Express solidarity to get back mutual appreciation


பட்டை என்று thamizmaNam : தமிழ்மணம் « இடுகைகள் « இடுகைகளில் தேடக் கூட முடியாத நிலையை குறை கூறாமல், போட்ட பட்டைகள்:

Penathal Sureshsintha_nathi 2sintha_nathi 1

potea_kadai_viboothi+pattaicalgary_siva_4_no_tmsurveysan_thamizmanam

Sivabalan_thamizmanamThamiziniyan_thamizmanam

இப்பொழுது ‘பட்டை’ போட்டு குட்-லுக்கில் வைத்துக் கொள்வது ஃபேஷன்!

நானும்…

எனக்கு தமிழ்மணம் பிடிக்கும்.
எனக்கு கூகிள் பிடிக்கும்.
எனக்கு மைக்ரோசாஃப்ட் பிடிக்கும்.
எனக்கு ஆப்பிள் பிடிக்கும்.
எனக்கு ஆரஞ்சு பிடிக்கும்.
எனக்கு அன்னாசி பிடிக்கும்.
எனக்கு சமோசி பிடிக்கும்.
எனக்கு சமயோசி பிடிக்கும்.
எனக்கு சன்னாசி பிடிக்கும்.
எனக்கு பெயரிலி பிடிக்கும்.
எனக்கு முகமூடி பிடிக்கும்.
எனக்கு அனானி பிடிக்கும்.
எனக்கு ஒரிஜினல் பிடிக்கும்.
எனக்கு அல்வா பிடிக்கும்.
எனக்கு திருநெல்வேலி பிடிக்கும்.
எனக்கு சாமி பிடிக்கும்.
எனக்கு உம்மாச்சி பிடிக்கும்.
எனக்கு பெரியார் பிடிக்கும்.
எனக்கு சத்யராஜ் பிடிக்கும்.
எனக்கு அசத்தியம் பிடிக்கும்.
எனக்கு அசாத்தியம் பிடிக்கும்.
எனக்கு அழிச்சாட்டியம் பிடிக்கும்.
எனக்கு அழிக்காட்டியும் பிடிக்கும்.
எனக்கு கோழிக்கோடு பிடிக்கும்.
எனக்கு சிக்கன்-65 பிடிக்கும்.
எனக்கு சைவம் பிடிக்கும்.
எனக்கு வைஷ்ணவம் பிடிக்கும்.
எனக்கு புத்தம் பிடிக்கும்.
எனக்கு ஸ்ரீலங்கா பிடிக்கும்.
எனக்கு புலி பிடிக்கும்.
எனக்கு கிலி பிடிக்கும்.
எனக்கு சிலி பிடிக்கும்.
எனக்கு நீலி பிடிக்கும்.
எனக்கு போளி பிடிக்கும்.
எனக்கு காளிமார்க் பிடிக்கும்.
எனக்கு சளி பிடிக்கும்.
எனக்கு ஜோலி பிடிக்கும்.

14 responses to “Express solidarity to get back mutual appreciation

  1. 😉

    பட்டை மட்டும் தான் போடணுமா? இல்ல, கிராம்பு, சோம்பு எல்லாம் போடணுமா 😉

    2007 தமிழ்ப் பதிவுலக review எழுதும்போது இந்த பட்டை comedyஐ சேர்த்துக் கொள்ளுங்கள் 🙂

    உப்புமா பதிவு ஆதரவுப் பட்டையை வன்மையாகக் கண்டிக்கிறேன் 😉

  2. உங்கள் பெரும்பாலான பதிவுகள், இடுகைகளில் தலைப்பை ஏன் ஆங்கிலத்தில் வைக்கிறீர்கள் என்று புரியவில்லை.

    search engine optimization?

    ரவி

  3. பாபா,
    நிலைமை இப்படியே போனா எல்லாருக்கும் பைத்தியம் புடிக்கும், இல்லாட்டி போலீஸ் புடிக்கும். 🙂

  4. //search engine optimization?//
    ரவி இது உண்மையான காரணம்.

    //ஏன் ஆங்கிலத்தில் வைக்கிறீர்கள் என்று புரியவில்லை.//

    ஏன்னா அவருக்கு ஆங்கிலமும் பிடிக்கும்.

  5. ரவி,
    பெரும்பாலான பதிவுகள், இடுகைகளில் தலைப்பை ஏன் ஆங்கிலத்தில் வைக்கிறீர்கள்
    SEO – அதே அதே 🙂

    இந்தப் பதிவில் நிறைய எழுதலாம் என்று தோன்றியது. ஆனால், பட்டை போடுவதால் தமிழ்மணத்திற்கு தர்மசங்கடம்; போன்ற தொடர்ச்சியான எண்ணங்களை சுருக்கமாக தலைப்பில் சொல்லிவிட்டுப் போய்விட்டேன்.

    SEO-வின் தொடர்ச்சியாக குறிச்சொல் பயன்பாட்டைக் கருதலாம். தலைப்பை விட, பொருத்தமில்லாத வகைப் பட்டியலை அங்கு காணலாம் 😉

  6. சந்தோஷ்,
    எல்லாருக்கும் பைத்தியம் புடிக்கும்,
    இதையும் ட்விஸ்ட் ஆடிடுவாங்க 😉

    பைத்தியத்தைப் பிடிக்குமா?
    பைத்தியங்களைப் பிடித்து சிறையிலிடுவார்களா?
    விளிம்புநிலை மாந்தர்களோடு ஒப்பிடலாமா?
    வைத்தியம் தேவையா?

  7. சர்வேசன்,
    என்ன மாதிரியே சிரிச்சு மழுப்பி ஓடிட்டீங்க 😛

  8. பூங்காவை வெறுக்கிறார்னு ஒரு கொடி பிடிச்சு நடந்து போகும் பட்டை ஒண்ணு இருக்குமே.. அதை பட்டியலிடாமல் விட்டதிலிருந்து உங்க சார்பு நிலை விளங்கிடுச்சாம் 😉

  9. //ஒரு கொடி பிடிச்சு நடந்து போகும் பட்டை ஒண்ணு இருக்குமே.. //அது ஒரு கொடி இல்லை பொன்ஸ் அது பாரத தேசியக்கொடி. போஸ்டன் பாலா, இங்கே பாருங்க கால்கரி சிவா என்ன சொல்லியிருக்காருன்னு. தமிழ்மணத்துல இருந்து நான் விலகுன்னதுக்கு காரணம் அவுங்க பாசிச போக்குதானே தவிர நான் இந்நாள் வரை தமிழ்மணம் ஐபி எல்லாம் கொடுத்துருக்க மாட்டாங்கன்னு நம்பிட்டிருந்தேன். அந்த நம்பிக்கையிலும் மண் விழுந்துருச்சு. எனவே தனிமனித சுதந்திரத்துல நம்பிக்கை உள்ள பதிவர்களே தமிழ்மண விசயத்துல சாக்கிரதையாகவே இருங்க.

  10. நான் பட்டையும் போடுவதில்லை; நாமமும் போடுவதில்லை; பிரச்சினையில்லீல்ல?

  11. பொன்ஸ்
    —பூங்காவை வெறுக்கிறார்னு ஒரு கொடி பிடிச்சு நடந்து போகும் பட்டை ஒண்ணு இருக்குமே.—
    இப்படி வேற ஒண்ணு ஓடுதா! பட்டைகள் பலவிதம்… ஒவ்வொன்றும் ஒவ்வாமை விதம் 😉

  12. அரவிந்தன்
    —தமிழ்மணம் ஐபி எல்லாம் கொடுத்துருக்க மாட்டாங்கன்னு நம்பிட்டிருந்தேன். —

    உங்கள் ஐபி தந்திருப்பார்களா, தரமாட்டார்களா என்று ஆதாரமில்லாமல் நம்பிக்கையின்மை ஏற்பட்டதா?
    ஐபி-யை வெளிப்படுத்துவதால் என்ன பிரச்சினை??

  13. வெங்கடேஷ்
    —பட்டையும் போடுவதில்லை; நாமமும் போடுவதில்லை; பிரச்சினையில்லீல்ல? —

    அதுக்கும் ஏதாவது உள்ளர்த்தம் கற்பிக்கல்ம் 😛

பின்னூட்டமொன்றை இடுக

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.