வார்த்தை – எனி இந்தியன் இதழ் (ஏப்ரல்)


வேகமாக வாசிக்கிறபோதும் சரி. நிதானமாக வாசிக்கிறபோதும் சரி, எதையும் உள்வாங்கிக் கொள்ளும் வழக்கம் நமக்கில்லை. – பஸ்க்கால்

இணையத்திற்கு அறிமுகமானவர்களிடமிருந்து வரும் இதழ் என்பதாலோ என்னவோ, எனி இந்தியனின் ‘வார்த்தை’ குறித்து நிறைய விமர்சனம்/அறிமுகம்/அனுபவம் எல்லாம் புழங்குகிறது.

முதலில் + கள்:

1. வலையகத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக http://www.vaarththai.com/ அட்டைப்படத்தில் பிரதானமாகக் காட்சியளிக்கிறது.

2. ஒவ்வொரு பக்கமாக புரட்டி என்ன இருக்கு என்று தேடாமல் உள்ளடக்கம் உடனே கிடைக்கிறது.

ஒரேயொரு இடர்ப்பாடு: கட்டுரை/கதைகளின் முடிவில் ஏதாவது விநோத சின்னம் இட்டு (§ ♦) ‘முடிஞ்சுடுத்துப்பா’ என்று பாமரர்களுக்கு உணர்த்தியிருக்கலாம்.

பொருளடக்கம்:

1. கேள்வி – பதில்: ஜெயகாந்தன் – 8/10

கேள்விகள் தூள் ரகம். பதில்கள் மாட்டிக் கொள்ளாத பப்படம்.

2. தலாய் லாமா நோபல் பரிசு பேச்சு: துகாராம் – வாசிக்கவில்லை

ஆங்கிலத்தில் கிடைக்கிறதை, அணுகக்கூடிய ஆங்கில நடையில் கிடைத்தால், அசல் மொழிபெயர்ப்பையே வாசித்துவிடுவது பிடித்திருக்கிறது.

3. ஐயம் இட்டு உண்: நாஞ்சில் நாடன் – வாசிக்கவில்லை

படித்துவிட்டு வருகிறேன்

4. சினிமா: செழியன் – வாசிக்க இயலவில்லை (0/10)

நிழல்‘ என்னும் சுவாரசியமான பத்திரிகையில் கூட இந்த மாதிரி ‘well left’ என்னும் டெஸ்ட் மேட்ச் ரம்பங்கள் வந்துவிடுவதுண்டு.

5. மன்மதன்: அ முத்துலிங்கம் – 10/10

நீங்கள் காசு கொடுத்து இதழ் வாங்குவதற்கான காரணம் #1

6. Pygmies – சேதுபதி அருணாசலம் – 10/10

அடைப்புக்குறிக்குள் ஆங்கிலம் தவழுகிறதே… இன்னொரு செழியனோ என்னும் பயத்துடன் அணுகினாலும், சொந்த அனுபவத்தை வைத்து இயல்பான மொழியில் அச்சுறுத்தாத அறிமுகம்.

7. சிறுகதை: எஸ் ராமகிருஷ்ணன் – 10/10

என்னாமா எழுதறாரு… (இணையத்தில்) புனைவு எழுதறவங்க எல்லாரும் ஒரு தபா இந்த மாதிரி கதைங்களப் படிச்சுட்டு கற்பனை குதிரையத் தட்டணும். இவரோடதுக்கு மட்டும் படமெல்லாம் படா ஜோரு. மத்ததுக்கெல்லாமும் இப்படி வரஞ்சிருந்தா தூக்கியிருக்கும்!

8. மலேசியா: ரெ கார்த்திகேசு – 6/10

மலேசியாவின் வரலாறு முழுமையாகக் கிடைக்கிறது. கட்டுரையில் துளி அவசரம் எட்டிப் பார்த்து, சமீபத்திய தேர்தல் முடிவு அலசலுக்கு முழுமையான தெளிவு கிடைக்காமல் பறக்கிறது. நூறு, நூற்றைம்பது ஆண்டு சரித்திரப் பின்னணி தேவைதான் என்றாலும், அதற்குரிய விலாவாரியான சித்தரிப்பு கொடுத்திருக்கலாம்; அல்லது இரண்டு/மூன்று மாதமாக தொடராக முழுமையாக்கி இருக்கலாம்.

9. பாவண்ணன் சிறுகதை – என்னுடைய ஆதர்ச எழுத்தாளர்; ஏமாற்றி இருக்க மாட்டார். இனிமேல்தான் படிக்க வேண்டும்.

10. வ ஸ்ரீநிவாசன் கட்டுரை – 10/10

மிக மிக எதார்த்தமான பேச்சுவழக்கு நடை அள்ளிக் கொண்டு போகிறது. தி ஹிந்துவில் ஆரம்பித்து, புது தில்லி வாசத்தைத் நினைவலையாக்கி, சுஜாதாவையும் பேருக்கு தொட்டுக் கொண்டு, புத்தக முன்னுரைகளை காலை வாரி, கத்தாழக் கண்ணால என்று பாப் கல்ச்சரையும் விடவில்லை.

11. Pascal – நாகரத்தினம் கிருஷ்ணா: 8/10

விக்கிப்பிடியா போன்ற பற்றற்ற நடைக்கும் ப்ராடிஜி போன்ற தகவல் சார்ந்த புத்தக வாசத்திற்கும் இடையிலேயான மணம்.

12. (அ) கவிதை – தமிழச்சி தங்கபாண்டியன்: 5/10

செட் தோசை

ஆ) சல்மா: 5/10

கொத்து பரோட்டா

இ) நிர்மலா: 7/10

டாப்பிங் இல்லாத ஊத்தப்பம்

ஈ) பி கே சிவகுமார்: 5/10

Appetizer Platter

உ) வ ஐ ச ஜெயபாலன்: வாசிக்கவில்லை

ஊ) ஹரன் பிரசன்னா: 10/10

கதை நேரம் & நாம் இரண்டுமே தூள் ரகம்

13. புலம்பல்/விண்ணப்பம்: லதா ராமகிருஷ்ணன் – 10/10

நியாயமான கோரிக்கை. ஆனால், சீனாவிற்கெதிராக போராட்டம் நடத்துவது போல் பயனில ஆகாமல் இருக்க வேண்டும்.

14. ‘மெல்லக் கனவாய் பழங்கதையாய்: பா விசாலம்‘ – புத்தக விமர்சனம்: வே சபாநாயகம் – 9/10

காசா… பணமா? 10/10 கொடுக்கலாம்தான்! வேறு பதிப்பக வெளியீடு எதுவும் கிடைக்காமல், எனி இந்தியன் புத்தகத்துக்கே விமர்சனம் என்பதால்…

15. இசை அனுபவங்கள்: சுகா – 10/10

நீங்கள் காசு கொடுத்து இதழ் வாங்குவதற்கான காரணம் #2

16. வெ. இறையன்பு: சிறுகதை – 1/10

சிறுபத்திரிகை என்று ஏன் வந்தது? சிறுவர்களையும் கவரும் கதை.

17. ஜெயமோகன் சினிமாவில் பணிபுரிய தடா: சட்டம் – கே எம் விஜயன் – 10/10

To the point. அம்புட்டுதான்.

18. இரா. முருகன் – 5/10

டெட்லைன் அவசரத்தில் எழுதியதோ 😦 அல்லது என் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமோ?

19. சுஜாதா: கோபால் ராஜாராம் – அஞ்சலைக் கிழித்து அவசர அவசரமாக புரட்டிய சமயத்தில் உடனடியாக வாசித்தது; அஞ்சலி செலுத்தப்பட்டவருக்கு மரியாதையும்; வாசகருக்கு விஷயதானமும்.

20.சிங்கப்பூர் – தமிழ்: எம் கே குமார் – 7/10

கேள்விகள் ஒவ்வொன்றும் நறுக்கென்று நிமிர வைக்கிறது; ஆனால் சட்டென்று சாதாரணமான சம்பவங்களுடன் சப்பென்று முடிந்து விடுகிறது.

21. மார்க்சியம் – தமிழாக்கம்: மணி வேலுப்பிள்ளை – 5/10

பனியில்லாத பாஸ்டனா? கம்யூனியக் கட்டுரை இல்லாத தமிழ் இதழா?

22. அனுபவம் – பி ச குப்புசாமி: 9/10

சிறுகதைக்குரிய வேகம், விவரிப்பு, சம்பாஷணை; ஆனால், நிறைவில்லாத தன்மை தரும் ஏதோவொன்று இருந்தாலும் மிக சுவாரசியமான இதழாசிரியரின் பகிர்வு.

மொத்தத்தில்: 73%

அமெரிக்கா இல்லை; அரசியல் இல்லை; வித்தியாசம் உண்டு; புதுமுகங்களின் பரிமளிப்பு உண்டு.

வாழ்த்துகள்!

4 responses to “வார்த்தை – எனி இந்தியன் இதழ் (ஏப்ரல்)

  1. பிங்குபாக்: வார்த்தை :: மே மாதம் - சிவிறுதல் « Snap Judgment

  2. காரணம்,

    உள்வாங்கிக் கொள்ளும் உள்ளம்
    எங்கு உலவிக் கொண்டிருந்ததோ!!!

    அன்புடன் உங்கள்,

    சி.சி.சிவசங்கர்.

  3. பிங்குபாக்: சிறு சரித்திரக்குறிப்புகள்: சிறுபத்திரிகை மகாத்மியம் « Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.