பொய் சொல்லக் கூடாது ஹில்லரி


பாஸ்டர் ரைட்டின் பேச்சினால் ஒபாமாவுக்குப் பின்னடைவிருந்தது தெரியும். தற்போது அந்நிலை மாறி அவர் ஏறுமுகத்திலிருக்கிறார். இனப் பிரச்சனை போன்றதொரு அதிசிக்கலான பிரச்சனையை யாரின் மனதையும் புண்படுத்தாதவாறு எதிர்கொண்டு இந்த யுகத்தில் இனப்பிரச்சனையின் முகங்களை இனம் கண்டு அவற்றைக் கடந்து செல்வதன் அவசியத்தை உணர்த்தித் தன் தரப்பையும் விட்டுக்கொடுக்காமல் பிறரையும் வருத்தாமல் அவர் ஆற்றிய உரைக்குக் கிடைத்த வெற்றி இந்த ஏறுமுகம். தன் நண்பரின் வார்த்தைகளால் ஏற்பட்ட காயத்தை தன் வார்த்தைகளால் ஆறச் செய்யும் குணம் கொண்டவர் தலைவரில்லையென்றால் வேறு யார் தலைவர்?

இதற்கிடையில் ஹில்லரி பொதுவில் பொய் சொல்லும் தன் குடும்ப வழக்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டிவிட்டார்.

பாஸ்னியாவுக்கு அவர் சென்றபோது விமான நிலையத்தில் தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பக் குனிந்து மறைந்து ஓடியதாக ஒரு மாபெரும் பொய்யைச் சொன்னார். போஸ்னியாவில் தன்னை யாரும் வரவேற்க வரவில்லையென்றும் நேரடியாகக் காருக்குள் ஓடிச் சென்றுவிட்டதாகவும் மிகத் ‘தெளிவாகச்’ சொன்னார்.

என்ன பிரச்சனை? அவர் போஸ்னியாவில் இறங்கி வரவேற்பு நிகழ்ச்சியில் ஒரு சிறுமி உட்பட அவரை வருக வருக என வரவேற்பதை இந்தப் பாழாய் போன மீடியா மக்கள் படம் பிடித்துவிட்டனர்.

அது ஒரு lapse என சமாளித்தார். மறதியின் காரணமாய்ச் சொன்னால் இத்தனை விளக்கமாக துல்லிய விபரங்களுடன் யாரேனும் சொல்ல இயலுமா என மக்கள் யோசிக்கவில்லை போலும்? அவரது புத்தகத்திலேயே இந்த நிகழ்ச்சி சரியான முறையில் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

ஒபாமா இதெல்லாம் சகஜம் என விட்டுவிட்டார். இவர் அரசியல்வாதிதானா இல்லை இமாலயத்தின் அடிவாரத்தில் ஆயிரம் ஆண்டுகள் தியானத்தைக் கலைத்துவந்த சாமியாரா எனக் குழப்பமே வந்துவிட்டது. ஆனால் அ-அரசியல்தான் தன் ஸ்டைல் என்பதை மீண்டும் ஒபாமா நிரூபித்துவிட்டார்.

ஹிலாரி போஸ்னியா பொய்க்குச் சரியான விளக்கமளிக்காமல் விட்டதும் பரவாயில்லை ஆனால் லேட் நைட் ஷோவில் சென்று அதை கிண்டல் செய்து மக்களை கோமாளியாக்கிவிட்டார் என்பதுவும் இப்போது சர்ச்சைக்குரியதாகிவிட்டது.

ஹில்லரியின் அடுத்த மிகைப்படுத்தல் போஸ்னியப் பொய்யின் தாக்கம் மறைவதற்கு முன்னமே வந்துவிட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முறையாக மருத்துவ உதவி அளிக்கப்பட்டு பின்னர் இறந்துபோன ஒரு பெண்ணின் கதையை திரித்து அந்தப் பெண் $100 இல்லாத காரணத்தினால் சிகிச்சை மறுக்கப்பட்டு இறந்துபோனாள் என கதை கட்டிவிட்டார்.

நியூயார்க் டைம்ஸ் அந்த மருத்துவமனையின் நிர்வாகத்திடம் செவ்வி செய்து உண்மை செய்தியை வெளியிட்டுள்ளது. உண்மையில் அந்தப் பெண்ணிடம் காப்பீடு இருந்தது என்றும் நிறுவப்பட்டுள்ளது.

ஹில்லரியின் தலமை பிரச்சார மேலாளர் வேலையிலிருந்து விலகியுள்ளார். மொத்தத்தில் ஹில்லரிக்கு மலையாள நம்பூதிரிகள் ஏதேனும் உதவினால் தேவலை எனத் தோன்றுகிறது.

Hillary lies எனக் கூகிளில் தேடினேன், பக்கம் பக்கமாய் வந்து விழுந்தது.

ஹில்லரியும் தன் வாயால் கெடலாம்.

போஸ்னியா பொய்

மருத்துவப் பொய்
ஹிலரியின் பிற பொய்களின் பட்டியல்

3 responses to “பொய் சொல்லக் கூடாது ஹில்லரி

  1. பிங்குபாக்: Boy என்றால் பையன்? « US President 08

  2. பிங்குபாக்: கிறுக்கல்கள் » Blog Archive » படித்ததில் பிடித்தது

  3. வேர்ட்பிரெஸ் தமிழாக்கம் கருத்த உங்கள் கருத்துகள், வழு அறிக்கைகள், பங்களிப்புகளைத் தர http://groups.google.com/group/tamil_wordpress_translation குழுமத்துக்கு வரவேற்கிறோம். நன்றி.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.