‘பொய்’ படம் வந்திருந்த டிவிடி-யில் ‘பார்த்தாலே பரவசமும்‘ வந்திருந்தது.
1. தமிழ் சினிமாவை மீண்டும் உய்விக்க சிம்ரனின் சேவை, தேவை
2. ஸ்னேஹா எவ்வளவு ஒல்லியாக இருந்திருக்கிறார்.
3. பாத்திரங்களுக்கு பெயர் வைக்க கற்பனைப் பஞ்சம். மாதவா, சிமி…
4. திரைக்கதை அமைக்க கற்பனைப் பஞ்சம்: ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ பாடல்
5. நகைச்சுவைக்கும் அதே வறட்சி: ‘மௌன ராக’த்தில் வந்த ‘போடா டேய் பொடியா’ ஸ்டைலில் மலையாளம் சம்சரிக்கிறார்.
6. கமல் வந்த இடம் அருமை: மதன் பாப் விசிறியாக, ஃபேனைப் போட ‘ஆளவந்தான்’ மொட்டை அவதாரம். படத்தின் ஒரே பளிச்.
7. என்னதான் குரு, குருநாதர் என்று பொதுமேடையில் குளிப்பாட்டினாலும், கமல் மாதிரி தலையை நீட்ட ரஜினி மறுத்து விட்டாரே!
8. 2001-இல் தீபாவளிக்கு இந்தியா வந்திருந்தபோது, ஆளவந்தான், இந்தப் படம், மனதைத் திருடி விட்டாய், ஷாஜஹான் எல்லாம் ஒரே சமயத்தில் வெளியாகியிருந்த நேரம். வேறு எதைப் பார்த்திருந்தாலும் பரவாயில்லையாக இருந்திருக்கும்.
9. படம் பார்த்த ஞாபகமே இல்லாமல், அனைத்துக் காட்சிகளும் மறந்து போயிருந்தால், மீண்டும் அந்தப் படத்தைப் பார்க்கும் தவறை இழைக்கக் கூடாது. நினைவு தப்புவது ஒரு காரண காரியத்துக்காகத்தான் என்பதை நினைவில் வைக்கவும்.
10. லாரென்ஸ் பெரிய அளவில் வரவேண்டியவர். சிம்ரனுக்கு சரியாசனம் போட்டு உட்காருகிறார்.










