Category Archives: பணம்

மே 10 – மெகெயின் சிறப்பு செய்திகள்

1. ஒலிவாங்கியை தலைகீழாகப் பிடித்த ஜான் மெக்கெயின்

Republican Candidate for President

நன்றி: John McCain Loses His Bearing With Microphone – The Jed Report

2. ஜான் மெகெயினின் மனைவி சிண்டி மதுபான நிறுவனத்தின் முதலாளி. அந்த நிறுவனத்தின் மறுவிற்பனையாருக்கு சொந்தமான விமானத்தை சகாய விலையில் வாடகைக்கு பயன்படுத்துகிறார் மெக்கெயின்.

சட்டத்தில் இருக்கும் ஓட்டையை பயன்படுத்தி, பிரச்சாரத்தின் போது மனைவியும் அருகில் இருக்கும் தேவையை சுட்டிக்காட்டி, தான் இயற்றிய சட்டத்தையே மெகெயினே மீறலாமா என்னும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முழு விவரங்களுக்கு: McCain Plane Still Flying – The Caucus – Politics – New York Times Blog: “Mrs. McCain is effectively subsidizing her husband’s campaign because either she or her company has to make up for the difference between what his campaign pays for the jet’s use and what it really costs to operate it.”

3. ஜான் மெகெயினின் உடல்நல காப்பீட்டு திட்டம் குறித்த பாஸ்டன் க்ளோபின் தலையங்கத்தில் இருந்து சில விவரம் கலந்த கருத்துகள்:

  • மெடிக்கேர் (Medicare) என்னும் திட்டம் கடந்த நாற்பதாண்டுகளாக அரசாங்கத்தால் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருவது அறிந்திருந்தும், “அரசுத்துறையால் இதை செம்மையாக செயலாக்க இயலாது” என்று பேசுவது அழகு அல்ல.
  • மெகெயினின் திட்டப்படி சேமத்திட்டத்திற்கு செலவழிக்கும் தொகை வருமான வரிக்கு உட்படுத்தப்படும்.
  • இதனால் அதிகரிக்கும் வரிச்சுமையைப் போக்க
    • தனிநபருக்கு $2,500 தள்ளுபடி
    • குடும்பஸ்தருக்கு $5,000 தள்ளுபடி
  • ஆனால், நிஜ வாழ்க்கையில் முழுமையான காப்பீட்டுத் திட்டத்திற்கான செலவுத் தொகை:
    • தனிநபருக்கு $4,479
    • குடும்பஸ்தருக்கு $12,106
  • வருடத்திற்கு $139,000த்திற்கும் மேல் சம்பளம் வாங்கும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே குடியரசு வேட்பாளரின் திட்டம் பயனளிக்கும்.
  • வயதானவர்களுக்கும், வியாதியால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் இவரின் பரிந்துரையில் எந்த இடமும் கொடுக்கவில்லை.
    • இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும்விதமாக, மாநிலங்களுடன் கலந்தாலோசித்து இவர்களைப் பாதுகாக்க மாற்று திட்டம் தயார் செய்வதாக சொல்லியிருக்கிறார். ஆனால், இது குறித்தும் எவ்விதமான தெளிவான தொலைநோக்கு காப்புறுதியும் கிடைக்கவில்லை.
  • சந்தைப்படுத்தலால் மட்டுமே சேமநல திட்டங்களை அனைத்து பொதுமக்களுக்கும் முழுமையாக கொண்டு செல்லமுடியாது.
    • அவ்வாறு நடந்திருக்குமானால், கடந்த காலத்திலேயே நடந்திருக்குமே!?

முழுவதும் வாசிக்க: Dr. McCain’s snake oil – The Boston Globe

மே 9 – அமெரிக்க ஜனாதிபதி களம்

1. அமெரிக்காவில் பதவிக்கு போட்டியிடுபவர்கள் தாங்கள் வருமான வரி கட்டிய விவரங்களை வெளிப்படையாக சொல்வது வழக்கம். அதற்கேற்ப, ஜனநாயகக் கட்சி சார்பாக களத்தில் இருக்கும் ஒபாமா, இருந்த ஹில்லரி, குடியரசுக் கட்சியின் மெகெயின் ஆகியோர் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்கள்.

இந்நிலையில் ஜான் மெக்கெயினின் மனைவி சிண்டி தன்னுடைய ‘சொத்து குறித்த தகவல்களை எந்த நிலையிலும் பொதுவில் வைக்கமாட்டேன்‘ என்று பேட்டி அளித்து இருக்கிறார். மதுபான நிறுவனத்திற்கு சொந்தக்காரரான சிண்டியின் நிதிநிலை கிட்டத்தட்ட நூறு மில்லியனுக்கு மேல் மதிப்பிடப்படுகிறது.

ஆதாரம்: Cindy McCain won’t show tax returns if first lady
Obams vs Hillary - Time Cover
2. ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான களத்தில் இருந்து விலக ஹில்லரி க்ளின்டனுக்கு என்ன வேண்டும்?

  • பிரச்சாரத்திற்கு செலவழித்த வகையில் 11 மில்லியன் பற்றுக் கணக்கில் இருக்கிறது. அதை ஒபாமா அடைக்க ஒப்புக்கொள்ள வேண்டும். (அவரும் அவ்வாறே சமிக்ஞை கொடுத்துள்ளார்.)
  • மிச்சிகனையும் ஃப்ளோரிடாவிலும் வென்றதை வெறுமனே கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும். தோற்றுப் போனாலும், பெரும் வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வவில்லை என்று சொல்லிக்கொள்ள பயன்படும்.
  • துணை ஜனாதிபதி பதவி

நன்றி: Clintons Endgame Strategy? – The Caucus – Politics – New York Times Blog: Senator Hillary Rodham Clinton’s recent comments about electability might be part of an elaborate bargaining package.

தொடர்புள்ள டைம்ஸின் முகப்புக் கட்டுரை: ஹில்லரி க்ளின்டனின் ஐந்து தவறுகள்

3. 2000 ஆம் ஆண்டு நடந்த பொது வாக்குப்பதிவில் தன்னுடைய கட்சியை சார்ந்த ஜார்ஜ் புஷ்ஷுக்கு, மெகெயின் வாக்களிக்கவில்லை என்னும் சர்ச்சை எழுந்துள்ளது.

அப்போது நடந்த குடியரசு கட்சிக்கான வேட்பாளர் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியான் புஷ், மெகெயினுக்கு ‘மணமுடிப்புக்கு அப்பால் குழந்தை உள்ளது‘ என்று பிரச்சாரம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

McCain’s Vote in 2000 Is Revived in a Ruckus; Huffington, Whitford and Schiff Offer Accounts – New York Times: Two “West Wing” actors are backing up Arianna Huffington’s account of a Los Angeles dinner party, where she says she heard John McCain say that he had not voted for George W. Bush in 2000.

இன்றைய நியு யார்க் டைம்ஸ் – டெக்சாஸ், ஒஹாயோ களம்: ஜனநாயகக் கட்சி முதல் தேர்தல் கட்டம்

1. Obama Spends Heavily to Seek Knockout Blow – New York Times

0302_nat_primary_web.jpg

2. What I’d Be Talking About if I Were Still Running – New York Times: ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்டு விலகியவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி: ‘உங்களுக்கு முக்கியமாகப்படுவதில், எதைக் குறித்து தற்போதைய வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் முன்வைப்பதில்லை?’

3. Coming Soon: Health Care Debate, Part 2 – New York Times: ‘இது சும்மா ட்ரெயிலர்தான் கண்ணா…’ என்பது போல தற்போதைய ஹில்லரி x ஒபாமாவின் சேமநல விவாதம் அமைந்திருக்கிறது. குடியரசு கட்சியுடன் நடக்கும் போட்டியில், இது எவ்வாறு மாறும்?

4. Mining the Gender Gap for Answers – New York Times: ஹில்லரி பெண்பாலாக இருப்பதும், பெண் ஜனாதிபதியாக விரும்புவதும் குறித்த அமெரிக்க மக்களின் உளவியல்.

5. McCain Channels His Inner Hillary – New York Times: ஜான் மெக்கெயினின் பிரச்சார உத்தி; ஹில்லரிக்கும் மெகெயினுக்கும் உள்ள ஒற்றுமை; குடியரசுக் கட்சியின் வாக்கு வங்கியை கவரும் விதத்தில் அதன் வேட்பாளர் நடந்து கொள்கிறாரா? நடந்து கொள்வாரா?

சூப்பர்டெலகேட்சுக்கு காசு கொடுத்து கவனிக்கும் ஜனநாயகக் கட்சி

Capital Eye – Seeking Superdelegates (வழி: Superdelegates get campaign cash):

விடாக்கண்டர் ஹில்லரிக்கும், கொடாக்கண்டர் ஒபாமாவுக்கும் நடக்கும் இழுபறி சண்டை முடிகிறபாடாக இல்லை. தன்னுடைய சொந்த ஊரான இல்லினாய் தவிர வேறு எந்த பெத்த மாகாணத்திலும் ஒபாமா ஜெயிக்கவில்லை என்பதை முக்கிய குறையாக ஜனநாயகக் கட்சி கருத ஆரம்பித்துள்ளது. மார்ச் நான்காம் தேதி நடக்கும் ஒஹாயோ, டெக்சஸ் போன்ற மாபெரும் மாகாணங்களின் தேர்தல் வெற்றி, அந்தக் குறையை போக்கலாம்; அல்லது க்ளின்டனின் வாதத்திற்கு வலுசேர்க்கலாம்.

எவருக்கும் பெரும்பான்மை இல்லாத, இந்த நேரத்தில் பெரிய பிரதிநிதிகள் (‘பெ.பி.’) எனப்படும் சூப்பர்டெலகேட்ஸை இருவரும் மொய்க்க ஆரம்பித்திருக்கின்றனர். ;பொன் மகள் வந்தாள்’ மழையாக இதுவரை கொட்டப்பட்ட நிதி – $904,200

பராக் ஒபாமாவின் பங்கு – $698,200
ஹில்லரி க்ளின்டனின் பங்கு- $205,500

மொத்த பெரிய பிரதிநிதிகள் – 800 (கிட்டத்தட்ட)
முடிவு வெளிப்படுத்தாதவர்கள் – 400 (கிட்டத்தட்ட)

ஒபாமாவை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (தேர்தல்களில் வென்றவர்கள்) – 82
இவர்களில் ஒபாமாவிடமிருந்து தேர்தல் நிதி பெற்றவர்கள் – 35 (43 சதவீதம்)
ஒபாமாவை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (கட்சி பிரதிநிதிகள்) – 52 (தேர்தல் நிதி பெற முடியாது)

ஹில்லரியை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (தேர்தல்களில் வென்றவர்கள்) – 109
இவர்களில் ஹில்லரியிடமிருந்து தேர்தல் நிதி பெற்றவர்கள் – 13 (12 சதவீதம்)
ஹில்லரியை ஆதரிப்பதாக உறுதியளித்தவர்கள் (கட்சி பிரதிநிதிகள்) – 128 (தேர்தல் நிதி பெற முடியாது)

இன்னும் முடிவை அறிவிக்காத 52 ‘பெ.பி.’களுக்கு ஒபாமாவின் அன்பளிப்பு – $363,900
இன்னும் முடிவை அறிவிக்காத 15 ‘பெ.பி.’களுக்கு ஹில்லரியின் அன்பளிப்பு – $88,000

இருவரிடமிருந்தும் பணத்தைப் பெற்றவர்களின் எண்ணிக்கை – 8
இவர்களில் ஹில்லரியை ஆதரிப்பதாக அறிவித்தவர்கள் – 7

மாஸசூஸட்ஸ் செனேட்டர் டெட் கென்னடி மட்டும் ஒபாமாவிற்கு ஆதரவளிக்கிறார்.
இவருக்கு ஹில்லரி கொடுத்த தேர்தல் நிதி – $10,000
ஒபாமா வழங்கிய தேர்தல் நிதி – $4,200

கடைசியாக, ஹில்லாரியின் 2006 செனேட் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஒபாமா வழங்கிய நிதி – $4,200

ஆதாரம்:

1. விரிவான கணக்குப் பட்டியல்: Capital Eye: Superdelegates

2. எந்த பெரிய பிரதிநிதி, எவரை ஆதரிக்கிறார்? 2008 Democratic Convention Watch: Superdelegate Endorsement List