Daily Archives: நவம்பர் 29, 2007

இணைய ரேகிங் – 13 வயது பெண் தற்கொலை

47 வயதான பெரியவர் இணையத்தில் 16- ஆக வேஷம் கட்டியிருக்கிறார். மைஸ்பேஸ்.காமில் குடிபுகுந்து 13 வயதான பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் நட்புடன் பழக ஆரம்பித்திருக்கிறார்.

‘வீட்டில் தொலைபேசி இல்லை’ என்று பொய் சொல்லிவிட்டு, வலை மூலமாக மட்டுமே அறிமுகத்தை வளர்த்திருக்கிறார்.

திடீரென்று ஒரு நாள் மோசமாகப் பேச ஆரம்பித்து அவளை புண்படுத்த, மனம் வெதும்பியதில் அவள் தூக்கு மாட்டி இறந்து விட்டாள்.

இந்த குற்றத்திற்கு காரணமான கிழவருக்கு என்ன தண்டனை?

எதுவுமே இல்லை!

அமெரிக்காவில் இன்னும் அதற்கான சட்டம் இல்லை என்பதால் கடந்த வாரத்தில் புது சட்டம் இயற்றப்பட்டது: ‘500 டாலர் அபராதமும் 90 நாள் சிறைத்தண்டனையும் அதிகபட்சமாக தரப்படும்’.

இணையத்தின் தாக்கங்களில் இருந்து தாக்குப் பிடிக்க நிரம்ப மனோதிடம் வேண்டும்!

செய்தி: A Hoax Turned Fatal Draws Anger but No Charges – New York Times

பி.கு.: கல்லூரி மாணவர்களிடையே ரொம்ப புகழ்பெற்ற கடுப்பேற்றும் சொற்றொடர்களில் ஒன்று: ‘உன்னைப் பெத்ததற்கு உங்க அப்பா, அம்மா, நைட் ஷோ போயிருக்கலாம்டா!’ சென்னை 600028- இல் கூட இந்த வசனம் வரும். நேரில் சொல்லும்போது கலாய்த்தல் மாதிரி பொருள் தரும். குறுந்தகவலாகவோ மின்னஞ்சலாகவோ வந்தால் வெறுப்பைத் தூண்டலாமோ!?

பாஜக எடியூரப்பா, குமாரசாமி, காங்கிரஸ் – கர்னாடகா

கார்ட்டூன் இங்கே:

kalki_karnataka_bengaluru_coomarasamy_deve_gowda.jpg

செய்திகள் அங்கே:

1. நவீன திருதராஷ்டிரர்கள் :: டி.ஜே.எஸ். ஜார்ஜ்

2. கர்நாடக அரசியல் குழப்பத்தால் மத்திய அரசுக்கு ரூ.75 கோடி செலவு :: தேர்தலில் கட்சிகளும் கோடிகளை கொட்ட தயார்

3. அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதத்தை படம் பிடித்து காட்டியது கர்நாடகா :: கட்சித் தாவலின் மறுவடிவம்?

கிசுகிசு:

Politics news / அரசியல் அலசல்: சுரங்க இலாகாதான் அமைச்சரவையில் பெரிய சுரண்டல் இலாகா என்றும் அதனை மதச் சார்பற்ற (நகைமுரண்!?) ஜனதாதளத்துக்கு கொடுக்க மறுத்ததால்தான் ஆட்சிக் கவிழ்ப்பு என்றும் சொல்லப்படுகிறது.