1. Thinnai: சில வரலாற்று நூல்கள் 1 – மதுரை நாடு : ஒரு ஆவணப்பதிவு (ஜெ.எச்.நெல்சன்) :: ஜெயமோகன் [The Madura Country -A manual J..H..Nelson.Asian Educational Services New Delhi, Madras, 1989]
2. Thinnai: சில வரலாற்று நூல்கள் 2 – திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு – ஹெச்.ஆர்.பேட் ஐ.சி.எஸ் :: ஜெயமோகன் [Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. ]
ஆங்கிலேயர் எழுதிய ஆவணக்குறிப்புகள் மற்றும் வரலாற்று நூல்கள் பொதுவாக கீழ்க்கண்ட சிறப்புகள் உடையவை.
1. தெளிவான செறிவான நடை
2. ஏராளமான தகவல்கள்
3. தகவல்களை பகுக்கவும் தொகுக்கவும் அறிவியல்நோக்கு சார்ந்த ஒரு அடிப்படைத்தளம்
4. பிரச்சார நோக்கம் இல்லாத பதிவுத்தன்மை.
5. பலதுறை அறிதல்களை தொகுக்கும் இயல்பு
அவை அனைத்துக்குமே கீழ்க்கண்ட குறைகளும் உண்டு
1. ஆதிக்க இனத்தின் நோக்கில் இந்தியாவை பார்ப்பதனால் உருவாகும் இயல்பான அலட்சியமும் புரிதல் குறைகளும்
2. மதக்காழ்ப்பும் மதக்காழ்ப்புள்ள பாதிரிமாரின் நூல்களை சார்ந்திருக்கும் தன்மையும்
3. இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டின் பல்லினப் பலமொழி பலமதப் பண்பாட்டை எளிதில் பொதுமைப்படுத்திக்கொள்ளும் முயற்சி.
கட்டப்பொம்மு நாயக்கனும் பூலித்தேவனும் நடத்திய கலகங்களின் விரிவான சித்திரம் அளிக்கப்படுகிறது. கட்டப்பொம்மு நாயக்கரின் கலகம் நாம் நன்கறிந்த சிவாஜிகணேசனின் திரைப்படம் காட்டும் சித்திரத்துக்கு பலவகையிலும் வேறுபட்டு இந்நூலில் காட்சியளிக்கிறது. கட்டபொம்மு நாயக்கருக்கு தேசியம் சார்ந்த புரிதலோ ஒரு நாட்டை அமைக்கும் நோக்கமோ இருந்ததாக தெரியவில்லை.
பிற பாளையக்காரர்களைப்போல அவரும் மற்ற பாளையபப்ட்டுகளில் மக்களை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷார் அவரை கட்டுப்படுத்தி கடுமையான கிஸ்தி போடுகிறார்கள். பொதுவாக பாளையக்காரர்களுக்கு போடப்பட்ட கிஸ்திக்கு எதிராக கடுமையான அதிருப்தி இருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெ·ப்.ஜாக்ஸனிடம் வாதாடியபின் இறங்கிச்ச்செல்லும் வழியில் கட்டப்பொம்மு நாயக்கர் அவரை தடுக்க முயன்ற ஆங்கில ஊழியர் கிளேர்க்கை கொன்று தப்பிச்செல்கிறார்.
கட்டபொம்மு நாயக்கருக்கு அவரைச் சுற்றியிருந்த மறவர், வன்னியர் பாளையக்காரர்கள் அனைவருமே எதிராக இருக்கிறார்கள். ஊத்துமலை ஜமீந்தாரும், சிவகிரி ஜமீந்தாரும் சுப்ரமணியபிள்ளை தலைமையில் தங்கள் நாடுகளில் கொள்ளையடிக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்காரர்களுக்கு எதிராக போராட வெள்ளையரை தங்கள் உதவிக்கு அழைக்கிறார்கள். இவர்களின் உதவிகொண்டு கட்டப்பொம்மு நாயக்கர் ஒடுக்கப்படுகிறார். இதன் விரிவான தகவல்கள் இந்நூலில் அளிக்கப்படுகின்றன.
3. Thinnai: சில வரலாற்று நூல்கள் – 3 –மதுரை நாயக்கர் வரலாறு : (அ.கி.பரந்தாமனார் எம்.ஏ) :: ஜெயமோகன் [பாரிநிலையம். 90 பிரகாசம் சாலை சென்னை 600018]
- விஜயநகரத்தின் மிகச்சிறந்த மன்னரான கிருஷ்ண தேவராயர் இன்று கர்நாடகத்தில் ராஜராஜசோழன் போல ஒரு தொன்மமாக கருதப்படும் பெருமன்னர். [நான் கிருஷ்ண தேவராயன் என்ற பேரில் ரா.கி.ரங்கராஜன் ஒரு நாவல் எழுதியிருக்கிறார்]
- அவர் தன் தளபதி நாகம நாயக்கனை மதுரையை கைப்பற்றி கப்பம் பெற்றுவர அனுப்பினார். நாகமன் மதுரையைக் கைப்பற்றி தன்னை மதுரை மன்னனாக பிரகடனம் செய்து கொண்டார். ஆகவே நாகமனை வென்றுவர நாகமனின் மகன் விஸ்வநாத நாயக்கனின் தலைமையில் ஒரு படையை அனுப்பினார் ராயர். மகன் தந்தையை வென்று சிறைப்பிடித்து கொண்டுசென்று ராயர் முன் நிறுத்தினான்.இந்த துரோகத்தை ஏன் செய்தாய் என்று ராயர் நாகமனிடம் கேட்டபோது என் மகனுக்கு ஒரு நாட்டைக் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் என்று நாகமன் சொன்னதாகவும் விஸ்வநாத நாயக்கனிடம் உனக்கு என்ன பரிசு வேண்டும் என்று ராயர் கேட்டபோது அவன் தன் தந்தையின் உயிரை கேட்டதாகவும் ராயர் விஸ்வநாதனை மதுரையின் சுதந்திர மன்னனாக பிரகடனம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. அவ்வாறு மதுரை நாயக்க வம்சத்தின் முதல் மன்னனாக 1529ல் விஸ்வநாத நாயக்கன் முடிசூடினார் [இதை அகிலன் ‘வெற்றித்திருநகர்‘ என்ற நாவலாக எழுதியிருக்கிறார்]
- இன்று தென் தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகள் மங்கம்மாள் போட்டவை. அவற்றை ஒட்டி உருவான புது ஊர்களே இன்றைய முக்கிய நகரங்களான சாத்தூர் சிவகாசி கோயில்பட்டி முதலியவை. இவற்றை இன்றும் கிராம மக்கள் மங்கம்மாள் சாலை என்றே சொல்கிறார்கள்– இப்போது போடப்படும் நாற்கரச் சாலையைக்கூட! மங்கம்மாள் கட்டிய பல வழிப்போக்கர் சத்திரங்கள் இன்றும் சாலையோரம் உள்ளன. [நா பார்த்தசாரதி ராணிமங்கம்மாள் என்ற நாவலை எழுதியிருக்கிறார்]
4. Thinnai: சில வரலாற்று நூல்கள் 4 – தமிழ்நாட்டு பாளையக்காரர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்: கெ.ராஜையன் :: ஜெயமோகன் [Rise And Fall Of Poligars Of Tamilnad . Prof .K.Rajaiyyan M.A, M.Litt, A.M, PhD, Published by University Of Madras 1974]











The poligars of Sivagiri,Ezhayiram pannnai,alakaapuri are vanniyars by caste.The descendents of these poligars live even today and they are members of Vanniyar caste only.Some historians provided false info about these palayams without knowing about the history of these palayams.