எல்லாம் கருத்தாக்கல் மயம்


உலகப்பொதுமறை:
1. இது சிதம்பர ரகசியம் எல்லாம் இல்லை. மென்பொருள் துறையில் வேலை செய்யும் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான்.
தமிழ் சசி / Tamil SASI (ஒரு மணி நேரத்தில் திரட்டி செய்வது எப்படி ?)


நாட்டாமை & சட்டம் என் கையில்:
2. திரட்டிகள் வெறும் பதிவு, பின்னூட்டம் திரட்டுவது என்று மற்ற திரட்டிகள் போலில்லாமல் ஒரு வலைப்பதிவு சமூகமாக இருந்து வருகின்றது, நட்சத்திரம், பூங்கா, சுடர் விளையாட்டு என தமிழ் வலைப்பதிவர்களின் பங்கேற்ப்பை ஊக்குவிக்கின்றது, information காலத்தை தாண்டி இப்போது(ம்) நாம் Participatipon (participation) காலத்தில் இருக்கிறோம்.

OPML என்பது ஒரு திரட்டியின் சொத்து.

தமிழ்மணத்தில் பதிவர் பட்டியல் இருக்கே அங்கேயிருந்து எடுத்துக்கொள்ளவேண்டியது தானே என்றால் அங்கே காப்பிரைட் பிரச்சினை உண்டு.
குழலி (OPML பகிர்வு, ip , திரட்டி அரசியல், டெக்னாலஜி பிதாமகன் ரவிசங்கரின் டெக்னிக்கல் தவறுகள் மற்றும் இன்ன பிற…)


உன்னால் முடியும் தம்பி:
3. ஒரு பதிவரின் பதிவைத் திரட்ட அவரின் அனுமதி தேவையில்லை என்பது எனது ஆணித்தரமான கருத்து.

இணையம் இயங்குவதற்கே இது தான் அடிப்படை. சுதந்திரம் விரும்பும் பதிவர்கள் முதலில் வலைப்பதிவில் எழுதவே கூடாது.
ரவிசங்கர் (பதிவுகளைத் திரட்ட பதிவரின் அனுமதி தேவையா?)


தில்வாலே துல்லானியா லே ஜாயேங்கே வசனம் மாதிரி படிக்கவும்:பெரிய பெரிய திரட்டிகளில் இப்படி சின்னச் சின்ன முடக்கல் எல்லாம் சகஜமப்பா’
(“It’s alright Senorita, Bade Bade Deshon Mein, Aisi Choti Choti Baatein Hoti Rahti Hain.“)

4. தமிழ்மணம் வழங்கி செயல் இழந்தாலோ தளப் பராமரிப்பு வேலைகளுக்காகத் தளத்தைத் தமிழ்மணம் தற்காலிகமாக முடக்கி வைத்தாலோ, அது தமிழ்மணக் கருவிப்பட்டைச் சேவையைப் பெறும் 2000+ பதிவுகளையும் சேர்த்து முடக்கும். முடக்கும் என்றால் தமிழ்மணம் வழமைக்குத் திரும்பும் வரை 2000+ பதிவுகளின் ஒரு பக்கத்தையும் யாரும் திறக்கவும் படிக்கவும் முடியாது. அல்லது, பக்கம் திறக்கப்பட மிக மிகத் தாமதம் ஆகலாம்.
ரவிசங்கர் (தமிழ்மணம் – Defective by design !)


ஃப்ரீயா கொடுத்தா பினாயிலைக் கொண்டு பாரணைய முடிச்சுக்குங்க
5. தமிழ்மணத்தில் இடுகைகளை இணைத்தால் தானே இந்த பிரச்சினை? இடுகைகளை இணைக்காமல் விட்டால் பிரச்சினையிருக்காதே. எப்படியும் ‘நிறுவனப்படுத்தப்பட்ட திரட்டிகளுக்கு’ எதிரான உங்களுக்கு உங்கள் இடுகைகளை அத்தகைய திரட்டிகளில் இணைக்க வேண்டிய அவசியம் இருக்காதென்றே
நினைக்கிறேன். அவ்விதத்தில், உங்கள் இடுகைகள் திரட்டிகளின் பிடிகளில் சிக்காமல் உங்கள் சுதந்திரமும் காப்பாற்றப்படும்; படம் தோன்ற வாய்ப்பில்லாமல் உங்கள் பிரைவேசியும் காப்பாற்றப்படும் அல்லவா? அதைவிட, திரட்டிகளிலிருந்து உங்க பதிவுகளை முழுமையாக நீக்கச்சொல்லிக் கேட்டால் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்த மாதிரி ஆகிவிடுமே!
மு. சுந்தரமூர்த்தி (தமிழ்மணத்துக்கு பகிரங்க மடல் :))


ஆலோசனை எப்பவுமே அடுத்தவருக்குத்தான்; பூங்காவுக்கல்ல!
6. எளிமையாக எழுதுதல் என்பது முதிர்ந்த எழுத்தின் அடையாளம். (என்றால்)
Thangamani


உதாரணங்கள், ஒப்புமைகள், எடுத்துக்காட்டுகள் எல்லாம் ஒரு வழிப்பாதை
7.இந்தியாவில் குடும்பம் குட்டியோடு வாழ்ந்து கொண்டு இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் இது போன்ற கேள்விகள் கேட்பவர்களில் பலருண்டு. அவர்களை பார்த்து “இந்தியாவில் இருப்பதுதானே ப்ரச்னை. இந்தியாவை விட்டு வெளியேறி சுபிட்சமாக இருக்கலாமே” என்று சிறுபிள்ளைத்தனமாக கேட்டால் என்ன பதில் சொல்வார்கள் என்று அறிய ஆவலாக இருக்கிறது.
முகமூடி8. you have the cake and eat it too. That is fine. But the strange thing is you want chew the cake and spit it on their face.
மு. சுந்தரமூர்த்தி

9. மு.மூ.வின் புத்திசாலித்தனமான உதாரணத்தை (அது குழந்தைத்தனமானதாக இருப்பினும்)நீங்கள் ரசிப்பதும் விசித்திரமாக உள்ளது.
மு. சுந்தரமூர்த்தி


நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்படும்
10. ஒரு வேண்டுகோள் விடுவித்தால் அதனை சரி செய்யப்பார்க்கனும், இல்லைனா, எதுக்கு இங்கே வரேனு கேட்டா எப்படி?
இலவச உணவு வழங்கினாலும் அதில் புழு இருந்தால் கேள்வி கேட்பார்கள். ஓசி சோறு அதில என்ன கேள்வினு கேட்க முடியாது.
வவ்வால்


நன்றி சொல்ல எனக்கு… வார்த்தையில்லை எனக்கு… நாந்தான் மறுகறேன்
11. இன்னும் இதில் உள்ள சிலர் அவர்கள் பதிவில் ஒருவர் பின்னூட்டம் போட்டால் அவர்களுக்கு பிடித்தால் மட்டுமே வெளியிடுவர்கள், அப்படியே வெளியிட்டாலும் அதுகுறித்து கண்டுக்கொள்ள கூட மாட்டார்கள். அதாவது ஒரு பதிலும் கூற மாட்டார்கள். குறைந்த பட்சம் நன்றி தெரிவிக்கும் நாகரீகம் கூட இல்லாதவர்கள். இவர்கள் எல்லாம் விருது குழு என்று சொன்னால் … எப்படி.
வவ்வால்


கடவுளிடம் வேண்டுகோள் வைக்கலாம்; உண்டியலில் காசு போடலாம். நியாயமா என்றால் கண்ணைக் குத்திடும் உம்மாச்சி
12. தமிழ்மண சேவை என்பது ஒன்று இப்படி இருக்க வேண்டும், இல்லை அப்படி இருக்க வேண்டும், இதைவிட்டு வேறு எப்படி இருக்க முடியும் என்று கேள்வி கேட்க நீங்கள் எந்த அத்தாரிட்டியை வைத்திருக்கிறீர்கள்? ஏன் இடைப்பட்ட ஒரு நிலையில் இருக்க முடியாதா? இன்னின்னவாறு இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசனைகள் சொல்வது வேறு! இப்படி எப்படி இருக்கப் போயிற்று என்று எதிர்கேள்வி கேட்பது வேறு!
செல்வராஜ் (R.Selvaraj)


(படிக்கப் படிக்க முத்துக்கள் சேர்க்கப்படும்)


இதெல்லாம் படிக்கும் போது என் மகள் பக்கத்தில் இருந்து கொண்டு கேட்ட கேள்வி:
‘ஏம்ப்பா எங்கே பார்த்தாலும் ஒரே ஆச்சரியக்குறியா இருக்கு?

11 responses to “எல்லாம் கருத்தாக்கல் மயம்

  1. அடேங்கப்பா, என்ன ஒரு தொகுப்பு. எல்லாத்துலேயும் ஆச்சர்யா குறியாவா இருக்கு?\

  2. என் கமண்ட்டை ஏன் சேக்கலை 🙂

  3. பாபா, இம்புட்டு பதிவா படிச்சு இருக்கீங்க?

    நான் கூட “பூனைக்குட்டி என்ன பூனைக்குட்டி. கொரில்லாவே வெளியே வந்துவிட்டதே!” என்ற தலைப்பில் இது பற்றி எழுதலாம் எனத் தொடங்கி வேற மேட்டருக்குப் போயிட்டேன்.

    http://elavasam.blogspot.com/2007/12/blog-post_25.html – இருந்தாலும் பரவாயில்லைன்னு இங்க ஒரு போஸ்டர் ஒட்டிக்கிறேன். 🙂

  4. —எல்லாத்துலேயும் ஆச்சர்யா குறியாவா இருக்கு—

    பொண்ணு வுடற டயலாக் எல்லாம் நான் ப்ளாக் செய்வேன் என்பது அவளுக்குத் தெரியும் 😉

    பன்ச் டயலாக் வேணுமே என்றேன்… எடுத்து விட்டாள் 🙂

  5. —என் கமண்ட்டை ஏன் சேக்கலை—

    படிக்க வேண்டியது ஏகப்பட்டது இருக்கு. இன்னும் முழுக்க கரை சேரல…

  6. —இம்புட்டு பதிவா படிச்சு இருக்கீங்க?—

    நத்தார் தினம்
    வெத்தாக இருக்கிறேன்
    சத்தாக தேடுகிறேன்
    பொத்தலாக தென்பட
    மொத்துவிழாமலிருக்க
    கொத்தனாரும் படிக்கிறேன்

  7. அலைஞனின் அலைகள்: குவியம்: The Butter Battle Blog: Now and here:

    —அண்மையிலே வேர்ட்ப்ரஸ்.கொம்மிலே தமிழ்ப்பதிவிட்ட மூன்று நண்பர்களின் இரண்டரை ஆண்டு காலப்பதிவுகள் அப்படியே விழுங்கப்பட்டன; இதற்கான காரணம், என்ன அல்லது எவர் என்பதை இங்கே விட்டுவிடலாம். ஆனால், குறைந்தபட்சம் வேர்ட்ப்ரஸ்.கொம் அவற்றினைப் பணம் தந்து செய்து இட்டவர்கள் பாதுகாத்து மீட்டெடுக்கக்கூட உரிமை தரவில்லை—

    ஏன்?? இழந்த பதிவுகளை மீட்க முடியவில்லையா? வொர்ட்ப்ரெஸ்.காம் வேண்டுமென்றே நீக்கியதா?

    (நானும் வொர்ட்ப்ரெசில் பதிவதால்; இந்த மாதிரி நேரலாம் என்பதால்; நிஜமாகவே நிகழ்ந்ததா?? எவருக்கு?? என்பதை அறியும் நோக்குதான்)

  8. உங்கள நினைச்சு ஆச்சரியமா இருக்கு. வேலைக்கு ஆள்வச்சி இதையெல்லாம் செய்றீங்களோன்னு 😉

    “Snap Judgment” நல்ல கலெக்சன்ஸ். பின்ன ஒரு காலத்துல ரொம்ப உதவும் 😉

    வாழ்த்துக்கள்.

    அன்புடன்,
    முபாரக்

  9. வணக்கம்
    உங்கள் கட்டுரைகளும் ஆக்கங்களும் என்னை உங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.
    வாழ்த்துக்கள்

    முதலில் என்னை பற்றிய ஒர் சிறிய அறிமுகம்.

    எனது பெயர் இரமணன் நான் ஒரு இணைய தள வடிவமைப்பாளராக பணி புரிகிறேன். உயிர்

    வாழ்வதற்க்காக சொந்த மண்ணை விட்டு அந்நிய மண்ணிலே செத்துக் கொண்டிருக்கும் இலட்சக்

    கணக்கான கோழைகளில் நானும் ஒருவன்.

    நான் தற்பொழுது ஓர் சிறிய முயற்ச்சியில் இறங்கியுள்ளேன். அதை உங்களிடம் பகிர்து கொள்ள

    விரும்ப்புகிறேன்.

    இன்று இணையதில் நிறைய தமிழ் சார்ந்த விடயங்கள் இருக்கின்றன இது தமிழ் வளர்ச்சியில் மிகவும்

    வரவேற்க்க தக்கது ஆனால் இதில் வருந்த தக்க விடயம் என்ன வென்றால் இந்த தகவல்கள்

    அனைத்தும் அனைவருக்கும் போய் சேராதது தான். இதற்க்காகவே நான் ஓர் இணைய தளத்தை

    ஆரம்பித்து உள்ளேன். இதில் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழ் சார்ந்த தகவல்களையும் திரட்டி ஓர்

    இடத்தில் பதித்து வருகிறேன். இதில் உங்கள் கட்டுரைகளையும் ஆக்கங்களையும் சேர்த்துக்கொள்ள

    விரும்புகிறேன். நீங்கள் அதற்க்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள்

    தகவல்கள் அனைதும் உங்கள் பெயரிலேயே பதியப்படும்.

    தமிழ் அமுதினைத் திரட்டிவரும் இந்த தேனிக்கு தங்கள் உதவியை வழங்குங்கள். நாளைய எமது தமிழ்

    சமுதாயம் இணையத்தில் நடை போட இது வழி சமைக்கும் என்று நம்புகிறேன்

    நன்றி
    இரமணன்
    http://www.thurikai.com

bsubra -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.