸாஸ் ப்ரைமரி நிலவரம் : ஒரு வேளை ஹில்லரி கிளிண்டன் குடியரசு கட்சியினரால் வெற்றி பெறக்கூடும்?

ரஷ் லிம்பாக்:( தீவிர வலது சாரிConservative Radio Host): உங்கள் வாக்கு கிளிண்டன்டனுக்கே! என்ன காரணம்? கிளிக்குங்கள்

 

http://www.middletownjournal.com/hp/content/oh/story/news/local/2008/03/04/mj030408switchweb.html