Daily Archives: ஓகஸ்ட் 1, 2008

அறிவியல் மாறலாம்; வாழ்க்கை மாறுமா?

சிறில் அலெக்ஸ் நடத்தும் போட்டிக்கு 45+ கதை கட்டியிருக்கிறார்கள். நூற்றாண்டுகளாக மாறும் அறிவியலில் இருந்து மாறாத வாழ்க்கை தருணங்கள்:

  1. அன்று ஓலைச்சுவடியைக் கிழித்தெறிந்தார் ஒட்டக்கூத்தர்; இன்று இணையப் பதிவுகளை நீக்குகிறார் பெயரிலி/மரவண்டு; நாளையும் இன்னொருத்தர் டெலீட்டுவார்.
  2. அன்று அண்ணா, பெரியார் பேச்சை வாய்பிளந்து வாக்களித்தார்கள்; இன்று சாரு நிவேதிதா, சோ எழுத்துக்களை காசு கொடுத்து படிக்கிறார்கள்; நாளையும் வித்தியாசமான சிந்தனையை முன்வைக்கும் எவரின் அனைத்து அட்சரத்தையும் கண்மூடித்தனமாக…
  3. அன்று குறுநில மன்னர்களுக்கும் இராஜாதி ராஜாவுக்கும் இடையேயான மல்யுத்தப் போர்களை மைதானத்தில் மேட்ச் ஃபிக்ஸ்; இன்று இந்தியா x பங்களாதேஷ் கிரிக்கெட்; நாளையும் கணினி வலையில் நடக்கும் அடையாள யுத்தத்தில் சூது முடிவு.
  4. அன்று இறந்தபின் அசோகனும் பாபரும் உத்தமர்; இன்று எமெர்ஜென்சி இந்திராவும் அத்வானியின் செல்லப்பிள்ளை ஜின்னாவும் மகாத்மா; நாளையும் ஜார்ஜ் புஷ், ஃபிடல் காஸ்ட்ரோ சரித்திர உலக நாயகர்கள்.
  5. அன்று வந்ததும் அதே நிலா; இன்று உள்ளதும் இதே சாந்த் ; நாளை ‘ஜஸ்ட் மூன்’
  6. அன்று குடவோலையில் கடமுடா; இன்று குடியரசு களேபரம்; நாளையும் குல்லா, ஹல்லா.
  7. அன்று இஸ்ரேல் பிரச்சினை; இன்று அமெரிக்க நாட்டாமை; நாளையும் பாலஸ்தீனம் தொடரும்
  8. அன்று ஆன்மிகம்; இன்று அறிவியல்; நாளையும் சான்றோர்.
  9. அன்று சங்கப்பலகை நக்கீரன் + பாண்டியன் போட்டி; இன்று வலைப்பதிவு சிறில் + ஜெமோ மீம்; நாளையும்?
  10. அன்று ஃபிலிப் கே டிக் பயந்தார்; இன்று மைக்கேல் க்ரிக்டன் பயமுறுத்துகிறார்; நாளையும் எவராவது சாவார்.