தமிழர்கள் கமலை அந்நியனாகவே பார்க்கிறார்கள். அவர்களுக்கு அவர் ஒரு elite. அவ்வளவுதான். ஆளவந்தான் படத்தில் ‘he seems to be a necrophelic’ என்று ஒரு வசனம் வரும். புரிகிறதா?
மற்றொரு சம்பவம்: ஆளவந்தான் வந்த சமயம். என் நண்பரும் நடிகருமான ப்ரதாப் போத்தனும் நானும் அந்தப் படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். படத்தைக் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார் ப்ரதாப்.
‘இதையெல்லாம் கமலிடம் சொன்னிர்களா?’ என்று கேட்டேன்.
‘நான் என்ன ஃபீல்டில் இருக்கிறதா, வேண்டாமா?’ என்றார் ப்ரதாப்.
‘பிறகு என்ன சொன்னீர்கள்?’
‘க்ளாஸிக் என்று சொன்னேன். “ம்… உங்களுக்கும் எனக்கும் தெரிகிறது. மக்களுக்குத் தெரியவில்லையே?” என்றார் கமல்’.
இதிலிருந்து தெரிவது என்னவென்றால், கமலிடம் யாருமே அவரது படங்களைப் பற்றி பேச முடியாது; பேசியதும் இல்லை என்பதுதான். கமலிடம் பேச்சு இருக்கிறது; செவிகள் இல்லை. எந்தளவு கமல் தனிமைப் பட்டுப் போயிருக்கிறார் என்பதற்கு இச்சம்பவம் ஒரு உதாரணம்.
முழுவதும் படிக்க: சிவாஜிக்கு வெளியே – சாரு ஆன்லைன்











பிங்குபாக்: ஆளவந்தான் « Snap Judgment
kamal is a one of the legendz in this cine Art\
ஐயோடா சாமி!
ப்ரதாப் போத்தன் பேசினா அவருக்கே புரியாது. இதுல அவர் பேசி கமலுக்கு மட்டும் புரியவா போகிறது. ப்ரதாப்புடன் சேர்ந்து உங்கள் அறிவு கூட மழுங்கிப் போயிருக்கிறது என்பதற்கு உங்களின் இந்த posting நல்ல உதாரண்ம்
டெகிள்,
—போத்தன் பேசினா அவருக்கே புரியாது. —
உங்களுக்கு பிரதாப்புடன் தொடர்பு உண்டா? அவருடன் என்ன அளவளாவி இருக்கிறீர்கள்?
அவர் பேசுவது புரியவில்லை, என்று உடனே சொல்லி இருக்கலாமே?
கமலிடம் கருத்துச் சொல்ல முடியாது என்றால் சாருவிடம் அந்தரங்கமாக எதுவும் சொல்ல முடியாது போலிருக்கிறதே?? பிரதாப் போத்தன் அவருடன் பகிர்ந்த கருத்தை இப்படி பகிரங்கமாக எழுதி போட்டுக் கொடுத்திட்டாரே சாரு?? :):)
இவ்வாறு பிரதாப் போத்தான் சொன்னதாகத் திரித்து சொல்லப்பட்டதாகவும், இந்தக் கருத்தை தான் கூறவில்லையென்றும் ப்ரதாப் மறுத்துள்ளார்.
‘இவர் சொன்னார்… அவர் சொன்னார்’ என்று இன்னொருவர் புரிந்துகொண்டதை மூன்றாவது நபர் எழுதும்போது, அசலாக சொன்னது விகாரமாகியிருக்கும்.
சுவாதி, எவருடனுமே அந்தரங்கமாக எதையுமே சொல்ல முடியாது. எப்பொழுது என் எண்ணங்களை அடுத்தவரிடம் அரட்டையிலோ, அஞ்சலிலோ சொல்கிறேனோ, அப்போதே அது அம்பலம் ஆகும் என்று நினைப்பேன்.
RUBBISH
சாருவால் கமல் பற்றி வரும் விமர்சனங்களை கண்டுகொள்ள தேவையில்லை.
சாரு நிவேதிதா அடிக்கடி கமல் ஹாசனைப்பற்றியும் ஏனைய பிரபலங்கள் பற்றியும் விமர்சனம் செய்வது வழமையான ஒரு விடயம். ஆனால் இவரது கமல் பற்றிய விமர்சனங்கள் சிலவற்றை ஏற்றுக்கொண்டாலும் பலவற்றினை அறவே ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம் சாரு அவர்கள் எந்நிலையில் இருந்து எக்கோணத்தில் இவ்விமர்சனங்களை செய்கிறார் என பொதுநோக்குடன் பார்க்கும் போது இந்திய தமிழ் சினிமாவின் வளர்ச்சிப்போக்கு பற்றி சாரு அவர்கள் எந்த அளவு தெரிந்து வைத்துள்ளார் என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கிறது. சாரு அவர்களே விமர்சனம் செய்யுங்கள். அது கமலின் வளர்ச்சிப்பாதைக்கு ஒரு படிக்கட்டாக அமையும் ஆனால் எனது விமர்சனத்தால்தான் கமல் இதை இப்படி மாற்றினார், அப்படி மாற்றினார் என்பதனூடாக உங்களது கமலின் மீதான காழ்ப்புணர்சியின் உத்வேகம் எமக்கும் புரிகிறது.
பிங்குபாக்: சாரு நிவேதிதா சந்திப்பு | Snap Judgment