அழகிரி பிறந்தநாள்: அமைச்சர்கள் பங்கேற்பு & 4 ஆயிரம் பேருக்கு உதவி
1. தலைவருக்கு தா கிருட்டிணனை மட்டுமல்ல; கேக்கையும் கட் பண்ணத் தெரியும்.
2. கேகேஎஸ்.எஸ்.ஆர் என்று கேக்கை பெயருக்குள் வைத்துக் கொண்டால் மட்டும் போதுமா? முக மகன் மனதில் இடம் பிடிக்க வேண்டாமா!
3. ஸ்டாலினுக்கு பிடித்த இளைய தளபதி பாட்டு: ‘மதுரைக்குப் போகாதடீ’
4. அழகிரிக்கு பிடித்த பாட்டு விஜய் பாட்டு: ‘மச்சான் பேரு மதுர… நீ நின்னு பாரு எதிர’
5. ‘அட்டாக் பாண்டி’ இல்லாவிட்டாலும் இந்த அழகிரிக்கு வெட்ட தெரியும்.
6. ஜாமீனுக்குள் மீனு சிக்கலாம்; ஆனா அழகிரி சிக்க மாட்டான்.
7. சுழல்விளக்கு பாதுகாப்பு வச்சிண்டிருக்கிறன் எல்லாம் அமைச்சரும் இல்ல; நலத்திட்டங்கள் நல்குபவன் எல்லாம் நாட்டாமையும் இல்ல!
8. நேரில் வந்து வாழ்த்து சொல்றவன் நாளைய அமைச்சர்; போனில் ஹேப்பி பர்த்டே சொல்றவன் நேற்றைய அமைச்சர்.
9. முதல்வருக்கு வாழ்த்துச் சொல்லாட்டி பிழைச்சுரலாம். ஆனால், மூத்த மகன் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லாதவன் நீடிச்சதா சரித்திரம் இல்ல!
10. கருத்தாகக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சியும் கண்ணுமண்ணு தெரியாம கழகத்தை மட்டும் கண்ணா நினைக்கிற தொண்டரும் உயிரோடு இருந்ததா சரித்திரம் இல்ல!












vanakam………www.tamilsangami.blogspot.com