கண்ட இடம்: வலைச்சரப் பதிவுகளுக்கான மறுமொழிகள்
வணக்கம்.
வலைச்சரத்தில் நீங்கள் இடும் மறுமொழிகள் வலைச்சர ஆசிரியர்களை ஊக்கப் படுத்தும். எனினும் “என்னுடைய பதிவை தொகுத்ததற்கு நன்றி” அல்லது “இன்னாருடைய பதிவை சேர்க்காமல் விட்டு விட்டீர்கள்” என்பது மாதிரியான மறுமொழிகளை தவிர்க்கவும். இவை வலைச்சர ஆசிரியர்களுக்கு சில தர்மசங்கடங்களை ஏற்படுத்தும். நன்றிகூறல் தனிமடலில் இருக்கலாமே 😉
தொகுப்பு பற்றி பொதுவான பாராட்டு, விமர்சனம், குறைகள் ஆகியவற்றை சுட்டிக் காட்டும் மறுமொழிகளை வரவேற்கிறோம். பாராட்டுகள், வாழ்த்துக்கள், விமர்சனங்கள் அவசியம் தேவை.
பின்குறிப்பு: கும்மிகளுக்கு தடை இல்லை 😉
இந்த பின்னூட்ட நெறிகளை விமர்சிக்க அனுமதி உண்டா என்பதையும் தெளிவாக்கி இருக்கலாம் 😛











குறை என்ன கண்டீர் கொற்றவரே ?
‘நன்றி மறப்பது நன்றன்று சுட்டாமல்
விட்டதை நவிலல் நன்று.’
என்னும் புதுக்குறளுக்கு ஏற்ப நடக்கவிடமாட்டேங்கறீங்களே 😀
இன்னும் தெளிவாக சொன்னால்…
1. நாலு வார்த்தைக்கு மேல் அந்த இடத்தில் தகவல் இருந்தால், மறுமொழியாளர்களுக்கு மனதில் ஏறாது.
2. என்னுடைய பதிவை சுட்டியதற்கு நன்றி என்று பொதுவில் சொல்வதில் என்ன தவறு? தொகுப்பாளரின் மின்னஞ்சல் முகவரி பலருக்கு தெரிந்திருக்காது. இது ஒரு விதமான acknowledgment. (வேண்டுமென்றால் மட்டுறுத்தல் மூலம் இந்த பதில்களை நிராகரிக்கலாம்?)