காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு மட்டுமா?


Economist

நன்றி: Rivers and conflict | Streams of blood, or streams of peace | Economist.com: “Talk of thirsty armies marching to battle is surely overdone, but violence and drought can easily go together”

  • உலக நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் எண்ணிக்கை – 263
  • கடந்த ஐம்பந்தாண்டுகளில், நதிநீர் பங்கீட்டுக்காக 400 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கிறது.
  • பெரும்பாலான நாடுகள் அமைதியாக பிரித்துக் கொண்டாலும், தண்ணீருக்காக 37 வன்சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
  • இந்த முப்பத்தேழில், 30 சண்டை இஸ்ரேலுக்கும் அண்டை நாடுகளுக்கும் நடுவில் மூண்டிருக்கிறது. ஜோர்டான் நதியின் மேற்பாகம் எவருக்கு சொந்தம்?
  • எண்ணெயும் வைரமும்தான் தற்போதைக்கு சர்வாதிகாரிகளின் விருப்பமாக உள்ளன. கோங்கோ (Congo), அங்கோலா (Angola) போன்ற கொடுங்கோல் ஆட்சிநாயகர்களுக்கு தண்ணீரைக் கடத்துவது கஷ்டமான காரியம்.
  • தமிழகப் புலவர்களுக்கு பிடித்த பாடுபொருளான சஹாரா பாலைவனத்திற்கு கூப்பிடு தூரத்தில் இருக்கும் நைல், நைஜர், வோல்டா, ஜம்பேசி எல்லாமே ஆபத்தான பகுதிகளாக ஐ.நா. அறிவித்துள்ளது.
  • Global Worldwide water relationsஆனால், உலக வங்கியை நம்பியிருக்கும் ஆப்பிரிக்க நாடுகள் போல் அல்லாமல் சீனா தன்னிச்சையாக நதிகளை தடுத்தாட்கொண்டு, அணையெழுப்பி, திசைதிருப்பி, இயற்கையை சுதந்திரமாக கட்டுப்படுத்துகின்றது.
  • ருசியாவின் ஆப் (Ob) நதியோடு இணையும் இர்திஷ் (Irtysh) நதியை நிறுத்துவதாகட்டும்; கஜக்ஸ்தானின் பல்காஷ் (Balkhash) ஏரியை நிரப்பும் இலி (Ili) நதியாகட்டும்… யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை. (கஜக்ஸ்தான் மக்கள்தொகை: 15 மில்./சைனா: 1300 மில்.)
  • இதே ரீதியில் உலகம் வெம்மை அடைந்து கொண்டிருந்தால் மௌரிடானியா (Mauritania), மாலி, எத்தியிப்போ போன்ற நாடுகளில் தனிநாடு கேட்டுப் போராடுபவர்களின் பிரிவினைவாதம் வலுப்பட்டு கலகம் வெடிக்கலாம். ஆப்பிரிக்காவின் மக்கள் பெருக்கமும் இந்த இனப் போராட்டத்திற்கும் நன்னீர் பற்றாக்குறைக்கும் தூபம் போட்டு சாமரம் வீசுகின்றன.
  • நேபாளத்தில் சமீபத்தில் நடந்த மாவோயிச வெற்றிக்கும், முன்னுமொரு காலத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான் வளர்ந்ததற்கும் கூட வறட்சிதான் காரணம்.

7 responses to “காவிரி, பாலாறு, முல்லைப் பெரியாறு மட்டுமா?

  1. 01 மே, 2008 – BBC Tamil :: சோமாலியாவில் பஞ்சம் ஏற்படலாம் என்று ஐ. நா எச்சரிக்கை

    தொடர்ந்து நிலவும் வறட்சி நிலை காரணமாகவும், உணவுப் பொருட்களின் விலை உயர்வு காரணமாகவும் சோமாலியா பெரும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதாக ஐ. நா நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

    இந்த ஆண்டின் முடிவுக்குள் சோமாலியாவில் வாழும் மக்களில் பாதி பேருக்கு – அதாவது கிட்டத்தட்ட முப்பத்தைந்து லட்சம் பேருக்கு உணவு உதவி தேலைப்படும் என்று ஐக்கிய நாடுகளின் உணவுப் பாதுகாப்பு ஆய்வகக் குழு கூறியுள்ளது.

    * மிக அதிக அளவில் நிலவும் பணவீக்கம்,
    * சோமாலிய நாணயமான ஷெல்லிங்கின் மதிப்பு குறைவது, மற்றும்
    * அங்கு ஒய்வின்றி நடக்கும் ஆயுதப் போராட்டம்

    போன்ற காரணங்களால் நகர்ப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு உணவு கிடைப்பது என்பது மிக மிக கடினமாகி வருகிறது என்று ஐ நா அமைப்பு கூறியுள்ளது.

  2. புஷ் இந்தியர்களும்,சீனர்களும் நன்றாக சாப்பிட்டு உணவு பஞ்சத்தை
    ஏற்படுத்துகிறார்கள் என்று சொல்லியிருக்கிறாரே, அவர் உங்களை அண்மையில் பார்த்தாரா இல்லை பாராவின் வலைப்பதிவினை படித்தாரா:).

  3. There may be famines in the world but there is no famine of analysis and suggestions. For the past two months not a day passes without me getting to know of some report or study or news on this issue.

  4. புஷ் இந்தியர்களும்,சீனர்களும் நன்றாக சாப்பிட்டு உணவு பஞ்சத்தை ஏற்படுத்துகிறார்கள்

    அவர் சொன்னதை பார்க்கவில்லை. ஆனால், மேற்கத்திய ஊடகங்கள் எல்லாமே இதே ரீதியில் ‘op-ed’ போட்டு வருகிறது.

    இந்தியா (கொஞ்சம்) முன்னேறி இருக்காவிட்டால், இந்த உணவுத் தட்டுப்பாடே வந்திருக்காது என்பதுதான் எகானமிஸ்ட் போன்றவர்களின் கருத்து (:

  5. // புஷ் இந்தியர்களும்,சீனர்களும் நன்றாக சாப்பிட்டு உணவு பஞ்சத்தை
    ஏற்படுத்துகிறார்கள் என்று சொல்லியிருக்கிறாரே, அவர் உங்களை அண்மையில் பார்த்தாரா இல்லை பாராவின் வலைப்பதிவினை படித்தாரா:). //

    ஷரத் பவர் கிட்ட பேசியிருப்பாரோ ??? 😛

  6. ^^ பவார் என்று படிக்கவும் 🙂

  7. ரவி, ஸ்ரீராம் முரளி __/\__

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.