மின்வண்டி நிலையத்தில் மரணித்த எலியும் மனம் பதறிய மங்கையும்


My ‘Shallow Hal‘ moments

எலி பாஷாணத்தை உண்ட மயக்கமோ? வாழ்வின் இறுதி நிமிடங்களோ? நட்டநடுவில் அனாதையாக எலி. நானும் இன்ன பிறரும் ட்ரெயினைப் பிடிக்கும் அவசரத்தில் ஓடிக் கொண்டிருந்தோம்.

அந்தப் பெண்மணிக்கும் இரவு தாமதமாகிய எட்டு மணி காண்பிக்கும் கடிகாரம் இருந்தது. சக பயணி குப்பையாகப் போட்ட பேப்பர் கவரை எடுத்தார். கையால் மிக லாவகமாக எலியை எடுத்து அதனுள் நகற்றினார்.

இறக்கும் நிமிடங்களில் எலிக்கு கௌரவம். கையறு நிலையில் இருந்து அடக்கமான உறக்கம்.

8 responses to “மின்வண்டி நிலையத்தில் மரணித்த எலியும் மனம் பதறிய மங்கையும்

  1. “எலி பாஷாணத்தை உண்ட மயக்கமோ? வாழ்வின் இறுதி நிமிடங்களோ?”

    அதெல்லாம் இல்லையாம். தமிழ்
    அறிபுனை கதைகளின் படித்ததன்
    விளைவாம் மரணத்தை நோக்கிய தேடல்:)

  2. மணாளனே மங்கை என் பாக்கியம் ஸ்டைல் தலைப்பை விட்டு விட்டுப் பார்த்தால் பொருள் ‘அடக்கம்’ நன்று.

    PS:
    http://wiki.answers.com/Q/What_is_the_plural_of_'mouse'_on_a_computer

  3. —தமிழ் அறிபுனை கதைகளின் படித்ததன் விளைவாம்—

    எலிக்குப் படிக்கத் தெரிஞ்சா அது அறிபுனைதான் 🙂

  4. எந்த இடமுங்க இது ?? முதல் புகைப்படம் எதோ ஒரு மாசசூசட்ட்ஸ் குடா போக்குவரத்து நிலையம் போல் தெரிகிறது ?! 😀

  5. எலிக்குப் படிக்கத் தெரிஞ்சா அது அறிபுனைதான் 🙂

    அப்படியாயின் எலி எழுதிய கதைகள்
    எவ்வகையில் சேரும்

  6. எலின்னு யாரை சொல்றீங்க 😛
    உள்குத்து வெளங்கலியே சாமீயோவ் 😉

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.