Azhagiri = Karl Rove; Attack Paandi = Scooter Libby; Karunanidhi = Dick Cheney


ச:ஸ்கூட்டர் லிபிக்கு சிறை

இந்த மாதிரி ஒரு பம்மாத்து அமெரிக்க அரசியலில் சகஜம்தான் என்றாலும் வருந்த்தந்தரக் கூடியது 😦

லிபிக்கு எதற்காக தன்டனை கொடுத்திருக்கிறார்கள்? பொய் சொன்னதற்காக. கிட்டத்தட்ட மார்த்தா ஸ்டூவர்டுக்கும் இதே போன்ற உப்பு சப்பில்லாத குற்றத்தை நிரூபித்திருந்தார்கள். அங்கே வேறு எதையும் பெயர்க்கமுடியவில்லை. இங்கேத் தோண்டினால், அடித்தளமே ஆட்டம் காணும் அபாயம்.

சி.ஐ.ஏ. உளவாளி வாலரி ப்ளேமை வெளிப்படுத்தியதில் தன்னுடைய பொறுப்பை உண்மையாக முன்வைக்காத குற்றத்திற்காக தன்டனை.

ஒற்றரின் பெயரைப் போட்டுக் கொடுத்தற்காக லிபியின் மேல் குற்றமேதும் சாட்டப்படவில்லை. ப்ளேம்-தான் வேவு பார்ப்பவர் என்று உலகெங்கும் ஓத வைத்த மூன்று வெள்ளை மாளிகைவாசிகள்:

  • முன்னாள் உள்துறை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிட்டாஜ்
  • ஜி.டபிள்யூ.புஷ்ஷின் ஆலோசகர் கார்ல் ரோவ்
  • ஊடகத் தொடர்பாளர் ஆரி ஃப்ளெச்சர்

தெரியக்கூடாத விஷயத்தை, தங்களுடைய சொந்த லாபத்துக்காக, குற்றஞ்சாட்டிய ப்ளேமின் கணவன் வாயை அடைப்பதற்காக, காட்டிக் கொடுத்தவர்கள் எல்லாரும் உல்லாசபுரியில் சுதந்திரப்பறவைகள்.

மூன்றரை வருஷம் துப்பு துலக்கலின் முடிவில் பகடைக் காயாக உருட்டப்பட்டவர் சிறைக்கைதியாகி, நியாயம் கிடைத்த மாதிரி பாவ்லா நாடகத்தின் துருப்புச்சீட்டாகிறார்.

தன்னுடைய வாக்குமூலத்தில் துணை ஜனாதிபதி டிக் செனி-தான் ‘சொல்லச் சொன்னார்’ என்று சத்திய பிரமாணம் செய்தும், சேனி-யை விசாரிக்கக் கூட அழைக்காத நீதி விசாரணை முடிவுறுகிறது.

தலைப்பைக் கொண்டு வரலாம்…

  • மதுரை அரசன் முக அழகிரி ==> கோபம் தலைக்கேறி சூட்சுமமாக சூத்திரதாரியாக செயல்பட்ட கார்ல் ரோவ்
  • அட்டாக் பாண்டி ==> ஸ்கூட்டர் லிபி
  • கலைஞர் கருணாநிதி ==> துணை ஜனாதிபதி

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.