Kosu (Novel) – Pa Raghavan : Bits, Metaphors, Quotes


  • கனவுகளைச் சுருட்டி அடையாறில் எறிந்துவிட்டு
  • சரித்திரம் இருட்டடிப்பு செய்தாலும் சமகாலம் சாதகமாகத்தான் இருக்கிறது.
  • ஆட்சி கையில் வந்திரிச்சின்னா மாநிலமே ஒரு குப்பம்தாண்டா
  • வாழ்க்கை சுலபமானதுதான். பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லாத பட்சத்தில்.
  • பிடிப்புக்கு ஏதோ ஒன்று வேண்டித்தான் இருக்கிறது. மாவட்ட செயலாளர் பதவி. கிடைக்காத பட்சத்தில் கடவுள் ஆட்சேபணை இல்லை.
  • எதிர்த்த ஹிந்தி என்றாலும் எதிர்காலம் அதில் இருப்பதாகத்தான் வைத்தீஸ்வரன் கோயில் ஜோசியன் சொல்லியிருக்கிறான். அரசியலில் எதிரி என்று எவருமில்லை. எப்படி நண்பர்களாகவும் யாருமில்லையோ அங்ஙனம். ஆகவே அவர்தம் சமஸ்தானங்களைத் தெளிவாகப் பிரித்துக் கொண்டு நிர்வகிக்கத் தொடங்கினார்.
  •  துயரங்களைப் பொருட்படுத்தாமலிருக்க பழகிவிட்டது மனம். துயரமென்றே உணராத அளவுக்கு மரத்துவிட்ட மனம்.
  • எட்டடி எடுத்து வைத்தால் வந்துவிடுகிற அடையாறு ஆற்றுப்பாலம். தடதடத்து ஓடுகிற ரயில்கள். நினைவு தெரிந்த காலமாக ஓடிக்கொண்டு இருக்கின்றன. ஆனால், பாலத்தின் அடியில் இருந்து அந்தச் சத்தத்தைக் கேட்கும்போது பயமாக இருக்கிறது. அதிர்வுகளைத் தாங்குவதற்கு உயரங்கள் முக்கியம் போலிருக்கிறது.
  • கட்சி பேப்பரில் வாரம் ஒருமுறையாவது கண்டிப்பாக அவர் கை கூப்பிய விளம்பரம் வெளியாகும். எதற்காவது தலைவரை வாழ்த்துவார். வாழ்த்துவதற்கு தருணங்களா பிரச்னை? மனம் வேண்டும். எட்டு காலம் பன்னிரெண்டு சென்டிமீட்டர் அளவுக்கு இடமெடுத்து வாழ்த்தப் பணம் வேண்டும்.
  • எப்போதுமே தொடக்கம்தான் சிக்கல்களும் பிரச்னைகளும் கொண்டது. ஒரு படி ஏறிவிட்டால் போதும். பின்னால் வருபவர்கள் தள்ளிக் கொண்டு போய்விடுவார்கள்.
  • குப்பைகள் தொட்டியை மீறத் தொடங்கும்போது, தொட்டிகள் நாய்களின் இல்லங்களாகி விடுகின்றன. கூச்சலில் அமைதி குலைக்கப்படும்போது தொட்டிவாசிகள் கோபம் கொண்டுவிடுகிறார்கள்.
  • ஆனால் சரியானவற்றை மட்டுமே விரும்புவதாக மனம் இருப்பதில்லை, பெரும்பாலும். இப்படியும் சொல்லலாம். விரும்பக்கூடிய அனைத்தும் பெரும்பாலும் சரியானவையாக மட்டும் இருப்பதில்லை.
  • சிறியதொரு குன்று போலத் தோற்றமளிக்கும் குப்பை மேடு. பன்றிகள் படுத்திருக்கும். ஜென்மாந்திரமாக அவற்றுடன் விரோதம் பாராட்டி அலுத்த நாய்களும் உடன் படுத்திருக்கும்.
  • ஒரு கட்டத்துக்கு மேல பணம் கூட போரடிக்கும் முத்து. ஆறு மாதிரி ஒடிக்கினே இருந்துட்டு, சடாருன்னு குட்டையா குந்திக்கிட்டா எப்பவுமே பேஜாருதான். நானெல்லாம் நேத்திக்கி வந்தவன். நீ நாளைக்கு வரப்போறவன். நமக்கு இதெல்லாம்கெடியாதுன்னு வையி. கொட்டை போட்டவனுக நெலைமை கஸ்டம்தான்.
  • காரணமில்லாத அன்பு என்று ஏதுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் கண்டிப்பாக காரணமில்லாத வன்மம் இருக்கிறது.
  • தீக்குளிச்சாங்க நிரூபிக்க முடியும்? பேசுனா, அரசியல்வாதி பேச சொல்லித் தரணுமான்னுவிங்க. பேசாம திரும்பிப் போனா திமிரப்பாருன்னுவிங்க. நொந்துபோன மனச, அனுமாரு போட்டோ மாதிரி பொளந்துகாட்டத் தெரியலிங்க எனக்கு.

4 responses to “Kosu (Novel) – Pa Raghavan : Bits, Metaphors, Quotes

  1. இது அச்சுப்பதிப்பாக கிடைக்கிறதா? கிழக்கு பதிப்பகம்?

  2. பத்மா அர்விந்த்'s avatar பத்மா அர்விந்த்

    //காரணமில்லாத அன்பு என்று ஏதுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. ஆனால் கண்டிப்பாக காரணமில்லாத வன்மம் இருக்கிறது. //

    இது உண்மையில்லை. எங்கேயாவது எதவது ஒரு சின்ன காரணம் இருக்கும். நேரடியாக இல்லாவிட்டாலும் கூட.

  3. சிவா… கல்கியில் தொடராக வந்தது. விரைவில் புத்தக வடிவும் பெறும் என்று நினைக்கிறேன்.

  4. பத்மா… இருக்கலாம்.

    தாய் மகனைக் கொல்வது, ‘கண்டாலே பிடிக்கலே’ என்று பார்த்தவுடன் வெறுப்பை உமிழ்வது, போன ஜென்மப் பகையோ என்று சொல்வது… போன்றவற்றை எனக்கு ‘காரணங்கற்பித்த’ வன்மத்தை நினைவுறுத்தியது.

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.