“எது கவிதை” என்கிற கேள்விக்கு, இக்கவிதையைச் சொல்லலாமா?
மணிகள் – ஞானக்கூத்தன்
சிந்தனை
தெளிவு
சிக்கனம்
ஆனந்தம்
கவிதை.
————————————-
“நவீன விருட்சம்” இதழ் ஒன்றில் அசோகமித்திரன் எழுதிய கட்டுரையிலிருந்து
ஒரு கதை இரு வாக்கியங்கள் கொண்டது.
“வயலின் கற்றுக் கொள்பவனோடு இச்சிறு வீட்டில் காலம் தள்ளுவது கடினம்.” கைது செய்ய வந்த காவல் துறையினரிடம் துப்பாக்கியைக் கொடுத்தபோது அவள் இதைத்தான் சொன்னாள்.










