Define: Annoyance


முன்னுமொரு காலத்தில் பாப் – அப் நுட்பம் இருந்தது. ரீடிஃப், சிஃபி சென்றால், ‘என்னைப் பாரேன்; எங்கள் உரலை இடியுங்களேன்’ என்று குறைந்தபட்சம் இரண்டு முதல், பலான பக்கங்களில் பதினெட்டு வரை பாப் அப் உதிக்கும்.

அப்புறம் சம்மட்டி அடிப்பது போல் சில நிரலிகள் வந்து அவற்றை கவனிக்க, சாவு மணியாக கூகிள் எல்லாவற்றையும் துரத்தி அஸ்து பாடியது.

நிரலர்களும் பாப் அப் பழசு என்று விளம்பரங்களை காதோடு பேசுவது முதல் வரிகளுக்கு நடுவில் நுழைப்பது வரை எல்லாம் செய்து வருகிறார்கள்.

இந்த நவீன வெப் 2.0 முடிந்து புதிய யுகமான 3.0- விலும் விடாமல் பாப் அப் போடுவது ‘அன்னாயன்ஸ்’.

உங்களுக்கும் கடுப்பு அதிகமாகணுமா? பச்சை கலர் சிங்குச்சா துரத்தி துரத்தி அடிக்க வேண்டுமா?? மின்னஞ்சல் கொடு என்று போகுமிடமெல்லாம் வரும் தொல்லை தேவையா?

நிலாச்சாரல் செல்லுங்கள். வரும்.

nila_charal_pop_ups_annoyance_ad_emails_web_design.jpg

மூடி விடுங்கள்.

வேறு எங்காவது செல்லுங்கள். வரும். கீழே போனால் எகிறி குதிக்கும். மேலே போனால் வாலாட்டும்.

வலையகத்தின் வேகத்தை அதிகப்படுத்துங்கப்பா… இப்படி பாப் அப் போட்டு படுத்தாதீங்க…

பின்குறிப்பு: மிகுந்த ஆதுரத்துடன் விற்கிறார்களே என்று விசால மனதுடன் மடல் முகவரியிட்டாலும் போய் தொலைவதில்லை. எனினும், உடனடியாக ‘போனஸ்’ போட்டு மடலனுப்பினார்கள். பிடிஎஃப்பை இறக்கிப் பார்த்தால், ஆங்கிலத்தில் சிவசங்கர் பாபா வடிவேலுவின் கால்களை பிடித்து டான்ஸ் ஆடிய கதாகாலட்சேபம் கிடைக்கிறது.

படித்து பார்த்தாலும் சாந்தி கிடைக்கவில்லை.

2 responses to “Define: Annoyance

  1. அவங்க கிட்ட சொன்னீங்களா? இல்லை பிரதமருக்கு கடுதாசி எழுதற மாதிரி எங்களுக்குத்தான் தகவலா? 🙂

  2. சொல்லலை 🙂

    நினைவூட்டலுக்கு நன்றி இ.கொ

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.