அவர் பேச்சு முடிந்தபிறகு, காலி கப்-சாஸர்கள், தட்டுகள் அகற்றப்பட்ட பிறகு விருந்தினர் பார்ப்பதற்காகவென்று முந்தைய ஆண்டு ஜனாதிபதி வெள்ளிப் பதக்கம் பெற்று, சினிமா விசிறிகள் சங்கம் (ரிஜிஸ்டர்), தலை சிறந்த படம் என்று நற்சான்றிதழ் வழங்கிய தமிழ்ப்படம் ஆரம்பித்தது.
…..
ராம்சிங் அந்தப் பாராட்டை அப்படியே அங்கீகரித்துக் கொண்டான்.
‘சோக அம்சம்தான் கொஞ்சம் அதிகமாக இருந்தது’ என்று செக்காரர் சேர்த்துக் கொண்டார்.
இப்போது ராம்சிங்குக்கும் சிறிது சந்தேகம் வந்தது. ஜகன்னாத்ராவ் கண்களில் ஓரளவு தெரியுமளவுக்கு விஷமம் தென்பட்டது. அந்தப் படத்தில் ஆரம்பத்தில் நன்றாகப் பாடி விளையாடிக் கொண்டிருந்த வாலிபக் கதாநாயகனுக்குக் கைபோய், கல்யாணமான பிறகு தாய், சொத்து, பிறந்த குழந்தை இவை எல்லாம் போய் குருடனாகவும் ஆகிவிடுகிறான்.
‘வாழ்க்கையே சோகம்தானே’, என்று ராம்சிங் சொன்னான்.
‘எங்களுக்கு (நாஜி) ஆக்கிரமிப்பு இருந்தது. லட்சக்கணக்கான பேர் நசித்துப் போனார்கள். அப்படியும் எங்கள் கதைகளை விட உங்களுடையதில் சோகம் அதிகமாகத்தான் இருக்கிறது.’
திரவியம் ஏனிந்தப் பேச்சைத் தொடங்கினோம் என்ற சங்கடம் தெரிய நின்றுகொண்டிருந்தார்.
செக்காரர் இறுதியாக ஒன்று கூறி முடித்தார். ‘நானும் மூன்று இந்தியப் படங்களைப் பார்த்து விட்டேன். உங்கள் கதாநாயகர்களுக்கு பெண்மை சிறிது அதிகமாக இருப்பதாகப் பட்டது. அதிலும் உங்கள் படத்து நடிகர் எல்லாவற்றுக்கும் அழுது விடுகிறார்.’
எல்லோரும் லேசாகச் சிரித்தார்கள். உலகத்திலேயே தலைசிறந்த நடிகர் என்று நாட்டில் ஒரு சிலரால் கொண்டாடப்படும் அந்த நடிகர் வலுவான சுவாசம் பெற்றவர்.
நன்றி: கரைந்த நிழல்கள் – அசோகமித்திரன்











பிங்குபாக்: Karaintha Nizhalgal - Asokamithiran (3) : Links « Snap Judgment
கடற்புறத்தான் கருத்துக்கள்: தேவனே என்னைப் பாருங்கள்
பானுமதியுடன் அவர் நடித்த அறிவாளியை நான் இன்றைக்கும் ரசிப்பேன். காமெடியில் அவர் திறமையை யாரும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் அவரை அழ வைத்துவிட்டார்கள். ஆனால் அவர் அழுதபோது பார்த்தவர்கள் எல்லோருமே அழுதார்கள் என்று சொல்ல முடியாது! அதுதான் அவருடைய சிறப்பம்சம். ஞான ஓளி, கௌரவம், திரிசூலம் போன்ற உலக மகா காமெடிகளை இன்றும் பார்த்து சிரிக்கலாம்.
some (relevant) old posts…
E – T a m i l : ஈ – தமிழ்: Sivaji Statue Opening Vizha
Bale Paandiya – Movie Review « Snap Judgment
//ஞான ஓளி, கௌரவம், திரிசூலம் போன்ற உலக மகா காமெடிகளை //
ஐயா சாத்தான் 🙂
அஃதே அஃதே!!
ஓ மை லார்ட் என்று அலறும்போது கர்த்தர் ஓடிவிடுவார் என்று நாங்கள் கலாய்ப்பதுண்டு. அதன் பிறகுதான் அவரைபிடிக்க சிவாஜி அண்ணாச்சி வேகமாக நடந்து கர்த்தரைப் பிடிக்கப் போகிறார் என்றும் சொல்வதுண்டு. 🙂
திரிசூலம்… ஹா ஹா, காலத்தால் அழியாத பொக்க்கிஷம்.
அதிலும் சிவாஜி நன்றாக நடித்திருக்கிறா என்று யாராவது சொன்னால்… ஓஓ! மை லார்ட்! நோ பீஸ் ஆஃப் மைண்டுன்னு போயிட்டே இருக்க வேண்டியதுதான். :-))))
சாத்தான்குளத்தான்
—ஓ மை லார்ட் என்று அலறும்போது கர்த்தர் ஓடிவிடுவார்—
😛
ஞான ஒளியில் சாரதாவிடம் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள மார்பில் ஒரு கையால் அழுத்தித் தட்டிக் காட்டுவது காலத்தால் அழியாத காட்சி!
இந்த லிஸ்ட்டில் ரிஷிமூலம், தங்கப் பதக்கம் என்று சொல்லிக்கொண்டே போகலாம். அவருடைய ஜெராக்ஸ் காப்பி மாதிரி மேஜர் சுந்தரராஜன். ஒரு படத்தில் – என்ன படம் என்று ஞாபகமில்லை – ஒருவர் அப்பாவாகவும் இன்னொருவர் மகனாகவும் வருவார்கள். யார் அப்பா, யார் மகன் என்றே கண்டுபிடிக்க முடியாது!
ஆனால் சிவாஜி ராவ் கெய்க்வாடுக்கு இருப்பது போல சிவாஜி கணேசனுக்கும் அதிதீவிர ரசிகர்கள் இருப்பார்கள் போலிருக்கிறது.
—யார் அப்பா, யார் மகன் என்றே கண்டுபிடிக்க—
விஜயகாந்த்துக்கு அப்பவே போட்டியிருந்திருக்குன்னு சொல்லுங்க… யார் அண்ணன், யார் தம்பி என்று தெரியாத மாதிரி மிளிரும் நடிப்புடையவர் கப்தான்.
jeyamohan.in » Blog Archive » திலகம்
உச்சகட்ட நடிப்பு ”பகைவர்களே ஓடுங்கள் புலிகள் இரண்டு வருகின்றன!” என்ற வரிக்கு சின்ன சிவாஜி காட்டும் சைகைதான். தமிழ் நடிப்புலகில் அதற்கு ஈடு இணை ஏதுமில்லை. தென்னாட்டு மார்லன் பிராண்டோ என்று சிவாஜியை இதன்பொருட்டே சொன்னார்கள் என்று நினைக்கிறேன்.