'மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி': ஒபாமா


மக்களைப் பயமுறுத்தி வாக்குகளைப் பெறும் முயற்சியில் ஹிலாரி இறங்கியிருப்பதாக பராக் ஒபாமா குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒபாமாவும், ஹிலாரியும் கடுமையாக மோதிவருகின்றனர். இந்தப் போட்டியில் ஹிலாரியைக் காட்டிலும் சற்று முன்னிலையில் இருக்கிறார் ஒபாமா. வரும் 4-ம் தேதி ஓஹியோ, டெக்ஸாஸ் ஆகிய முக்கிய மாநிலங்களில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தல்கள் நடக்க இருக்கின்றன. இந்த இரு மாநிலங்களிலும் ஹிலாரிக்கு தோல்வி ஏற்பட்டால் அதன்பிறகு அவர் போட்டியில் இருப்பதில் அர்த்தமில்லை.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை ஹிலாரி தொலைக்காட்சி விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். அதில், குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் காட்சி முதலில் காட்டப்படுகிறது. தேசிய பாதுகாப்பு அவசர நிலை தொடர்பான தொலைபேசி அழைப்பு வந்தால் அதற்குப் பதிலளிக்கக்கூடிய தகுதியானவர் யார் என்ற கேள்வியுடன் விளம்பரப்படம் முடிவடைகிறது.

பெண்களின் வாக்குகளைக் கவரும் நோக்கில் இந்த விளம்பரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த விளம்பரம்:


அதை கிண்டலடிக்கும் ஒபாமா ஆதரவாளரின் விமர்சனம்:

சமீபத்தில் ஹாலிவுட் நடிகர் ஜாக் நிக்கல்ஸன் க்ளின்டனை ஆதரித்தார்; அந்த விளம்பரம்:

டெக்ஸாஸில் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய ஒபாமா, தாம் இது போன்ற விளம்பரங்களை பார்த்திருப்பதாகவும், இது மக்களின் பயமுறுத்தி வாக்குகளைப் பெறும் முயற்சி எனவும் கூறினார்.

இந்தமுறை இதுபோன்ற முயற்சிகள் வெற்றி பெறப்போவதில்லை. யார் தொலைபேசி அழைப்புக்குப் பதிலளிக்கிறார்கள் என்பது முக்கியமல்ல. அந்தப் பிரச்னைக்கு எந்தமாதிரியான தீர்வை நீங்கள் தருவீர்கள் என்பதுதான் கேள்வி என்றார் ஒபாமா.

தொடர்ந்து 11 மாநிலங்களில் நடந்த வேட்பாளர் தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள ஒபாமா டெக்ஸாஸ் மற்றும் ஓஹியோவில் வெற்றி பெற்றுவிட்டால் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

இதற்கிடையே, வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகள், டெக்ஸாஸ் மாநிலத்தில் ஒபாமாவுக்கு 48 சதவீத வாக்குகளும், ஹிலாரிக்கு 45 சதவீத வாக்குகளும் கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளன.

எனினும் கணக்கீட்டு தவறுகளால் 4 சதவீத வாக்குகள் மாறக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நன்றி: தினமணி

4 responses to “'மக்களைப் பயமுறுத்துகிறார் ஹிலாரி': ஒபாமா

  1. ஒபாமா அதரவாளர்களின் கடி நல்லாக உள்ளது!!!

  2. —ஒபாமா அதரவாளர்களின் கடி நல்லாக உள்ளது!!!

    எந்தப் புற்றில் எந்த கால்வாரலோ… குடியரசு அபிமானிகள் கூட இந்த விளம்பரத்தை உலவ விட்டிருக்கலாம் 😉

  3. பிங்குபாக்: கடந்த வாரம் - அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம் « US President 08

  4. பிங்குபாக்: ஆணுக்கு (மட்டும்) பிடித்த பாடல்கள் « Snap Judgment

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.